Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, October 28, 2009

பன்றி ஆராய்ச்சி உதவி தேவை.

உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, கண்டுபிடித்த மருந்து வேலை செய்கிறதா என்ற ஆராய்ச்சி, டாமிபுளு பன்றிக்காய்ச்சல் வந்த அனைவருக்கும் தேவையா ? இல்லையா? பன்றி ஃபுளூ,மற்ற ஃபுளூவைவிட எந்தவிதத்தில் அபாயமானது என்ற ஆராய்ச்சி, பன்றி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பன்றிக்காய்ச்சல் என்ற ஒன்றே இருந்திருக்காது என்ற தெளிவான ஆராய்ச்சி முடிவு.

இந்த மாதிரி ஆராய்ச்சிகளுக்கிடையில். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் காட்டுப்பகுதியில் வசிக்கிறார்.அவர் வீட்டு நாய் கொண்டுவந்த அவர் வீட்டருகே போட்ட இந்த மண்டை பன்றியினுடையதா என்ற சந்தேகத்தில் உள்ளார். இந்த முக்கியமான ஆராய்ச்சியை நாங்கள் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறோம்.






இந்த பன்றி மண்டை என் கைக்கெட்டும் தூரத்தில் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக உள்ளது. இது உண்மையாகவே பன்றி மண்டையா என பன்றியும் தெரிந்த பதிவர்கள் பின்னூட்டத்தில் எங்கள் ஆராய்ச்சிக்கு உதவலாம்.

பி.கு: பெப்பரோனி பிஸ்ஸா சாப்பிடுபவர்கள் எல்லாம் பன்றியும் தெரிந்தவர் என்றால், அந்த வகையில் நானும் பன்றியும் தெரிந்தவர் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆனாலும் இது பன்றி மண்டையா என எனக்கு தெரியவில்லை.

Tuesday, August 18, 2009

செந்தழல் ரவி, அது சரி, தமிழ்நம்பி ,இளா மற்றும் பிழைகளுடன் குடுகுடுப்பை.

தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள் எழுத எனக்கு நிறைய நாட்கள் இருந்தது, என்னுடைய வேலைப்பளு மற்றும் உடல் நலன் காரணமாக வரலாறுபிக்சன், பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி பதிவுகள் தவிர அனைத்தையும் அன்றன்றே எழுதி அவரச கோலத்தில் வெளியிட்டு விட்டேன்.

நான் எழுத நினைத்த சில பதிவுகள் நிறைய கருத்தியல் எதிரிகளை பெற்றுத்தரக்கூடும் என்பதால், அவைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நான் இன்னும் அடையாத காரணத்தினால் அவைகளை எழுதாமல் வெறும் மொக்கைப்பதிவுகளோடு நிறுத்திக்கொண்டேன்.

வரலாறுபிக்சன் பதிவு நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பாத்தேன், நான்கு தமிழிஸ் வோட்டுக்களை மட்டுமே பெற்று சேரனின் மாயக்கண்ணாடி போல ஆகிவிட்டது கொஞ்சம் வருத்தமே.

நண்பர்கள் செந்தழல் ரவி, அது சரி இன்னும் சிலர், நான் நிறைய எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கியப்பிழைகளோடு எழுதியதை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்கள். (குறிப்பாக 31 நூற்றாண்டு என்பது முப்பத்தொன்றாம் நூற்றாண்டு, 9 வதையே என்பதை ஒன்பதாவதையே என்றும் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் என்றும், இன்னும் பல).

செந்தழல் ரவி இன்னும் ஒரு படி மேலே சென்று, பள்ளிக்கூடப்பையனின் எழுத்துக்கள் போல் உள்ளது என்று உரிமையுடன் கடிந்து கொண்டார்.இளா நட்சத்திர வாரத்தில் பதிவுகள் இன்னும் நன்றாக எழுதியிருக்கவேண்டும் என்றார். தமிழ்நம்பி என்னை மொழிச்செப்பத்தோடு எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.

பதிவு எழுதுவதில் தரக்கட்டுப்பாடு வைத்துக்கொள்ளாமல் மனம்போன போக்கில் இலக்கில்லாமல் எழுதி வெளியிடுவது அதனைப்படிக்கும் பலரை எரிச்சல் அடையவைக்கும் என்று இதன்மூலம் அறிந்துகொண்டேன். இது என் இடம் நான் இப்படித்தான் எழுதுவேன் என்று மறுதளித்து, நான் திருந்தும் வாய்ப்பை நானே இழக்க விரும்பவில்லை.அதனால் இனி எண்ணிக்கையை குறைத்து வாரம் ஒரு இடுகை எழுத்து/வாக்கியப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.

