கல்லூரி இறுதியாண்டு மெக்கானிக்கல் படிச்ச நான் எட்டாவது செமஸ்டர் புராஜக்ட்டுக்கு யாரு கூடயாவது சேந்து பண்ணலாம் நம்ம சும்மா சுத்தி சுத்தி வந்தா போதும், படிப்பாளி பசங்க பண்ணிருவாங்க பேர போட்டு ஒரு ரெக்காடு வாங்கிரலாம் அப்படின்னு நெனச்சிட்டிருந்தேன்.
ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் மாப்பிள்ளை யாரு கூடயும் சேந்து பண்ணா நம்மள மதிக்க மாட்டாங்க நம்ம கேங்லயே மெக்கு ஆறு பேறு இருக்கோம் நம்மளே பண்ணுவோம். நல்ல கைடு பாத்து புடிச்சிட்டா அவரு உதவி பண்ணுவாரு நமக்கும் ஒரு சேலஞ்சா இருக்கும், நல்ல புராஜக்ட்டா பண்ணிரனும், நான் ஏற்கனவே மலேசியாவில இருக்கிர எங்கப்பாவுக்கு போண் பண்ணி 25000 ரூபாய் புராஜக்ட் பண்ரதுக்கு வேணும்னு சொல்லிட்டேன் அதனால செலவ பத்தி கவலைப்படவேண்டும், பிராஜக்ட் சூப்பரா இருக்கனும்,நாம கேங் தனியாதான் பண்ரோம் அப்படின்னான்.
நல்ல ஐடியாவ தோனுச்சு,சரின்னு எங்க துறையில உள்ள முக்கியமான ஒரு ஆசிரியர பாக்க போணோம், அவரு எங்கள எல்லாரையும் மேலயும் கீழேயும் பாத்தாரு, இவனுங்கெல்லாம் சேந்து புராஜக்டான்னு நெனச்சாரோ என்னவோ, நாங்க அவருகிட்ட சொன்னோம் இது ஒரு சேலஞ்சா பண்ரோம் நீங்க ஒரு நல்ல புராஜக்ட் ஐடியா கொடுத்து கைடு பண்ணுங்க சார் அப்படின்னோம்.
அவரும் மகிழ்ச்சியாகி, low cost water heater - அதுக்கு ஒரு புராஜக்ட் ஐடியா இருக்கு, அது என்னன்னா fuse போன Florescent
tube light எடுத்து இரண்டு பக்கமும் உள்ள பல்ப் கோல்டர உடையாம கழட்டிட்டு, உள்ள ஒட்டியிருக்கிற வெள்ள பவுடரை டியூப் லைட்டு உடையாம சுரண்டி வெளில கொட்டிட்டு, அந்த டியூப்லைட்டோட ஒரு முனைய கார்க் வெச்சு அடைச்சிட்டு டேப் வாட்டர ஊத்தி இன்னோரு முனையவும் கார்க் வெச்சி அடைச்சிட்டி வெயில்ல வெச்சிரனும், இதன் மூலமா தண்ணீர் சீக்கிரம் சூடாயுரும் இதான் புராஜக்ட் அப்படின்னாரு.
நாங்க எல்லாரும் சரின்னு தலைய ஆட்டினோம், வெளில வந்துவுடனே நண்பன் பாரிஸ் சொன்னான், மாப்பிள்ளை எங்கப்பா கிட்ட 25000 ரூபாய் பிராஜக்ட்டுக்கு காசு கேட்டிருக்கேன் இது என்னடா பிச்சைகாரத்தனமான பிராஜக்ட் ஒரு பைசா கூட செலவில்லாம, பழைய டியூப்லைட்ட ஒடைச்சி வெயில்ல தண்ணி சுட வைக்கிராராம்,குண்டானல தண்ணிய ஊத்தி வெயில்ல வெச்சாலும் தான் சூடாயிருமேடா,இந்த பிராஜக்ட் பண்ணொம்னு சொன்னா ஊரு உலகத்தில சிரிப்பாங்களேடா,நம்ம கேங்குக்கு பெரிய அவமானம்டா, எங்கப்பா வேற புராஜக்ட் ரெக்காட மலேசியாவுக்கு அனுப்ப சொல்லியிருக்காரு.இதுக்கு 25000 ரூபாயா கொலயே பண்ணிருவாரு மனுசன் இது வேணாம்டான்னுட்டான்.
ஒருவழியா அப்புறம் இன்னோரு கைட புடிச்சு கொஞ்சம் காஸ்ட்லியான புராஜக்ட் சொல்லுங்க சார் அப்படின்னோம், ஒருவழியா 3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் புராஜக்ட் பண்ணோம்.ரொம்ப காஸ்ட்லியாவும் இருந்துச்சி நல்லாவும் இருந்துச்சு.
ஆனா பாருங்க புராஜக்ட் பாதிலயே அந்த கைடு ரிசைன் பண்ணிட்டாரு, திரும்பவும் பழைய low cost water heater சார்தான் கைடு, பயந்துட்டோம் ஆனாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாரு இந்த புராஜக்க்டுக்கும்
நணபன் பாரிசுக்கு பெரிய புராஜக்ட் பண்ண திருப்தி.
Monday, November 24, 2008
Friday, November 21, 2008
குடுகுடுப்பை கோல்கீப்பரான கதை.
எனக்கு 10 வயசுக்குள்ள இருக்கும்னு நெனக்கிறேன்.எங்க கிராமத்தில உள்ள இளைஞர்கள் எல்லாம் சேந்து புட்பால் ஆடலாம்னு முடிவு பண்ணி காசெல்லாம் சேத்து ஒரு பந்து வாங்கிட்டாங்க.
