Friday, October 31, 2008

தங்கமணி ஸ்பெசல் டீ.

என்னங்க 6:30 மணியாச்சு எந்திரிங்க...
டீ வேணுமா , காபியா.

டீயே போடு , காபி வடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.

சரி டீயே போடுறேன், நீங்க கொஞ்சம் இந்த டீ போடுற பாத்திரத்தை எடுத்து கொடுங்க

காலையிலேயே என்ன கம்பியூட்டர்ல, சீக்கிரம் வாங்க

ம்ம்ம்
எடுத்துட்டீங்களாஅப்படியே கொஞ்சம் அடுப்ப ஆன் பண்ணி ஒரு டம்ளர் தண்ணி சுட வைங்க..

வெச்சிட்டேன்.இன்னைக்கி மார்க்கெட் என்ன ஆகப்போகுதோ..

அது இருக்கட்டும், அந்த கப்ப எடுத்து மைக்ரோவேவ்ல 2% பால் 1:45 நிமிடம் வைங்க, நான் பாப்பாவை எழுப்புறேன்.

வெச்சிட்டேன்.

ரெண்டு ஸ்பூன் டீத்தூள் எடுத்து அந்த சில்வர் பாத்திரத்தில போட்டு அந்த வெண்ணீர எடுத்து ஊத்தி வைங்க நான் வரேன்.

ம்ம்ம்ம்

பால் எவ்ளொ நேரம் சூடு பண்ணீங்க்

2 நிமிடம்.

1:45 நிமிடம் தான வைக்க சொன்னேன், அது பொங்கி ஊத்தி போச்சு, யாரு தொடக்கிறது.

சரி விடு. எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

உங்களுக்கு தெரியாது, அந்த சில்வர் டம்ளரையும் டீ பில்டரையும் எடுங்க..

எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

டீ ஸ்டாராங்கா இருந்தா கசக்கும், நான் சரியா கலந்து தரேன். அப்படியே சக்கரையை எடுங்க..

ரெண்டு ஸ்பூன் சக்கரை போடுங்க..

மெதுவா கீழ கொட்டாம..

ம்ம்ம்

டீ நல்லா இருக்கா

ம்ம்ம்

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு


பி: கு : இது ஒரு கற்பனை டீ.

பதிவர்களுக்கு ஒரு கேள்வி.?

பல பதிவர்கள் / ஆர்குட் புரொபைளில், பிடித்த புத்தகம் பகுதியில் கீழ்கண்ட பெயர்களை காணலாம்

ஹாரி பாட்டர்.
ஷிட்னி ஷெல்டன்
ஜெப்ரி ஆர்தர்.
டேனியல் ஸ்டீல்

தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன்,சாண்டில்யன், சுஜாதா,கல்கி
பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்.

மற்றும் பல

இதையெல்லாம் சும்மா போட்டுக்கலாமா. இல்ல உண்மையாவே படிச்சாதான் போடனுமா?

இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?

பி:கு: சில சீரியஸான பதிவெழுதி களைச்சிபோயிட்டேன், அதான் இப்படி மன்னிச்சு விட்டுருங்க..

Monday, October 27, 2008

தங்கமணியுடன் சிகாகோவிலிருந்து நயாகரா அருவி வரை --

கல்யாணம் ஆன புதுசு, கல்யாணம் ஆன உடனே சண்டையெல்லாம் ஆரம்பிகிறதுக்கு முன்னாடி நயாகரா அருவி போகனுங்கிற எழுதப்படாத விதிப்படி, நாங்களும் நயாகராவுக்கு தயார்.

தங்கமணி வழக்கம் போல அவருக்கு ரோட்டு கடை பர்கர் எல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு சொல்லிட்டு, உங்களுக்கு எத்தனை இட்லி வேணும்,தக்காளி சட்னியா , தேங்காய் சட்னி வேணுமா? புளி சாதமும் கட்டி எடுதுக்குவமா அப்படின்னு ஆயிரம் கேள்வி கேட்டு,கடைசில கிடைச்ச ரெண்டு பதில்ல ஒன்னான சாப்பாடு கட்டரதில்ல அப்படிங்கற முடிவோட. மேப்ப எடுத்துக்கிட்டு, காலைல அஞ்சு மணி வாக்குல கார்ல ஏறியாச்சு, 9 மணி நேரம் உத்தேச பயணம்.

சாம்பர்க்லேர்ந்து ஹைவே 90 பிடிச்சு 90 மைல் வேகத்தில சிகாகோ தாண்டி ஹைவே 94 அ பிடிச்சாச்சு.

ஏங்க எனக்கு பசிக்குது இப்ப இட்லி எடுத்துட்டு வந்து இருந்தா நான் கார்லேயே சாப்பிட்டே வருவேன்ல.

சரி விடு அடுத்த எக்ஸிட்ல ஒரு மெக்டோனால்டுல உனக்கு பிடிச்ச ஹேஷ்பிரவுனும் , ஒரு ஆம்லெட் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டிட்டு போவோம்.

ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு 10 மணி வாக்கில டெட்ராய்ட் வந்தாச்சு,

இப்ப ஹைவே 94 லேர்ந்து புது ரோடு எடுக்கனும் போல என்ன ரோடுன்னு பாத்து சொல்லு.

take the provincial route 401 thro Ambassador Bridge St

சரி,

கிட்ட போயாச்சு, ஆகா இது கனடா வழியா இல்ல போகுது.

கனடா போகனும்னா H1 ல இருக்கிறதுனால பாஸ்போர்ட்,விசாவெல்லாம் தெவையாச்சே?

பாஸ்போர்ட் எடுத்துட்டு வந்தமா என்ன?

இல்ல , வரும்போதே மேப்ப படிக்க மாட்டீங்களா?

படிக்கல, நான் கனடா வழியா போகும்னு நெனச்சு கூட பாக்கல

இப்ப என்ன பண்ணலாம்.

சரி அந்த கேஸ் ஸ்டேசன்லெ விசாரிக்கலாம்னு போனோப்ப ஒரு டிரக் டிரைவர் வந்தாரு, நாங்க பேசிட்டு இருக்கிறது கேட்டுட்டு நான் வழி சொல்றேன் சொன்னாரு.

இப்படியே இந்த நம்பர் ரோட்டை(சரியா ஞாபகம் இல்ல) பிடிச்சு கனெக்டிக்கெட் பக்கமா ஹைவே 95 ஐ பிடிச்சு அப்படியே ஹைவே 90 பிடிச்சு நியூயார்க் வழியா நயாக்ரா போயிடலாம் , 25 மணி நேரமாவது குறைச்சலா ஆகும்னாரு.

ஆனா நெறயா டோல் பே பண்ணனும் வேணும்னா டோல் அவாய்ட் பண்ற மாதிரி ரோடு சொல்லட்டுமான்னாரு.

ஒரு பேப்பர்ல எழுதியெல்லாம் குடுத்தாரு.

எப்படி 25 மணு நேரம் ஓட்டறது. வீட்டுக்கு திரும்பி போயிடலாமா?சரி எதுக்கும் இன்னோரு வாட்டி கடையில பேசுவோம்னு உள்ள போனப்ப அட்லஸ் கண்ணுல பட்டுச்சு, $5 கொடுத்து வாங்கி பாத்தேன்.

ஹைவே 90 ய பிடிக்க 75 மைல்ல இருக்க டொலிடோ,ஒஹாயோ போயிட்டா பொதும். அப்புறம் நயாகரா போயிடலாம்.
நல்லவேளயா டிரக் டிரைவர் லொடுக்கு பாண்டி சொன்ன ரூட்ல போகல.போயிருந்தா நெனச்சு பாருங்க இத்த ஒத்தை டிரைவர அதுவும் தங்கமணியோட.

ஒருவழியா 2 மணி நேரம் கூடுதலா ட்ரைவ் பண்ணி அன்னைக்கு சாயந்திரமே நயாகரா அருவி போய் ஒரு இண்டியன் ரெஸ்டாரண்ட்லெ சாப்பிட்டு , என்னங்க சாப்பாடு நல்லாவே இல்லன்னு சொன்னதுக்கபுறம்தான் தங்கமணிக்கு திருப்தி.

பி:கு : 2002 ல் ஜிபிஸ் இருந்தாலும் எனக்கு தெரிந்திருக்காது.

Thursday, October 16, 2008

டீயுசன் டீச்சர் விமர்சனம்

பதிவுலகில் இதற்கு முன்னர் டியூசன் டீச்சர் பற்றிய பதிவுகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இந்த விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றியதால்.

நான் கிராமத்தில் 10 வகுப்பு வரை படித்து வளர்ந்தவன்.மேல் நிலைப்பள்ளி படிப்பிற்கு பக்கத்து நகரத்தில் உள்ள ஒரு மிகப்பிரபலமான பள்ளிக்கு சென்றேன். நான் எடுத்தது கணிதப்பிரிவு.

+1 படிக்கும்போது இரண்டு மாதங்கள் கழித்து அங்குள்ள ஆசிரியர்கள் குறிப்பாக வேதியியல்,இயற்பியல் ஆசிரியர்கள் தங்களிடம் டியூசன் வைக்க சொல்லி மறைமுக வேண்டுகோள், அதுவும் +2 பாடத்திற்கு இப்போதே டியூசன் சேராவிட்டால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்ற பயம் மாணவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. கணித ஆசிரியர்கள் மிரட்ட முடியாது, ஆனால் வகுப்பு ஆசிரியர் நன்றாகவே கணிதம் எடுத்தாலும் நகரில் உள்ள பிரபல கணித டியூட்டர்களிடம் கூட்டம் அதிகமே அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும் டியூசன் வைக்கப்பட்டேன். + 1 படிக்கும்போது +2 பாடம் நடத்துவார்கள். என்ன கொடுமை இது ?.

