Tuesday, September 30, 2008

என் மகளின் பதிவுஎன் மகளின் கேள்வி:
தாரே ஜமீன் பர் படத்தில் ஏன் பெண் மாணவர்களே இல்லை?

Monday, September 29, 2008

தொன்னை நினைவுகள்

வலைத்தளத்தில் நிறைய பேர் திண்ணை நினைவுகள் பற்றி ஒரு சங்கிலித்தொடர் எழுதியிருந்தனர். நான் திண்ணையைப்பற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும் என் வீட்டு திண்ணை பற்றிய பதிவு ஏற்கனவே வலைப்பதிவாக உள்ளது.

ஆதலால் நான் தொன்னை பற்றிய என் நினைவுகளை எழுதுகிறேன். வலையுலகில் நிறைய பேருக்கு “நெய்க்கு தொன்னை ஆதாரமா?” என்கிற பழமொழி தாண்டி தொன்னை பற்றி எவ்வளவு தெரியும் என எனக்கு தெரியவில்லை.

நான் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில், விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் தொன்னையுடன் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. எனக்கு தெரிந்து இரண்டு வகை தொன்னைகள் உண்டு. பச்சை பனை மட்டையில் செய்யப்படும் தொன்னை, மாட்டுப்பொங்களன்று மாடுகளுக்கு சோறு ஊட்ட பயன்படும் பலா இலை தொன்னை. பலா இலை தொன்னை ஒரு விழாத்தொன்னை அத்தோடு அது முடிந்தது.

வயலில் நடவு போன்ற வேலை நடக்கும் போது 100-200 ஆட்கள் வேலை செய்வது சாதாரணம். இம்மாதிரி நேரங்களில் நடவு ஆட்களுக்கு மதிய உணவாக கஞ்சி கொடுக்கப்படும். அந்த கஞ்சியை குடிப்பதற்கு பச்சை பனைமட்டையில் செய்யப்படும் இயற்கை பாத்திரம் தான் தொன்னை.இந்த தொன்னை பனைமரம் இல்லாத ஊர்களில் இருக்க வாய்ப்பில்லை.

வேலையாட்களோடு அவர்களில் ஒருவராக தொன்னையில் கஞ்சி குடிப்பது ஒரு நல்ல அனுபவம். எங்கள் வீட்டில் நடவின் போது அனைவருக்கும் பெரும்பாலும் வயலில்தான் சாப்பாடு, இல்லை தொன்னையில் கஞ்சி.பெரிய பானையில் இருந்து கஞ்சியை அகப்பையில் எடுத்து ஒருவர் அனைவருக்கும் தொன்னையில் ஊற்றுவார். பசியாறும் வரை குடித்துக்கொள்ளலாம். பெரும்பாலும் தொட்டுக்கொள்ள மாங்காய் வத்தல் ஊறுகாய் தான் இருக்கும்.அபூர்வமாக அப்போதைக்கு விலை குறைவான காய்கறிகளும் தொட்டுக்கொள்ள கிடைக்கலாம்.

ஒருமுறை பயன்படுத்திய தொன்னையை குப்பையில் எரிந்து விடுவார்கள், அதே வயலுக்கு அடுத்த வருடம் உரமாகிவிடும்.
இந்த தொன்னையை ஓடும் வாய்க்கால் தண்ணீரில் விட்டு கப்பல் விட்ட அனுபவமும் உண்டு.கப்பல் விடும் போது மீன்கள் அதில் மிச்சம் உள்ள சோற்றை உண்ண போட்டி போடும்.

இதே தொன்னையை நான் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரியின் வேலி தாண்டியவுடன் உள்ள சில இடங்களில்(தனி பதிவாக விரைவில்) வேறு காரணத்திற்கு பயன்படுத்துவதை பார்க்க நேரிட்டது. கள் குடிப்பவர்கள் பனைத்தொன்னையை கள் ஊற்றி குடிக்கும் ஒரு கலனாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால் விவசாயிகள் பயன்படுத்தும் தொன்னை போல் புதிய தொன்னை அல்ல. ஒரு சில பழைய தொன்னைகளையே அனைத்து கள் விரும்பிகளும் பயன்படுத்தினர். போதை தேடும் இடத்தில் சுகாதாரம் காணாமல் போவது சாதாரணமே,மொத்தத்தில் கள்ளும் பழசு தொன்னையும் பழசு.

கஞ்சி குடிக்கும் இடத்திலும் கள் குடிக்கும் இடத்திலும் பழைய ஊறுகாய் பொதுவான செலுத்தியாக இருந்தது, மொத்ததில் குடிப்பதற்கு தமிழனுக்கு ஊறுகாய் தேவைப்படுகிறது என்ற உண்மை இதன் மூலம் தெளிவானது.


நெய்க்கு தொன்னை ஆதாரமா? என்று பழமொழி உள்ளது, ஆனால் பலருக்கு வயிற்றுக்கு ஆதாரமாய் இருந்த கஞ்சி தாங்கிய தொன்னை பற்றி ஒன்றும் இல்லையே, அதனால் தான் இந்த பதிவு.

என்ன படிச்சிட்டீங்களா?

இப்போ கேள்வி

தொன்னையின் படம் வரைந்து பாகங்களை குறி? 100 மதிப்பெண்கள்.

Thursday, September 25, 2008

இட்லி வடையை நடத்துவது யார்?

தி.மு.க வை நடத்துபவர் கலைஞர்.
அ.தி.மு.க வை நடத்துபவர் புரட்சித்தலைவி.
ம.தி.மு.க வை நடத்துபவர் வைகோ.
தே.மு.தி.க வை நடத்துபவர் புரட்சிக்கலைஞர்.

ஆனால் இட்லி வடையை நடத்துபவர்கள்…?

தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும் இந்த கேள்வி இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த கேள்வி ஏன் எழுந்தது என்றே வியப்பாக உள்ளது.

பொதுவா இட்லி வடைக்கு மாவு அறைக்கிறத அந்த மாவ கொஞ்சம் நடத்தித்தா என்று கிராமத்தில சொல்வாங்க. ஆக மொத்தம் மாவ யார் அறைக்கிறாங்களோ அவங்களே நடத்துகிறார்கள்.

பொதுவா எல்லார் வீட்டிலயும் இப்ப கிரைண்டர்/மிக்ஸி தான் மாவ அறைக்கிது ஆனாலும் அவை ஓட்டுனர்கள்தான், நடத்துனர் தங்கமணியோ ரங்கமணியோதான்.ஹோட்டல்னா பிச்சுமணி.

நாம இட்லி வடையை நடத்துறது யாருன்னுள்ள கேள்வியோட இருக்கோம் இவன் என்னடா மாவை பத்தி பேசறான் அப்ப்டின்னு கேக்கறீங்க. பொதுவா நாம இட்லி வடைய சாப்பிடும்போது மத்தவங்க பாத்து “நடத்துங்க நடத்துங்க”ன்னு சொல்வாங்கள்ல அதுனால இட்லி வடையை நடத்துறது அதை சாப்புடுற எல்லாரும் தான். இத நான் சொல்லல ஜக்கம்மா சொல்றா.

Wednesday, September 24, 2008

இது என்னுடைய 25 வது பதிவு- ஒரு மறு பதிவு

மு:கு : இது என்னுடைய 25 வது பதிவு. 99 சதவீதம் மொக்கைகளையே கொடுத்த நான் என் பதிவில் உருப்படியான ஒன்றாக நினைப்பது ஒரே பதிவுதான். அந்த பதிவை எழுத மட்டுமே நான் வலைப்பூ ஆரம்பித்தேன்.
அப்பதிவை மேலும் பலர் படிக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்

இப்பதிவு பயனுள்ளது என நினைத்தால் பின்னூட்டம் இடுங்கள், இதன் மூலம் மேலும் பலரை இப்பதிவு சென்றடையும்.