இப்ப வெளயாட பெரிய கிரவுண்ட் கோல் போஸ்ட்டுக்கு மரம் எல்லாம் தேவைப்பட்டுச்சு. எங்க ஊரு காட்டாத்துக்கு பக்கத்துல இருக்கிற ஒரு பெரிய கிரவுண்ட கண்டு பிடிச்சாச்சி, கோல் போஸ்ட்டுக்கு மரம் வேணும், இருக்கிற இளைஞர்கள் எல்லாம் சேந்து கிரவுண்டுக்கு பக்கத்துல பக்கத்து ஊர சேந்த மங்கான் சவுக்கு தோட்டத்தில போயி சவுக்கு வெட்டி கோல் போஸ்ட் போட முடிவாச்சு.
வெற்றிகரமா ஒரு ஏழெட்டு சவுக்கு வெட்டியாச்சு, கோல்போஸ்ட்டும் ரெடி பண்ணியாச்சு. புட்பால் டீம் ரெண்டா பிரிச்சு டீமும் ரெடி, நான் சின்ன பையன் அதுவும் எலும்பன் ஓட முடியாது அப்ப்டின்னு சொல்லி கோல்கீப்பரா எனக்கு இட ஒதுக்கீடு குடுத்திட்டாங்க, நானும் கோல்கீப்பரா என்னால முடிஞ்ச வரைக்கும் ஆர்வமா விளையாடினேன்.
தீடீர்னு ஒரு பெரிய கூட்டம் நாங்க வெளயாடுர இடத்தை நோக்கி வந்தாங்க, நாங்களும் வேடிக்கை பார்க்கவோ இல்ல மாடு மேக்கிறவங்களோன்னு நெனச்சோம். ஆனா வந்தது மங்கான் தன் ஆட்களோட சவுக்கு வெட்டுன எங்கள புடிக்க வந்தாரு. எல்லாரும் ஒரே ஒட்டம். எனக்கு ஓட முடியாதுன்னு சொல்லித்தான் கோல்கீப்பர் போஸ்ட் குடுத்தாங்க, ஆனா யாருக்கும் சலைக்காம வேகமாதான் ஓடினேன். அப்புறம் ஊருல வந்து பஞ்சாயத்தெல்லாம் பேசி சின்ன பசங்க அப்படின்னு சொல்லி ஒரு வழியா மன்னிச்சு விட்டாங்க.
இப்ப காலேஜ், காலேஜ்ல புட்பால் வெளயாடும்போது,நான் ஏற்கனவே கோல்கீப்பரா இருந்த அனுபவத்த சொன்னேன், சரி நில்லுன்னாங்க, எதிர் டீம்ல வெளாண்ட நண்பன் ரிக்சா மாமா ஒரு பெரிய புட்பால் பிளேயர், ஒரு சாட் கோல் நோக்கி அடிச்சான், சரியா என் நெஞ்சு நோக்கி வந்த பந்த நானும் லாவகமா கையால பிடிச்சிட்டேன். ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்.

Thursday, November 20, 2008
இது என்ன உரிமைக் கவிதை.
இது என்ன உரிமைக் கவிதை.
................................................................................................
கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு விவரம் கவுஜ முடிவில்
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஆனது
ஆணுரிமை பேசினான்
பெண் குழந்தை பிறந்தது
பெண்ணுரிமை பேசினான்
கவலை மறந்தான்
மகள் அம்மா மாதிரி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கவுஜ பேசுவது பெண்ணுரிமையா,ஆணுரிமையா என்று கண்டுபிடிப்பவர்களுக்கு 1 ஜிம்பாப்வே டாலர் ரொக்கப்பரிசு, பரிசினை காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமீத் கர்சாய் வழங்குவார்.

Tuesday, November 18, 2008
மாங்காய் பிரியாணி :பி.வாசு தனது அடுத்த படம் பற்றி அதிரடி பேட்டி.
ரசிகப்பெருமக்களே பி.வாசுவின் கற்பனை பேட்டி இது. சும்மா சிரிக்க மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.
நிருபர் நிர்மலா : வணக்கம் பி.வாசு சார் என்ன சார் திடீர்னு இந்த பிரஸ் மீட்.
பி.வாசு: எனது புதிய படம் பற்றிய அறிவிப்புக்காகதான், சமீபத்தில வந்த தெலுங்கு படம் ஆவக்கா பிரியாணி என்ன ரொம்ப பாதிச்சிருச்சு, அதுனால அந்த படத்தை தமிழ்ல எடுக்கலாம்னு இருக்கேன்.அது பத்தி சொல்லதான் உங்களை எல்லாம் கூப்பிட்டேன்.
நிருபர் நிர்மலா : சரி சார், இப்ப கொஞ்சம் அந்த படத்தை பத்தி விளக்குங்க.
பி.வாசு: ஆவக்கா பிரியாணியோட ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா , ஆவக்கா ஊறுகாய் விக்கிற பொண்ணும் , பிரியாணி விக்கிற பையனும் லவ் பண்றதுதான்.அந்த லவ்வ ரொம்ப சுவராஸ்யமா சொல்லி இருப்பாங்க.தெலுகு சினிமாவிலேயே முதன் முதலா ஊறுகாய் விக்கிற பொண்ணும்,பிரியாணி விக்கிற பையனும் லவ் பண்றாங்க ரொம்ப வித்தியாசமான ஒரு முயற்சி.,எப்பயுமே தெலுங்கு படத்தில ஆளதான் கோடாலி வெச்சி வெட்டுவாங்க, ஆனா இந்த படத்தில வித்தியாசமா அதுல ஒரு சீன்ல ஆவக்காய கோடாலி வெச்சு வெட்டுவாங்க அங்கதான் இந்த படத்தை ரீமேக் பண்றதுன்னு முடிவு பண்ணேன்.
நிருபர் நிர்மலா : படத்துக்கு பேரு என்ன சார்? ஹீரோ,ஹீரோயிம் யாரு சார்?