+2 படிக்கும்போது ஒரு மாணவன் வேதியியல் பாடத்திற்கு ஆங்கிலம் எடுக்கும் ஆனால் வேதியியலில் நல்ல புலமை கொண்ட ஆசிரியரிடம் டியூசன் வைத்த காரணத்திற்காக கடுமையாக மிரட்டப்பட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எனக்கும் வேதியியல் ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தது, டியூசன் செல்வதை நிறுத்திவிட்டேன்.

தேர்வு நேரத்தில் டைபாய்டு வந்ததால் +2 பொதுத்தேர்வு எழுதவில்லை, பின்னர் தனித்தேர்வராக அதே பள்ளியில் வேதியியல் செயல்முறை தேர்வு எழுதும்போது டியூசன் காசெல்லாம் முழுசா கட்டினியா எனவும் கேட்டார். வந்தவரை கட்டினேன் என்றேன்.ஆனால் அதற்காக மதிப்பெண்ணெல்லாம் குறைத்ததாக தெரியவில்லை.

இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.

இதற்கு காரணம் யார்? நமது கல்வி முறையா? பெற்றோர்களா? எதற்காக பின்னர் பள்ளிக்கூடங்கள் ?

ஆசிரியர்கள் சமுதாயத்தின் ஒளி விளக்கு என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. இந்த நேரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, October 15, 2008

வருங்கால முதல்வராக பொன்னான வாய்ப்பு

அன்பார்ந்த வலைப்பதிவர்களே, ஓட்டுரிமை இல்லாவிட்டாலும் வருங்கால முதல்வராக ஆசைப்படும் என இன மான சிங்கங்களே.

உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வருங்கால முதல்வர் என்று, ஒரே ஒரு முதல்வர் தான் இருக்க முடியும் ஆனால் எத்தனை வருங்கால முதல்வர் வேண்டுமானலும் இருக்கலாம் அல்லவா.ஆதலால் என்னைப்போல மேலும் சிலரை வருங்கால முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறேன். இதில் மகளிருக்கான உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதால் எனது மனைவி,மகள்,அம்மா மற்றும் என்னுடைய ஆத்தா(அப்பாவின் அம்மா) ஆகியோரை மகளிர் இட ஒதுக்கீட்டிம் மூலம் வருங்கால முதல்வராக நியமித்துள்ளேன். மீதமுள்ள இடங்களுக்கு ஜனநாயக குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு தொடர்ந்து எழுதுவதற்கு சரக்கு இல்லாத காரணத்தினால் வருங்கால முதல்வர் வலைப்பதிவை ஒரு குழு வலைப்பதிவாக மாற்றி அதில் எழுத ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய வலைப்பூவில் உள்ள மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

குடுகுடுப்பை
(வருங்கால முதல்வர்)

Tuesday, October 14, 2008

சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)

அழைத்த துக்ளக் மகேஷ்க்கு நன்றி

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது சரியாக ஞாபகம் இல்லை, என் தாத்தா வீட்டிற்கு ஏதோ ஒரு விடுமுறைக்கு சென்றிருந்த நேரம், என்னையும் என் சித்தி மகனையும் என்னுடைய சின்ன சித்தி இரண்டு படத்திற்கு ஒரே நாளில் கூட்டிச்சென்றார். முதல் ஏதோ புதிய படம் ,இரண்டாவது படம் பெயர் ஞாபகம் உள்ளது சங்கே முழங்கு,ஞாபகம் உள்ள படத்து பேர பாத்தீங்களா? படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம், தங்கமணியும்,பாப்பாவும் இந்தியா வந்துட்டாங்க, தனியா எந்த கேள்வியும் இல்லாம படம் பார்த்தேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வேட்டையாடு விளையாடு, நல்லாதான் இருந்துச்சு, இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

குருவி,சிட்டிசன்,கேப்டன்,வால்டர் வெற்றிவேல் இன்னும் சில தெலுங்கு டப்பிங் படங்கள். ஆனாலும் குருவி தாக்கிய அளவிற்கு இனிமேலும் யாரும் தாக்குவார்களா என்று தெரியல.


மிகவும் பாதிச்ச படம்னா - தேவர்மகன் , இந்தப்படத்தில சிவாஜியுடைய நடிப்பு பாதித்தது.கமல் தேவர் இன மக்களின் தவறுகளை வஞ்சப்புகழ்ச்சியா காண்பித்த படம். சண்டை போடுவதை விட்டுவிட்டு திருந்த சொல்லி எடுத்த படம்.இந்த படத்தை பார்க்க இராமநாதபுரம் தங்கம் தியேட்டருக்கு தேவர் இன மக்கள் கைத்தடி போன்ற ஆயுதங்களோடு வந்து பார்த்தார்கள். படத்தின் கருத்து ஈர்த்ததோ இல்லையோ ஆனால் தலைப்பு ஈர்த்தது.

5.. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என்னை அப்படி எதுவும் தாக்கவில்லை.என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.