நன்றி

மீண்டும் நடக்க பழகினான்
அமெரிக்கா வரும் ஆர்வத்தில் சென்னையிலிருந்து சிகரெட் வாங்க மறந்த நடேசனும் அவனது நண்பனும் அலுவலகம் அருகில் உள்ள 7/11 க்கு சென்று சென்னையில் கொடுக்கபட்ட $50 ஐ கொடுத்து சிகரெட் வாங்கினார்கள்.

கொடுதத சில்லரையை எண்ணிப் பார்த்த நண்பனிடம் நடேசன் கேட்டான்,
உனக்கு அமெரிக்க சில்லரை காசுகளை எண்ணத் தெரியுமா?
இல்லடா கடைகாரன் நமக்கு தெரியாதுன்னு நெனச்சுட கூடாதில்லயா அதான் அப்படி….

சிரித்துவிட்டு சிகரெட் புகைத்து விட்டு அலுவலகத்துக்கு சென்ற நடேசன் தனது மேசையில் வைக்கபட்டிருந்த தனக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை எடுத்து வைத்துக்கொண்டான்.

ஒரு சில வாரம் ஓடியிருக்கும், திடீரென நடேசனின் முதுகு வலி பெரிதாக வலிக்க ஆரம்பித்தது, ஏற்கனவே தனது தண்டுவட பிரச்சினை பற்றி அறிந்ததால். மருத்துவரிடம் செல்லவேண்டாம் என முடிவெடுத்து நண்பர்களின் உதவியோடு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான்.ஆனால் வலி விடுவதாக இல்லை.

அவனது நண்பர்கள் 911 க்கு அழைத்து emergency க்கு ambulance மூலம் சென்று, அங்கு முதல் பெயர், கடைசிப்பெயர் எல்லாம் சொல்லிவிட்டு எனக்கு தண்டுவடத்தில் L4-L5 ல் பிரச்சினை , நடேசனின் கூற்றை ஏற்று சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் மருத்துவரிடம் கான்பிக்க அறிவுரை கூறினர்.நடேசன் அமெரிக்க மருத்துவ வசதிகள் கண்டு பிரமித்து
போனான்.

15 வயதில் இருந்து வரும் இந்த முதுகு வலிக்கு, அமெரிக்காவில் நல்ல மருத்துவம் செய்ய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அவன்.

நடேசனின் அலுவலக நண்பர் ஒருவர் தனது எலும்பியல் மருத்துவரை பரிசீலனை செய்தார். மருத்துவரும் நடேசனின் கூற்றை ஏற்று சில மாத்திரை மற்றும் MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார். Copay $10 ஐ எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.
டாக்டர் ஒரு மாதிரியாக பார்த்து “Please give it in the front desk” என்று சொன்னார்.

பிரபல மருந்து கடையில் டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தான். மொத்தம் ஒரு வாரம் சாப்பிடவேண்டும்.முதல் நாள் 7 மாத்திரைகள் அடுத்தடுத்து 6,5,4,3,2,1 என சாப்பிடவேண்டும்.

இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.

முதுகு வலி முழுவதுமாக மறைந்த மாதிரி இருந்தது.MRI results வந்தது, L4-L5 ல் சிறிய பிரச்சினை உள்ளது, வலி இன்னமும் இருக்கிறதா எனக் கேட்டார் டாக்டர். இல்லை என்றான் நடேசன். வலி மீண்டும் வந்தால் இதே மாத்திரையை 2 or 3 dose எடுக்கலாம் என்றார்.

காலம் வேகமாக ஓடியது, திருமணம் நடந்து மனைவி இப்போது நிறைமாத கர்ப்பினி. திடீரென ஒருநாள் மீண்டும் அதே வலி. Emergency room. வலது பக்க இடுப்பு மிகவும் வலிக்கிறது என்றான். வலிக்கும் இடத்தை பார்த்தால் kidney stone ஆக இருக்கும் என்றார்.
இல்லை இல்லை எனக்கு L4-L5 இல் பிரச்சினை என்றான் நடேசன்.ஆமோதித்த டாக்டர்கள் சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் டாக்டரை பார்க்க அறிவுரை செய்தனர்.

மீண்டும் அதே எலும்பியல் டாக்டர் அதே மாத்திரை.வாரம் கடந்தது
ஆனால் இம்முறை வலி நிற்கவில்லை, மாறாக அவனுடைய அனைத்து joint லும் வலி வந்தது. மீண்டும் அதே டாக்டர், இது முதுகு வலி அல்ல என கூறி வேறு மருத்துவரை அனுகும்படி கூறினார்.

PCP said it could be Poly arthritis. அவர் சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் வலி விடுவதாக இல்லை.அன்றிரவே மீண்டும் Emergency room. இம்முறை எதற்கும் kidney stone test செய்து விடுங்கள் என்றான்.

“You have a big kidney stone on your right kidney. It needs to be cleared using lithotripsy”. – Emergency Doctor.

கல் உடைக்க தேதி குறிக்கப்பட்டது.கூடவே அலைந்ததால் மனைவிக்கு அதே நாள் பிரசவ நாள். அழகான பெண் குழந்தை. அனைத்து பிர்ச்சினைகலும் ஒரு வழியாக முடிந்து குடும்பமே மகிழ்ச்சியை அனுபவத்தது.

ஒரு வருடம் ஓடியது, நடேசனுக்கு இம்முறை இட்து புற Hip joint ல் வலி வந்தது. இம்முறை PCP யின் அறிவுரைப்படி மற்றொரு எலும்பியல் டாக்டரை அனுகினான். அவரிடம் கடந்த இரு வருடங்கலாக நடந்ததை கூறினான் இரண்டு முறை Steroid medicine எடுததது உட்பட.

MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார், MRI முடிவுகள் வந்த பிறகு என்ன மருத்துவம் செய்யலாம் என கூறினார்.

டாக்டர் அலைபேசியில் அழைத்தார். “Your both hips are affected by a condition called ‘AVASCULAR NECROSIS’ your left hip affected the most”. ஒன்றும் புரியவில்லை நடேசனுக்கு.

இது தானாகவும் வரலாம், Steroid medicine பக்க விளைவாலும் வரலாம், அதிக பட்ச alcohol உபயோகத்தாலும் வரலாம் என்றார்.

இதற்கான மருத்துவத்தை கூறிய போது அவன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தான்.
“You are not old enough to have HIP REPLACEMENT”. 15 வருடம் வரும் உங்களுடைய வாழ்க்கையில் இரண்டு அலலது மூன்று முறை HIP REPLACEMENT தேவைப்படும் என்றார்.

மருத்துவத்தின் முதல் பகுதியாக you can walk with crutches, it may heal the necrosis by removing the weight from the hip joint, it will allow the body tries to resume blood supply to the bone and heal by itself. But your left hip is affected too much already, lets hope for the best.

குழந்தை நடக்க பழகியது , நடேசன் crutches வைத்து நடக்க பழகினான் எப்படியாவது HIP REPLACEMENT இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்.

பி.கு :

நடேசன் மருத்துவரிடம் தனக்கு இருந்த முதுகு வலியை வலியுருத்தி சொல்லியிராவிட்டால் kidney stone கண்டுபிடிக்கப்ட்டிருக்கும், Steroid medicine இரண்டாவது முறை தவிர்க்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் Steroid adulteration செய்கிற போலி சித்த மருத்துவர்களிடம்
எச்சரிக்கையாக இருக்கவும்.

20 களில் உள்ள ஒருவரின் முதுகு வலிக்கு, இது போன்ற மருந்து கொடுக்கலாமா?

