Wednesday, December 1, 2010

பழைய கார் வாங்கிய அனுபவம்.

டாலஸிற்கு வந்தவுடன் எனக்கு இரண்டாவது கார் தேவைப்பட்டது, ஆரம்பத்தில் டாலஸை விட்டு மீண்டும் சிகாகோ செல்லும் எண்ணத்திலேயே இருந்ததால் ஒரு பழைய கார் வாங்க நினைத்தேன். முதன் முதலாக கார் வாங்க சென்றது ஒரு ஒரியனிடம், அவரிடம் உள்ள பழைய கேமரி ஒன்று பார்த்தேன். நல்ல நிலையில் உள்ள கார் kbb விலையை விட கூடுதலாக கேட்டிருந்தார் (சுமார் $4100).காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது பிரேக் பேடில் சத்தம் வந்தது.

"என்னங்க பிரேக்ல சத்தம்"
"அது ஒன்னுமில்லேங்க பிரேக் பேடு மாத்தனும் $200 தான் ஆகும்"

காரை நிறுத்தி பின் புறம் உள்ள இருக்கைகளைப் பார்த்தேன், கடுமையான அழுக்குக் கறையுடன் இருந்தது.
" என்னங்க பின்னாடி சீட்டில கறை , கிளீன் பண்ணிக்கொடுப்பீங்களா?"

" நான் பண்ணிப்பாத்தேன், போகலை, இதுக்கு முன்னாடி இந்தக்காரை ஒரு தமிலியன் தான் வெச்சிருந்தார், அவரு சாம்பார கொட்டிட்டார் போல"

காரை சுற்றி காலால் நடந்தேன். டயர்களில் எந்தவிதமான பட்டன்களும் இல்லாமல் பழமைபேசியின் தலை போல இருந்தது.

"டயரெல்லாம் போயிடிச்சே "

"கவலைப்படாதீங்க சேப்டி டெஸ்ட் பாஸ் பண்ண ஸ்டிக்கர் இன்னும் பத்து மாதம் வரைக்கும் இருக்கு, அப்படியே நீங்க மாத்தனும்னு ஆசைப்பட்டீங்கன்னா டாலஸ்ல அந்த ரோட்டில பழைய டயர் $20 க்கு கிடைக்கும் , $80 க்குள்ள முடிச்சிரலாம்"

அடுத்து சுத்தி வந்து முன்பக்க பேசஞ்சர் கதவை திறந்தேன், முடியவில்லை.

"என்ன ஆச்சு"

"அந்த டோர் மட்டும்தான் ஒர்க் ஆகலை மத்த மூனு டோரும் ஒர்க் ஆகுது, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"

"இதை எப்படி குட் கண்டிசன் அப்படின்னு போட்டீங்க, அதுவும் KBB மதிப்பை விட கூட கேக்கறீங்க"

"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"

ஓடறதுக்கு டயர், உள்ள போக உட்கார இடம் , பிடிக்க பிரேக் இப்படி எதுவுமே சரியில்லாத காருக்கு எஞ்சின் நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்னன்னு ஓடி வந்துட்டேன்.இடையில் எனக்கு போன் செய்து இபிஸினஸ் பற்றி பேச ஆரம்பித்தார். அது பத்தி பேசினா சாம்பார தலையில கொட்டிடுவேன் என்று கட் பண்ணிட்டேன்.

தீவிர தேடுதலுக்குப்பின்னர் ஒரு தெலுங்குதாத்தாவிடம் $7100 ஒரு கேமரி வாங்கி அஞ்சு வருடம் ஓட்டியாச்சு, இப்போ இந்தக்கார் ஒரியனிடம் இருந்த அந்தக்கார் அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக வேறு பிரச்சினைகளோடு இருக்கிறது. இப்போது விற்பனைக்கு தயார் வாங்க ஆள் இருந்தால்.

"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"

53 comments:

க ரா said...

nalla karuthalamika idugai...

குடுகுடுப்பை said...

கண்ணன் இராமசாமி said...
nalla karuthalamika idugai...

நான் என்னைக்கு ஆழமான/நீளமான இடுகை போட்டிருக்கேன்.

Unknown said...

$200 குடுத்தீங்கன்னா நானே வாங்கிக்கிரேன்

vasu balaji said...

இதுல டயர் எப்படி இருக்கு

நசரேயன் said...

