Tuesday, December 14, 2010

ஜிம் அனுபவம்.

கடந்த சில வாரங்களாக என் மனைவி ஜிம்மில் சேரப்போகிறேன் நல்ல ஜிம் எதுன்னு சொல்லுங்க அப்படின்னு ஒரே குடைச்சல். அடிக்கடி வீட்டுக்கு வர விளம்பரத்தில விலை குறைந்த மாதக்கட்டணம் உள்ளதுதான் நல்ல ஜிம்முன்னு சொல்லிடலாம்கிற முடிவோட இருந்தேன். என்னுடைய நல்ல நேரம் $ 1 க்கு ஜாயின் பண்ணலாமின்னு ஒருத்தன் விளம்பரம் கொடுத்திருந்தான்.

வீட்டுக்கு வந்திருந்த கூப்பனை எடுத்துக்கொண்டு குடும்ப சகிதம் அங்கே சென்றோம், சரியான அளவுகளில் இருந்த இளம்பெண் ஒருவர் வரவேற்றார், மற்றொருவர் கேள்விகளை வீசத்தொடங்கினார்.

முதலில் என்னிடம் என்ன காரணத்துக்காக ஜிம் ஜாயின் பண்றீங்கன்னு கேட்டார்.
நான் எந்தக்காரணத்திற்கும் ஜிம்மில சேரும் யோசனையில்லை என்றேன், மனைவி இடையே குறுக்கிட்டு, நாந்தான் ஜிம்மிலே சேரப்போறேன் என்றார்.

என்ன காரணம்?

"குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகியாச்சு, ஜிம்மிலே சேர்ந்து வெயிட் குறைக்கலாமின்னு யோசிக்கறேன்"

"இதுக்கு முன்னாடி எப்ப ஒல்லியா இருந்தீங்கன்னு கேட்டாங்க" எனக்கு பகீர்னு தூக்கி வாரிப்போட்டது, ஆனாலும் அடக்கி வாசித்தேன்.

"இரண்டு வருடம் முன்னர்"

"உங்க பெண்ணும் சேருராங்களா? அவங்களுக்கு கிட்ஸ் கிளப் இருக்கு"

"யெஸ் ஐ வாண்ட் டூ ஜாயின் தி கிட் கிளப் "- மகள்

"வெரி நைஸ்"

அப்படியே எங்களை ஜிம் டூர் அழைத்துச்சென்றார், முதலில் யோகா அறையைக்காட்டினார், எனக்கும் சிறிதாக ஆசை முளைத்தது,

"முதுகு வலிக்கு எதாவது பெர்சனல் டிரெய்னர் இருக்காங்காளா?"

"ஓ யெஸ்" இப்படி ஆரம்பித்து அருமை பெருமைகளை எடுத்துரைத்தார். ஒவ்வொரு மெசினாக, அறையாக காண்பித்தார், இறுதியாக மஸாஜ் அறை மற்றும் பாத் ரூமையும் சுற்றிக்காட்டிய பின் ஜிம்மில் சேரும் பிராசஸை விவரித்தார்.

"ஜிம் அக்செஸ் மட்டும் போதும், இந்தக்கூப்பன் இருக்கு"

"ஜிம் அக்செஸ் மட்டும் மாதம் $19.99 ஒன்டைம் ரெஜிஸ்ட்டிரேசன் $199 பிராஸஸிங் $49" என்றார்.கிட்ஸ் கிளப் $99.

"அப்ப இந்தக்கூப்பன்"

"அதுவா அது வருட மெம்பர்ஷிப் சேர்ந்தா ரெஜிஸ்ட்டரேசன் கிடையாது $399 மட்டும் கட்டினா போதும் பிராஸஸிங் $39 எக்ஸ்ட்ரா"

"உங்களோட தொழில் போட்டியாளர்கள் $14.99 க்கே தராங்களே"

"எங்ககிட்ட நிறைய எக்யூப்மெண்ட்ஸ் இருக்கு"

"எனக்கு டிரெட் மில்லும் ,சைக்கிளிங் மட்டும் போதும்"- மனைவி.