எந்த நாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், நாம் என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதில் கவனம். குறிப்பாக உயிர் காக்கும் மருந்தான
Steroids.

பதிவர் டாக்டர் புருனோ அவர்கள் மேலும் பல அறிவுரைகள் கூற அழைக்கிறேன்.

Disclaimer: இது கவனக்குறைவை களைய ஒரு எச்சரிக்கை, யாரையும் குறை கூற அல்ல.

Tuesday, September 23, 2008

சூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.

மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும். ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.

மு:கு2:செந்தழல் ரவி ஏற்கனவே what the hell is it brother ? அப்படின்னு கமெண்ட் போட்டாரு அதான் தூக்கிட்டேன் அன்னிக்கே,
ஆனாலும் மீண்டும் இங்கே.

டேய் கணேசா ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுறா,-- பண்பரசன்
சரி மாப்பிள்ளை போட்டா போச்சு, என்ன மாப்பிள்ளை இப்படி திராசு படிக்கல்லோட திரியற,,,

அது ஒன்னும் இல்லடா , நெல்லு போட சென்டருக்கு வந்தேன், அந்த ஆபிசர் பயகிட்ட காலைல கையெழுத்து போட்டு ஒரு நூறு ரூபாய் வெட்டிட்டு நூறு சாக்கு வாங்கிட்டு போனேன், நெல்லும் சாக்குல புடிச்சு 71 கிலோ கலத்துலயே எடை போட்டு ஏத்திட்டு வந்தாச்சு,இப்போ நெல்லை பாத்துட்டு ஈரப்பதம் 24 க்கு மேல இருக்கு, எடுக்க முடியாதுன்னு சட்டம் பேசறான்,காய வெக்க சொல்றான், என்கிட்டே இதெல்லாம் நடக்குமா , அதான் திராசு படிக்கல்ல கையோட எடுத்துட்டு வந்திட்டேன், என் நெல்ல வாங்காம மத்தவன் நெல்ல எப்படி வாங்கிறான்னு பாத்துபுடறேன்.

ஏற்கனவே நெல்லுக்கு வெல இல்ல, இந்த டவுண்காரங்க ஒரு மயிறுக்கும் போறாத படத்தை குடும்பத்தோட 1000 ரூவா குடுத்து பாக்ஸ்ல உக்காந்து பாப்பாங்க ஆனா மாசம் 1000 ரூவா குடுத்து அரிசி, காய்கறி வாங்கறதுக்கு கால் ..லுன்னு கத்துவாங்க. வெவசாயின்னா எல்லாருக்கும் எலக்காரம் ஆயி போச்சி.

ஆபிசர் சொல்ற மாதிரி நீ கொஞ்சம் நெல்ல காய வெச்சு கொடுக்க வேண்டியது தான மாப்பிள்ளை ஏன் பிரச்சினை பண்ணிக்கிட்டு ......

நீ டீய ஒழுங்கா போடுறா வெண்ண, பொழக்க வந்த நாய் எனக்கு அட்வைஸ் பண்ணது போதும், சும்மா பேசின பால் குண்டானெல்லாம் பறந்துரும் பாத்துக்க, நான் இருக்கிற வெறில நீ வேற கடுப்ப கெளப்புற , அவன் எல்லாம் ஒரு ஆளா, மூணு மாசத்துக்கு தான் அவன் ஆபிசர், சென்டரு மூடுனா வேல கோயிந்தா அப்புறம் சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிறவன், அவன் சொல்றத நான் கேட்கமுடியுமடா? நாங்க வெவசாயம் பண்றவன் எல்லாம் கேண்க்.... இப்ப வருவான் பாரு கெஞ்சிகிட்டு.

ஆமா டீத்தூள் போடுறியா இல்ல மரத்தூள்ல டீ போடுறியா நீ, காசு மட்டும் வாங்குங்கடா நல்லா , இதை குடிக்கறதுக்கு,வீட்ல கொஞ்சம் வடிச்ச கஞ்சிய குடிச்சிட்டு வந்திருக்கலாம்.

அங்கே வந்த பெரிய மனிதன் கோவிந்தராஜன், என்னடா பண்பு, நெல் கிட்டங்கில எதோ பிரச்சினை பண்ணியாமே? அவர் உன் மேல கேசு கொடுக்க போறேன் சொல்றார் ஏன்டா இப்படியெல்லாம் பண்ற?

என்னது கேசு கொடுக்கிறானா? நெல்லு உங்களுது ,உங்க கையெழுத்து போட்டுதான் சாக்கு எடுத்திருக்கு, போலீஸ் வந்தா உங்களைத்தான் பிடிச்சுட்டு போவான், இந்தாங்க திராசு படிக்கல்லு நான் வரேன்.

டேய் பண்பு டீக்கு காச கொடுத்திட்டு போடா?

Monday, September 22, 2008

இன்று முதல் பட்டை சாராயம்.

இது நாள் வரைக்கும் எனது முதண்மை தொழிலான குடுகுடுப்பைக்காரன் வேலையை செய்துகொண்டிருந்த நான். குருவி மாதிரி சம்பாதிச்ச காசெல்லாம் இந்த ஸ்டாக் மார்க்கெட்ல போட்டதுல என்னோட உடைகளெல்லாம் போன வருடமே உருவிட்டாங்க.

நானும் மனம் தளராமல் குடுகுடுப்பைக்காரனுக்கு பேய்,பிசாசு,அவட்டைகளிடம் பேசும்போது உடைகள் தேவையில்லை என்பதாலும், குறி சொல்லும்போது இரவில் செல்வதாலும்,நாடு முழுவதும் உள்ள மின்வெட்டும் எனக்கு உதவியாக இருந்து உடையை பற்றி கவலைப்படாமல் என் தொழிலை செய்துகொண்டிருந்தேன்.

ஆனால் இப்போது அடித்த ஸ்டாக் மார்க்கெட் சூறாவளி எனது உடுக்கையையும் பாதியாக உடைத்து விட்ட காரணத்தினால் என்ன செய்வது என புரியவில்லை.

இதற்கிடையில் வீட்டில் குழந்தை, பாதியாக உடைந்த உடுக்கை ஆனியில்லாத பம்பரம் போல் உள்ளதாகவும்.அதற்கு ஆனி வாங்கி தரும்படி படுத்துவதால், ஆனி வாங்குவதற்க்காக பணம் தேவைப்படுவதால், சிறிது காலம் குடிசைத்தொழிலான பட்டை சாராயம் காச்சலாம் என்றிருக்கிறேன். இதற்கு உங்களுடைய பேராதரவை எதிர் நோக்கி உள்ளேன்.

தொழில் தர்மம் கருதி, பட்டை சாராயம் தயாரிக்கும் முறை,பயன்படுத்தும் பொருள் மற்றும் அதன் பயன்களையும் உங்களுக்கு தருகிறேன்.

தேவையான பொருட்கள்:
1. கெட்டுப் போன சக்கரை ,சக்கரை ஆலை கழிவுகள்.
2. பவர் போன பேட்டரிகள்.
3. செத்துப்போன பாம்பு,பல்லி,பூரான்,கரண்ட் (இருந்தா) கம்பியில் அடிபட்ட காக்கா,சீக்கில் செத்த கோழி மற்றும் சில
4. யூரியா(அம்மோனியா)
5. கடைகளில் அழுகிப்போன பழங்கள்/காய்கறிகள் குப்பைத்தொட்டியில் வீசிய பிறகுதான் பொறுக்கவேண்டும்.
6. கல்யாண மண்டபம்/ஹோட்டல் குப்பைத்தொட்டியிலும் பொறுக்கலாம்.
7. வர மிளகாய்
8. பொரொப்ரைட்டரி மிக்ஸ்.(தொழில் ரகசியம்)
9. ஊறவைக்கும்போது நமக்கே தெரியாமல், நல்லபாம்பு மற்றும் சில விஷ ஜந்துக்கள் பானையில் விழக்கூடும்.
10. காய்ச்சி வடிக்க தேவையான கலன்கள் மற்றும் விறகு போன்றவை திருடிக்கொள்ளவேண்டும்.