ஓசியிலே கொடுத்தா நான் வாங்கிக்கிறேன்

நசரேயன் said...

//nalla karuthalamika idugai...//

அப்படினா என்ன கண்ணன் ராமசாமி ?

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
இதுல டயர் எப்படி இருக்கு

//

டயர் இன்னும் 60000 மைல் மிச்சம் இருக்கு.

குடுகுடுப்பை said...

நசரேயன் said...
ஓசியிலே கொடுத்தா நான் வாங்கிக்கிறேன்
//

ஷிப்பிங் $5999.99 மட்டும் கொடுங்க போதும்.

குடுகுடுப்பை said...

முகிலன் said...
$200 குடுத்தீங்கன்னா நானே வாங்கிக்கிரேன்
//

நசரேயன் பெட்டர் டீல் கொடுத்திருக்கார்.

பழமைபேசி said...

//முகிலன் said...
$200 குடுத்தீங்கன்னா நானே வாங்கிக்கிரேன்
//

எனக்கு நூறு வெள்ளி குடுத்தாப் போதும்.. நானே வந்து அழிமதியில கொண்டு போய் நிறுத்திடுவேன்...

Unknown said...

இத சாக்கு வைச்சு பழமையார கிண்டல் பண்ணுமா? அப்ப பழமையார்க்கு கார் பிரீனு சொல்றீங்களா?

பழமைபேசி said...

சேதுகாரு,

’பழைமை’ வேறே...
‘பழமை’ வேறே...

ஆய்னா, மனவாடண்டி....

Unknown said...

@பழமைபேசி

கொல்றாங்களே அப்பு? நானும் அப்புடியே உங்களுக்கு ஒரு ப்ரீ கார் புடிச்சு கொடுக்கலாம்னு பார்த்தா ...?

பழமைபேசி said...

அண்ணே, நான் வகுப்புல இருக்கேன்.....

குடுகுடுப்பை said...

"பழைய கார் வாங்கிய அனுபவம்."
//

இதப்பத்தி யாராவது கமெண்டு போட்டீங்களா? இல்லையே ஏன் ஏன் ஏன்

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...
அண்ணே, நான் வகுப்புல இருக்கேன்.....
//

நல்ல வகுப்பு நல்ல வாத்தியார்.

க ரா said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...

//கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"//

இதை நம்பி தான் நம்ம அழுங்க எல்லாம் டொயோடவும் , ஹோண்டாவும் வான்கிரங்க

பழமைபேசி said...

//"பழைய கார் வாங்கிய அனுபவம்."
//

இதப்பத்தி யாராவது கமெண்டு போட்டீங்களா? இல்லையே ஏன் ஏன் ஏன்
//

என்னது? அஃறிணைகள் எல்லாம் அனுபவம் வாங்குதா?? செரி அப்ப!!

ILA (a) இளா said...

//ஷிப்பிங் $5999.99 மட்டும் கொடுங்க போதும்.//
இதுல பாதி குடுங்க.. நானே பார்சல் பண்ணிக்கிறேன்

ILA (a) இளா said...

//nalla karuthalamika idugai...//
இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு குடுகுடுப்பைய இப்படி கேவலப் படுத்திட்டீ்ங்களே

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

//ஆய்னா, மனவாடண்டி...//
பழமை காரு,
நசரேயன் காரு,
கண்ணன் காரு,

குடுகுடுப்பை காரு,
டொயோட்டா காரு

முச்சந்தி said...

//ஆய்னா, மனவாடண்டி...//

யமன்டி இக்கட சூடண்டி இ டொயோட கார் பாக உந்தி !!!!!

Yoga.s.FR said...

athu oodum! naangka iruppamaa????

Philosophy Prabhakaran said...

இப்படி ஒரு பதிவை படிச்சிட்டு காரை
வாங்குறதுக்கு யாரவது வருவாங்களா என்ன...?

அரசூரான் said...

//"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க" //
பழைய டொயோட்டா பாட்டுக்கு 200k ஓடுமா? அப்ப கேஸ் போட்டா ஓடாதா?

அரசூரான் said...

