எனது 50 வது பதிவு. தொகுப்பில்லாத செய்திகளை தொகுத்து பார்க்கும் ஒரு முயற்சி.
வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் என்னுடடைய சில பதிவுகள் முடிந்தால் பாருங்கள்
------------------------------------------------------------------------------------------------------
இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2
இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.
-------------------------------------------------------------------------------------------------
ஆத்திகர்கள் கடவுள் நம்பிக்கை என்ற ஒரு நூலில் மனித வாழ்க்கைக்கு கடவுளால் சொல்லப்பட்ட சில நல் வழி இவைகள், இதனை நம்பி நடக்கும்போது ஒருவன் தவறு செய்ய பயப்படுவான் ஒழுக்கமுடன் இருப்பான் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. இதில் எது ஒழுக்கம் தவறு என்பதில் நிறைய குழப்பம் நிகழ்வதை நிகழ்கால வாழ்க்கையில் காணலாம்.
ஒரு வகையில் பார்க்கும் போது சாமி கும்பிடுகிறோம், மன அமைதியை நாடுகிறோம், பல தரப்பட்ட மக்கள் நல்ல எண்ணத்துடன் கூடும் ஒரு இடத்தில் சந்திக்கிறோம்,மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆத்திகத்தில் பெரும்பாண்மை நம்பிக்கை என்பது சொர்க்கம்,நரகம் சார்ந்தே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது, (கோவிலுக்கு போவதை தவிர எனக்கு எந்த மத அறிவும் கிடையாது ). நீ இன்றைக்கு பூமியில் செய்யும் நறபலன்/கெடுபலனை பொறுத்து நாளைக்கு நீ சொர்க்கமோ நரகமோ செல்வாய். நரகத்தில் எண்ணெய் சட்டியில் வருத்தெடுக்கபடுவாய்,ஆனால் சொர்க்கத்தில் நினைத்தெல்லாம் கிடைக்கும். சொர்க்கம் செல்லும் நம்பிக்கையில் ஏகதாசியில் தற்கொலை செயவது உட்பட இன்னும் பல துயரமான சம்பவங்கள் நடக்கிறது.
நாத்திகம் சொல்வது கடவுள் என்று ஒருவன் இல்லை,அதன் சொர்க்கம் நரகம் போலித்தனம், இதனால் விளையும் நன்மையை விட தீமையே அதிகம்.மனிதனின் பகுத்தறிவின் மூலம் சரி/தவறுகள் வரையறை செய்யப்படவேண்டும் , இதில் கடவுளை கூப்பிட வேளை இல்லை.ஆன்மீகம் போலிகளுக்கு வழி வகுக்கிறது.இன்னும் பல...
சரி இந்த நாத்திக வாதிகள் சொல்லும் பகுத்தறிவு பெரும்பாலும் கடவுள் சம்பந்தப்பட்டது, இந்த பகுத்தறிவை புகுத்த முடியுமா?
என் அம்மாவின் அப்பா ஒரு திராவிடர் கழக செயல்வீரர். தந்தை பெரியாரால் தண்டவாளம் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்.இவர் குழந்தைகளுக்கு கருப்பு சட்டை போட்டே வளர்த்தார். என் அம்மா திருமணம் வரையில் கருப்பு உடைகளைத்தான் அணிய வேண்டுமாம். ஆனால் இன்று என் அம்மா போகாத கோவில் இல்லை, பாக்காத ஜோசியன் இல்லை. இங்கு பகுத்தறிவை புகுத்தமுடியவில்லை. காரணம் பகுத்தறிவு புகுத்த முடியாது. ஆனால் பயத்தை ஏற்படுத்தி நிறைய விசயங்களை புகுத்துவது எளிது என்பதற்கு சொர்க்கம்,நரகமே உதாரணம்.
மிக எளிதாக சொன்னால் திருக்குறள் கடவுளால் எழுதப்பட்ட ஒரு வாழ்வியல் ஒழுக்க நூல் என்று புகுத்தப்பட்டிருந்தால் நிறைய பேரால் படிக்கப்பட்டிருக்கும் நான் உட்பட..
பெண்கள் எப்படி/எப்போது வழிபடுவது என்ற விதிமுறைகளை கூட ஒரு ஆண்தான் உருவாக்குகிறான்.இங்கே பேசப்படும் பெண்ணுரிமை கூட ஆண்களால் உருவாக்கப்பட்டது என்பதே ஒரு வியப்பான உண்மை.இதிலெல்லாம் மாற்றம் வருமா?.இங்கே ஒரு ஆண்மகன் பெண்ணுரிமை பேசுவது ஒரு மகளின் தந்தையாக இதுவும் பகுத்தறிவுதான்.
மாற்றம் பற்றி பேச நினைக்கும் போது பிள்ளையார் சாமி நினைவுக்கு வருகிறார். எனக்கு விநாயகரை பிடிக்கும் விநாயகர் உருவத்தில் அந்த தும்பிக்கை, பெரிய வயிறு மற்றும் அந்த எலிக்குட்டியை, கால மாற்றத்திற்கேற்ப ஓவியர்கள்,ஆத்திகர்கள் வரைந்தும் வழிபடுவதையும் பார்க்கலாம். காய்கறி தும்பிக்கை முதல் , கம்பியூட்டர் மவுஸ் வரை, இன்றைய அறிவியல் மாற்றம், உலகம் சூடாதல் போன்றவற்றை பிள்ளையார் உருவமாக மாற்றிக்கொள்வார். இதன் மூலம் பிள்ளையார் தெரிவிக்கும் செய்தியாக நான் எடுத்துக்கொள்வது மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள் என்பதே.
மாற்றம் அனைவரும் விரும்பும் ஒன்றே ஆனால் பயம் மாறவிடாது ஆனாலும் மாற்றம் நம்மையும் அறியாமல் நம் பகுத்தறிவையும் அறியாமல் நாம் எதிர்பார்க்காத விரும்பாத மாற்றமாயினும் அது நடந்தே தீரும்.
ஆத்திகம் கொடுத்த யோகா பொன்ற நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், நாத்திகம் சொல்லும் மூட நம்பிக்கைகள் பகுத்தறிவின் முலம் ஒழிக்கப்பட்டு ஒரு நல்ல வாழ்க்கை முறை கண்டுபிடிப்பது சாத்தியமே.
முரண்பாடுகள் நிறைந்த இந்த உலகில் மனித இனம் முரண்பாட்டோடுதான் இருக்கும், முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொள்வோம்.(மாற்றம் இதை மாற்ற முடியாதென்றே கருதுகிறேன்.)
நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம், இதில் நரக வாழ்க்கை வாழாமல் இருக்கும் பகுத்தறிவை வைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழுவோம்.மாற்றம் நம்மை நல்ல வழிக்கு மாற்றிக்கொண்டு போகும் என நம்புவோம்.
இங்கே நான் உளறியிருப்பதை என்னால்/நம்மால் நேர்மையாக விமர்சிக்க முடியுமா? இல்லை ஏனென்றால் நம்மிடம் இருக்கும் இந்த அறிவு நேர்மையானது இல்லை என்று நண்பன் ஒருவன் சொன்னது சரியோ என தொன்றுகிறது.
என்ன குழப்பிட்டனா? ஆமா ஏன் குழப்பினேன் தெரியல. இது மாறும்.