செய்முறை:
மேற்கண்ட பொருட்களை, ஒரு பெரிய மண்பானையில் வைத்து ஊற வைக்கவேண்டும். கிட்டதட்ட ஒரு வாரம் வரை ஊற வைத்தால் சுவை(?) நன்றாக இருக்கும். டிமாண்ட் அதிகமாக இருந்தால் கொஞ்சம் அதிகம் அம்மோனியா மற்றும் உச்சாவையும் சேர்த்து மூன்று நாட்களில் காய்ச்சி வடிக்கலாம்.(பதிவின் நீளம் கருதி காய்ச்சி வடித்தல் முறை விளக்கம் இல்லை)

காய்ச்சி வடிக்கப்பட்ட பின் குப்பைத்தொட்டியில் மற்றும் ரோட்டோரத்தில் வீசப்பட்ட பால் பாக்கட் போன்றவற்றில் உலகத்தரத்தில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

நன்மைகள்:

இந்தியாவில் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் மிக்க காய்ச்சிகள் உள்ளதால் சொற்ப விலையில் தயாரிக்கமுடியும், இந்த தொழில்நுட்பம் நமக்கே சொந்தமானலும் மேலை நாட்டை சார்ந்த சில கம்பெனிகள் காப்புரிமை பெற்றுவிட்ட காரணத்தினால், நம்முடைய பங்கு அதில் காய்ச்சிகளாக மட்டுமே, இருந்தாலும் நல்ல சம்பளத்தில் MNC வேலை. இருந்தாலும் மேலை நாடுகள் பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் கவனம் செலுத்தலாம்.

உலகமெங்கும் காஸ்ட் கட்டிங் நடப்பதால் ஸ்காட்ச் போன்ற மது வகைகளுக்கு மாற்றாக நூற்றில் ஒரு பங்கு குறைந்த செலவில் ராஜ போதை தரும் பட்டை சாராயம் வழங்கலாம்.

வீட்டுக்கடனில் திவால் ஆகும் நிலையில் உள்ள வங்கிகள் இந்த தொழில்முனைவோர்களுக்கு கடன் கொடுத்து திவாலில் இருந்து தப்பிக்கலாம்.இத்தொழில் திவால் ஆக வாய்ப்பு மிகக்குறைவு,வீடு வாங்கியவர்கள் இதனைக் குடித்து கவலை மறக்கலாம்

இதனை குடிப்பதால் எடுக்கும் வாய் நாற்றத்தால் எப்படி டைவோர்ஸ் செய்வது (ஆண்/பெண் இரு பாலருக்கும்) என்ற பிர்ச்சினை தீர்ந்து உடனடி தீர்வுக்கு வாய்ப்பு அதிகம்.

மேற்கண்ட பலன்கள் பொய்த்தாலும், உச்சகட்ட நன்மையாக இதனை குடிப்பவர்கள் இந்த நரக பூமியில் இருந்து, குடித்தவுடன் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு உறுதி(99.99%).

கடவுள் தான் பாவம், விரைவாக சொர்க்கம் நோக்கி வரும் கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.

பி.கு: பாக்கியராஜின் நேற்று இன்று நாளை மாதிரி தொடர்பற்ற ஒரு சும்மா பதிவு. யாரும் முயற்சி பண்ணி பார்க்காதீங்க, அப்புறம் பட்டையை கழட்டிருவாங்க பின்விளைவுகளுக்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த பதிவை படிச்சிட்டீங்க மறக்காம உங்களோட பின் விளைவுகள் என்ன சொல்லிட்டு போங்க.

Saturday, September 20, 2008

போச்சு

நாஷ்டாக்ல போட்டேன்
நாஷ்டாவும் போச்சு
டவ் ஜோன்ஸ்ல போட்டேன்
டவுசரும் போச்சு
என் ஒய் எஸ் ஈ ல போட்டேன்
எல்லாமும் போச்சு
இந்த பதிவை போட்டேன்
கழண்டும் போச்சு

கவுஜ மூலம் : அது சரி

Friday, September 19, 2008

சும்மா குழம்பும் தங்கமணியின் அலும்பும்.

எங்க வீட்டில இப்பெல்லாம் செட்டி நாட்டு சமையல்தான். தங்கமணி இந்த பதிவை படிச்சிட்டு ஒரே கலக்கல் சமையல்தான். ஒரு நாள் செட்டி நாட்டு ஆட்டுக்கறி குழம்பு, வெண்டைக்காய் மண்டி,கள்ள வீட்டு அவியல்னு ஒரே கலக்கல் தான்.

வீட்டில காய்கறி எதுவும் இல்லாத அன்னைக்கு ஒரு உடனடி குழம்பு எப்படி வைக்கிறதுன்னு ஒரு நல்ல எண்ணத்தில செட்டி நாட்டு ஆச்சி சும்மா குழம்பு எப்படி வைக்கிறதுன்னு சொல்லிருந்தாங்க.இந்த குழம்பு 10த்தே நிமிடத்தில் வெக்கலாமாம்.

தங்கமணி இன்னைக்கு நான் சும்மா குழம்பு வைக்கப்போறேன்னு சொன்னாங்க. காய்/கறி இல்லாத அன்னைக்கு வெக்கலாமேன்னேன் நான்.

நான் சொன்னப்புறம் சும்மா குழம்பு இன்னைக்கேன்னு உறுதியாச்சு, சும்மா குழம்பு சின்ன வெங்காயம் போட்டு வெச்சாதான் நல்லா இருக்கும் நீங்க உடனே எங்கயாவது போய் வாங்கிட்டு வாங்கன்னாங்க. இல்ல ரொம்ப பசிக்குது பெரிய வெங்காயம் போட்டே வெய்யேன்னேன். இன்னைக்கு சாப்பிட முந்தா நாள் வெச்ச அவியல் இருக்கு இது நாளான்னிக்கு சாப்பிடத்தான் அப்படின்னாங்க.

எங்க வீட்ல இரண்டு பேரும் வேலைக்கு போறதால வழக்கமா தினமும் வேலை முடிச்சி வந்து சமையல் நடக்கும், ஆனா அன்னைக்கி சமைச்சதை அன்னிக்கே சாப்பிட முடியாது. ரத்னா ஸ்டோர்ஸ் எவர் சில்வர் பாத்திரத்தில ப்ரிட்ஜ்ல வெச்சு, அதை இரண்டாவது நாள் மைக்ரோவேவ் சேப் பீங்கான் பாத்திரத்துக்கு மாத்தி சுட வெச்சி சாப்பிடறதுதான் புரோட்டோகால். அது ஏன்னு இன்னக்கி வரைக்கும் எனக்கு தெரியாது. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

கார் எடுத்துட்டு போயி 12 மைலுக்கு அப்பால உள்ள வியட்நாமியன் கடையில் சின்ன வெங்காயம் மட்டும் வாங்கிட்டு வந்தேன்.சின்ன வெங்காயம் $1.25 அதுக்கு கேஸ் $4.00.

இதற்கிடையில் மிளகாய், மல்லி எல்லாத்தையும் வ(க)றுக்கும்போது வந்த வாடையில் fire alarm அடிச்சி அது ஒரு பக்கம்.ஆச்சியோட சும்மா குழம்பு பதிவை சுடச்சுட படிச்சிட்டே சமையல் நடந்துச்சு,மொத்தமா இந்த சும்மா குழம்ப வெக்கிறதுக்கு சும்மா 3 மணி நேரம் ஆச்சு.

