Friday, November 7, 2008

கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.

ராகவன்: மாப்பிள்ளை இன்னக்கி கம்பியூட்டர் சயின்ஸ் பேப்பர் பரீட்ச்சைக்கு என்னடா ப்ரொகிராம் வரும், எதுனா சொல்லுடா நானும் கடம் போட்டு வெக்கிறேன்.

ராவணன்: நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. புரோகிராம்னு சொல்லி சும்மா பிராக்கெட்,பிராக்கெட்டா போட்டு வெச்சிருக்காங்க, இத கடம் போடரதோட ஒரு ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் போடறது ஈசிடா.

ராமசாமி(cse): கம்பியூட்டர் சயின்ஸ் புரோகிராமிங் ரொம்ப ஈசிடா, ஒன்னயும் ரெண்டையும் கூட்டரதுக்கு ஒரு புரோகிராம் போடரது மாதிரிதான்.

ராவணன்:டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும். சரி விடு பரீட்சைல போய் தெரிஞ்ச தியரிய எழுதிட்டு வரவேண்டியது தான்.சரிடா ராமசாமி அப்படியே ஒரு பீடிய கொடுத்துட்டி போடா.

ராகவன் : ஒருவேளை பீடி குடிச்சா புரோகிராம் போடவருமாடா?

ராமசாமி(cse): டேய் லூசு எங்கிளாஸ் பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா, அவங்ககிட்டதான் நாங்க கத்துக்கிறோம்.

ராகவன் : உனக்கு யோகம், மெக்கானிக்கல்ல பொண்ணுங்க இருந்தாலாவது நாங்களும் உன்ன மாதிரி பிராக்கெட் போட கத்துப்போம்.

இடம்:தேர்வு அறை

ராகவன் கேள்விதாளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு தெரிஞ்ச தியரியெல்லாம் எழிதிட்டாரு, பாஸ் மார்க் வாங்கனுமுன்னா ஒரு புரோக்கிராமாவது எழுதனும், அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல.கருமம் எந்தரிச்சு போகவேண்டியதுதான், ஒரு புரோகிராம் சரியா எழுதினா இந்த கருமத்தை திருப்பி எழுத வேண்டாமேடான்னு நெனச்சிட்டே பக்கத்தில் உட்காந்திருந்த கம்பியூட்டர் சயின்ஸ் ராமசாமி polyndrome program எழுதறது பாத்தாரு, ஆஹா அடிச்ச்துடா லக்குன்னு, டப்புன்னு அப்படியே காப்பி அடிச்சிட்டாரு, பாஸாகப்போற சந்தோசத்தில இருக்கும் போது அங்க வந்தாரு சூப்பரவைசர் நாகூரான்.

நாகூரான்: டேய் வேவஸ்த இல்லை அடுத்த பிராஞ்ச் காரன பாத்து காப்பி அடிக்கற என்ன எழுதறமுன்னாவது தெரியுமா.?

ராகவன்: அது வந்து இல்ல சார், ஒரே கேள்விதான் சார், அவனுக்கும் பாலிண்ட்ரோம் என்க்கும் பாலிண்ட்ரொம் அதான் சார் கண்டுக்காம விடுங்க சார் பாசயிருவேன். இந்த கம்பியூட்டர் பேப்பர்லாம் இழுத்துகிட்டு திரிய முடியாது சார்.

நாகூரான்: டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.

ராகவன்: அப்படி வேற இருக்கா? ஆனா என் புத்தகத்தில பாத்த மாதிரி பிராக்கெட்டாதானே சார் இருக்கு.

நாகூரான் : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

49 comments:

நசரேயன் said...

ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் ன்ன என்ன ?

/*பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா*/
ஒரு வேலை சிகரட் குடிப்பாங்களா ?

நசரேயன் said...

நான் எல்லாம் ரெம்ப கஷ்டப்பட்டு படிச்சு Fortran,C யில 7/100
மார்க் வாங்கினேன்

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

///*பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா*/
ஒரு வேலை சிகரட் குடிப்பாங்களா ?//

இல்ல, Beer, Whisky, Vodkaம் குடிப்பாங்களே!

பழமைபேசி said...

குடுகுடுப்பை அண்ணே கலக்குறீங்க.... எடுத்து விடுங்க.... உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்ப்பு இருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அட...ராகவா...

தமிழ் அமுதன் said...

*பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா*/
ஒரு வேலை சிகரட் குடிப்பாங்களா ?

