Thursday, September 25, 2008

இட்லி வடையை நடத்துவது யார்?

தி.மு.க வை நடத்துபவர் கலைஞர்.
அ.தி.மு.க வை நடத்துபவர் புரட்சித்தலைவி.
ம.தி.மு.க வை நடத்துபவர் வைகோ.
தே.மு.தி.க வை நடத்துபவர் புரட்சிக்கலைஞர்.

ஆனால் இட்லி வடையை நடத்துபவர்கள்…?

தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும் இந்த கேள்வி இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த கேள்வி ஏன் எழுந்தது என்றே வியப்பாக உள்ளது.

பொதுவா இட்லி வடைக்கு மாவு அறைக்கிறத அந்த மாவ கொஞ்சம் நடத்தித்தா என்று கிராமத்தில சொல்வாங்க. ஆக மொத்தம் மாவ யார் அறைக்கிறாங்களோ அவங்களே நடத்துகிறார்கள்.

பொதுவா எல்லார் வீட்டிலயும் இப்ப கிரைண்டர்/மிக்ஸி தான் மாவ அறைக்கிது ஆனாலும் அவை ஓட்டுனர்கள்தான், நடத்துனர் தங்கமணியோ ரங்கமணியோதான்.ஹோட்டல்னா பிச்சுமணி.

நாம இட்லி வடையை நடத்துறது யாருன்னுள்ள கேள்வியோட இருக்கோம் இவன் என்னடா மாவை பத்தி பேசறான் அப்ப்டின்னு கேக்கறீங்க. பொதுவா நாம இட்லி வடைய சாப்பிடும்போது மத்தவங்க பாத்து “நடத்துங்க நடத்துங்க”ன்னு சொல்வாங்கள்ல அதுனால இட்லி வடையை நடத்துறது அதை சாப்புடுற எல்லாரும் தான். இத நான் சொல்லல ஜக்கம்மா சொல்றா.

38 comments:

வால்பையன் said...

இட்லி வடை ஒரு குழு என்று தெரியும், அதில் நீங்களும் ஒருவர் என்பது இப்போது தான் தெரியும்,

இப்படி தான் என்னையையும் வாருனாங்க

பழமைபேசி said...

இதெல்லாம் எப்பிடிண்ணே?புல்லரிக்குதுண்ணே.....நடத்துங்க! நடத்துங்க!!

சந்தனமுல்லை said...

மரணமொக்கைன்றது இதுதானோ!! :-))

நையாண்டி நைனா said...

இட்லியையும் சரி, வடையையும் சரி யாராலையும் நடத்த முடியாது. வேணும்னா தரையிலே உருட்டலாம். ஆக, கேள்வியே தப்பு. இட்லி வடை - யை உருட்டுவது யார்? என்ற கேள்வியே சரி

Anonymous said...

//குடுகுடுப்பைக்காரன் மரியாதையாக குடுகுடுப்பையார் எனவும் அழைக்கலாம்//

இந்தா பதிவை படித்தவுடன் சுருக்கி குப்பை என்று அழைக்கலாமோ என்று கேட்க தோன்றுகிறது.

http://urupudaathathu.blogspot.com/ said...

:-))

நசரேயன் said...

:):)

Anonymous said...

good imagination kudukuduppayar

குடுகுடுப்பை said...

//குடுகுடுப்பைக்காரன் மரியாதையாக குடுகுடுப்பையார் எனவும் அழைக்கலாம்//

இந்தா பதிவை படித்தவுடன் சுருக்கி குப்பை என்று அழைக்கலாமோ என்று கேட்க தோன்றுகிறது.

வருகைக்கு நன்றி அனானி
அடிக்கடி வாங்க
விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும். குப்பையையும் சேர்த்துவிடுவோம். சில நல்ல பதிவுகளும் உள்ளது படியுங்கள், மற்றபடி இது சும்மா சிரிக்கத்தான்

கோவி.கண்ணன் said...

:))

பொழைக்கத் தெரிந்த புள்ள !

thamizhparavai said...

ஜூப்பர்ரு... நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்... நீங்க நடத்துங்க...நல்லா நடத்துங்க....(இட்லி வடையைச் சொல்லல)

thamizhparavai said...

:-)

tamilraja said...

மாவு யார் அரைச்சா என்ன இட்லி,வடை சுவையா இருக்கு அது போதும்!!!

துளசி கோபால் said...

நாட்டாமை தீர்ப்பை மாத்து(ங்க)

வடைகூடப் பரவாயில்லை. இந்த இட்லியை.......

நடத்துவது சட்னியும் சாம்பாரும்தான்.

இது இல்லாமத் தின்னுபாருங்க...புரிஞ்சுரும்:-))))

அது சரி said...

//
பொதுவா எல்லார் வீட்டிலயும் இப்ப கிரைண்டர்/மிக்ஸி தான் மாவ அறைக்கிது ஆனாலும் அவை ஓட்டுனர்கள்தான், நடத்துனர் தங்கமணியோ ரங்கமணியோதான்.ஹோட்டல்னா பிச்சுமணி.
//

தல,
சுண்ட கஞ்சி காச்சுறது தப்பில்ல. ஆனா, அத நாலு பேரு கூட பகுந்து, பகுமானமா சாப்டணும்.

இப்பிடி ஒரு பானை சுண்ட கஞ்ச தானே காச்சி, தானே அடிச்சா இப்பிடி தான்.