ஒரு வழியா சும்மா குழம்பு வெச்சாச்சு, ஒரு மாறுதலுக்கு இன்னைக்கே இத சாப்பிடலாம்னு திடீர் உத்தரவு. ஏனோ தெரியல வாயில வெக்கவே முடியல ,ஆச்சி சொன்னபடிதான் சமைச்சேன்,நீங்க வாங்கிட்டு வந்த வெங்காயம் சரியில்லை அதான் இப்படி ஆச்சுன்னாங்க.

சும்மா குழம்பு பத்தி ஒரு பதிவு எழுதிருக்கேன், சூட்டோட சூடா இந்த பதிவை இனைச்சுடலாம்னு அனுமதி கேட்டேன். இரண்டு நாளைக்கு அப்புறம் இனைக்கலாம் அப்படின்னாங்க, இது சூடான பதிவல்ல ரெண்டு நாள் பழசு.

பி.கு : ஆச்சியோட சமையல் குறிப்பு மிகவும் அருமை

Thursday, September 18, 2008

கடவுளுக்கு ஒரு பக்தனின் மொக்கை வேண்டுகோள்.

இந்த வேண்டுகோள் ஒன்றும் புதிதல்ல, நாத்திகர்,ஆத்திகர் என அனைவரும் அனைத்து ஊடகங்கள் வழியாக பல காலங்களாக எழுப்பும் ஒன்றுதான்.

முதல்ல என்னைப்பத்தி சொல்லிடறேன், கடவுளே உங்களுக்கு இல்லை, இந்த மனுசப் பதருகளுக்கு(நன்றி யாகவா முனிவர்).

அறை எண் 305ல் கடவுள் படத்தில வர்ற மாதிரி எனக்கு தேவையின்னா மட்டும் கடவுளை துணைக்கு கூப்பிடர சராசரி பதரு நான்.எனக்கே என் கடவுள் நம்பிக்கைமேல முழுசா நம்பிக்கை இருக்கா இல்லயானே தெரியாதவன்.

கடவுளே உலகம் முழுவதும் இந்த மனுசப் பதருங்க எதுக்கோ அடிச்சுங்கிறானுங்க , புதுசா புதுசா ஆயுதம் கண்டுபிடிச்சு சக மனுசப் பதருகளை சாவடிக்கிறாங்க. இவங்களுக்கெல்லாம் எதுனா ஒரு சேதி சொல்லப்படதா.

கடவுளே சுனாமி,பூகம்பம், சடக்குன்னு ஒரு நொடில உருவாக்கி என்னை மாதிரியே கடவுளை துணைக்கு கூப்பிடற மனுசங்களை படக்குன்னு சாவடிக்கிறீங்க. இதெல்லாம் பண்ற நீங்க அதுக்கு பதிலா உலகத்துல உள்ள ஆயுதம் முழுசா அழிச்சுபுட்டீங்கன்னா, சண்டை போடுறதுன்னா கூட கட்டிபுடிச்சுதான் உருளுவாங்க ஒன்னும் பெரிசா ஆபத்து இல்ல, இதை செய்யுங்க கடவுளே, உங்களால முடியாதது ஒன்னுமே இல்லங்கிறப்ப இதை செய்யுங்க கடவுளே.

ஆக்கிறதும்,அழிக்கிறதும் என் வேலை நீங்க தேவை இல்லாம யாரும் சண்டை போட்டுக்கபுடாதுன்னு எல்லாருக்கும் தோன்றி ஒரு சேதிய சொல்லிட்டு போங்க, நீங்க பாட்டுக்கு தேவதைகள் அனுப்பிச்சிராதீங்க இங்க ஆம்பளப்
பதருக அவங்களோட ரூம் போட்டு யோசிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க.

நான் சொல்றது உங்களுக்கு புரியலன்னா செல்வ.கருப்பையா, அது சரின்னு ரெண்டு கவிஞர்கள் அவங்க கிட்ட சொல்லி அருஞ்சொற்பொருள் இல்லாம கவிதை வழியா வேண்டுகோள் விடுக்கசொல்றேன்.

அதுவும் இல்லன்னா ராப்புன்னு ஒரு அக்கா இந்த வலைப்பதிவுல ஒன்னுமே இல்லாம தொடரும் போட்டுட்டு இருக்காங்க அவங்கள விட்டு உங்களுக்கு புரியுர மாதிரி எழுத சொல்லுவோம்.

இல்லாட்டி மங்களூர் சிவான்னு ஒருத்தர் இருக்காரு அவர விட்டுரிப்பீட்டேய்ன்னு சுருக்கமா சொல்ல சொல்றோம்.

மொத்தத்தில் நல்லத பண்ணுங்க கடவுளே.

எழுத நினைத்து விட்டுப்போனது :

கடவுளே நீங்க இதெல்லாம் செய்யலன்னா பழைமை பேசி ன்னு ஒரு வலைப்பதிவர் இருக்காரு அவரு
"கடவுள் என்றால் என்ன ?" அப்படின்னு ஒரு பதிவு போட்டுருவாரு "


கடவுளே
நான் கேட்டதுல எதுனா தப்பு இருந்துச்சுன்னா மன்னிச்சிருங்க சாமி.

Friday, September 12, 2008

இதையாவது செய்யுங்க

இதையாவது செய்யுங்க மக்களே


தமிழில்:

நீங்கள்
உட்கார்ந்திருக்கும் மேசையிலிருந்தே, உங்கள் வலது கால் பாதத்தை தரைக்கு மேலாக தூக்கி அப்படியே கடிகாரச் சுற்று வாக்கில் வட்டமிடுங்கள். இதை செய்துகொண்டே உங்கள் வலது கையை பயன்படுத்தி " 6 ” என்ற எண்ணை காற்றில் வரையுங்கள். உங்களது கால் தன்னுடைய சுற்றும் திசையை மாற்றிக்கொள்ளும். இதற்கு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

சென்னை தமிழில்

நீ குந்திருக்க மேச மேலந்து, உன் சோத்தாங்கால அப்டிக்கா தூக்கி வாட்ச் சுத்துற மேரி சுத்திகினே இரு அப்டியே,சோத்தாங்கய்ய வெச்சு அப்ப்டியே காத்துல ஒரு “ 6 ” போடு. இப்ப உன் கால் இன்னா ஆவுதுன்னு மாரு மவனே, நீ ஒன்னியும் பண்ண முடியாது, ஹ்க்காம்ம்ம்ம்ம்.

ஆனால் என்னுடைய முந்திய பதிவை படித்து உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க .:-)

அவ்ளோதான் பதிவு

Thursday, September 11, 2008

நாட்டாமை கேட்ட தீர்ப்பு -குறுங்கதை

1984 ம் வருடத்தில் ஒரு நாள், 80 வயதான நாட்டாமை கணேசன் வழக்கம் போல பாலத்து சீனி பிள்ளை டீக்கடையில் வழக்கமாக சாப்பிடும் போண்டா மற்றும் டீ சாப்பிட்டு, கைத்தடியின் உதவியுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.


கணேசன் நாட்டாமை வீட்டில் வேலை பார்க்கும் மாயாவு, நாட்டாமையின் மகனின் சைக்கிளில் வயலுக்கு தேவையான உர மூட்டையை ஏற்றிக்கொண்டு நடவு ஆள் வருவதற்கு முன் அடி உரம் போடும் அவசரத்தில் வேகமாக சைக்கிளை மிதித்தார்.

முன்னால் செல்லும் பெரியவர் நாட்டாமை என்பதை கவனிக்காமல், சைக்கிள் பெல்லை அடித்தார் வழி விடக்கோரி.