எங்க ஊருல சில பாட்டிங்க
சுருட்டுதான் குடிப்பாங்க!

விஜய் ஆனந்த் said...

// நசரேயன் said...
நான் எல்லாம் ரெம்ப கஷ்டப்பட்டு படிச்சு Fortran,C யில 7/100
மார்க் வாங்கினேன் //

:-)))...

நானெல்லாம் 12/100 வாங்கினேன்!!!

RAMYA said...

குடுகுடுப்பையரே ஹையோ ஹையோ, சிரிச்சு சிரிச்சு ஒரே வயிற்று வலிதான் மிஞ்சியது. எப்பிடி, எப்பிடி , இப்படி எல்லாம் உங்களாலே முடியுது. நீங்க எங்கோ போய்ட்டிங்க.

சிரிக்க வைத்ததிற்கு வாழ்த்துக்கள்.

ரம்யா

thamizhparavai said...

நல்லா நகைச்சுவையா இருந்ததுங்க பதிவு..ஆமா நீங்களும் மெக்கானிக்கல் எஞ்சினியரா...?
'கேட்' சிலபஸ்ல மெக்கானிக்கலுக்கு மட்டும் எல்லாமே வரும்.. நானும் விரிவா விடையளிக்கிற 'கேட்' எக்ஸாம்ல இருந்து, நாலு விரல்ல ஒண்ணத் தொட்டு விடையளிக்கிற 'கேட்' எக்ஸாம் வரைக்கும் எழுதிப் பாத்துருக்கேன்...ம்ஹூம்...ஒண்ணும் கதையாகலை...
'தெர்மோடைனமிக்ஸ்' கூடப் பரவாயில்லை... நாக் புத்தகம் சின்னதா இருக்கும். எப்படியும் பாஸ் பண்ணியிரலாம்..இந்த 'தெர்மல் எஞ்சினியரிங்' இருக்கே..தலையணையை விடப் பெரிய சைஸுல இருக்கும் குர்மி புத்தகம்...
அப்பா பாஸானது எந்த ஜென்மம் பண்ணின புண்ணியமோ...?!

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்

//ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் ன்ன என்ன ?//
எனக்கும் தெரியலங்க

குடுகுடுப்பை said...

//நசரேயன் said...

நான் எல்லாம் ரெம்ப கஷ்டப்பட்டு படிச்சு Fortran,C யில 7/100
மார்க் வாங்கினேன்//

இதெல்லாம் தனி பதிவா வருது.

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி

///*பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா*/
ஒரு வேலை சிகரட் குடிப்பாங்களா ?//

இல்ல, Beer, Whisky, Vodkaம் குடிப்பாங்களே!

அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க

பழமைபேசி said...

//அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க//

அய்யோ அண்ணாச்சி, தாராளமா, அது அவங்கவங்க விருப்பந்தான்.... யெப்பா, நான் இல்ல.

நசரேயன் said...

/*
நான் எல்லாம் ரெம்ப கஷ்டப்பட்டு படிச்சு Fortran,C யில 7/100
மார்க் வாங்கினேன்//

இதெல்லாம் தனி பதிவா வருது.

*/

வரட்டும் வரட்டும் சீக்கிரம் வரட்டும்

நசரேயன் said...

/*
*பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா*/
ஒரு வேலை சிகரட் குடிப்பாங்களா ?

எங்க ஊருல சில பாட்டிங்க
சுருட்டுதான் குடிப்பாங்க!
*/
நானும் பாத்திருக்கேன் ஜீவன்.

நசரேயன் said...

/*
// நசரேயன் said...
நான் எல்லாம் ரெம்ப கஷ்டப்பட்டு படிச்சு Fortran,C யில 7/100
மார்க் வாங்கினேன் //

:-)))...

நானெல்லாம் 12/100 வாங்கினேன்!!!
*/
அட அட 5 மார்க் ௬ட வாங்கீடீன்களே

நசரேயன் said...

/*
அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க
*/
அலுவலகத்திலே எனக்கு கம்பெனி யே தாய்குலம் தான்

குடுகுடுப்பை said...

வாங்க T.V.Radhakrishnan

குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன்

/ எங்க ஊருல சில பாட்டிங்க
சுருட்டுதான் குடிப்பாங்க!//

கேள்விப்பட்டிருக்கேன் பாத்ததில்லை

குடுகுடுப்பை said...