பி.வாசு: படத்துக்கு பேரு மாங்காய் பிரியாணி, படத்துக்கு ஹீரோவா விஜய் போடலாம்னு கேட்டேன் அவரு ஏற்கனவே வில்லு படத்தில பிஸி, அப்பறம் என்னோட பையன்கிட்ட கேட்டேன்.மாங்காய்க்கிற பேரு எங்க அவன சொல்ற மாதிரி இருக்குன்னு பயப்புடுறான். அதுனால ரொம்ப நாளா சினிமா ஆசையில இருக்கிற நசரேயன் ஒரு புதுப்பையன் என்கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டர் வாய்ப்பு கேட்டு வந்தான். அவர்தான் ஹீரோ & தயாரிப்பாளர், இப்ப அமெரிக்கால இருக்கார். அதுனால ரெண்டு சாங் கூட அங்கேயே பண்ணலாம்னு இருக்கோம்.அப்புறம் அவரோட ஆசைப்படி நமீதாதான் இதுல மாங்காய் ஊறுகாய் விக்கிறவங்களா வராங்க. கூட இன்னோரு ஹீரோயின் தேடிட்டிருக்கோம். கதைப்படி இன்னோரு பிரியாணி கடைக்காரு பொண்ணா வராங்க. இன்னோரு விசேசம் என்னனா பொதுவா ஊறுகாய தொட்டுப்பாங்க இங்க அதுதான் மெயின் டிஷ், பிரியாணி பொண்ணு சைட் டிஷ்.
நிருபர் நிர்மலா : தமிழுக்கேத்த மாதிரி எதாவது மாற்றங்கள் உண்டா சார்?
பி.வாசு: தெலுகுல பாத்தீங்கண்ணா ஒரு ஹீரோயினோட கனவுல இன்னோரு ஹீரோயினும்,ஹீரோவும் ஒரு குத்தாட்டம் போடுவாங்க, ஆனா மாங்காய் பிரியாணில வித்தியாசமா என்ன பண்ரேன்னா ஹீரோவோட அம்மாவுக்கு மாங்காய் ஊறுகாய் பிடிக்காது,அதுனால மாங்காய் விக்கிற பொண்ணோட லவ்வையும் எதிக்குராங்க. அவங்களுக்கு பிடிச்ச பொண்ணு பக்கத்து கடையில பிரியாணி விக்கிறவரோட பொண்ணு, நான் என்ன பண்றேன்னா ஹீரோவோட அம்மாவோட கனவுல பிரியாணி பொண்ணுக்கும், ஹீரோவுக்கும் ஒரு சாங் வைக்கிறேன், இடையில் நமீதாவும் வருவாங்க அத ரொம்ப காமெடியா பண்ணலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்,இந்த சாங் அமெரிக்கால தான் சூட் பண்ரோம். அப்புறம் இன்னோரு விசயம் என் மனைவிதான் இந்த படத்தை உடனே எடுக்க சொன்னாங்க.
நிருபர் நிர்மலா : ஏன் சார் உங்க மனைவிக்கு படம் பிடிச்சிருச்சா?
பி.வாசு: அப்படியெல்லாம் இல்ல என்னோட படம் ரிலீஸ் ஆனப்புறம் லக்கிலுக்,அதிசா மற்றும் ஆயிரக்கணக்கான பதிவர்கள் விமர்சனம் பண்ணி என்ன எப்படியெல்லாம் திட்டுவாங்கன்னு பாக்கனும்னு ஆசைப்படுறாங்க.

Sunday, November 16, 2008
வாரணம் ஆயிரமும் ஆவக்கா பிரியாணியும்
இந்த வாரம் நான் இருக்கிற Dallas,tx இருக்கிற இர்விங்கனூர் ஹாலிவுட் தியேட்டர்ல வாரணம் ஆயிரம் படம் போட்டிருந்தாங்க , ரிவீவ் எல்லாம் படிச்சதுக்கப்புறம் போகலாமா, வேண்டாமான்னு ஒரு குழப்பம்.
ஆனா கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போலாம்னு சொன்னப்போ பாப்பா இல்ல நாம தியேட்டருக்கு மூவி போகனும் , அங்கே ஸ்னாக்ஸ் சாப்பிடனும் அப்படின்னு சொல்லிட்டாங்க.
மாலை 5 மணிக்கு ஷோ கூட்டம் இருக்காதுன்னு நெனச்சேன், ஆனா போனப்ப முத ரோலதான் சீட் கெடச்சுது, முதல் பாதி வரை படம் எனக்கு பிடிச்சது, ரெண்டாவது பாதில ஹிந்திலேயெ பேசறது கொஞ்சம் வெறுப்பேத்துச்சு, ஒருவேளை அடுத்து கவுதம் எடுக்கப்போற ஹிந்திப்படத்தோட களம் சென்னைல இருந்தா அவங்க தமிழ்லயே பேசுவாங்களா இருக்குமோ என்னமோ.
தந்தை/மகன் பாசத்தை பிரமாண்டமாக காட்ட அமெரிக்கா ,ஆர்மி ரெண்டும் பயன்படுத்திருக்காருன்னு நெனக்கிறேன். சாதாரண களத்திலும் சொல்லமுடியும். மத்திய தர மக்களின் பாசம்/நம்பிக்கையை பிரமாண்டமா சொல்லிருக்காரோ என்னவோ.
என் மகள் பிரச்சனை பண்ணாம ரொம்ப ரசிச்சு பாத்தா. குருவில பயந்த மாதிரி பயப்படல.
--
தங்கமணி வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.

Friday, November 14, 2008
நான் பயன்படுத்தும் மென்பொருள்
உருப்புடாதது அணிமா அண்ணன் செஞ்ச முத உருப்புடாத காரியம் என்ன இந்த மாதிரி உருப்படியான பதிவெழுத கூப்பிட்டதுதான்.சத்தியமா சொல்றேன் எனக்கு பிரவுசர உட்டா எந்த உருப்பிடியான மென்பொருளும் தெரியாதுங்க.