வழிவிட்ட படியே திரும்பி பார்த்த நாட்டாமை, கீழ்சாதிக்கார மாயாவு தனக்கு பெல் அடித்து வழி கேட்டதை தாங்காது அதிர்ச்சியடைந்தவர், கோபத்துடன் டேய் கீழ்சாதிக்காரப்பயளே யாரப்பாத்து கினிகினின்னு மணி அடிக்கறே, அதுவும் என் மவன் சைக்கிள வெச்சே. அடிக்கவும் தன் கைத்தடியை ஓங்கினார்.

மாயாவு உடனே அய்யா சாமி நீங்கன்னு தெரியாம மணி அடிச்சுப்புட்டேன், என்ன மன்னிச்சிருங்க, சின்னய்யா சீக்கிரம் உரம் வாங்கியாரச் சொன்னாரு அந்த அவசரத்தில கவனிக்கல என்ன மன்னிச்ருங்கய்யா

அடுத்த நாள் நாட்டாமை கணேசனுக்கு படுக்கையை விட்டு எழமுடியவில்லை, முதுமை தன் வேலையை செய்தது, நாட்டாமையின் மகன் பக்கத்து ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் செய்யும் டாக்டர் சந்திரசேகரனை வீட்டுக்கு வரவழைத்து வர மாயாவை அனுப்பினார்.

டாக்டர் சந்திரசேகரன் வீட்டுக்கு வந்து, என்ன நாட்டாமை அய்யா என்பது காதில் விழுந்த கணத்தில், டாக்டரய்யா என்ன காப்பாத்துங்கய்யா என்று கதறினார் நாட்டாமை அந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த டாக்டரிடம்

பி.கு: இந்த பதிவுதான். என்னை இந்த கதையை எழுத தூண்டியது.

1984ம் ஆண்டு 80 வயதை கடந்த ஒரு முதியவரின் சாதி உணர்வு தன் உயிர் காக்கப்படவேண்டும் என்ற நிலையில் மறந்து போனது.

2008 ல் வாழும் நாம் மாறுபட்ட ஒரு உலகில் வாழ்கிறோம், தயவு செய்து சாதி என்கிற அடையாளத்தை காட்டி ஒருவனின் வழிபாட்டு உரிமையை பறிக்காதீர்கள். குறைந்த பட்சம் சாதி அடையாளத்தை திருமணத்திற்குள் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இந்திய சமூகம் உலகத்திற்கு நிறைய நன்மைகளை வழங்கியுள்ளது.சாதிகளற்ற இந்திய சமூகம் உலகத்திற்கு மேலும் நனமைகளை செய்யமுடியும். இல்லையென்றால் இந்தியர்கள் நாம் நம் அடையாளத்தை தொலைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

தமிழ்நாடு பயணம் – சென்னை --2

கு.ஜ.மு.க: தமிழ்நாடு பயணம் – சென்னை.

இரவு முழுவதும் வயிறு பிரச்சினை செய்து கொண்டிருந்தது, பக்கத்தில் உள்ள மருந்துக்கடையில் நண்பர் சில மாத்திரை வாங்கி கொடுத்தார்.அன்று முழுவதும் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.

கடந்த ஒரு வருடமாக தேனிலவில் இருந்த என் நண்பன் நட்புக்காக இரண்டு நாள் என்னுடன் தங்கி இருந்தான். மேலும் அண்மையில் திருமணமான எனது இன்னொரு நண்பர் அன்றுதான் பாங்காக்கில் இருந்து வந்து பார்த்தான். ஆனால் ஒரு சிறிய மாற்றம் அவன் அந்த பச்சை ஜீன்சை போட்டிருக்கவில்லை. ஒருவேளை தங்கமணி போடக்கூடாது சொல்லிட்டாங்க போல.

அன்று மாலை தேனிலவு நண்பனை வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டு, எதிரில் உள்ள மத்ஸ்யா என்ற சைவ உணவகத்தில் இட்லி வாங்கிக்கொண்டு லிப்ட்ல வரும்போது மயக்கமடைவது தெரிந்தது.

ஏதோ சத்தம் கேட்டது, கொஞ்சமாக கண் விழித்து பார்த்தேன். மூன்று நபர்கள் என்ன ஆச்சு சார் எனக்கேட்டனர். கைப்பிடித்து எழுப்பிவிட்டனர். கீழே விழுந்ததில் பொட்டில் அடிபட்டு சிறிது ரத்தத்துடன் வீங்கியிருந்தது.

அந்த மூவரும் என்னை எனது அறையில் விட்டுவிட்டு தெரிந்தவர்களிடம் பேசச் சொன்னார்கள். நான் எனது நன்றியை தெரிவித்தேன்.நண்பன் மற்றும் மைத்துனருக்கு பேசினேன்,மைத்துனர் செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர். இரவு நேர வேலை அன்று, தனக்கு தெரிந்த மருத்துவமனை ஒன்றில் சேரச்சொன்னார்.

இரவு 11 மணியளவில் கீழ்ப்பாக்கம் நியு ஹோப் மருத்துவமனை
நானும் எனது அதே தேனிலவு நண்பரும்.(இப்படி நான் பதிவு எழ்திக்கொண்டிருந்தால் இதன் நேர் எதிராக உள்ள மருத்துவமனையில் விரைவில் என்னை சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் என வீட்டில் ஒருவர் எச்சரிக்கிறார்)

முதல் வேலையாக அறையின் விலையை சொன்னார்கள் ஒரு நாளைக்கு ரூ1500 ஏசி போட்டால் ரூ 300 அதிகம். பின்னர் மருத்துவம் ஆரம்பம்..

டிஹைட்ரேசன் ஆனதால் நிறைய சலைன் கொடுத்தாங்க. இரண்டு நாள் அங்கேதான்.

தாம்பரத்தில் இருந்து மைத்துனரும், புதுக்கோட்டையில் இருந்து எனது தங்கை கணவரும் அடுத்த நாள் பார்க்க வந்து விட்டனர்.

மைத்துனர் சொன்னார் மென்பொருள் காரங்க மற்றும் அமெரிக்காவில இருந்து வரீங்கன்னு தெரிஞ்சா, புட் பாய்ஸனுக்கெல்லாம் 3 நாள் அட்மிட் பண்ணி, ரூ35000 பில் பண்ணிருவாங்கலாம். எனக்கு அவரு புண்ணியத்துல ரூ15000 க்குள்ள தான் வந்துச்சு.நண்பர் நெட்டையன் ரூ15000 பில் என்றவுடன், மூனாவதுமாடி வேலையை அப்புறம் எப்படி முடிக்கிறது என்றார்.

மொத்தத்தில் 15 நாள் விடுமுறையில் 4 நாள் முடிந்தது.
ஒன்று புரிந்தது, ஒரு நாள் வாயைக்கட்டியிருந்தால் இதெல்லாம் இல்லை.

ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையும் சாப்பிட்டப்ப எல்லாம் ஒன்னும் பண்ணலயே ஏன்? நான் படித்த கல்லூரி விடுதி சாப்பாடு கூட ஒன்னும் பண்ணல.

சென்னையில் நான் சாப்பிட நினைத்த எதையும் சாப்பிட முடியாமல் அடுத்த நாள் திருப்பூருக்கு, அங்கே அண்ணன் வீட்டில் 10 நாள் ஓய்வு பத்திய சாப்பாட்டோடு.

மீண்டும் மாடும் மாடு சார்ந்த மாகாணத்தில் பொட்டிதட்ட,
மீண்டும் பழையபடி குளிரூட்டப்பட்டு, சுடவைக்கப்பட்ட சாப்பாடு(global warming க்கு இதுவும் காரணமோ இருக்குமோ)


முற்றும்.

Wednesday, September 10, 2008

தமிழ்நாடு பயணம் – சென்னை.

