Tuesday, September 23, 2008

சூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.

மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும். ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.

மு:கு2:செந்தழல் ரவி ஏற்கனவே what the hell is it brother ? அப்படின்னு கமெண்ட் போட்டாரு அதான் தூக்கிட்டேன் அன்னிக்கே,
ஆனாலும் மீண்டும் இங்கே.

டேய் கணேசா ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுறா,-- பண்பரசன்
சரி மாப்பிள்ளை போட்டா போச்சு, என்ன மாப்பிள்ளை இப்படி திராசு படிக்கல்லோட திரியற,,,

அது ஒன்னும் இல்லடா , நெல்லு போட சென்டருக்கு வந்தேன், அந்த ஆபிசர் பயகிட்ட காலைல கையெழுத்து போட்டு ஒரு நூறு ரூபாய் வெட்டிட்டு நூறு சாக்கு வாங்கிட்டு போனேன், நெல்லும் சாக்குல புடிச்சு 71 கிலோ கலத்துலயே எடை போட்டு ஏத்திட்டு வந்தாச்சு,இப்போ நெல்லை பாத்துட்டு ஈரப்பதம் 24 க்கு மேல இருக்கு, எடுக்க முடியாதுன்னு சட்டம் பேசறான்,காய வெக்க சொல்றான், என்கிட்டே இதெல்லாம் நடக்குமா , அதான் திராசு படிக்கல்ல கையோட எடுத்துட்டு வந்திட்டேன், என் நெல்ல வாங்காம மத்தவன் நெல்ல எப்படி வாங்கிறான்னு பாத்துபுடறேன்.

ஏற்கனவே நெல்லுக்கு வெல இல்ல, இந்த டவுண்காரங்க ஒரு மயிறுக்கும் போறாத படத்தை குடும்பத்தோட 1000 ரூவா குடுத்து பாக்ஸ்ல உக்காந்து பாப்பாங்க ஆனா மாசம் 1000 ரூவா குடுத்து அரிசி, காய்கறி வாங்கறதுக்கு கால் ..லுன்னு கத்துவாங்க. வெவசாயின்னா எல்லாருக்கும் எலக்காரம் ஆயி போச்சி.

ஆபிசர் சொல்ற மாதிரி நீ கொஞ்சம் நெல்ல காய வெச்சு கொடுக்க வேண்டியது தான மாப்பிள்ளை ஏன் பிரச்சினை பண்ணிக்கிட்டு ......

நீ டீய ஒழுங்கா போடுறா வெண்ண, பொழக்க வந்த நாய் எனக்கு அட்வைஸ் பண்ணது போதும், சும்மா பேசின பால் குண்டானெல்லாம் பறந்துரும் பாத்துக்க, நான் இருக்கிற வெறில நீ வேற கடுப்ப கெளப்புற , அவன் எல்லாம் ஒரு ஆளா, மூணு மாசத்துக்கு தான் அவன் ஆபிசர், சென்டரு மூடுனா வேல கோயிந்தா அப்புறம் சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிறவன், அவன் சொல்றத நான் கேட்கமுடியுமடா? நாங்க வெவசாயம் பண்றவன் எல்லாம் கேண்க்.... இப்ப வருவான் பாரு கெஞ்சிகிட்டு.

ஆமா டீத்தூள் போடுறியா இல்ல மரத்தூள்ல டீ போடுறியா நீ, காசு மட்டும் வாங்குங்கடா நல்லா , இதை குடிக்கறதுக்கு,வீட்ல கொஞ்சம் வடிச்ச கஞ்சிய குடிச்சிட்டு வந்திருக்கலாம்.

அங்கே வந்த பெரிய மனிதன் கோவிந்தராஜன், என்னடா பண்பு, நெல் கிட்டங்கில எதோ பிரச்சினை பண்ணியாமே? அவர் உன் மேல கேசு கொடுக்க போறேன் சொல்றார் ஏன்டா இப்படியெல்லாம் பண்ற?