வாங்க விஜய் ஆனந்த்

// நானெல்லாம் 12/100 வாங்கினேன்!!!//

அதான் இப்ப 100/12 வாங்கறீங்களே.

ஆட்காட்டி said...

ப்ராக்கெட் எப்படி போடுறதுன்னு ஒரு பொண்ணுக்கு ப்ராக்கெட் போடலாம் என்னு பார்த்தா, சரிவரல!

குடுகுடுப்பை said...

RAMYA said...

குடுகுடுப்பையரே ஹையோ ஹையோ, சிரிச்சு சிரிச்சு ஒரே வயிற்று வலிதான் மிஞ்சியது. எப்பிடி, எப்பிடி , இப்படி எல்லாம் உங்களாலே முடியுது. நீங்க எங்கோ போய்ட்டிங்க.

சிரிக்க வைத்ததிற்கு வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி ரம்யா

Poornima Saravana kumar said...

கலக்குறீங்க போங்க :)
இப்படி கைவசம் நிறைய இருக்குமோ?

http://urupudaathathu.blogspot.com/ said...

///அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல///

கேப்ல கடா வெட்டிடீங்கலே???

http://urupudaathathu.blogspot.com/ said...

இது உங்க சோக கதையா??
சொல்லவே இல்ல

http://urupudaathathu.blogspot.com/ said...

///நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன்,/////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரே சிரிப்பு தான் போங்க...

சிர்ப்பு சிரப்பா வருது ...

http://urupudaathathu.blogspot.com/ said...

பழமைபேசி said...

/ இல்ல, Beer, Whisky, Vodkaம் குடிப்பாங்களே!////

அப்போ சுண்டகஞ்சி ?? சாராயம்?? ரம் ?? பிராண்டி எல்லாம் இல்லியா??

அது சரி said...

//
டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும்.
//

அது!

என்ட்ரோஃபி, என்தால்ஃபி...

ஆனா, தெர்மோடைனமிக்ஸ் ரொம்ப ஈஸியான பாடம் தான்..எனக்கு ரொம்ப கடியப்போட்டது மெட்டலர்ஜி...செம மொக்கையான சப்ஜெக்டு!

//
டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.
//

மனுசங்களுக்கு தான் மொழிப்பிரிவினைன்னா, கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்ல கூட இப்பிடி மொழிப்பிரிவினையா??

ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்பிடின்னு எதுவும் இருக்கா?

புதுகை.அப்துல்லா said...

அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க

//

நீங்க ரொம்ப நல்லவருண்ணே.... வேற என்னத்த சொல்ல... மெயிண்டெய்ன் பண்ணுங்க :)

புதுகை.அப்துல்லா said...

ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்பிடின்னு எதுவும் இருக்கா?
//

c-, c-- இப்படியெல்லாம் கூட எதுவும் இருக்கா??

குடுகுடுப்பை said...

வாங்க தமிழ்ப்பறவை

// நல்லா நகைச்சுவையா

இருந்ததுங்க பதிவு..ஆமா நீங்களும் மெக்கானிக்கல் எஞ்சினியரா...?//

நன்றிங்க, ஆமாங்க நான் மெக்குதான்

'கேட்' சிலபஸ்ல மெக்கானிக்கலுக்கு மட்டும் எல்லாமே வரும்.. நானும் விரிவா விடையளிக்கிற 'கேட்' எக்ஸாம்ல இருந்து, நாலு விரல்ல ஒண்ணத் தொட்டு விடையளிக்கிற 'கேட்' எக்ஸாம் வரைக்கும் எழுதிப் பாத்துருக்கேன்...ம்ஹூம்...ஒண்ணும் கதையாகலை...
'தெர்மோடைனமிக்ஸ்' கூடப் பரவாயில்லை... நாக் புத்தகம் சின்னதா இருக்கும். எப்படியும் பாஸ் பண்ணியிரலாம்..இந்த 'தெர்மல் எஞ்சினியரிங்' இருக்கே..தலையணையை விடப் பெரிய சைஸுல இருக்கும் குர்மி புத்தகம்...
அப்பா பாஸானது எந்த ஜென்மம் பண்ணின புண்ணியமோ...?!

குடுகுடுப்பை said...

வாங்க ஆட்காட்டி

//ப்ராக்கெட் எப்படி போடுறதுன்னு ஒரு பொண்ணுக்கு ப்ராக்கெட் போடலாம் என்னு பார்த்தா, சரிவரல!//

முயற்சி திருவினையாக்க்கும், இல்லாட்டி காப்பி$ பேஸ்ட் பண்ணிருங்க

குடுகுடுப்பை said...

