Wednesday, March 24, 2010

உப்புக்கண்டம் ஆ.

கருப்பாக இருந்தாலும் அவை வெள்ளாடுகளாகவே அறியப்பட்டன..
காட்டிலும் நாட்டிலும் மேட்டிலும் மேய்ந்துவிட்டிருந்தன..
கீதாரியின் கொட்டடியிலும் ஆட்டுக்காரர் கொட்டகையிலும் புளுக்கையிட்டன..
மங்கள நாளொன்றில் அவை வெட்டப்பட்டன..
அடுப்பிலிட்ட தீயில் அருமையா வெந்தன..
செந்தீக்கள் சில பிரியாணி சட்டியின் மேல் போடப்பட்டன..
சட்டியிலிருந்தவை எலும்பு நீக்கி உண்ணப்பட்டன..
சில நேரங்களில் எலும்பும் சேர்த்தே உண்ணப்பட்டன..

அடிச்சட்டியில் சாரணி கொண்டு கீறப்பட்டது..
அங்கே கொழுப்பு ரசம் தெளிக்கப்பட்டது..
கருப்பு பிரியாணியும் கொழுப்பு ரசத்துடன்
சுவைக்கப்பட்டதால் காணாமல் போயின..
மொய்யிடும் நேரமென்று உடுக்கை அடித்தார்..
கறி சாப்பிட்டு காலாற நடப்பது இதயத்திற்கு ஏற்றதென்றார்..
மொய்யிடாம காலாற நடப்பது இதயத்திற்கு இன்னமும் பிடித்திருக்கிறதாம்..
அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமாம்..

சுற்றிலும் கொட்டிக் கிடந்த பாத்திரம் ஒதுக்கி ..
சமைக்கப்படாமல் மிச்சமிருந்த கறியை கண்டேன் களித்தேன்..
வெள்ளாடு!
கருப்புத்தோல் கொஞ்சம் காசும் ஆனது..
உப்புக்கண்டம்..!
கற்பனையிலே மனம் ஓடியது..
இரு சுவைகளின் மணமும் எனக்குத் தெரிந்திருந்தது..
உடனே மறக்காது ஏற்றிவிட்டேன் மஞ்சளும்,காரமும், உப்பும்..
நறுமணமுள்ள இந்த கண்டங்களுக்கு..
மன்னிக்கவும்..
இந் நவீன பேக்கன்களுக்கு..
ஒரு சதை உண்டு..!

16 comments:

குடுகுடுப்பை said...

மன்னிக்கவும் கலகலப்பிரியா, இங்கே வெள்ளாடுகள் உங்களின் பூக்கள் போலவே, எதிர்கவுஜயில் வலி இல்லாடிவிடினும் அதெதான்

vasu balaji said...

:)). இவ்வளவு நாளா ஆளக்காணல. மசால் வடை வாசனைக்கு மாட்டுன எலி மாதிரி எதிர்கவுஜைக்கு வெளிய வந்தீரோ:))

vasu balaji said...

/எதிர்கவுஜயில் வலி இல்லாடிவிடினும் அதெதான்//

என்னது வலியில்லையா? ஆட்டக் கேட்டா தெரியும்:)

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
:)). இவ்வளவு நாளா ஆளக்காணல. மசால் வடை வாசனைக்கு மாட்டுன எலி மாதிரி எதிர்கவுஜைக்கு வெளிய வந்தீரோ:))

//

சோலி அதிகம், கவுஜ வேகமா போட்டிராம்னு தோனுச்சு

சந்தனமுல்லை said...

சூப்பர். :))

கொலவெறி?

Unknown said...

//சோலி அதிகம், கவுஜ வேகமா போட்டிராம்னு தோனுச்சு//

பின்னூட்டம் அதை விட வேகமா போடாலாமே தலைவா?

பிரபாகர் said...

வாங்க வாங்க!

பிரபாகர்.