Monday, July 27, 2009

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=12704

ஆட்சிப்பணியும் குடும்பப்பணியும் அதிகமாக இருப்பதால், கட்சிப்பணி எனக்கு தோளில் கிடக்கும் துண்டு போன்றதால் என்னுடைய கட்சியான கு.ஜ.மு.க பணிகளுக்கு சிறிது நாள் ஓய்வு.

குடுகுடுப்பை.

பி:கு: தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Friday, July 24, 2009

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கு.ஜ.மு.க போட்டியிடுவதில்லை என்று கு.ஜ.மு.க பொதுக்குழு கூடி முடிவெடுத்துள்ளது.

நிறைய உருப்படியான வேலைகள் இருக்கும் இந்த நேரத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது கால விரயம் என்று கு.ஜ.மு.க பொதுக்குழு ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.

குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

Monday, March 30, 2009

பிரபல பதிவர்கள் இருவர் ஒரு மொக்கை அறிமுகம்.

ஹலோ நசரேயன் நாந்தான் குடுகுடுப்பை பேசறேன்.

நசரேயன்: சொல்லுங்க என்ன என்ன நடக்கு அங்க.

குடுகுடுப்பை : நான் சமீப காலமா படிக்க ஆரம்பிச்சிருக்கிற ரெண்டு பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.

நசரேயன்: புதுமுகத்தைதானே அறிமுகப்படுத்துவாங்க, நீங்க பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்துறது கொஞ்சம் வேடிக்கையாவுள்ள இருக்கு.அதோட அறிமுகப்படுத்துறதுக்குன்னு ஒரு தகுதி வேணாமா ? அது உங்களுக்கு இருக்கா? சரி பரவாயில்லை யாரந்த அந்த பிரபலங்கள்.

குடுகுடுப்பை : ஆதாயம் இல்லாம ஆத்தைக்கட்டி இறைப்பமா நம்ம.அது புல்லட் பாண்டின்னு ஒரு யாழ்ப்பாணம் பதிவர். ரொம்ப பகடியா எழுதறாப்ள.

அதே சமயத்தில சமூக சிந்தனையோட யாழ்ப்பாணத்தை போருக்குப்பின் எப்படி மீள் கட்டமைப்பது பற்றியும் எழுதறாப்ள, .

திடீர்னு பறவை,விலங்குகள் மேல் காதல் கொள்கிறார், .

தன்னுடைய துறை சார்ந்தும் நல்லா எழுதுறார்.


பெண்கள்னா அவருக்கு கொஞ்சம் பயம் போல,அதுலேயும் ஈழப்பெண்கள் அவரு மேல பெரிய காண்டா இருக்காங்களாம், கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கீனம்.அதுனால தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க .

நசரேயன்: பாத்திரலாம் மாப்பிள்ளை எப்படி லெட்சணமா இருப்பாரா?

குடுகுடுப்பை : நல்லாதான் இருந்தாராம் ஆனா வில்லு படம் பாக்கப்போயி பல்லு போயிருசாம் இப்போ?

நசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா?

குடுகுடுப்பை : யாழ்ப்பாணம் கள்ளும், கருவாட்டுக்குழம்பும் வெச்சுத்தரேண்ணார். போதுமா?

நசரேயன் : அது போதுமே நமக்கு. அப்புரம் அந்த இன்னொருத்தர் யாரு?

குடுகுடுப்பை : அது லோக்கல் ஆளுதான், ரொம்ப பெரியவர்.சினிமா டைரக்டர். ஒருவர் வாழும் ஆலயம்னு நல்ல சினிமாவெல்லாம் எடுத்து இருக்கார். இப்போ பதிவுலகில் கலக்கிட்டு இருக்கார்.

இந்த முழுமை பதிவைப்பாருங்க எப்படி கலக்குறார்னு.


நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு? ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா?

குடுகுடுப்பை : இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) படிச்சுப்பாருங்க, பாலச்சந்தரோட பிளம்கேக் ரேகா கணக்கில இளமை பொங்கி வழியுது.

நசரேயன் : வழியுதா? அப்ப ஒகே ?நமக்கு சினிமாவில ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

குடுகுடுப்பை : அவரு நமக்கு ரொம்ப குளோஸ்ப்பா டெய்லி போன்ல பேசுவோம், இப்பக்கூட ஒரு படம் எடுக்கிறது சம்பந்தமா பேசினோம், நான் உனக்கு ரெகமண்ட் பண்ணி இருக்கேன். இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) கதையில வர்ற கன்னிகா மாதிரி யாப்பிலக்கணம் தவறாத பெண்தான் ஹீரோயின்.அத தாங்கிற வெயிட்டான ஒரு அண்ணன் ரோல் தேவைப்படுது அது நீங்க பண்றீங்க, பாசமலர்ல சிவாஜிக்கு கிடைச்ச மாதிரி நல்ல பேரு கிடைக்கும். அண்ணனா இருந்தாலும் நீங்கதான் ஹீரோ ஆனா உங்களுக்கு ஜோடி கிடையாது. கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.