இருந்தாலும் ஒரு லிஸ்ட்.
mozila firebox - என்னோட பேவரிட் பிரவுசர், அதுனாலயே தங்கமணி IE தான் உபயோகிக்கிறாங்க.
vlc media player : எந்த video வையும் பிளே பண்ற ஒரு பிளேயர்.
e-kalappai தமிழ்ல பிளாக் எழுத எனக்கு பயங்கர உபயோகமா இருக்கு.
www.uptoten.com - இதுவும் ஒரு மென்பொருள் கணக்கில எடுத்துக்கங்க, ஒன்று முதல் பத்து வயது வரை உங்க வீட்ல குழந்தைங்க இருந்தா, நல்ல கதை,விளையாட்டு, வரைதல் எல்லாமே இருக்கு. குறிப்பா பூவா& குவாளா கேரக்டர் கதைகள்.
என்னையெல்லாம் எழுத கூப்பிட்ட எங்க அணிமா அண்ணனை மன்னிச்சு விட்டிருங்க.

ஏய் ஆண்மகனா நீ ?
பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.
மீசை வைத்தவன் நீ
மீசையை மழித்தவன் நீ
பெண்களைப் புரியாதவனும் நீ
பெண்ணுரிமை கண்டவனும் நீ
கடவுளை கண்டுபிடித்தவன் நீ
கும்பிட வழிமுறை கண்டவன் நீ
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
சட்டம் கண்டுபிடித்தவனும் நீ
சாதியை கண்டுபிடித்தவன் நீ
சண்டை போட்டவனும் நீ
சாகப்போறதும் நீ
வீணாப்போன நீ
விளங்காம போன நீ
மீசை வைத்தவன் நீ
மீசையை மழித்தவன் நீ
பெண்களைப் புரியாதவனும் நீ
பெண்ணுரிமை கண்டவனும் நீ
கடவுளை கண்டுபிடித்தவன் நீ
கும்பிட வழிமுறை கண்டவன் நீ
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
சட்டம் கண்டுபிடித்தவனும் நீ
சாதியை கண்டுபிடித்தவன் நீ
சண்டை போட்டவனும் நீ
சாகப்போறதும் நீ
வீணாப்போன நீ
விளங்காம போன நீ
Tuesday, November 11, 2008
பில் கிளிண்டன் பிறந்த/வளந்த ஊருக்கு குடுகுடுப்பைய யாரு கூப்பிட்டது.

பில் 'கிளு'ண்டன் பிறந்து மாணவப் பருவத்தில வளந்த ஆர்கன்சா மாகணத்திக்கு இந்த வாரம் போகச்சொல்லி வெள்ளிக்கிழமை மாலை ஜக்கம்மா உத்தரவு போட்டாச்சு, எதுக்குண்ணா இலையுதிர் காலம் இலை கலர் மாறி கலர் கலரா அழகா இருக்குமே அதப்பாக்கத்தான்.குடுகுடுப்பைக்காரனே ஜக்கு சொல்றத கேக்கலண்ணா அப்பறம் குகு சொல்றது யாரு கேக்குறது.
தங்கமணி, பாப்பா மற்றும் நான் காரெடுத்துட்டு சனிக்கிழமை காலைல ஹாட்ஸ்பிரிங்ஸ், ஆர்கன்சா கெளம்பியாச்சு. போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
அங்கே போய் பாத்தா வெள்ளிக்கிழமை அடிச்ச காத்துல முக்காவாசி கொட்டிப்போச்சு, நம்ம எள்ளுத்தாத்தா காளமேகப் புலவர் இதப்பாத்திருந்தா நம்ம தாத்தா பதிவர் பழமைபேசி தலையும் அந்த இலை உதிர்ந்த மரத்தையும் வெச்சு ஒரு எள்ளல் பாட்டு எழுதிருப்பாரு.நமக்குதான் இப்படியெல்லாம் உவமை சொல்ற அறிவு இல்லயே.
நம்மூரு சவுக்கு மரத்தோட ஒன்னுவிட்ட பெரியப்பா பசங்க மாதிரி இருக்கிற சில மரங்கள் நாங்க கலர் மாறமாட்டோம் அப்படின்னு பச்சையாவே இருந்துச்சு.
என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.
இதுல இருக்க படங்கள், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் டாலிமேனா, கொச்சிட்டா மலை பகுதிகளில் எடுத்தது.டாலிமேனா பகுதி ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.
கலப்பினத்தால கலர் மாறுன இந்த மாடுகள் எப்பயுமே ஒரு மகிழ்ச்சியதான் தருது.
மொத்தத்தில சனி ஞாயிறு ரெண்டு நாள்ல 800 மைல் தூரம் கார் ஓட்டி இத பாத்தோம், நல்ல ஒரு பொழுதுபோக்கு, ஆர்கன்சா மாகணம் டிரைவ் ரொம்ப நல்லா இருந்துச்சு ,
இந்த ரெண்டு நாள்ல என்னோட செல்போனுக்கு ஒரு கால கூட வரலை, ஏன்னா ஒரு நாளைக்கு 30 கால் பண்ற ஒருத்தருக்கு அந்த அவசியம் ஏற்படலைங்க.

Friday, November 7, 2008
கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.
ராகவன்: மாப்பிள்ளை இன்னக்கி கம்பியூட்டர் சயின்ஸ் பேப்பர் பரீட்ச்சைக்கு என்னடா ப்ரொகிராம் வரும், எதுனா சொல்லுடா நானும் கடம் போட்டு வெக்கிறேன்.
ராவணன்: நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. புரோகிராம்னு சொல்லி சும்மா பிராக்கெட்,பிராக்கெட்டா போட்டு வெச்சிருக்காங்க, இத கடம் போடரதோட ஒரு ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் போடறது ஈசிடா.
ராமசாமி(cse): கம்பியூட்டர் சயின்ஸ் புரோகிராமிங் ரொம்ப ஈசிடா, ஒன்னயும் ரெண்டையும் கூட்டரதுக்கு ஒரு புரோகிராம் போடரது மாதிரிதான்.