"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் நான்"

நாங்க உங்க தொழில் போட்டியாளர்களை விசாரிச்சிட்டு இன்னொரு நாள் வரோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பும்போது கவனித்தோம், ஜிம்மிலே ஓடி அனைவரும் களைத்து இளைத்து விட்டிருந்தனர், கம்பேக் சூன் என்று குண்டாக இருந்த ஓனர் அலுவலக அறையிலிருந்து குரல் கொடுத்தார்.

குடுகுடுப்பைக்காரன் உலகத்தரத்தில் தமிழ்த்திரைப்படம்.

-----------------
?

என்னுடைய நீண்ட நாள் கனவு, அதை நனவாக்கமுடியுமான்னு சந்தேகம் என் ஆழ்மனதில் ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது, அதன் காரணமாகவே என்னுடைய வலைப்பக்கத்திற்கு குடுகுடுப்பை என்று பெயர் வைத்து நடத்தினேன்.%&* அதன் பலன் வலைப்பதிவர்களில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று வெறிபிடித்து அலையும் நசரேயனின் நட்பு கிடைத்தது. எங்களுக்குள் ஒரு வலைற்றி ஒத்துப்போனது, பதிவர்கள்/வாசகர்கள் பலர் இருவரும் ஒருவரோ என எண்ணுமளவுக்கு எழுத்துப்பிழைகள் முதல் கருத்துப்பிழைகள் வரை ஒன்றாகவே பயணித்தோம்.

இப்படியாக ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது என்னையே ஹீரோவாக @$***&^ வைத்து என்னுடைய தயாரிப்பில் அவர் இயக்குவதாக ஒரு கதை சொன்னார், கதை சொன்னவிதம் பிடித்திருந்தது, ஆனாலும் பாட்டி வடை சுட்ட கதைய சுட்ட டோராக்கதைப்போல் எங்கேயோ கேட்ட மாதிரி உள்ளுணர்வு உருத்திக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் கடந்த வருடம் ஃபெட்னாவில் (*&&^%) பிரியாமணியை பார்த்தது முதல் தானும் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதாகவும், தானே அப்படத்தை தயாரிக்கவும் தயார் என்றும் கூறினார்.

ஒரு நாள் என்னுடைய குடுகுடுப்பைக்காரன் கதையைக் கூறினேன், அதற்கு பொருத்தமான ஹீரோவாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் சொன்ன போது சற்றே அதிர்ந்தாலும், குடுகுடுப்பை என்ற பெயரில் வலைப்பதிவு நடத்தும் நீங்களே ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கேட்டார், அந்தக்காலத்து மிலிந்த் சோமன் போல் இருக்கும் நான் குடுகுடுப்பைக்காரன் கேரக்டரில் அவ்வளவாக பொருந்தமாட்டேன் என்பதை *&^ உணர்த்தினேன். இப்படித்தான் படம் உருவானது.

?
கதை ஒன்றும் புதிதல்ல, அதோட ஒன்லைன் சொல்லிடறேன், கதையின் நாயகன் இரவெல்லாம் தூங்கமாட்டான்,பகல் முழுவதும் தூங்குவான். நேர்மாறாக கதையின் நாயகி இரவெல்லாம் தூங்குவாள், பகலெல்லாம் தூங்கமாட்டாள். இவர்கள் எப்படி சந்திப்பார்கள் காதல் செய்வார்கள் அப்படிங்கிறது அருமையா படம் பிடிச்சிருக்கோம். ??{*&^ ரொம்ப நல்லா வந்திருக்கு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இந்தவகை காட்சிப்படுத்தல் நிச்சயமா புதிய சிந்தனைதான்.