நசரேயன்: என்னது ஜோடி இல்லையா? சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்

குடுகுடுப்பை : ஒரு தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கார், நான் உங்களைத்தான் சொல்லி இருக்கேன், நீங்க தயாரிச்சாதான் அந்த ரோல் உங்களுக்கு அதுதான் ஒரே ஒரு கண்டிசன்.

நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.

குடுகுடுப்பை : போட்டிரலாம் ஆனால் அவரு பேர "புதுமை ஏசி"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.

நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா?

குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.

பிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.

Thursday, February 26, 2009

வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.

வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.

திருமதி நாகம்மாள் நடேசன் அவர்கள் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருதை பெருகிறார். இவர் புகழ்பெற்ற பதிவர் குடுகுடுப்பையின் தந்தையை பெற்றெடுத்த தாய் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தோடு ஒன்று பதினொன்றாக கொடுக்காமல் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருது இவருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.இவருக்கு இந்த விருதை அளிப்பது பிரபல பதிவரின் குடுகுடுப்பையின் பாட்டி என்பதால் அல்ல.அவருக்கு மீன் வலையைத்தவிர எந்த வலையும் தெரியாத காரணத்தினால் வலைமாமணி விருது இவருக்கு கொடுக்கப்பட்டது சாலப்பொருந்தும் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Friday, February 13, 2009

காதலர் தினம் இந்தியாவில் மாபெரும் வெற்றி.

கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு பெரும் இடைஞ்சல் கொடுத்ததாக வந்த செய்தியையும் மீறி காதலர் தினம் மாபெரும் வெற்றி.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காதலர் தின ஆதரவாளர்கள் போட்டி போட்டு பிங்க ஜட்டி வாங்கினர்,பல இடங்களில் பிங்க் ஜட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.பிங்க ஜட்டியை வாங்கி சேனா தலைமையிடத்திற்கு அனுப்ப கூரியர் சர்வீஸ் நிறுவணங்கள் இரவு பகலாக வேலை செய்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர் தினத்தன்றும், மற்றும் ஜட்டி அனுப்புவர்களுக்கும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் கூட புடவை வழங்கப்படும் என்ற சேனாவின் அறிவிப்பின் படி அவர்களும் புடவை கொள்முதலில் இறங்கியுள்ளனர்.புடவை வியாபாரம் அமோகமாக இருக்கும் என ஜவுளிக்கடை அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜட்டிக்கம்பெனி,கூரியர் சர்வீஸ் கம்பெனி,புடவைக்கம்பெனி ஸ்டாக்குகள் திங்கள் அன்று உச்சத்தில் பறக்கும் என ஸ்டாக் மார்க்கெட் ஜோசியர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மொத்தத்தில் காதலர் தினம் வெற்றி பெற்றதாக வியாபாரிகள் அறிவிப்பு.

Wednesday, October 15, 2008

வருங்கால முதல்வராக பொன்னான வாய்ப்பு

அன்பார்ந்த வலைப்பதிவர்களே, ஓட்டுரிமை இல்லாவிட்டாலும் வருங்கால முதல்வராக ஆசைப்படும் என இன மான சிங்கங்களே.

உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வருங்கால முதல்வர் என்று, ஒரே ஒரு முதல்வர் தான் இருக்க முடியும் ஆனால் எத்தனை வருங்கால முதல்வர் வேண்டுமானலும் இருக்கலாம் அல்லவா.ஆதலால் என்னைப்போல மேலும் சிலரை வருங்கால முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறேன். இதில் மகளிருக்கான உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதால் எனது மனைவி,மகள்,அம்மா மற்றும் என்னுடைய ஆத்தா(அப்பாவின் அம்மா) ஆகியோரை மகளிர் இட ஒதுக்கீட்டிம் மூலம் வருங்கால முதல்வராக நியமித்துள்ளேன். மீதமுள்ள இடங்களுக்கு ஜனநாயக குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு தொடர்ந்து எழுதுவதற்கு சரக்கு இல்லாத காரணத்தினால் வருங்கால முதல்வர் வலைப்பதிவை ஒரு குழு வலைப்பதிவாக மாற்றி அதில் எழுத ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய வலைப்பூவில் உள்ள மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

குடுகுடுப்பை
(வருங்கால முதல்வர்)