ராவணன்:டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும். சரி விடு பரீட்சைல போய் தெரிஞ்ச தியரிய எழுதிட்டு வரவேண்டியது தான்.சரிடா ராமசாமி அப்படியே ஒரு பீடிய கொடுத்துட்டி போடா.
ராகவன் : ஒருவேளை பீடி குடிச்சா புரோகிராம் போடவருமாடா?
ராமசாமி(cse): டேய் லூசு எங்கிளாஸ் பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா, அவங்ககிட்டதான் நாங்க கத்துக்கிறோம்.
ராகவன் : உனக்கு யோகம், மெக்கானிக்கல்ல பொண்ணுங்க இருந்தாலாவது நாங்களும் உன்ன மாதிரி பிராக்கெட் போட கத்துப்போம்.
இடம்:தேர்வு அறை
ராகவன் கேள்விதாளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு தெரிஞ்ச தியரியெல்லாம் எழிதிட்டாரு, பாஸ் மார்க் வாங்கனுமுன்னா ஒரு புரோக்கிராமாவது எழுதனும், அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல.கருமம் எந்தரிச்சு போகவேண்டியதுதான், ஒரு புரோகிராம் சரியா எழுதினா இந்த கருமத்தை திருப்பி எழுத வேண்டாமேடான்னு நெனச்சிட்டே பக்கத்தில் உட்காந்திருந்த கம்பியூட்டர் சயின்ஸ் ராமசாமி polyndrome program எழுதறது பாத்தாரு, ஆஹா அடிச்ச்துடா லக்குன்னு, டப்புன்னு அப்படியே காப்பி அடிச்சிட்டாரு, பாஸாகப்போற சந்தோசத்தில இருக்கும் போது அங்க வந்தாரு சூப்பரவைசர் நாகூரான்.
நாகூரான்: டேய் வேவஸ்த இல்லை அடுத்த பிராஞ்ச் காரன பாத்து காப்பி அடிக்கற என்ன எழுதறமுன்னாவது தெரியுமா.?
ராகவன்: அது வந்து இல்ல சார், ஒரே கேள்விதான் சார், அவனுக்கும் பாலிண்ட்ரோம் என்க்கும் பாலிண்ட்ரொம் அதான் சார் கண்டுக்காம விடுங்க சார் பாசயிருவேன். இந்த கம்பியூட்டர் பேப்பர்லாம் இழுத்துகிட்டு திரிய முடியாது சார்.
நாகூரான்: டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.
ராகவன்: அப்படி வேற இருக்கா? ஆனா என் புத்தகத்தில பாத்த மாதிரி பிராக்கெட்டாதானே சார் இருக்கு.
நாகூரான் : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Thursday, November 6, 2008
ஆத்திகம், நாத்திகம்,பகுத்தறிவு,பெண்ணுரிமை, மாற்றம்.
எனது 50 வது பதிவு. தொகுப்பில்லாத செய்திகளை தொகுத்து பார்க்கும் ஒரு முயற்சி.
வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் என்னுடடைய சில பதிவுகள் முடிந்தால் பாருங்கள்
------------------------------------------------------------------------------------------------------
இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2
இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.
-------------------------------------------------------------------------------------------------
ஆத்திகர்கள் கடவுள் நம்பிக்கை என்ற ஒரு நூலில் மனித வாழ்க்கைக்கு கடவுளால் சொல்லப்பட்ட சில நல் வழி இவைகள், இதனை நம்பி நடக்கும்போது ஒருவன் தவறு செய்ய பயப்படுவான் ஒழுக்கமுடன் இருப்பான் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. இதில் எது ஒழுக்கம் தவறு என்பதில் நிறைய குழப்பம் நிகழ்வதை நிகழ்கால வாழ்க்கையில் காணலாம்.
ஒரு வகையில் பார்க்கும் போது சாமி கும்பிடுகிறோம், மன அமைதியை நாடுகிறோம், பல தரப்பட்ட மக்கள் நல்ல எண்ணத்துடன் கூடும் ஒரு இடத்தில் சந்திக்கிறோம்,மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆத்திகத்தில் பெரும்பாண்மை நம்பிக்கை என்பது சொர்க்கம்,நரகம் சார்ந்தே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது, (கோவிலுக்கு போவதை தவிர எனக்கு எந்த மத அறிவும் கிடையாது ). நீ இன்றைக்கு பூமியில் செய்யும் நறபலன்/கெடுபலனை பொறுத்து நாளைக்கு நீ சொர்க்கமோ நரகமோ செல்வாய். நரகத்தில் எண்ணெய் சட்டியில் வருத்தெடுக்கபடுவாய்,ஆனால் சொர்க்கத்தில் நினைத்தெல்லாம் கிடைக்கும். சொர்க்கம் செல்லும் நம்பிக்கையில் ஏகதாசியில் தற்கொலை செயவது உட்பட இன்னும் பல துயரமான சம்பவங்கள் நடக்கிறது.
நாத்திகம் சொல்வது கடவுள் என்று ஒருவன் இல்லை,அதன் சொர்க்கம் நரகம் போலித்தனம், இதனால் விளையும் நன்மையை விட தீமையே அதிகம்.மனிதனின் பகுத்தறிவின் மூலம் சரி/தவறுகள் வரையறை செய்யப்படவேண்டும் , இதில் கடவுளை கூப்பிட வேளை இல்லை.ஆன்மீகம் போலிகளுக்கு வழி வகுக்கிறது.இன்னும் பல...
சரி இந்த நாத்திக வாதிகள் சொல்லும் பகுத்தறிவு பெரும்பாலும் கடவுள் சம்பந்தப்பட்டது, இந்த பகுத்தறிவை புகுத்த முடியுமா?