என்னது கேசு கொடுக்கிறானா? நெல்லு உங்களுது ,உங்க கையெழுத்து போட்டுதான் சாக்கு எடுத்திருக்கு, போலீஸ் வந்தா உங்களைத்தான் பிடிச்சுட்டு போவான், இந்தாங்க திராசு படிக்கல்லு நான் வரேன்.

டேய் பண்பு டீக்கு காச கொடுத்திட்டு போடா?

19 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))))

http://urupudaathathu.blogspot.com/ said...

:-)

செல்வ கருப்பையா said...

சாரும் கும்போணமா?

அது சரி said...

அய்ய, இன்னா நைனா, நீ காச்சின சுண்ட கஞ்ச அப்பாலிக்கா நீயே ரவுண்டு கட்டிட்ட போலிருக்கே?

தலிப்புக்கும் கதிக்கும் இன்னா சம்மந்தம் தல? ஒரே மெர்சலாருக்கு!

குடுகுடுப்பை said...

//தலிப்புக்கும் கதிக்கும் இன்னா சம்மந்தம் தல? ஒரே மெர்சலாருக்கு!//

கததான் இல்ல, தலைப்பாவது வெக்கனும்தான் வெச்சேன். நீங்க சொல்றத பாத்தா எனக்கு பயமா இருக்கு

Subash said...

:)

Anonymous said...

yenna panrathu...tamilnatula 1 kilo arisi 1rs kudutha yeppadi nelluku villai irukkum

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
T.V.Radhakrishnan
உருப்புடாதது_அணிமா
செல்வ கருப்பையா
அது சரி
சுபாஷ்
அனானி
நசரேயன்

குடுகுடுப்பை said...

சாரும் கும்போணமா?

பக்கம் தான், சுமார் 500 பேர் கொண்ட ஒரு பெரிய நகரம்.

http://urupudaathathu.blogspot.com/ said...

what the hell is this???

http://urupudaathathu.blogspot.com/ said...

பக்கம் தான், சுமார் 500 பேர் கொண்ட ஒரு பெரிய நகரம்.///////////

நரகமா இல்ல நகரமா?? விளக்கம் தேவை ப்ளீஸ்

http://urupudaathathu.blogspot.com/ said...

இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்.///////////

அப்போ எனக்கு இல்லியா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.///////////

ஆமாம் நீங்க என்ன டாக்டரா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//////ரவி ஏற்கனவே what the hell is it brother ? ////////


WHAT THE HELL IS IT BROTHER?

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்படின்னு கமெண்ட் போட்டாரு அதான் தூக்கிட்டேன் அன்னிக்கே, ////

எது கமெண்ட்டயா இல்ல அவரவேவா ?

http://urupudaathathu.blogspot.com/ said...

வர வர நீங்க ஒரு நாளைக்கு ஒரு பதிவுன்னு போட்டு தாக்குறீங்க?? என்ன சீகிரமாவே அறை சென்சுரி போடுறதுன்னு முடிவா??

குடுகுடுப்பை said...

what the hell is this???
கதிதாங்க்

//நரகமா இல்ல நகரமா?? விளக்கம் தேவை ப்ளீஸ்//
சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா

/
அப்போ எனக்கு இல்லியா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

இல்லீங்க சாரு

குடுகுடுப்பை said...

//ஆமாம் நீங்க என்ன டாக்டரா??//

என்ன கொடுமை ராமசாமி இது

/எது கமெண்ட்டயா இல்ல அவரவேவா ?/

அவரெல்லாம் நம்ம கடைக்கி வரதிலீங்க

//வர வர நீங்க ஒரு நாளைக்கு ஒரு பதிவுன்னு போட்டு தாக்குறீங்க?? என்ன சீகிரமாவே அறை சென்சுரி போடுறதுன்னு முடிவா??//


நம்மா லாரா மாதிரி, எல்லாத்திலயும் தோத்தாலும் ஒரு 500 போட்டுட்டு தான் அடுத்த வேளை

நசரேயன் said...

இதை படிச்சு அப்பவே ரெம்ப நேரமா சிரிச்சேன்