சும்மா சொந்தக்கதை

இந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என நினைத்தே சுமார்மூன்றாண்டுகள் ஓடிவிட்ட நிலையில், இந்த வருடம் பிப்ரவரி-மார்ச்சில்சென்னை வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் நண்பன் ஒருவரின் திருமணம்.

லுப்தான்சாவில் பயணம் பிராங்பர்ட் விமானநிலையம், இங்கு லுப்தான்சாவின்ஜெர்மானிய பணிப்பெண்களை பார்த்தவுடன் ஏனோ வாய் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலை முனுமுனுத்தது.

சென்னை விமானநிலையத்தில் ஒரு காபி குடித்துவிட்டு, எழும்பூரில் உள்ள கிருஷ்ணா விடுதியில் நானும், நண்பனும் தங்கினோம்.விடுதி வாடகை ரூ1200, பரவாயில்லை ரகம். நாளைக்கு மதியம் அஞ்சப்பர் ஒரு கை பார்ப்போம்அப்புறம் சாயங்காலமா திருமண வரவேற்புக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டுதூங்கியாச்சு.

சுமாரா மதியம் 12 மணிக்கு எந்தரிச்சி கிளம்புறதுகுள்ள மணி 3 ஆயிப்போச்சு, அப்புறம் எங்க அஞ்சப்பர். ஆனாலும் மீன் சாப்பிடற ஆசையில் விடுதியுடன் இணைந்த நெல்லையப்பர்ல வஞ்சிரம் மீன்(போலி வஞ்சிரம் போல எனக்குதோனுச்சு) கொஞ்சம் மட்டன் கறி(கொஞ்சம் சலிச்ச வாடை வந்தது, ஆனாலும்விடலை) , இலை போட்டு சோறு வெச்சவுடன் வந்துச்சு பாருங்க ஒரு வாடை என்னத்த சொல்றது. சகிச்சிகிட்டே சாப்பிட்டு ஆட்டோ புடிச்சி காஞ்சி ஹோட்டல் கல்யாண மண்டபம் போய் சேர்ந்தாச்சு.

மண்டபத்து வாசல்ல அறுக்கப்படபோற ஆடு மாதிரி தலைய ஆட்டி எல்லாரையும் மாப்பிள்ளை வரவேற்றார்.சுமாரா 20 க்கும் மேற்பட்ட கல்லூரி நண்பர்கள் வந்திருந்தாங்க. பிரம்மா ங்கிற ஒரு நண்பர் மட்டும் தங்கமணி மற்றும் பையனோட வந்திருந்தார்.மத்த எல்லாரும் வெவர மிட்டாய் நிறைய சாப்பிட்டவங்க தனியாதான் வந்திருந்தாங்க.
கலகலப்பா பழைய கதைகளை பேசிட்டு இருந்தோம், வரவேற்பு முடிஞ்சி போச்சு எல்லாம் சாப்பிட போங்கன்னு சொன்னாங்க. சாப்பிட்டோம்.

இன்னைக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகு நெருங்கிய நண்பர் நெட்டயனையும் பார்த்தேன். அவன் துபாய்ல சேப்டி இஞ்ஜினியரா இருக்கேன்னு சொன்னான். அப்படினா என்னானு கேட்டேன் அதான் சேப்டி இஞ்ஜினியர் அப்படின்ன்னான். சரி பெரியவன் சொன்னா தலயாட்டிக்க்னும் அப்படியே விட்டாச்சு.

தூங்க போயாச்சு, ஆனா மதியம் சாப்பிட்ட அசைவம் வயிற்றில்
ஏதோ பண்ணிக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் திருமணம். மீண்டும் அதே மற்றும் பல கல்லூரி நண்பர்கள், இரண்டு நண்பர்கள் தங்கமணியோடு வந்தனர்.பேசிட்டே இருந்தோமா தாலிகட்டியாச்சுன்னாங்க எனக்கு தெரிஞ்சி நாங்க யாரும் கல்யாணத்தையே பார்க்கல. முக்கியமான கதைகள் பேசினதுல கல்யாணத்தை மறந்துட்டோம். தங்கமணியோடு வந்தவர்கள் பதில்களை தயாரித்துக்கொண்டிருந்தது நன்றாக தெரிந்தது.

இரண்டு நாளும் திருமண நண்பர் கூட போட்டோ மட்டும் நல்ல பசங்களா எடுத்துக்கிட்டோம்.

மீண்டும் கிருஷ்ணா விடுதி, நெல்லையப்பர் அசைவம் தன் வேலையை காண்பித்தது.

மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருக்கும் மைத்துனர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றேன், மைத்துனரின் மனைவி மிக நன்றாக வஞ்சிரம் வறுத்து வெச்சிருந்தாங்க. சாப்பிட்டவுடன் மைத்துனர் என்னை மீண்டும் எழும்பூரில் இருக்கும் கிருஷ்ணா விடுதியில் விட்டார். நெல்லையப்பர் அசைவம் தன் வேலையை காண்பித்தது இம்முறை தொடர்ச்சியாக...

தொடரும்….

Sunday, September 7, 2008

தமிழ்வழிக்கல்வி ஒரு பார்வை.

ஒருவன் தனது தாய்மொழி மூலம் கல்வி கற்கும் போது படிப்பதை எளிதில் உணர்ந்து கற்றுக்கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாய்மொழிக்கல்வி வெற்றிக்கு அடையாளமாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்தை கூறலாம்.

பல மொழி பேசும் முன்னால் ஆங்கில காலனியாகிய நம் நாட்டில் ஆங்கிலத்தின் மூலம் உயர்கல்வி கற்க வேண்டிய நிலை எளிதில் மாற்றக்கூடியது அல்ல.

இந்நிலையில் தமிழ்வழி மூலம் +2 வரை கல்வி கற்றவர்கள், கல்லூரியில் ஒரு முழு புரிதல் இல்லாமல் சில காலம் படிக்க நேரிடலாம். நன்கு ஆங்கிலம் தெரிந்த சில நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு, திறமை இருந்தும் ஆங்கில அறிவின் குறையினால் உலகமயமாக்கப்பட்ட இந்த வேலை சந்தையில் இவர்கள் இழப்பது அதிகம். இக்குறையை முளையிலேயே களைந்திட பெற்றோர் எடுக்கும் ஒரு முயற்சியே முதலில் இருந்தே ஆங்கில வழி கல்வி.

முதலில் இருந்து ஆங்கில வழி கல்வி என்பது பல பிரச்சினைகள் உள்ள ஒன்றாகவே எனக்கு படுகிறது.முதலில் புரியாத ஒரு மொழியில் அனைத்தையும் புரிந்து படிக்க முடுயுமா?
மேலும் பிறருக்கு வேலை செய்து தன் பிழைப்பு நடத்த, தன் அடையாளத்தை அவன் அறியாமலேயே இழக்க கூடிய நிலையை இது உருவாக்குகிறது.

ஒரு மனிதக்கூட்டத்தின் நாகரிகம் அவன் பேசும் மொழியில் தான் அளவிடப்படுகிறது. ஆனால் பிழைப்பிற்காக அதனை மனிதன் இழப்பது இயல்பான ஒன்றே.

இந்நிலையில் கல்வியாளர்கள் என்ன சொன்னாலும் பெற்றோர்கள் செவி மடுப்பது சந்தேகமே.சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒரிவரிடம் இது பற்றி விவாதம் செய்த போது, இரண்டும் கலந்த ஒரு கல்வி முறை கல்வியாளர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

இக்கல்வி முறைப்படி குறைந்தது வரலாறு, கணக்கு போன்ற பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டால், வரலாறும், கணிதமும் (மொழியின் பங்கு சிறிதளவே) நன்றாக கற்றுக்கொள்வதோடு தனது மொழியையும் அவன் கற்றுக்கொள்கிறான். அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதால் உயர்கல்வியும் எளிதாக அமைகிறது.