காதல் கதைன்னு சொன்னப்புறம் வில்லன் இல்லாமல் சுவராஸ்யம் இருக்காதல்லவா, இந்தப்படத்தோட வில்லன் வழக்கமான வில்லன் கிடையாது ஒரு சுவராஸ்யமான கேரக்டர், இவர் இருபத்து நாலு மணி நேரமும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார், ஆனால் எப்படி ஹீரோ , ஹீரோயினுக்கும் இடைஞ்சல் தருவார் அப்படிங்கறது படத்தோட ஹைலைட்.

?

உலகத்தரத்தில் குடுகுடுப்பைக்காரனின் காதலை சொல்லனும்னு முடிவு செஞ்சப்பவே இசை உலகத்தரத்திலே !!@&%^*#) இருக்கனும்னு சொல்லிட்டேன், ஒரு சின்ன சாம்பிள் சொல்றேன் உடுக்கை ஒலியை உலகத்தரத்தில் கொண்டுவருவதற்காக, செவ்விந்திய டிரம்ஸ்,நைஜீரீயாவின் பாரம்பரிய இசை,தென்னமெரிக்காவில் ^}{{ உடுக்கை போன்ற வடிவத்தில் உள்ள இசைக்கருவிகளெல்லாம் கலந்து, கடைசியில் மங்கோலியர்கள் சண்டைக்கு கிளம்பும் முன்னர் அடிக்கும் தப்பட்டை இசையையும் கலந்தவுடன் , அச்சுப்பிசகாமல் குடுகுடுப்பைக்காரன் அடிக்கும் உடுக்கை ஒலி உலகத்தரத்தில் கிடைத்தது, லண்டன்ல வெச்சி ரெக்கார்ட் பண்ணிருக்கோம்.

?

கண்டிப்பாக இந்தப்படம் எந்த உலகப்படத்தின் சாயலிலும் இருக்காது, குடுகுடுப்பைக்காரனின் காதல் உலகத்தரத்தில் உருவாகும் தமிழ்ப்படம், தியேட்டர் கிடைத்தவுடன் உங்களின் பார்வைக்கு.

பிகு: பதிவு உலகத்தரத்தில் உள்ளது என்பதை உணர்த்தவே, ஆங்காங்கே குறியீடுகள்.

நன்றி பிச்சைப்பாத்திரம் சு.க.

Thursday, December 9, 2010

வேட்பாளர்கள் தேவை : கு.ஜ.மு.க

கு.ஜ.மு.க வரும் 2011 சட்டமன்றத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் சுருக்கம்:
1. அனைத்து வீடுகளுக்கும் இலவச லாப்டாப்(மேக்புக் புரோ).

2.அனைத்து வீடுகளுக்கு இலவச இண்டர்நெட். 99 வருடங்களுக்கு மட்டுமே இந்த சலுகை.

3. வீட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போன்

4. செல் போன் பில் 99 வருடங்களுக்கு இலவசம்(வேறு பெயரில் மாற்றமுடியாது, இறந்து போனால் சலுகை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட மாட்டாது)

5. இலவச உணவு பிட்சா,பர்கர் மாதிரியான மேற்கத்திய உணவுகளுடன், விரும்பினால் தென்னிந்திய உணவுகளும் மூன்று வேளையும் வீட்டிலேயே பறிமாறப்படும்.ஒருநாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்பவர்கள் முன்னரே பதிவு செய்யவேண்டும்.

இவ்வளவு வாக்குறுதிகள் தருவதால் கு.ஜ.மு.கவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாகிறது, எனவே வேட்பாளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பிகு1: இலவசங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் சொந்த செலவிலேயே செய்யவேண்டும்.

பிகு2: கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஜக்கம்மா மீது செய்த ஆணை மீறப்படாது.

Thursday, December 2, 2010

இசைப்பிரியர்களிடம் ஒரு வேண்டுகோள்.

தங்களிடம் "ஆயர்பாடி மாளிகையில்" பாடலுக்கான இசைப்பகுதி மட்டும் இருந்தால் அதனுடைய டவுண்லோட் லிங்க் தரவும்.

