Monday, July 27, 2009

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=12704

ஆட்சிப்பணியும் குடும்பப்பணியும் அதிகமாக இருப்பதால், கட்சிப்பணி எனக்கு தோளில் கிடக்கும் துண்டு போன்றதால் என்னுடைய கட்சியான கு.ஜ.மு.க பணிகளுக்கு சிறிது நாள் ஓய்வு.

குடுகுடுப்பை.

பி:கு: தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Friday, July 24, 2009

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கு.ஜ.மு.க போட்டியிடுவதில்லை என்று கு.ஜ.மு.க பொதுக்குழு கூடி முடிவெடுத்துள்ளது.

நிறைய உருப்படியான வேலைகள் இருக்கும் இந்த நேரத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது கால விரயம் என்று கு.ஜ.மு.க பொதுக்குழு ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.

குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

Monday, July 13, 2009

தங்கமணி ஸ்பெசல் டீ

என்னங்க 6:30 மணியாச்சு எந்திரிங்க...
டீ வேணுமா , காபியா.

டீயே போடு , காபி வடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.

சரி டீயே போடுறேன், நீங்க கொஞ்சம் இந்த டீ போடுற பாத்திரத்தை எடுத்து கொடுங்க

காலையிலேயே என்ன கம்பியூட்டர்ல, சீக்கிரம் வாங்க

ம்ம்ம்
எடுத்துட்டீங்களாஅப்படியே கொஞ்சம் அடுப்ப ஆன் பண்ணி ஒரு டம்ளர் தண்ணி சுட வைங்க..

வெச்சிட்டேன்.இன்னைக்கி மார்க்கெட் என்ன ஆகப்போகுதோ..

அது இருக்கட்டும், அந்த கப்ப எடுத்து மைக்ரோவேவ்ல 2% பால் 1:45 நிமிடம் வைங்க, நான் பாப்பாவை எழுப்புறேன்.

வெச்சிட்டேன்.

ரெண்டு ஸ்பூன் டீத்தூள் எடுத்து அந்த சில்வர் பாத்திரத்தில போட்டு அந்த வெண்ணீர எடுத்து ஊத்தி வைங்க நான் வரேன்.

ம்ம்ம்ம்

பால் எவ்ளொ நேரம் சூடு பண்ணீங்க்

2 நிமிடம்.

1:45 நிமிடம் தான வைக்க சொன்னேன், அது பொங்கி ஊத்தி போச்சு, யாரு தொடக்கிறது.

சரி விடு. எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

உங்களுக்கு தெரியாது, அந்த சில்வர் டம்ளரையும் டீ பில்டரையும் எடுங்க..

எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

டீ ஸ்டாராங்கா இருந்தா கசக்கும், நான் சரியா கலந்து தரேன். அப்படியே சக்கரையை எடுங்க..

ரெண்டு ஸ்பூன் சக்கரை போடுங்க..

மெதுவா கீழ கொட்டாம..

ம்ம்ம்

டீ நல்லா இருக்கா

ம்ம்ம்

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு

பி:கு: தினமும் டீ குடிப்பதால் மீள் பதிவு

Monday, July 6, 2009

பின் பழமைத்துவ வர்ணனை.

பின் பழமைத்துவ வர்ணனை.

அந்த சுவர் அவள் முதுகைப்பார்த்துக்கொண்டிருந்தது, அழகாக இருந்தது அவளின் முதுகு மட்டுமல்ல எதிரில் நின்று அவளின் கூர்மையான கண்களை மட்டுமே பார்த்து பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில், அவளின் முதுகைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்த இந்த சுவரின் மீதான கோபத்தை அவளிடம் காண்பிக்காமல் சுவரிடம் காண்பித்த கோப உணர்ச்சியும்தான். சுவர் நினைத்தது ஜன்னல்கள் உடைக்கப்பட்ட பின் கவனிக்க ஆள் இல்லாமால் நான் அலங்கோலமாக இருக்கிறேன், அங்கே ஜன்னல் நீக்கப்பட்ட பின்னர் இத்தனை அழகாய் இருக்கிறதே அதனால்தான் பால் வித்தியாசம் இல்லாமல் அது கவனிக்கப்படுகிறதோ.சுவரில்லாத சித்திரம் அழகாய் இருக்கிறதே , அந்த சித்திரம் ஏன் என் மேல் இருக்கக்கூடாது, சித்திரத்தோடு சுவர் அழகாய் இருக்குமே.சற்றே கீழே இறங்கி பார்த்தது சுவர், அருமையான அழகான வளைவுகள், இது போன்று வளைவுகள் வைத்து சுவரும் கட்டியிருந்தால் எப்படி இருக்கும், ஒருவேளை வளைவுகள் ஆபத்தை தரும் என்பது தெரிந்தே கட்டவில்லையோ.எதிரில் நின்று பெண்ணிடம் பேசிக்கொண்டே சுவரைப்பார்த்துக்கொண்டிருந்த ஆடவன், சுவரின் அடுத்தகட்ட வர்ணனையை நினைத்து அச்சம் கலந்த கோபத்தோடு அவனுக்கு பின்பக்கம் உள்ள சுவற்றின் மீது சாய்ந்தான். அவன் முதுகு ஈரமாகியது. அவன் காதுக்குள் அந்த சுவர் சொன்னது முட்டாளே நகர்ந்து நின்றிருக்கலாமே, அந்த சுவர் பெண்ணின் பின் பக்கத்தை வர்ணித்துவிட்டது, நான் முன்பக்கம் வர்ணிக்கவேண்டும் நீ உன் முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறாய். பெண்ணின் முன்பக்கம் ஆணின் முதுகு போன்று இருக்கும் என்று ஒரு வரியில் வர்ணித்திருக்கிறேன்,நான் இப்போ என்ன செய்வது.

பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.

Wednesday, July 1, 2009

தொவையல் :வட அமெரிக்க,சென்னை வலைப்பதிவர் கிசுகிசு,ஜாக்சன்.

இவர் சாக்லேட் உச்சரிப்பு போன்று வரும் ஊரில் வசிப்பவர், பழம்பெரும் நடிகை ஜெயஸ்ரீயை பார்ப்பதற்காக அட்லாண்டமான ஊருக்கு செல்கிறார் என்று செய்தி. சாக்லேட் ஊரில் வசிக்கும் இன்னொரு பதிவர் வீட்டிற்கு ஓசியில் புத்தகம் எடுக்க சென்ற போது பழம்பெரும் நடிகையை பார்க்கப்போகும் செய்தியை சொல்லவில்லையாம், எப்படியோ தெரிந்து கொண்ட அவர் காச்சுமூச்சு என்று கத்தினாராம்.

இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.
----

மைக்கேல் ஜாக்சனுக்கு 400 மில்லியன் கடன் இருக்கு, அப்படின்னு அவரு இறந்த நாள் முதலா அதையே திரும்ப திரும்ப சொல்லி அதைவிட கூடுதலாக நிறைய ஊடகங்கள் சம்பாதிச்சிருப்பாங்க போல, நானும் அவர பத்தி எழுதிட்டேன், எல்லாரும் கொஞ்சம் பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க,அடுத்தவன் துயரத்துல எனக்கும் கொஞ்சம் பலன் கிடைக்கட்டும்.

---

தற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.