இதன் மூலம் தமிழை நாம் காக்க முடியும் என்று நம்பலாம். குழந்தைகள் அம்மா,அப்பா என்று அழைத்தால் பெற்றோர்கள் பையனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றெல்லாம் வருத்தப்பட மாட்டார்கள் எனவும் நம்பலாம்.

என் மகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று பெருமை அடித்துக்கொள்ள சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்.

பலருக்கு வரலாறு புரிந்து , நம் நாட்டை முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய சக்திகள் ஆண்டதை தனது பெற்றோருக்கு எடுத்துரைக்கலாம்.

வருங்கால தமிழர்கள் இந்த பதிவைப் படித்து விமர்சிக்க நேரிடலாம். யாருடா குடுகுடுப்பை தமிழில் ஒரு நல்ல பதிவை கூட தரவில்லை எனலாம்.

Tuesday, September 2, 2008

புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர்

வலைத்தளத்தில் மென்பொருளாளர்களை காழ்ப்புணர்சியோடு நிறைய பேர் கொத்தடிமை என்றெல்லாம் திட்டுகிறார்கள். அம்மாதிரி ஒரு பதிவில் எங்கோ படித்த பின்னூட்டத்தில் புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர் போன்ற ஒரு ஆரோக்கியமான சர்ச்சையும் பார்க்க முடிந்தது. அதையே கொஞ்சம் மொக்கையா நம்ம பதியாலாம்னு…

புராடக்ட் மென்பொருளாளர்:

ஒரு புராடக்ட் எப்பவுமே தரமா இருந்தாதான் அதை வாங்குவாங்க அதுனால இவங்க எப்பவும் ஏன்? எதற்கு? எப்படி ? என்று பல கேள்விகள் கேட்டு நல்ல தரக்கட்டுப்பாட்டுடன் தான் டெலிவெரி பண்ணுவார். இதனால இவர்கள் வாரத்திற்கு ஒரு பதிவுதான் போடமுடியும்.

கிடைக்கிற நேரத்தில் நிறைய படிப்பார்கள். அதனை எப்படியாவது தன்னோட புராடக்ட்ல ஒரு வசதியா கொண்டு வர முயற்சிப்பாங்க, அதுனால் அதிகம் பின்னூட்டமெல்லாம் போடமாட்டாங்க. மாதத்திற்கு சில பின்னூட்டங்கள் இடுவார்கள்.

சர்வீஸ் மென்பொருளாளர்:

இவருக்கும் சரி இவரை உபயோகப்படுத்துறவரும் சரி எதுவா இருந்தாலும் உடனே வேனும், பிரச்சினை உடனே தீரனும். தரமெல்லாம் ஒரு பொருட்டே கெடயாது. (அப்பதான் பிரச்சினை வரும் தீத்துகிட்டே இருக்கலாம்). இந்த காரணங்களால் இவர்கள் குறைந்தது வாரத்திற்கு 3 அல்லது 4 பதிவுகள் போடுவார்கள்.

எப்பயுமே எதையாவது தேடிக்கிட்டே இருப்பார்கள் (வெட்டி ஒட்ட). பதிவு படிச்சு நிறைய பின்னூட்டமெல்லாம் போடுவார்கள். அடிக்கடி மறுமொழி திரட்டிகளில் பெயர் வரும்.

-------------------------


இந்த இரண்டு தரப்பை சேர்ந்த சிலர் கிடைக்கிற நேரத்தில் நிறைய படிப்பாங்க ஆனால் பதிவோ, பின்னூட்டமோ போடமாட்டாங்க.


இந்த இரண்டு பக்கத்திலும் தவறு நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. புராடக்ட்காரங்க மொக்கையாவும் குடுக்கவும் சர்வீஸ் காரங்க நல்லதா கொடுக்கவும் வாய்ப்புகள் உண்டு. பொதுவா சொன்னா இரண்டு மென்பொருள் தரப்பினரும் ரொம்ப flexible, தேவைக்கேற்ப மாறிப்பாங்க.

மொத்தத்தில் கஸ்டமர் சாட்டிஸ்பேக்ஸன்(!) தான் முக்கியம் என்கிற மந்திரத்தை
மீறாதவர்கள்.


மொத்தத்தில் இரண்டு தரப்பும் சக்கையும், மொக்கையும் கலந்த பதிவுகளை தர வல்லவர்கள்.

அப்போ நான் யாரு?


நான் இந்த இரண்டு தரப்பையும் சேராத ஒரு துன்பதிவாளர்.


பி.கு: இந்த பதிவை படிக்காத யாரிடமும் நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்பதை துணிச்சலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா.

மீள்பதிவு காலம்.

பதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்

தினப்பதிவர் நகைச்சுவை நாகப்பாம்பு ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்

நான் தினமும் ஒரு மென்பொருள் ரிலீஸ் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறது கொஞ்சம் அதிகமா தெரியலயா?

தினசரி குறைந்தது 50 மென்பொருளாவது டெஸ்ட் செய்து, அதுக்கு bug report கொடுப்பேன்னு வேற சொல்றார்.

கி.பி 2030 ல தான் உபயோகப்பட போற மென்பொருளை இன்னைக்கு ரிலீஸ் பன்னா எப்படி?

இந்த மென்பொருளை இன்னைக்கு முடிக்க முடியுமான்னு meeting ல கேட்டா , conference table க்கு முதுகை காண்பித்து , என் பின்னால் 10 பேரு இருக்கும்போது ஏன் முடியாது? அப்படிங்கறார்.

பூச்சாஸ் என்கிற தன்னுடைய code library,மற்றும் தான் அங்கம் வகிக்கும் vavas ங் கிற ஒப்பன் சோர்ஸ் மட்டும் தான் இனிமே உபயோகப்படுத்தனும் சொல்றாரு? இது வெளங்குமா?

browser client மட்டும் தான் இனிமே இருக்கனும்னு அறிவுரை வேற சொல்றார்.

ச்சின்னப்பையன் முதல் program:

பொதுமக்கள் அமைப்பு வணக்கம்தங்கமணி{

பொதுமக்கள் நிலைப்பான் சும்மா முதன்மை(எழுத்து [] தகவல்கள்){

முயற்சி{

அமைப்பான்.வெளியே.அச்சடி(" வணக்கம் தங்கமணி");

}பிடி(எதிர்பாராதது எ){

அமைப்பான்.தவறு.அச்சடி(" தவறுக்கு நான் காரணம் இல்லை தங்கமணி");

}

}

}

க: > பொருளாக்கு வணக்கம்தங்கமணி.ஜாவா

தவறு : பொதுமக்கள் அடையாளச்சொல் அல்ல.


புலம்பல் : அய்யயோ பொதுமக்கள் இல்லையா அப்புறம்!

பொது அமைப்பு வணக்கம்தங்கமணி{

பொது நிலைப்பான் சும்மா முதன்மை(எழுத்து [] தகவல்கள்){

முயற்சி{

அமைப்பான்.வெளியே.அச்சடி(" வணக்கம் தங்கமணி");

}பிடி(எதிர்பாராதது எ){

அமைப்பான்.தவறு.அச்சடி(" தவறுக்கு நான் காரணம் இல்லை தங்கமணி" + எ );

}

}

}
க: > பொருளாக்கு வணக்கம்தங்கமணி.ஜாவா

சரியாக ஆக்கப்பட்டது.

மகிழ்ச்சியா வீட்டுக்கு போனவுடன் தங்கமணியிடம்

"என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு" பன்ச் டயலாக் விடுறார் பதிலுக்கு தங்கமணியும் பன்ச்..