நன்றி

குடுகுடுப்பை
kudukudppai@gmail.com

Wednesday, December 1, 2010

பழைய கார் வாங்கிய அனுபவம்.

டாலஸிற்கு வந்தவுடன் எனக்கு இரண்டாவது கார் தேவைப்பட்டது, ஆரம்பத்தில் டாலஸை விட்டு மீண்டும் சிகாகோ செல்லும் எண்ணத்திலேயே இருந்ததால் ஒரு பழைய கார் வாங்க நினைத்தேன். முதன் முதலாக கார் வாங்க சென்றது ஒரு ஒரியனிடம், அவரிடம் உள்ள பழைய கேமரி ஒன்று பார்த்தேன். நல்ல நிலையில் உள்ள கார் kbb விலையை விட கூடுதலாக கேட்டிருந்தார் (சுமார் $4100).காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது பிரேக் பேடில் சத்தம் வந்தது.

"என்னங்க பிரேக்ல சத்தம்"
"அது ஒன்னுமில்லேங்க பிரேக் பேடு மாத்தனும் $200 தான் ஆகும்"

காரை நிறுத்தி பின் புறம் உள்ள இருக்கைகளைப் பார்த்தேன், கடுமையான அழுக்குக் கறையுடன் இருந்தது.
" என்னங்க பின்னாடி சீட்டில கறை , கிளீன் பண்ணிக்கொடுப்பீங்களா?"

" நான் பண்ணிப்பாத்தேன், போகலை, இதுக்கு முன்னாடி இந்தக்காரை ஒரு தமிலியன் தான் வெச்சிருந்தார், அவரு சாம்பார கொட்டிட்டார் போல"

காரை சுற்றி காலால் நடந்தேன். டயர்களில் எந்தவிதமான பட்டன்களும் இல்லாமல் பழமைபேசியின் தலை போல இருந்தது.

"டயரெல்லாம் போயிடிச்சே "

"கவலைப்படாதீங்க சேப்டி டெஸ்ட் பாஸ் பண்ண ஸ்டிக்கர் இன்னும் பத்து மாதம் வரைக்கும் இருக்கு, அப்படியே நீங்க மாத்தனும்னு ஆசைப்பட்டீங்கன்னா டாலஸ்ல அந்த ரோட்டில பழைய டயர் $20 க்கு கிடைக்கும் , $80 க்குள்ள முடிச்சிரலாம்"

அடுத்து சுத்தி வந்து முன்பக்க பேசஞ்சர் கதவை திறந்தேன், முடியவில்லை.

"என்ன ஆச்சு"

"அந்த டோர் மட்டும்தான் ஒர்க் ஆகலை மத்த மூனு டோரும் ஒர்க் ஆகுது, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"

"இதை எப்படி குட் கண்டிசன் அப்படின்னு போட்டீங்க, அதுவும் KBB மதிப்பை விட கூட கேக்கறீங்க"

"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"

ஓடறதுக்கு டயர், உள்ள போக உட்கார இடம் , பிடிக்க பிரேக் இப்படி எதுவுமே சரியில்லாத காருக்கு எஞ்சின் நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்னன்னு ஓடி வந்துட்டேன்.இடையில் எனக்கு போன் செய்து இபிஸினஸ் பற்றி பேச ஆரம்பித்தார். அது பத்தி பேசினா சாம்பார தலையில கொட்டிடுவேன் என்று கட் பண்ணிட்டேன்.

தீவிர தேடுதலுக்குப்பின்னர் ஒரு தெலுங்குதாத்தாவிடம் $7100 ஒரு கேமரி வாங்கி அஞ்சு வருடம் ஓட்டியாச்சு, இப்போ இந்தக்கார் ஒரியனிடம் இருந்த அந்தக்கார் அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக வேறு பிரச்சினைகளோடு இருக்கிறது. இப்போது விற்பனைக்கு தயார் வாங்க ஆள் இருந்தால்.

"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"