எம்ஜியார் என்ற மந்திரச்சொல். எங்கள் ஊரில் உள்ள ஒரு விவாசாயக் கூலி ஒருவரின் ஆறு அல்லது ஏழு வயது மகன் தன்னுடைய 3 அல்லது 4 மாத தம்பியை 'எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு' என்று கொஞ்சுவார். அப்போது கோபம் வரும். இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அவ்வளவாக் எனக்கு இதில் அறிவு இல்லை.

வல்லரசு போன்ற படங்களில் விஜயகாந்த் போடும் தொழில் நுட்பம் மிகுந்த சண்டைக்காட்சிகள் மிகவும் தாக்கியது.:)

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு தேவை என்ற அளவில் உறுத்தாமல் இருந்த குள்ள கமல்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எல்லா கருமத்தையும் படிப்பது உண்டு. இப்போ தமிழ்மணம் என்னை பாதித்த காரணத்தால் நிறைய கிசுகிசுக்கள் தெரிவதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பொதுவா சினிமா அதிகம் பார்ப்பதில்லை. தாக்கிய ஆங்கில படம். மேட்ரிக்ஸ் 2, சத்தம் தாங்க முடியாமல் பாதியோட ஓட்டம்.

தாரே ஜமீன் பர் - நல்ல படம் , என் மகள் படத்தின் இரண்டாவது பாதியை நிறைய முறை பார்த்தார். என் மகள் கேட்ட கேள்வி ஏன் பெண் மாணவர்களே இல்லை? இந்த கேள்வியை யாராவது அமீர்கானிடம் கேட்டு சொல்லுங்கள்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கண்டிப்பாக இல்லை. ஒருவீளை இருந்திருந்தால் என் நீண்ட கால ஆசைக்கு உதவியாக இருந்திருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படம் பாக்கிறது ரொம்ப குறைவு, ஆனாலும் உலகமயமாக்கள் பெரிய செலவில் வெளிநாட்டுப்படங்களை போன்று காப்பி அடிக்க உதவும். ஆனாலும் நல்ல படங்கள் வரும். என்னைவிட என் சந்ததி அறிவாளிகள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், அடுத்து சினிமா நாடகம் வரும்வரை நான் உட்பட.


இப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க

அது சரி
நசரேயன்
அமிர்தவர்ஷினி
தமிழ் சினிமா
ஜீவன்

Monday, October 13, 2008

இட ஒதுக்கீடு கிரீமி லேயர் என் பார்வை

கிரீமி லேயர் பற்றின கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகள் இருக்கும்போது நான் இங்கே சற்றே புதிதான கிரீமீ லேயர்.
பற்றி முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு 69% சதவீதம் உள்ளது, கிட்டதட்ட, அப்பா முதல் பேரன் வரை இந்த பலன் அனுபவிக்கப்பட்டு வருகிறது இதன் பலனை கல்வி / மற்றும் வேலை வாய்ப்பில் தற்போது பெரும்பாலும் ஏற்கனவே பலன் அடைந்தவர்களின் வாரிசுகளே அதிகம் பலன் பெறும் நிலை கண்கூடு.

குறிப்பாக எனது அப்பா, நான் ஆகியோர் இட ஒதுக்கீட்டீன் மூலம்
பயனடைந்தோம், எனது வாரிசுகளுக்கும் நான் இட ஒதுக்கீட்டை பயன் படுத்த முடியும். இதனால் பாதிக்கப்படுவது யார்? இதுவரை இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காத இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க ஆசைப்படும் ஒருவன்.

இவன் ஏற்கனவே அதே சமுதாயத்தில் முன்னேறிய ஒரு வர்க்கத்துடன் போட்டி போட்டு தோல்வியை அடைகிறான்.

அவர்களுக்கு விட்டுக்கொடுப்பது யார் கடமை? ஏற்கனவே பலன் அடைந்தவர்கள் உடையது. ஆனால் நானகவே இருந்தாலும் எனக்கு கிடைக்கும் அந்த பலனை விட்டுத்தர மனமிருக்காது.

தற்போது உள்ள கிரீமி லேயர் , பொருளாதார அடிப்படையை உள்ளே கொண்டு வந்து காலியிடங்களாக்கி பொதுப்பிரிவின் கீழ் கொண்டு வந்து உயர் சாதியினர் பலனடைய நடக்கும் சதி என கூறி கூடாது என்கிறோம்.

எனது எண்ணத்தில் தோன்றும் கிரீமி லேயர் இதுதான்.