வாங்க என் பதிவுகள்
/ கலக்குறீங்க போங்க :)
இப்படி கைவசம் நிறைய இருக்குமோ?/

வந்து கிட்டே இருக்கு

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது_அணிமா
//இது உங்க சோக கதையா??
சொல்லவே இல்ல//

என்னோடது இல்லங்க.ரெண்டு தனி நிகழ்வுகளை சேத்து கண்டுபிடிச்ச ஒரு நகைச்சுவை

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

///அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல///

கேப்ல கடா வெட்டிடீங்கலே???
//

உங்களுக்கு ஒரு வெளம்பரந்தேன்

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

ஆனா, தெர்மோடைனமிக்ஸ் ரொம்ப ஈஸியான பாடம் தான்..எனக்கு ரொம்ப கடியப்போட்டது மெட்டலர்ஜி...செம மொக்கையான சப்ஜெக்டு!
//

ஆமாங்க நானும் மொத வாட்டியே தூக்கிட்டேன்.
காலேஜ் ல மெட்டலரிஜிக்கு இதுதான் definition

"when a metal is subject to allergy its called metallurgy"

அது ஒரு பெரிய கதை.

டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.
//

மனுசங்களுக்கு தான் மொழிப்பிரிவினைன்னா, கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்ல கூட இப்பிடி மொழிப்பிரிவினையா??

ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்பிடின்னு எதுவும் இருக்கா?

இருக்குன்னு நெனக்கிறேன்.

குடுகுடுப்பை said...

வாங்க புதுகை.அப்துல்லா said...

அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க

//

நீங்க ரொம்ப நல்லவருண்ணே.... வேற என்னத்த சொல்ல... மெயிண்டெய்ன் பண்ணுங்க :)

நான் பாத்து தமிழ்நாட்டுல யாரும் தென்படல. ஏன்னா நான் கிராமத்தான்

rapp said...

செம சூப்பர்:):):)

Mahesh said...

எல்லாம் இங்க நம்மளை மாதிரி மெக்குதானா? (மக்கு இல்லை !!)
எங்க யாராச்சும் Entropy, Enthalpyக்கெல்லாம் வெளக்கஞ் சொல்லுங்க பாக்கலாம்....

ஆட்காட்டி said...

நாங்களும் மெற்றீரியல் சயண்ஸ 6 முறை எழுதிப் படி தாண்டினம் எல்லோ.
பாவிகள் இன்ரேனல் மார்க்ஸ குத்திட்டாங்க. நாம் நல்ல பசங்க தான், இருந்தாலும் பாருங்க குத்திட்டாங்க.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி rapp

செம சூப்பர்:):):)

எங்க உங்க அக்காவ காணோம்.

குடுகுடுப்பை said...

Mahesh

// எல்லாம் இங்க நம்மளை மாதிரி மெக்குதானா? (மக்கு இல்லை !!)
எங்க யாராச்சும் Entropy, Enthalpyக்கெல்லாம் வெளக்கஞ் சொல்லுங்க பாக்கலாம்....//

நான் மக்குதான். இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது. இந்த் பேர கூகிள் பண்ண கூட பயமா இருக்கு

Mahesh said...

அட... நானும் கூகிள் பண்ண பயந்துதான் யாரச்சும் சொல்லுவாங்களோன்னு பாத்தேன்... அப்பாடா... எல்லாரும் நம்மளை மாதிரிதான் போல... அதுல ஒரு அல்ப சந்தோஷம் ..

நாநா said...

காலேஜ் முடிக்கிற வரைக்கும் கணினியே பாத்ததில்லை. ஆனா இப்ப பார்க்கிறது கணினி வேலை. என்னடா உலகம் இது?

அண்ணன் வணங்காமுடி said...

நாங்க எப்பவுமே இப்படித்தான்... இத பொய்பேரு படிதிகிட்டு. சின்ன புள்ள தனமால இருக்கு...

சந்தனமுல்லை said...

:-))))

கொசுவத்தி நல்லாவே சுத்துது!!

சந்தனமுல்லை said...

ஆகா..நசரேயன், நீங்க ada ல்லாம் கூட படிச்சிருப்பீங்க போல இருக்கே!! அந்த காலத்துலேயே கம்ப்யூட்டர் படிச்ச பரம்பரையா நீங்க!! :-)