//காரை சுற்றி காலால் நடந்தேன். டயர்களில் எந்தவிதமான பட்டன்களும் இல்லாமல் பழமைபேசியின் தலை போல இருந்தது//
டயர்ல பட்டன் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனா பழமை தலையில் தொப்பி இல்லாம இருக்க மாட்டாரு தெரியும்ல? காரு தொப்பில உள்ள வெயில் தடுப்பானில் (அதாங்க ஃப்ரண்ட் ப்ளாப்-ல, பழமைபேசி தலையில் இருப்பதால் தமிழ்லதான் சொல்லனும்) தடுக்கி இரண்டு அடிகூட போகாது பிறகு எங்க 200k போறது?

குடுகுடுப்பை said...

அரசூரான் said...
//காரை சுற்றி காலால் நடந்தேன். டயர்களில் எந்தவிதமான பட்டன்களும் இல்லாமல் பழமைபேசியின் தலை போல இருந்தது//
டயர்ல பட்டன் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனா பழமை தலையில் தொப்பி இல்லாம இருக்க மாட்டாரு தெரியும்ல? காரு தொப்பில உள்ள வெயில் தடுப்பானில் (அதாங்க ஃப்ரண்ட் ப்ளாப்-ல, பழமைபேசி தலையில் இருப்பதால் தமிழ்லதான் சொல்லனும்) தடுக்கி இரண்டு அடிகூட போகாது பிறகு எங்க 200k போறது?
//
பழைய தொப்பி வாங்கி போட்டா போகும்

வருண் said...

ஒரு புதுக்கார் வாங்கி 5 வருடம் சென்று அதனுடைய மதிப்பை கழித்து அதனுடைய இன்றைய வால்யு பாருங்க.

ஒரு பழைய கார் வாங்கி எவ்ளோதான் 5 வருட மெயிண்டனன்ஸ்க்கு செலவழிச்சாலும், பழைய கார்தான் எக்கனாமிகல்!

ஆனா இந்தியர்கள் ஒரு புது கேம்ரி வாங்கலைனா டிப்ரெஸ் ஆயிடுவாங்க :)))

a said...

கார் வாங்கலயோ கார்..........

Indian said...

டொயோட்டாவும், ஹோன்டாவும் ஃபேக்டரிய வுட்டு வண்டிய வெளிய அனுப்பும்போதே குட்டி விநாயகர டேஷ்போர்ட்ல வச்சி அனுப்புவாங்களாமே. நெசமா?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கிலோ என்ன ரேட்? :)

நாங்க 900$ க்கு நண்பர் கிட்ட இருந்து வாங்கி ஒரு வருஷம் ஓட்டியிருக்கோம்.. ரொம்பப் பழைய மாடல் - 1996.. fog ல, ஸ்நோ ல ஓட்டறது ரொம்ப கஷ்டம்.. அதுக்குன்னு இன்சூரன்ஸ் கூட எடுக்கல.. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் மட்டுந்தான் :).. இப்ப இன்னொரு நண்பர் (புதியதாக இந்தியாவில் இருந்து வந்தவர்) கிட்ட இருக்கு.. நாங்க புதுசே வாங்கிட்டோம்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சொல்ல மறந்துட்டேன்.. அந்த பழைய 1996 கார் கூட டொயோட்டா காம்ரி தான்.. :))

Unknown said...

நாங்க ஹோண்டா ஃபேமிலி.. நோ டொயொட்டா (ச்சீச்சீ இந்தப் பயம் புயிக்கும்)

தருமி said...

// kbb விலையை விட ..//

அப்டின்னா...?

sriram said...

கார் விக்க என்ன அழகா விளம்பரம் செஞ்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள்.
டாலஸுக்கு ஃப்ளைட் டிக்கெட் அனுப்புனீங்கன்னா, நானே என் செலவுல பெட்ரோல் போட்டு ஓட்டிக்கிட்டு வந்திடறேன், டீல் ஓகேவா?

//ஒரு பழைய கார் வாங்கி எவ்ளோதான் 5 வருட மெயிண்டனன்ஸ்க்கு செலவழிச்சாலும், பழைய கார்தான் எக்கனாமிகல்!