என் அம்மாவின் அப்பா ஒரு திராவிடர் கழக செயல்வீரர். தந்தை பெரியாரால் தண்டவாளம் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்.இவர் குழந்தைகளுக்கு கருப்பு சட்டை போட்டே வளர்த்தார். என் அம்மா திருமணம் வரையில் கருப்பு உடைகளைத்தான் அணிய வேண்டுமாம். ஆனால் இன்று என் அம்மா போகாத கோவில் இல்லை, பாக்காத ஜோசியன் இல்லை. இங்கு பகுத்தறிவை புகுத்தமுடியவில்லை. காரணம் பகுத்தறிவு புகுத்த முடியாது. ஆனால் பயத்தை ஏற்படுத்தி நிறைய விசயங்களை புகுத்துவது எளிது என்பதற்கு சொர்க்கம்,நரகமே உதாரணம்.
மிக எளிதாக சொன்னால் திருக்குறள் கடவுளால் எழுதப்பட்ட ஒரு வாழ்வியல் ஒழுக்க நூல் என்று புகுத்தப்பட்டிருந்தால் நிறைய பேரால் படிக்கப்பட்டிருக்கும் நான் உட்பட..
பெண்கள் எப்படி/எப்போது வழிபடுவது என்ற விதிமுறைகளை கூட ஒரு ஆண்தான் உருவாக்குகிறான்.இங்கே பேசப்படும் பெண்ணுரிமை கூட ஆண்களால் உருவாக்கப்பட்டது என்பதே ஒரு வியப்பான உண்மை.இதிலெல்லாம் மாற்றம் வருமா?.இங்கே ஒரு ஆண்மகன் பெண்ணுரிமை பேசுவது ஒரு மகளின் தந்தையாக இதுவும் பகுத்தறிவுதான்.
மாற்றம் பற்றி பேச நினைக்கும் போது பிள்ளையார் சாமி நினைவுக்கு வருகிறார். எனக்கு விநாயகரை பிடிக்கும் விநாயகர் உருவத்தில் அந்த தும்பிக்கை, பெரிய வயிறு மற்றும் அந்த எலிக்குட்டியை, கால மாற்றத்திற்கேற்ப ஓவியர்கள்,ஆத்திகர்கள் வரைந்தும் வழிபடுவதையும் பார்க்கலாம். காய்கறி தும்பிக்கை முதல் , கம்பியூட்டர் மவுஸ் வரை, இன்றைய அறிவியல் மாற்றம், உலகம் சூடாதல் போன்றவற்றை பிள்ளையார் உருவமாக மாற்றிக்கொள்வார். இதன் மூலம் பிள்ளையார் தெரிவிக்கும் செய்தியாக நான் எடுத்துக்கொள்வது மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள் என்பதே.
மாற்றம் அனைவரும் விரும்பும் ஒன்றே ஆனால் பயம் மாறவிடாது ஆனாலும் மாற்றம் நம்மையும் அறியாமல் நம் பகுத்தறிவையும் அறியாமல் நாம் எதிர்பார்க்காத விரும்பாத மாற்றமாயினும் அது நடந்தே தீரும்.
ஆத்திகம் கொடுத்த யோகா பொன்ற நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், நாத்திகம் சொல்லும் மூட நம்பிக்கைகள் பகுத்தறிவின் முலம் ஒழிக்கப்பட்டு ஒரு நல்ல வாழ்க்கை முறை கண்டுபிடிப்பது சாத்தியமே.
முரண்பாடுகள் நிறைந்த இந்த உலகில் மனித இனம் முரண்பாட்டோடுதான் இருக்கும், முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொள்வோம்.(மாற்றம் இதை மாற்ற முடியாதென்றே கருதுகிறேன்.)
நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம், இதில் நரக வாழ்க்கை வாழாமல் இருக்கும் பகுத்தறிவை வைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழுவோம்.மாற்றம் நம்மை நல்ல வழிக்கு மாற்றிக்கொண்டு போகும் என நம்புவோம்.
இங்கே நான் உளறியிருப்பதை என்னால்/நம்மால் நேர்மையாக விமர்சிக்க முடியுமா? இல்லை ஏனென்றால் நம்மிடம் இருக்கும் இந்த அறிவு நேர்மையானது இல்லை என்று நண்பன் ஒருவன் சொன்னது சரியோ என தொன்றுகிறது.
என்ன குழப்பிட்டனா? ஆமா ஏன் குழப்பினேன் தெரியல. இது மாறும்.

Tuesday, November 4, 2008
நம்பர் ஜாக்பாட் - TCO 9663.
சின்ன வயசில கோடை விடுமுறைக்கு பட்டுக்கோட்டைல இருக்கிற தாத்தா வீட்டுக்கு போவோம். எங்க ஊருல பஸ்ஸெல்லாம் கெடயாது, அதுனால தாத்தா வீட்டு வாசல்ல உக்காந்து போற வர்ற பஸ்ஸ வேடிக்கை பாக்கிறதுதான் முக்கியமான வெளயாட்டு.தாத்தா வீடு இருக்கிற இடம் மதுக்கூர் ரோடு,ஆனாலும் எதிர்த்தாப்ல போற முத்துப்பேட்டை ரோட்ல போற பஸ்ஸயும் பாக்கலாம்.பஸ்ஸே பாக்காத பட்டிக்காட்டான் ரெண்டு ரோட்டுல போற பஸ்ஸ பாத்து ஒரே சந்தோசந்தான்.
அப்போ எனக்கு 10 வயசுக்குள்ளதான் இருக்கும், எங்க சின்ன மாமாதான் எங்களுக்கு கூட்டாளி, அவருக்கு என்னோட பத்து வயசு கூட இருக்கும். பக்கத்தில இருக்கிற அதிராம்பட்டினம் காலேஜ்ல படிச்சிட்டுருந்தாரு.கிராமத்திலேந்து வர்ற எங்களுக்கு எங்க தாத்தா செலவுக்கு காசு கொடுப்பாரு அத வெச்சி எதித்தாப்ல உள்ள போணி கடைல போண்டா வாங்கி சாப்புடுவோம்.