சொன்னா கேக்குறீங்களா?

அது சரி said...

//
வால்பையன் said...
இட்லி வடை ஒரு குழு என்று தெரியும், அதில் நீங்களும் ஒருவர் என்பது இப்போது தான் தெரியும்,

இப்படி தான் என்னையையும் வாருனாங்க

//

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம் வால்பையன்.

அதுக்கு தலைமை எடிட்டரே நீங்க தான்னு சர்வேசன் சொல்லிக்கிட்டு இருக்காரு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இட்லி வடையை சிங்கப்பூரில் பார்த்தோம்.

Anonymous said...

இட்லிவடையை நடத்துறது யாருன்னு தெரியாது. ஆனா தமிழிஷ் நடத்துறது இட்லிவடை தான்னு தெரியும்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"""ஹோட்டல்னா பிச்சுமணி."""

ஹா ஹா....

நல்ல நகைச்சுவை...

நடத்துங்கண்ணா நடத்துங்க...

செல்வ கருப்பையா said...

கோவி கண்ணன் அறிவுரைகளை அப்படியே பின்பற்றுகிற போல இருக்கு!

நடத்துங்க... நடத்துங்க...

Anonymous said...

நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.
ஈஸ்வரன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி வால்பையன்
//இட்லி வடை ஒரு குழு என்று தெரியும், அதில் நீங்களும் ஒருவர் என்பது இப்போது தான் தெரியும்//

இட்லி வடை ஒரு உணவு தானே, நீங்களும் சாப்புடுறீங்கதானே

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பழமைபேசி

//எப்பிடிண்ணே?புல்லரிக்குதுண்ணே.....நடத்துங்க! நடத்துங்க!!//
நீங்களும் நடத்துங்க!!

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

//மரணமொக்கைன்றது இதுதானோ!! :-))//

மொக்கை மரணம் அடையாமல் இருக்க ஒரு நல்ல எண்ணம் தான்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நையாண்டி நைனா

//இட்லி வடை - யை உருட்டுவது யார்?\\

தனிப்பதிவு போட்டுருவோம்

வருகைக்கு நன்றி

உருப்புடாதது_அணிமா,
நசரேயன்,சோலை மற்றும் கோவி.கண்ணன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
தமிழ்ப்பறவை,தமிழ்ராஜா

//ஜூப்பர்ரு... நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்... நீங்க நடத்துங்க...நல்லா நடத்துங்க....(இட்லி வடையைச் சொல்லல)//

ஏமாந்துட்டீங்களா. ஏன் சரியான விடைதானே சொன்னேன்

//மாவு யார் அரைச்சா என்ன இட்லி,வடை சுவையா இருக்கு அது போதும்!!!//

நல்லா நடத்துங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
துளசி டீச்சர்

//நாட்டாமை தீர்ப்பை மாத்து(ங்க)

வடைகூடப் பரவாயில்லை. இந்த இட்லியை.......

நடத்துவது சட்னியும் சாம்பாரும்தான்.

இது இல்லாமத் தின்னுபாருங்க...புரிஞ்சுரும்:-))))
//

நாட்டாமை என்னக்கி சரியான தீர்ப்பை சொல்லிருக்காரு.

சமயங்களில் இட்லி பொடி வெச்சே 15 இட்லி நடத்துவேன் டீச்சர்

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி
என்ன ஆளக்காணோம்.

/
தல,
சுண்ட கஞ்சி காச்சுறது தப்பில்ல. ஆனா, அத நாலு பேரு கூட பகுந்து, பகுமானமா சாப்டணும்.

இப்பிடி ஒரு பானை சுண்ட கஞ்ச தானே காச்சி, தானே அடிச்சா இப்பிடி தான்.
/

நான் குடிக்கவே இல்லை, எல்லாத்தையும் நசரேயன் வாங்கிட்டாரு அதான் இப்படி ஆச்சு

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
tvr.
எதாவது சொல்லிட்டு போங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி
6m பஸ்ல ஏறி அடிக்கடி வாங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்.
//இட்லிவடையை நடத்துறது யாருன்னு தெரியாது. ஆனா தமிழிஷ் நடத்துறது இட்லிவடை தான்னு தெரியும்.//

எனக்கு ஒன்னும் புரியலங்கோ

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
சுடர்மணி, கருப்பையா

//நல்ல நகைச்சுவை...

நடத்துங்கண்ணா நடத்துங்க...//

கோவி கண்ணன் அறிவுரைகளை அப்படியே பின்பற்றுகிற போல இருக்கு!

தொடர்ந்து நடத்துவோம்

குடுகுடுப்பை said...

வாங்க அனானி
//நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.
ஈஸ்வரன்//

என்னோட பதிவு மொக்கை, பின்னூட்டம் கும்மி அவ்லோதான்

Unknown said...

அச்சச்சோ அண்ணா தெரியாம இங்க வந்துட்டேன் விட்டுடுங்க ப்ளீஸ்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................!! ;)))))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஸ்ரீமதி

//அச்சச்சோ அண்ணா தெரியாம இங்க வந்துட்டேன் விட்டுடுங்க ப்ளீஸ்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................!! ;)))))))//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க அக்கா, அடிக்கடி வாங்க

நாமக்கல் சிபி said...

:))

நாமக்கல் சிபி said...

நடத்துங்க நடத்துங்க!

:)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
தொடர்ந்து வாங்க தொடர்ந்து நடத்துவோம்