ஆனா இந்தியர்கள் ஒரு புது கேம்ரி வாங்கலைனா டிப்ரெஸ் ஆயிடுவாங்க :)))//

வருண்: எந்த காரும் முதல் மூணு வருஷத்தில அதிகம் Depreciate ஆகும். நீங்க சொல்றதில Financial Sense இருக்கு. ஆனா புது கார் வாங்குறதில நெறய Intangible Benefits இருக்கு. Fresh Car feeling, Color choice and options, single handed driving comfort இதுமாதிரி நெறய Intangible Items சொல்லலாம். புது கார் ஏன் வாங்கணும்னு நெறய காரணங்கள் சொல்லலாம்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

வருண் :
என்னமோ தெரியல இன்னிக்கு ஒரே நாள்ல ரெண்டு தளத்தில உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லியிருக்கிறேன்.
உங்க கடலை கார்னர் தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை பின்னூட்ட்ம் போட்டதாக நினைவில்லை, இனிமே அடிக்கடி சந்திப்போம் (பதிவுகளில்)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Ravichandran Somu said...

"ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்...”-ன்னு ஒங்க வீட்டு முன்னாடி ஒரு தொழிலதிபர் கூவுவாரு... அவருகிட்ட கொடுத்திடுங்க:)

Unknown said...

//
"கவலைப்படாதீங்க சேப்டி டெஸ்ட் பாஸ் பண்ண ஸ்டிக்கர் இன்னும் பத்து மாதம் வரைக்கும் இருக்கு//

ஹஹஹஹா....

எல்லாரும் உங்கள மாதிரி புத்திசாலியா(?) இருக்கமாட்டாங்க. முயற்சி பண்ணுங்க. தள்ளி விட்றலாம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா.ஹா

sriram said...

//தருமி said...kbb விலையை விட அப்டின்னா...?//

தருமி ஐயா, Kelly Blue Book (www.kbb.com) இன் சுருக்கமே KBB. இந்தத் தளத்தில் பழைய கார் மாடல்களின் மதிப்பைப் பத்தி தெரிஞ்சிக்கலாம். இதில போயி ஒரு காரின் விவரங்கள் அனைத்தும் தந்தால் Trade in Value மற்றும் தனியார் விற்பனை வேல்யூ சொல்வாங்க.
விக்கறவங்க KBB value எதிர்பார்ப்பதும் வாங்கறவங்க அதை விட குறைத்தும் எதிர் பார்ப்பது வழக்கம். நான் கண்ட வரையில் Used Car Sale எல்லாம் KBB Value வை விட குறைவாகவே இருந்திருக்கு.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வருண் said...

***sriram said...

வருண்: எந்த காரும் முதல் மூணு வருஷத்தில அதிகம் Depreciate ஆகும். நீங்க சொல்றதில Financial Sense இருக்கு. ஆனா புது கார் வாங்குறதில நெறய Intangible Benefits இருக்கு. Fresh Car feeling, Color choice and options, single handed driving comfort இதுமாதிரி நெறய Intangible Items சொல்லலாம். புது கார் ஏன் வாங்கணும்னு நெறய காரணங்கள் சொல்லலாம்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்***

உண்மைதாங்க. :)

safety features கூட புதுக்காரில் தாங்க இருக்கு. "affordability" and "economical" ங்கிற ரெண்டு விசயம்தான்.

ஒரு சிலர் "கார்ல" தன் பணத்தை செல்வழிப்பதைவிட "வீட்டில்" செலவழிப்பதுண்டு. காரணம், கார் டிப்ரிசியேட் ஆயிண்டே போகும். வீடு அப்ப்ரிசியேட் ஆகும்! :)

sriram said...

கண்டிப்பா ஒத்துக்கறேன் வருண்.

I am a conservative when it comes to expenses. மொதல்ல வீடு அப்புறம்தான் கார் என்பது என்னோட தியரி.
வீடுகள் வாங்கிய பின்புதான் நான் Luxury Car பத்தியே யோசிச்சேன்.

//ஒரு சிலர் "கார்ல" தன் பணத்தை செல்வழிப்பதைவிட "வீட்டில்" செலவழிப்பதுண்டு. காரணம், கார் டிப்ரிசியேட் ஆயிண்டே போகும். வீடு அப்ப்ரிசியேட் ஆகும்! :)//

ஒரு சிறு திருத்தம் வருண். நிலம் பொதுவா அப்ரிசியேட் ஆகிக்கொண்ட்டே போகும், கட்டிடம் மொதோ 15 - 20 வருஷத்துக்கு அப்ரிசியேட் ஆகும் அப்புறம் டிப்ரிசியேஷன் ஆகும். Buying an apartment is not a long term investment strategy.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

குடுகுடுப்பை said...