இப்போதுள்ள 69% சதவீத இட ஒதுக்கீட்டை குறைக்காமல், ஒரு முறை இட ஒதுக்கீட்டின் பலன் அடைந்தவரின் வாரிசுகள் இந்த 69% சதவீதத்தில் பின் வரிசையில் இருக்கட்டும். இதனை அமல்படுத்துவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

உதாரணத்திற்கு 50 சதவீத இடம் முதல் முறை பயனாளிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டால், மீதி உள்ள 19 சதவீத இடத்தை வாரிசு பயனாளிகள் அனுபவிக்கட்டும். கிடைக்காத வாரிசுகள் பொதுப்பிரிவில் போட்டி போடட்டும். இதில் உயர் சாதியினர் சதி என் கூற வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

இதை விடுத்து மீண்டும் மீண்டும் அனுபவித்தவர்களே அனுபவித்தால் , பிற்படுத்தபட்ட /தாழ்த்தப்பட்ட வகுப்பில் மற்றுமொறு உயர்சாதி வர்க்கம் உருவாகுவதை தடுக்க முடியாதென்றே தோன்றுகிறது 

சமூக நீதி வெற்றி பெற வெற்றி பெற்றவர்கள் வழி விட்டு நிற்பதே அதன் முதற்படி என நான் நினைக்கிறேன்.

Friday, October 10, 2008

பச்ச ஜீன்ஸ்காரன்,நான் மற்றும் மதுரை வீரன். பாகம் 2

முதல் பாகம் இங்கே

இல்லடா வேண்டாம் ஒரு 50 ரூபா குடு நாங்க திருச்சி கெளம்புறோம்.

மாப்ளே பாத்து ரொம்ப நாள் ஆச்சு, சரி காட் வேணாம் பஸ்ல வாந்தி வரும் பீர உடுவோம். அப்படியே போய் ஒரு பிரியாணிய சாப்புடுவோம்.

இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே சாஞ்சுருவான், நான் எட்டு / ஒம்போது அடிப்பேன். ஏற்கனவே என்ன பீர்பால்னு கூப்பிடறாங்க.
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சி காலேஜ் புல்லா சொல்லிருவான்.

பீர்,பிரியாணி எல்லாம் முடிஞ்சது, வீரன் புதுசா கட்டிக்கொண்டு இருக்கிற தன் வீட்டை சுத்திக்காட்டினான். இந்த வேலை முடிஞ்சதுன்னா ஹாஸ்டலலேயே இருக்கலாம் மாப்ள அப்படினு ஒரு பீளா வேற.

டேய் வீரா ஆறு மணி ஆச்சுடா 50 ரூபா கொடுறா நாங்க கெளம்புறோம்.

தரேண்டா பச்ச,இப்ப நம்ம கோரிப்பாளயம் போறோம் வாங்கடா, கோரிப்பாளயத்தில ஒரு லாட்ஜ் பேர சொல்லி இங்க தங்கிட்டு காலைல போகலாம்னான்.

இல்லடா நாங்க போகனும், வீட்ல போயி மெஸ் பில்லு, செலவுக்கு பணம் வாங்கிட்டு இன்னும் ரெண்டு நாள்ல ஹாஸ்டல் போகனும்.

சும்மா ஜீவக் குடுக்காதீங்கடா, ஹாஸ்டல்ல போய் என்ன பண்ண போறீங்க, சுருட்டண்ணன் கடை புளிச்ச கள்ள குடிச்சிட்டு தூங்க போறீங்க, என்னமோ காலேஜ் போயி படிக்க போற மாதிரி சும்ம ரவுச குடுக்கீறீங்க, நானாவது வீடு கட்ட துணையா இருக்கேன்.

சரி நீங்க இருங்கடா வரேன்னு சொல்லிட்டு போனான். ரோட்டு ஒரமா நாங்களும் ஒரு அரை மணி நேரமா காத்திட்டு இருக்கோம் ,கையில டீ குடிக்க கூட காசில்லாம.

என்னடா இதுவரை 300 கு மேல செலவு பண்ணிட்டான் ஒரு 25 ரூபா கொடுத்தான்னா ஊருக்கு போயிராலமேடா. கொடுப்பானா இல்ல சங்குதானா.கொடுக்கல்லண்ணா எப்படியாவது மேலூர் போயி அழகு வீட்ல ரெண்டு நாளு ஓட்ட வேண்டியதுதான்.

ஒரு 45 நிமிடம் கழித்து வீரன் கொஞ்சம் தளர்ந்து போய் வந்தான்.

மக்கா மதுரையில பக்காவான அந்த தியேட்டர்ல ஸ்பீல்பெர்க் மாதிரி ஒரு டைரக்டர் எடுத்த கன்னட டப்பிங் படம் ஓடுது, தியேட்டரோட சவுண்டு எபெக்டுக்காகவே பாக்கலாம் வாங்கடா போலாம்.

தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுகள்,சாணத்தை தாண்டி டிக்கெட் எடுத்து செகண்ட் ஷோ, கழுகு மாதிரி ஒரு கிராபிக்ஸ் நடிச்ச கன்னட டப்பிங் படம். யாரோ குடிகாரன் எடுத்த வாந்தி நாத்தத்துடன் முழுப்படத்தையும் பாத்தோம். ஆண்டவா ஒரு ரிக்சா எடுத்துட்டு போய் வயிர கழுவுனதுக்கு இவ்வளவு பெரிய சோதனையா?

வெளியே வந்தவுடன் மக்கா 30 ரூபாய் தாண்டா மிச்சம் இருக்கு இந்தாங்க அப்படின்னு கொடுத்தான்.