குடுகுடுப்பை said...

முகிலன் said...
//சோலி அதிகம், கவுஜ வேகமா போட்டிராம்னு தோனுச்சு//

பின்னூட்டம் அதை விட வேகமா போடாலாமே தலைவா//

நியாயமான கேள்வி, தலைவர்னா கொஞ்சம் அப்படி இப்படிதான்.

கொஞ்சம் நாள் ஆகட்டும் அப்புறம் வந்து பின்னூட்டுகிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...

சோலி அதிகம், கவுஜ வேகமா போட்டிராம்னு தோனுச்சு //

ஓ... அப்படியா சேதி...

கலகலப்ரியா said...

அடங்க மாட்டியளா மக்கா... நடக்கட்டு நடக்கட்டு...

வில்லன் said...

//வானம்பாடிகள் said...

:)). இவ்வளவு நாளா ஆளக்காணல. மசால் வடை வாசனைக்கு மாட்டுன எலி மாதிரி எதிர்கவுஜைக்கு வெளிய வந்தீரோ:))//

உண்மையா இப்படி வெளிப்படியா போட்டு ஒடச்சி மானத்த வாங்க வேண்டாம்....... வேணும்னா நேருல போயி ரெண்டு "செருப்படி" குடுங்க........

வில்லன் said...

//முகிலன் said...


//சோலி அதிகம், கவுஜ வேகமா போட்டிராம்னு தோனுச்சு//

பின்னூட்டம் அதை விட வேகமா போடாலாமே தலைவா?///
யோவ் குடுகுடுப்பை பேசாம கடைய சாத்தி பெரிய பூட்டா போட்டு பூட்டிட்டு என்னமாதிரி பின்னுட்டம் மட்டுமேன்னு "போர்டு" மாட்டும்.....அதுல கெடைக்குற சோகமே தனி.... நோகாம நொங்கு திங்கலாம்.... அவன் அவன் மாங்கு மாங்குன்னு இருக்குற கொஞ்சோண்டு மூளைய கசக்கி பதிவ போடுவாங்க.....நம்ம சும்மா ஜாலியா விசிட் அடிச்சி..... உப்பில்ல... புளிப்பில்ல..., சுமார்... மொக்கை.... சரக்கு தீந்து போச்சி..... இன்னும் நல்லா எழுதலாம் அப்படி இப்படின்னு பின்னுட்டத்த போட்டுட்டு அப்படியே ஒரு கும்மியும் அடிச்சுட்டு மக்கள் மனசுல நீங்கா இடம் புடிசுரலாம்........

வில்லன் said...

/குடுகுடுப்பை said...


வானம்பாடிகள் said...
:)). இவ்வளவு நாளா ஆளக்காணல. மசால் வடை வாசனைக்கு மாட்டுன எலி மாதிரி எதிர்கவுஜைக்கு வெளிய வந்தீரோ:))

//
சோலி அதிகம், கவுஜ வேகமா போட்டிராம்னு தோனுச்சு//


ஆட தெரியாத தேவடியா தெருக்கோனளுன்னு சொன்னாளாம்....அந்த கதையா இருக்கு.....சோலி ஒரு மயிரும் இல்ல... சரக்கு தீந்து போச்சி........ வெளில தெரிஞ்சா அசிங்கம்,,,,, அதான் இப்படி ஒரு கப்சா...

ரவி said...

:)))

கோவி.கண்ணன் said...

//உப்புக்கண்டம் ஆ.
கருப்பாக இருந்தாலும் அவை வெள்ளாடுகளாகவே அறியப்பட்டன.. //

அனைத்து ஆடுகளும் வெள்ளையாக இருந்தாலும் சில சமயம் அந்த கூட்டத்திற்குள் 'கருப்பு' ஆடு ஒண்ணு இருப்பதாகவும் சொல்லுவார்கள்.

:)

Sanjai Gandhi said...

:))