Tuesday, August 18, 2009

செந்தழல் ரவி, அது சரி, தமிழ்நம்பி ,இளா மற்றும் பிழைகளுடன் குடுகுடுப்பை.

தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள் எழுத எனக்கு நிறைய நாட்கள் இருந்தது, என்னுடைய வேலைப்பளு மற்றும் உடல் நலன் காரணமாக வரலாறுபிக்சன், பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி பதிவுகள் தவிர அனைத்தையும் அன்றன்றே எழுதி அவரச கோலத்தில் வெளியிட்டு விட்டேன்.

நான் எழுத நினைத்த சில பதிவுகள் நிறைய கருத்தியல் எதிரிகளை பெற்றுத்தரக்கூடும் என்பதால், அவைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நான் இன்னும் அடையாத காரணத்தினால் அவைகளை எழுதாமல் வெறும் மொக்கைப்பதிவுகளோடு நிறுத்திக்கொண்டேன்.

வரலாறுபிக்சன் பதிவு நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பாத்தேன், நான்கு தமிழிஸ் வோட்டுக்களை மட்டுமே பெற்று சேரனின் மாயக்கண்ணாடி போல ஆகிவிட்டது கொஞ்சம் வருத்தமே.

நண்பர்கள் செந்தழல் ரவி, அது சரி இன்னும் சிலர், நான் நிறைய எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கியப்பிழைகளோடு எழுதியதை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்கள். (குறிப்பாக 31 நூற்றாண்டு என்பது முப்பத்தொன்றாம் நூற்றாண்டு, 9 வதையே என்பதை ஒன்பதாவதையே என்றும் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் என்றும், இன்னும் பல).

செந்தழல் ரவி இன்னும் ஒரு படி மேலே சென்று, பள்ளிக்கூடப்பையனின் எழுத்துக்கள் போல் உள்ளது என்று உரிமையுடன் கடிந்து கொண்டார்.இளா நட்சத்திர வாரத்தில் பதிவுகள் இன்னும் நன்றாக எழுதியிருக்கவேண்டும் என்றார். தமிழ்நம்பி என்னை மொழிச்செப்பத்தோடு எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.

பதிவு எழுதுவதில் தரக்கட்டுப்பாடு வைத்துக்கொள்ளாமல் மனம்போன போக்கில் இலக்கில்லாமல் எழுதி வெளியிடுவது அதனைப்படிக்கும் பலரை எரிச்சல் அடையவைக்கும் என்று இதன்மூலம் அறிந்துகொண்டேன். இது என் இடம் நான் இப்படித்தான் எழுதுவேன் என்று மறுதளித்து, நான் திருந்தும் வாய்ப்பை நானே இழக்க விரும்பவில்லை.அதனால் இனி எண்ணிக்கையை குறைத்து வாரம் ஒரு இடுகை எழுத்து/வாக்கியப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.

15 comments:

வால்பையன் said...

அடுத்தவங்க ஓட்டு போடுறது இருக்கட்டும்!
முதல்ல நீங்க உங்களுக்கே ஒரு ஓட்டு போட்டுக்கோங்க!

மருதநாயகம் said...

பிழை இல்லாதவர் யாரேனும் இருக்கிறாரா? தொடர்ந்து பதிவுகள் போட்டு தாக்கவும்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் குடுகுடுப்பை. நீங்க சொன்னது மாதிரி, நிறைய எழுதுவதைவிட, சிறப்பாக சில இடுகைகள் எழுதினாலே போதும். (நீ என்னத்த கிழிச்சே அப்படின்னு கேட்காதீங்க...)

ரவி said...

வெரி குட்டு ஆப்படின்னான் வெள்ளைக்காரன் :))))))) !!!!

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

வெரி குட்டு ஆப்படின்னான் வெள்ளைக்காரன் :))))))) !!!!
//
இதுல எதுவும் உள்குத்து இருக்கா??

அது சரி(18185106603874041862) said...

ஆப்பு யாருக்கு?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
நான் எழுத நினைத்த சில பதிவுகள் நிறைய கருத்தியல் எதிரிகளை பெற்றுத்தரக்கூடும் என்பதால், அவைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நான் இன்னும் அடையாத காரணத்தினால் அவைகளை எழுதாமல் வெறும் மொக்கைப்பதிவுகளோடு நிறுத்திக்கொண்டேன்.
//

இதுக்கெல்லாம் பயந்தா சந்தைல எப்பிடி டீக்கடை நடத்துறது?? ச்சும்மா செயின சுத்துங்க தல....வர்றதை அப்புறம் பார்த்துக்குவோம்....:0)))

குடுகுடுப்பை said...

அது சரி said...

டீக்கிளாஸ எடுத்து அடிச்சா என் தலை தாங்காது சாமி....அதுக்கு அப்புறம் நான் செயினத்தேடி சுத்தி.....

நா. கணேசன் said...

நன்றி.

நட்புடன் ஜமால் said...

இது என் இடம் நான் இப்படித்தான் எழுதுவேன் என்று மறுதளித்து, நான் திருந்தும் வாய்ப்பை நானே இழக்க விரும்பவில்லை]]

ஆரோக்கியம்.

சந்தனமுல்லை said...

:-)

Unknown said...

சரி பரவால்ல அண்ணா... அதுவரைக்கும் ஹரிணிய எழுத சொல்லுங்க... :)))))))))))

ரவி said...

ஒரே ஒரு எழுத்தில் மட்டு உள்குத்து உண்டு :)))

Unknown said...

>> எழுத நினைத்த சில பதிவுகள் நிறைய கருத்தியல் எதிரிகளை பெற்றுத்தரக்கூடும் என்பதால், அவைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நான் இன்னும் அடையாத காரணத்தினால் அவைகளை எழுதாமல் வெறும் மொக்கைப்பதிவுகளோடு நிறுத்திக்கொண்டேன்>>

இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க தல். நம்ம கருத்து சென்சிடிவ்வா இல்லாத பட்சத்துல வெளிய சொல்றதுல தப்பே இல்லை. (அப்பத்தான சூடா கமெண்ட் போடலாம் ;-) )

குடுகுடுப்பை said...

அனைவரின் கருத்துக்கும் நன்றி