எங்க மாமா அவருக்கு சிகரெட் அடிக்க அந்த காச எங்ககிட்டேர்ந்து புடுங்க ஒரு வழி கண்டுபிடிச்சாரு, அதுதான் இந்த நம்பர் ஜாக்பாட் கேம்.
மதுக்கூர் ரோட்ல அடுத்து வர்ற பஸ்ஸோட ரெஜிஸ்ட்ரேசன் எண்ணோட கூட்டுத்தொகை யாரு சரியா சொல்ராங்களோ அவர்தான் கேம் வின்னர்.(9+6+6+3 =24 = 2+4 =6). இந்த கேம்ல ஜெயிக்கிறவங்களுக்கு 25 காசுன்னு நெனக்க்கிறேன். எப்பயுமே அவருதான் ஜெயிப்பாரு ஏன்னா அவருக்கு அந்த ரோட்ல போற பஸ்ஸெல்லாம் அத்துப்படி. ஆனாலும் இந்த கேம் ஒரு பைத்தியம் மாதிரி தொத்திக்கிச்சு, முழு நேரமும் தாத்தாகிட்ட காச வாங்கி மாமாவோட கத்தரிக்கோலுக்கு உதவியா இருந்தோம்.
இந்த கேம் எனக்கு கொடுத்த ஒரு பழக்கம் என்னன்னா எந்த வாகனம் போனாலும் நம்பர் பிளேட் படிக்காம விடமாட்டேன்.காலேஜுக்கு போனப்புறமும் இது தொடர்ந்துச்சு, கேமா வெளயாடரதுல்ல ஆனா சும்மா சில நண்பர்கள்கிட்ட ரோட்ல போகும்போது எதித்தாப்ல வர்ற பஸ் நம்பர சொல்லிட்டே தம் அடிச்சிக்கிட்டு போவோம்.
அப்படி ஒரு நாள் போகும் போதுதான் என்னோட மாமா இறந்து விட்டார் என்ற தந்தி வந்தது.குடிப்பழக்கத்தினால் தன் காதலை இழந்து,காதலை இழந்ததால் மேலும் குடி அதிகமாகி ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 32. இந்த நம்பர் பிளேட்டை பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் வரும். அமெரிக்கா வந்த பிறகு அவ்வளவாக நம்பர் பிளேட் அவரை ஞாபகப்படுத்துவதில்லை இன்னும் சொல்லப்போனால் மறந்தேவிட்டேன். ஆனால் புதுகை.அப்துல்லாவின் தீபாவளி நினைவுகள் பதிவு எங்கள் நண்பன் மாமா அறிவழகனை ஞாபகப்படுத்திவிட்டது.

Monday, November 3, 2008
மன்னாரன் கம்பெனியின் கட்டை வண்டி லோன் மென்பொருள் உருவான விதம்.
பங்கேற்றவர்கள் :
மன்னார் ஒனர் மன்னாரன் கம்பெனி.
ராகவன் சீனியர் ஆர்க்கிடெக்ட் மன்னாரன் கம்பெனி.
ஸ்டெல்லா புராஜக்ட் மேனேஜர் மன்னாரன் கம்பெனி
மென்கூலி நெ 1 முதல் 10 வரை.
தேவை: மன்னாரான் கம்பெனியில் வேலை பார்ப்வர்களுக்கு வட்டியில்லாத கட்டை வண்டி லோன் தருவது ஒரு வாடிக்கை. இதனால லோனு வாங்குன எல்லாரும் மன்னாரன் கம்பெனில விசுவாசமா வேல பாக்கிறாங்க. ஆனா இந்த லோனு யாருக்கு குடுத்தோம் ,குடுக்கல திருப்பி கட்டுனாங்களா கட்டலயான்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப செரமமா இருக்குது,கடன் வாங்கினவங்க வேலைல இருக்காங்களா இல்ல விட்டுட்டு சன்னாரன் கம்பெனிக்கி தாவிட்டாங்களான்னு தெரியல அதனால இதுக்கு ஒரு மென்பொருள் எழுதி தாங்க.
ஸ்டெல்லா: பண்ணிரலாம் மன்னார், மொத்தமா வருடத்துக்கு எத்தனை பேருக்கு லோன் தருவீங்க, எவ்ளோ லோன் தருவீங்க.
மன்னார்: குத்து மதிப்பா ஒரு 100 பேருக்கு தலா 500 ரூபாய் தருவோம்.இது ஒரு பத்து வருசமா நடக்குதே, நீங்க இன்னும் வாங்கலியா.
ஸ்டெல்லா: இல்ல மன்னார், எனக்கு இப்படி லோன் இருக்கிறதே தெரியாது. ஆனா இப்போ நம்ம மென்பொருள் எழிதிட்டா என்ன மாதிரி நிறைய பேருக்கு
உதவியா இருக்கும். ஆக பத்து வருடத்தில ஒரு 5 லட்சம் லோன் தர்ரோம் அத
டிராக் பண்ண ஒரு மென்பொருள் வேணும் அவ்ளோதானே செஞ்சுராலாம்
மன்னார்: எல்லாம் புரிஞ்சுடுச்சுல்ல பண்ணி கொடுங்க.
ஸ்டெல்லா: மன்னார் இதுக்கு 10 பேரு உள்ள டீமு வேணும், மொத்த பட்ஜெட் ஒரு ஒரு கோடியே அம்பது லட்சம் ஆகும் சார். ஒரு வருடம் ஆகும் புராஜக்ட் முடிய.
ராகவன்: லோன் அமவுண்டே வருசத்துக்கு அம்பதாயிரம் தான் ஆகுது, இதுக்கு ஒன்னரை கோடி எப்படி செலவு பண்றது.