ஒரிவழியா தப்பிச்சு அதிகாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தோம்.

தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன்ன பச்ச ஜீன்ஸ் ஏனோ செம்பட்டு போற பஸ்ல ஏறி உட்காந்து இருந்தான்.சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை அவன் பாத்தானுன்னு எனக்கு தெரியாது.

முற்றும்

பச்ச ஜீன்ஸ்காரன்,நான் மற்றும் மதுரை வீரன்.

கல்லூரியில் படிக்கும் போது விடுதி வாழ்க்கை, வழக்கம் போல வீட்ல வாங்கிட்டு வந்த காசு தீந்துபோச்சி. வாத்தியார் கடைக்கும்,சுருட்டண்ணன் கடைக்கும் போகனும்னா காசு வேணும், அடுத்த கட்ட நடவடிக்கையா உடனே ஊருக்கு போக விடுதி நண்பர்கள்கிட்ட கடன் வாங்கிட்டு வீட்ல போய் பணம் வாங்கிட்டு வரனும்.

அந்த பச்ச ஜீன்ஸ்காரன் வந்தான் டேய் நானும் வறேன்,திருச்சி வானொலி நிலையத்தில வேலை பாக்கிற அக்காகிட்ட எதையாவது பொய் சொல்லி காசு வாங்கனும்.

ஏன் காசு வாங்கி இந்த ஜீன்ஸ தொவக்கனுமா, இல்ல வேற ஜீன்ஸ் எடுக்கனுமா?

ராமநாட் (இராமநாதபுரம்)பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கோ/ திருச்சிக்கோ காரைக்குடி வழியாக செல்லலாம் செலவு குறைவு ஆனால் மிக மோசமான சாலை. இருவரும் மதுரை வழியாக திருச்சி செல்வது என்று முடிவு செய்து கையில் இருந்த காசும் போதுமானதாக இருந்ததால் மதுரை நோக்கி பயணம்.

அண்ணா நிலையத்தில இறங்கினோம், பச்ச ஜீன்ஸ் சொன்னான், அமெரிக்கன் காலேஜ் வரைக்கும் போயிட்டு வருவோம்னான். நடக்க ஆரம்பித்தோம், எங்களோட போதாத காலம் பார்க்க சென்ற நண்பன் இல்லை. திரும்பி நடந்து வந்தோம். பச்ச ஜீன்ஸ் திடீர்னு வழியில போன ஒரு ரிக்சா புடிச்சு அண்ணா நிலையம் போகச்சொன்னான். இறங்கியவுடன் ரிக்சாகாரன் கேட்ட 20 ரூபாயை கொடுக்கசொன்னான். அப்படியே ஒரு ரூபாய் கொடுன்னு வாங்கிட்டு, நீ வெயிட் பண்ணு நான் வரேன்னான்.

கொஞ்சம் நேரம் கழிச்சுட்டு வந்தான்.
எங்கடா போன,என்கிட்ட காசு முடிஞ்சு போச்சு 3 ரூபாய் தான் இருக்கு, உன்கிட்ட எவ்வளவுடா இருக்கு.நடந்தே வந்திருக்கலாமேடா 20 ரூபாய் வேஸ்ட்.ரிக்சா புடிச்சி வர்ற அளவுக்கு என்னடா அவசரம்.

சரி அதை விடு இப்ப ஒன்னும் இல்லடா. எல்லாம் காலி. அந்த 3 ரூபாய குடு நம்ம மதுரை வீரனுக்கு போன போட்டு 25 ரூபாய் வாங்கி திருச்சி போய் சேருவோம் அப்புறம் அக்காகிட்ட வாங்கி உனக்கு தரேன் நீ தஞ்சாவூர் போயிடலாம்.

போன் பண்ணான் ரெண்டாவது முறை மதுரை வீரன் கெடச்சிட்டான்.

டேய் வீரா நானும், குடுகுடுப்பையும் இருக்கோம், திருச்சிக்கு போக காசு இல்லடா ஒரு 25 ரூபா தேத்திக் குட்றா.

மாப்பிள்ள எங்க இருக்க,

அண்ணா பஸ் ஸ்டேண்டு பக்கத்தில இருக்க காயின் பூத்ல இருந்து பேசரேண்டா, மறக்காம் 25 ரூபா…

அங்கியே இரு வந்துடறேன்.

மதுரை வீரன் வந்தான், டேய் மக்கா எவ்ளொ நாள் ஆச்சு பாத்து, காலேஜ் எப்படிடா இருக்கு இந்த செமஸ்ட்டர் எழுதலாம்னு இருக்கேன் மாப்பிள்ளை. எல்லா பேப்பரையும் இதுல தூக்கிட்டு ஒரு சல்லயை கொடுத்துருவோம்.

மொதல்ல நீ அந்தப்பக்கம் வா அதுக்கு அப்புறம் சல்லையை குடுக்கலாம். இப்ப துட்டைக்குடு நாங்க திருச்சிக்கு சாயந்தரதுக்குள்ள போகனும்.

