பில் கிளிண்டன் பிறந்த/வளந்த ஊருக்கு குடுகுடுப்பைய யாரு கூப்பிட்டது.
பில் 'கிளு'ண்டன் பிறந்து மாணவப் பருவத்தில வளந்த ஆர்கன்சா மாகணத்திக்கு இந்த வாரம் போகச்சொல்லி வெள்ளிக்கிழமை மாலை ஜக்கம்மா உத்தரவு போட்டாச்சு, எதுக்குண்ணா இலையுதிர் காலம் இலை கலர் மாறி கலர் கலரா அழகா இருக்குமே அதப்பாக்கத்தான்.குடுகுடுப்பைக்காரனே ஜக்கு சொல்றத கேக்கலண்ணா அப்பறம் குகு சொல்றது யாரு கேக்குறது.
தங்கமணி, பாப்பா மற்றும் நான் காரெடுத்துட்டு சனிக்கிழமை காலைல ஹாட்ஸ்பிரிங்ஸ், ஆர்கன்சா கெளம்பியாச்சு. போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
அங்கே போய் பாத்தா வெள்ளிக்கிழமை அடிச்ச காத்துல முக்காவாசி கொட்டிப்போச்சு, நம்ம எள்ளுத்தாத்தா காளமேகப் புலவர் இதப்பாத்திருந்தா நம்ம தாத்தா பதிவர் பழமைபேசி தலையும் அந்த இலை உதிர்ந்த மரத்தையும் வெச்சு ஒரு எள்ளல் பாட்டு எழுதிருப்பாரு.நமக்குதான் இப்படியெல்லாம் உவமை சொல்ற அறிவு இல்லயே.
நம்மூரு சவுக்கு மரத்தோட ஒன்னுவிட்ட பெரியப்பா பசங்க மாதிரி இருக்கிற சில மரங்கள் நாங்க கலர் மாறமாட்டோம் அப்படின்னு பச்சையாவே இருந்துச்சு.
என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.
இதுல இருக்க படங்கள், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் டாலிமேனா, கொச்சிட்டா மலை பகுதிகளில் எடுத்தது.டாலிமேனா பகுதி ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.
கலப்பினத்தால கலர் மாறுன இந்த மாடுகள் எப்பயுமே ஒரு மகிழ்ச்சியதான் தருது.
மொத்தத்தில சனி ஞாயிறு ரெண்டு நாள்ல 800 மைல் தூரம் கார் ஓட்டி இத பாத்தோம், நல்ல ஒரு பொழுதுபோக்கு, ஆர்கன்சா மாகணம் டிரைவ் ரொம்ப நல்லா இருந்துச்சு ,
இந்த ரெண்டு நாள்ல என்னோட செல்போனுக்கு ஒரு கால கூட வரலை, ஏன்னா ஒரு நாளைக்கு 30 கால் பண்ற ஒருத்தருக்கு அந்த அவசியம் ஏற்படலைங்க.