மன்னார்: இப்ப இத மெயிண்டெய்ன் பண்ண அதோட கூட ஆகுது, பரவாயில்ல பண்ணிருங்க
-----------------------------------------------------------------------------------------------------------------------
ராகவன்: ஸ்டெல்லா நீங்க மன்னாரன் கம்பெனியோட எம்ப்லாயி டேட்டாபேசு, மத்த காம்போனெண்ட்ஸ்லாம் உங்க புராஜக்ட்ல பயன்படுத்திக்கங்க.
ஸ்டெல்லா: ஸ்யூர்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெல்லா: டீம் உங்க எல்லாருக்கும் புராஜக்டோட தேவை என்னான்னு நல்லா புரிஞ்சுதா
கூலி 1-10: நல்லா புரிஞ்சது
ஸ்டெல்லா: எம்பிளாயீஸ் இந்த லோன் அப்பிளை பண்றதுன்னா அதுக்கு பக்காவா ஒரு லாகின் (login) ஸ்கீரீன் ரெடி பண்ணனும். ஒகேவா. நீங்க என்ன பண்றீங்க இண்டர்னெட்ல தேடி எந்த லாகின் ஸ்கீரீன் நல்லா இருக்குன்னு சொல்லுங்க, யாரு நல்லா தேடுவா?
கூலிடு 2: நான் நல்லா தேடுவணண்டி.
------------------
4 மாதம் கடந்தது;
ஸ்டெல்லா: என்ன நீங்க கொடுத்த லாகின்,பாஸ்வோடு ஸ்கீரீன் புரோட்டோடைப் எதுவும் எனக்கு புடிக்கல இந்த ஸ்கீரின உடனே டெவலப் பண்ணுங்க மன்னார்கிட்டயும்,ராகவன் கிட்டயும் காமிச்சு நல்ல பேரு வாங்கனும். என்னோட புரமோசன் உங்களோட காண்டிராக்ட் எக்ஸ்டென்ஸன் எல்லாமே இதுல தான் இருக்கு. எவளோ நாள் ஆகும்.
கூலி 1-10 : ஒரு 4 மாதம் ஆகும் ஸ்டெல்லா.
ஸ்டெல்லா: சரி நாலு மாசத்துக்குள்ள நல்லா குவாலிட்டியா இந்த பீச்சரை டெவலப் பண்ணி கொடுக்கனும்.
------------------------------------
4 மாதம் கடந்தது;
ராகவன் : என்ன டெமோ காட்டுறீங்களா ஸ்டெல்லா?
ஸ்டெல்லா : ஆமாம் ராகவன் பசங்க ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. பாருங்க இந்த லாகின் ஸ்கீரீன
ராகவன் : லாகின் ஸ்கீரீனா. இது இண்டெனல் அப்பிளிக்கேசன் தானே, கம்பெனியோட இண்ரானெட் சிங்கிள் சைன் ஆன் தானே பயன்படுத்துவோம். இதத்தான் எட்டு மாதமா டெவலப் பண்ணீங்களா?

Sunday, November 2, 2008
என் புருசன் சொல்லப்பன்.
என் புருசன் சொல்லப்பன்.
சொல்லப்பன் ஒரு விவசாயக் கூலித்தொழிலாளி, மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தனது வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டு ஒட்டிக்கொண்டிருந்தான்.கணவனும் மனைவியும் கூலி வேலை செய்து வசதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரில் ஒரு பெரிய கள்ளச்சாரய காய்ச்சும் பெரிய மனிதனிடம் காய்ச்சியாக வேலைக்கு சேர்ந்தான். விவசாயக்கூலியை விட பல மடங்கு சம்பளம். தனக்கு மட்டும் பிரத்தியோகமாக உயர்தர காய்ச்சி குடித்தல் என மகிழ்ச்சியான வாழ்க்கை.
தானும் முதலாளியாக ஆசைப்பட்டான், தனியே தொழில் ஆரம்பித்தான். நிறைய சம்பாதித்தான். நிலங்கள் வாங்கினான், விவசாயம் செய்தான்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மட்டும் இல்லை.அவர்களும் அப்பாவின் கள்ள /நல்ல தொழிலுக்கு உதவியாக இருந்தனர்.
ஒருமுறை வழக்கம் போல மார்கழி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தான். கோவிலில் சாமி கும்பிடுவதற்கு குளிப்பதற்கு கேணிக்குள் இறங்கி குளிக்கையில் இலுப்பு வந்து யாரும் கேணியில் இல்லாத நிலையில் காப்பாற்ற ஆளில்லாமல் மரணமடைந்து விட்டான்.
இறக்கும் போது சொல்லப்பன் வயது 40 இருக்கலாம். இறந்த கணவனின் உடலை பார்த்து கதறிய சொல்லப்பன் அவர் மனைவி செயத காரியம் தான் இது.
என் புருசன் சம்பாதிச்சவரு, அவருக்கு ரேடியா செட்டு கட்டனும், குறவன் குறத்தி டான்ஸ் வைக்கனும். இதுதான் அவர் அழுகையின் ஒரே லட்சியம்.
40 வயது சொல்லப்பன் மரணத்திற்கு ரேடியோ செட்டு வச்சாச்சு,புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.
இதனையெல்லாம் விட ஊரே கேட்குமளவுக்கு மைக்கில் சொல்லப்பன் மனைவியின் பெருமையான அழுகை, நீ சம்பாதிச்ச உனக்கு ரேடியா வெச்சிட்டேன், குறவன் குறத்தி டான்ஸ் வெச்சிட்டேன். உன் சாவுக்கு நீயே நெனக்காத அளவுக்கு கூட்டத்த கூட்டிட்டேன்.
40 வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்த ஒரு பாசமான கணவனை இழந்த இந்த பெண்ணின் அழுகையை அறியாமையில் சேர்ப்பதா? இல்லை பாசத்தில் சேர்ப்பதா?

Subscribe to:
Posts (Atom)