கருப்பாக இருந்தாலும் அவை வெள்ளாடுகளாகவே அறியப்பட்டன..
காட்டிலும் நாட்டிலும் மேட்டிலும் மேய்ந்துவிட்டிருந்தன..
கீதாரியின் கொட்டடியிலும் ஆட்டுக்காரர் கொட்டகையிலும் புளுக்கையிட்டன..
மங்கள நாளொன்றில் அவை வெட்டப்பட்டன..
அடுப்பிலிட்ட தீயில் அருமையா வெந்தன..
செந்தீக்கள் சில பிரியாணி சட்டியின் மேல் போடப்பட்டன..
சட்டியிலிருந்தவை எலும்பு நீக்கி உண்ணப்பட்டன..
சில நேரங்களில் எலும்பும் சேர்த்தே உண்ணப்பட்டன..
அடிச்சட்டியில் சாரணி கொண்டு கீறப்பட்டது..
அங்கே கொழுப்பு ரசம் தெளிக்கப்பட்டது..
கருப்பு பிரியாணியும் கொழுப்பு ரசத்துடன்
சுவைக்கப்பட்டதால் காணாமல் போயின..
மொய்யிடும் நேரமென்று உடுக்கை அடித்தார்..
கறி சாப்பிட்டு காலாற நடப்பது இதயத்திற்கு ஏற்றதென்றார்..
மொய்யிடாம காலாற நடப்பது இதயத்திற்கு இன்னமும் பிடித்திருக்கிறதாம்..
அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமாம்..
சுற்றிலும் கொட்டிக் கிடந்த பாத்திரம் ஒதுக்கி ..
சமைக்கப்படாமல் மிச்சமிருந்த கறியை கண்டேன் களித்தேன்..
வெள்ளாடு!
கருப்புத்தோல் கொஞ்சம் காசும் ஆனது..
உப்புக்கண்டம்..!
கற்பனையிலே மனம் ஓடியது..
இரு சுவைகளின் மணமும் எனக்குத் தெரிந்திருந்தது..
உடனே மறக்காது ஏற்றிவிட்டேன் மஞ்சளும்,காரமும், உப்பும்..
நறுமணமுள்ள இந்த கண்டங்களுக்கு..
மன்னிக்கவும்..
இந் நவீன பேக்கன்களுக்கு..
ஒரு சதை உண்டு..!