பொருடா பத்து ரூபாதான் பாக்கெட்ல இருக்கு எங்க மாமாகிட்டதான் வாங்கனும், காளவாசல் போகனும் போலாம்.

வீரன் மாமாகிட்ட எங்கள காட்டி 500 ரூபா வாங்கினான். மக்கா 500 கெடச்சிருக்கு இன்னைக்கி வேட்டதான். வாங்க மொதல்ல போய் ஒரு ரவுண்டு உடுவோம்.

ரெண்டாவது ரவுண்டு விரைவில்.

Tuesday, October 7, 2008

சாவு காப்பீட்டின் அவசியம்.

வேலை பார்க்கும் அனைவரும் வாழ்நாள் காப்பீடு(life insurance), மருத்துவ காப்பீடு(health insurance). ஆகியவைக்கு தரும் முக்கியத்துவத்தை இறந்த பின் ஈமக்கிரியை நடத்துவதற்கு கொடுக்கிறார்களா. அதற்கான காப்பீட்டு கம்பெனி தான் சாவு காப்பீட்டு கம்பெனி.

அநாதைப்பிணம் ஆகிவிடுவோம் என்ற கவலையா? மேலும் விவரங்களுக்கு 1-xxx-xxxx-xxx என்ற எண்ணுக்கு அழையுங்கள்

மேற்கண்ட விளம்பரத்தை பார்த்த ராகவன் போன் பண்ணினான்.
டிரிங், டிரிங், டிரிங், for calims press 9, all other questions press 0.

0

வணக்கம் நான் ஸ்டெல்லா “சாவு காப்பீட்டு கம்பெனி” என்ன வேணும் உங்களுக்கு.

ராகவன் : நான் ராகவன் ,சாவுக்காப்பீடு எடுக்கலாம்னு இருக்கேன், அது பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா.?
ஸ்டெல்லா : சொல்றேன் சார், இந்த காப்பீடோட முதல் நோக்கமே யாரும் அனாதைப்பொணமா ஆகக்கூடாதுங்கிறது தான் சார். இந்த காலத்தில பிள்ளைங்க ஈமக்கிரியை நடத்துவாங்கன்னு எதிர் பார்க்க முடியாதில்லயா அதுனால இது ரொம்ப அவசியம் சார். இதுல 3 பிளான் இருக்கு சார். நான் படிக்கிறேன் கேளுங்க

பிளான் 1 : சாவு சாதா
இதுல பாடை கட்டுதல், நகராட்சி வண்டி வாடகை, வாடாமல்லி பூ மற்றும் புதைத்தல்.
இதற்கான காப்பீட்டு தொகை மாதம் 5 ரூபாய். 15 வருடங்களுக்கு. இடையில் இறந்துபோனாலும் ஈமக்கிரியை நடத்தப்படும்.
பிளான் 2: சாவு ஸ்பெசல்.
இதுல பாடை கட்டுதல், மூங்கில் பாடை வண்டி, தூக்க நாலு உறவினர்களுக்கு பணம். வாசனை திரவியம், வாசனப்பூக்கள் மற்றும் வருபவர்களுக்கு டீ ச்செலவு, விறகு எரித்தல் அல்லது மின்சார எரியல். விரும்பினால் புதைத்தல்

இதற்கான காப்பீட்டு தொகை மாதம் 10 ரூபாய். 15 வருடங்களுக்கு. இடையில் இறந்துபோனாலும் ஈமக்கிரியை நடத்தப்படும்.

பிளான் 2: சாவு பிரிமியம்.
இதுல பாடை கட்டுதல், மூங்கில் பாடை வண்டி, தூக்க நாலு உறவினர்களுக்கு பணம். வாசனை திரவியம், வாசனப்பூக்கள் மற்றும் வருபவர்களுக்கு டீ ச்செலவு சாராயச்செலவு, சந்தன விறகு எரித்தல் அல்லது மின்சார எரியல். விரும்பினால் புதைத்தலுடன் கல்லறை, சாவு ம்யூசிக் /டான்ஸ் பார்ட்டி, அதிகம் அழுபவர்களுக்கு குலுக்கல் முறையில் இறந்தவிரின் பெயரில் பரிசுகள்.

இதற்கான காப்பீட்டு தொகை மாதம் 25 ரூபாய். 15 வருடங்களுக்கு. இடையில் இறந்துபோனாலும் ஈமக்கிரியை நடத்தப்படும்.

என்ன சார் எந்த பிளான் சார் உங்களுக்கு வேணும்.


ராகவன் : மாசம் 10 ரூபாய் கம்மியாதான் இருக்கு, எனக்கு வயசும் 25 தான் ஆகுது, நான் பிளான் 2 ஐயே எடுத்துக்கிறேன்.தேவைப்பட்டா பிளான் 3 க்கு பின்னாடி மாத்திக்கிறேன்.

ஸ்டெல்லா : மாத்திக்கலம் சார், ஆனா அப்ப ப்ரிமியம் அதிகமானலும் ஆகிடும் சார்.

ராகவன் : பரவாயில்ல பிளான் 2 வே கொடுஙக.
ஸ்டெல்லா : ரொம்ப நன்றி ராகவன் சார்.

4 வருடம் கழித்து ராகவன்: காலிங் 1-xxx-xxxx-xxx,
டிரிங்…. :”

பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு : சாவு காப்பீட்டு கம்பெனி எதிர்பாராத விதமாக செத்துப்போனதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் வந்து இலவசமாக சாவு டான்ஸ் /மியூசிக் போட்டுவிட்டு செல்லலாம்”

Sunday, October 5, 2008

மீதி பாட்டை நீங்க சொல்லுங்க

பள்ளிப் பருவத்தில் தமிழ்ப்பாடத்தில் படித்த ஒன்று

கம்பன் மாலை வேலையில் காற்று வாங்க வயல் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்த போது ஏற்றம் இறைக்கும் ஒரு உழவன் பாடிய பாட்டு இது

"மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே".

அடுத்த வரியை பாடுவதற்குள் இருட்டிவிட்டது, உழவன் பாடாமல் சென்றுவிட்டான்.

அடுத்த வரியை நீங்கள் சொல்லுங்கள்.

Friday, October 3, 2008

இந்த மதம் புதிய மதம்

முன் குறிப்பு: எழுத சரக்கு இல்லாத காரணத்தினால். எனது கோடானு கோடி ரசிகப் பெருமக்களை ஏமாற்ற விரும்பாததால் கவிதை மாதிரி ஒன்றை எழுதுகிறேன். தமிழ்மணத்தில் இதுவரைதான் தெரியும்.


இந்த புதிய மதத்தில்
கடவுள் இல்லை
கடவுளின் தூதனும் இல்லை.
வழிபாட்டு முறையும் இல்லை
வழிபாடும் இல்லை.
நீங்கள் சேர்ந்தாலும்
சேராவிட்டாலும்
தொல்லையுமில்லை.
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.

Thursday, October 2, 2008

வருங்கால முதல்வர் யார் ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
நாட்டாமை சரத்குமார்
நவரச நாயகன் கார்த்திக்
டாக்டர். விஜய்.
சகலகலாவல்லவன் விஜய.டி.ராஜேந்தர்.
புரட்சிப்புயல் வடிவேலு
புரட்சித்தமிழன் சத்தியராஜ்
புரட்சி நாயகி திரிசா
தாராள நாயகி நயந்தாரா
வறட்சி நாயகி சினேகா

இவங்க எல்லாம் வருங்கால முதல்வர் ஆகுறாங்களோ இல்லையோ
ஆனா நான் ஆயிட்டேன்

இதோ


இங்கே

குடுகுடுப்பைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம்.

வலையுலகில் அவருக்கு இவர் எச்சரிக்கை கடிதம்,இவருக்கு அவர் எச்சரிக்கை கடிதம் எழுதி விசாரித்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் சில நல்ல நட்பும் , பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. பிரச்சினை இல்லாத எச்சரிக்கை கடிதமாக என்னை எச்சரித்து நானே எழுதிக்கொண்ட கடிதம்.

கடவுளுக்கே ஒரு மொக்கை கடிதம் எழுதினாய், உனக்கு ஒரு கடிதம் எழுதி அதை படித்துப்பார்.

வீட்ல,அலுவலகத்தில ஆயிரம் வேலை இருக்கும் போது உனக்கு எதுக்கு வலைப்பதிவு எழுதுர வேலையெல்லாம். இதுவரைக்கும் எதையாவது உருப்படியா எழுதியிருக்கியா அப்படின்னு என்னைக்காவது சுய விமரிசனம் பண்ணி பாத்தியா?

ஒரு எழுத்தாளனுக்குள்ள எந்த அறுகதையும் உனக்கு இல்லைன்னு நண்பர் நாநா சொல்றது சரிதான்னு உனக்கு தோனலயா?

உன்னோட பதிவு இப்படியே தொடர்ந்தா வீட்ல சும்மா குழம்பு கூட கெடக்காம போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கே அதை உணர்ந்தாயா?

மடிக்கணினியை மடியில் வெச்சு தமிழ்மணத்தில மேஞ்சு பின்னூட்டம் போடலாம். ஆனா நடு ராத்திரியில படுத்துக்கிட்டே நெஞ்சு மேல வெச்சி பின்னூட்டம் போடுறது, பதிவெழுதுறதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலயா குடுகுடுப்பையாரே.

தங்கமணி உங்களுக்கு கிறுக்கு பிடிச்சுருக்கு கீழ்பாக்கத்தில சேக்கனும் அடிக்கடி சொல்றாங்களே அது உண்மையா இருக்குமோ.

“எனக்கு கிறுக்கு பிடிச்சா நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்”
“கிறுக்கு பிடிச்சா பிடிச்ச மாதிரி” (நம்பர் வேற தேவையா இதுக்கு).

இது தொடருமா? முற்றுமா? என்ன நடக்கும்னு எனக்கே தெரியலயே…