ஒரு சிலர் "கார்ல" தன் பணத்தை செல்வழிப்பதைவிட "வீட்டில்" செலவழிப்பதுண்டு. காரணம், கார் டிப்ரிசியேட் ஆயிண்டே போகும். வீடு அப்ப்ரிசியேட் ஆகும்! :)
//

காரே பராவாயில்லைங்க இப்போ

வருண் said...

***Blogger குடுகுடுப்பை said...

ஒரு சிலர் "கார்ல" தன் பணத்தை செல்வழிப்பதைவிட "வீட்டில்" செலவழிப்பதுண்டு. காரணம், கார் டிப்ரிசியேட் ஆயிண்டே போகும். வீடு அப்ப்ரிசியேட் ஆகும்! :)
//

காரே பராவாயில்லைங்க இப்போ

December 2, 2010 9:36 AM***

LOL

நீங்க் என்ன டாலஸ்லதானே இருக்கீங்க? கலிஃபோர்னியால ஒரு 5-7 வருடம் முன்னால வீடு வாங்கி இருந்தால் நீங்க சொல்றது உண்மை. டாலஸ் பரவாயில்லை இன்னும் 5 வருடத்தில் சரியாயிடும்

இன்னும் 20 வருடத்தில் உங்க வீட்டு வால்யு பாருங்க! உங்க புது கேம்ரி வால்யுவையும் 20 வருடத்தில் பாருங்க! (ஹாண்டா அக்கார்ட் பரவாயில்லை :)))) )

ஸ்ரீராம் ஏதோ லக்சரி கார் வச்சிருக்கார் போல இருக்கு (பி எம் டபுல்யு, இல்லைனா, அக்யுரா இல்லைனா லெக்சஸா இருக்கலாம்). எதுனாலும் கார் வால்யு 20 வருடத்தில் 10-20% வால்யுதான் இருக்கும்! :)

sriram said...

//ஸ்ரீராம் ஏதோ லக்சரி கார் வச்சிருக்கார் போல இருக்கு (பி எம் டபுல்யு, இல்லைனா, அக்யுரா இல்லைனா லெக்சஸா இருக்கலாம்). எதுனாலும் கார் வால்யு 20 வருடத்தில் 10-20% வால்யுதான் இருக்கும்! :)//

வருண்: நான் யோசிச்சேன்னு தானே சொன்னேன், வாங்கினேன்னு சொல்லவே இல்லயே... :)

sriram said...

//எதுனாலும் கார் வால்யு 20 வருடத்தில் 10-20% வால்யுதான் இருக்கும்!//

காரை இருவது வருஷமெல்லாம் வச்சிப்பாங்களா என்ன? 5 வருஷதுக்கு மேல ஒரே வண்டி (2 wheeler / car) ஓட்டுறது போர்.

அப்புறம், அப்ரிசியேட் ஆகுறதுக்குன்னு சிலவற்றை வாங்கணும் (வீடு, தங்கம், இன்ன பிற), அனுபவிக்கறதுக்குன்னு சிலது வாங்கணும் (2 Wheeler, Car, TV etc). இன்னிக்கு Louis Philippe சட்டையின் விலை 2500 - 3000 ரூபாய், அது அப்ரிசியேட் ஆகுதான்னு பாக்கலாமா? அது மாதிரி சில செலவுகள் செய்வதில் தப்பே இல்லை (நான் முன்னரே சொன்ன மாதிரி மொதல்ல அப்ரிசியேட் ஆகும் assets அப்புறம்தான் Depreciate ஆகும் assets)

குடுகுடுப்பை said...

sriram said...
//ஸ்ரீராம் ஏதோ லக்சரி கார் வச்சிருக்கார் போல இருக்கு (பி எம் டபுல்யு, இல்லைனா, அக்யுரா இல்லைனா லெக்சஸா இருக்கலாம்). எதுனாலும் கார் வால்யு 20 வருடத்தில் 10-20% வால்யுதான் இருக்கும்! :)//

வருண்: நான் யோசிச்சேன்னு தானே சொன்னேன், வாங்கினேன்னு சொல்லவே இல்லயே...//
உடனே என் காரை வாங்கிங்கலாமே? டிப்ரிசியேசனுக்கு வாய்ப்பு கம்மி,லக்சுரியஸ் காரும் கூட

வருண் said...

***sriram said...

//எதுனாலும் கார் வால்யு 20 வருடத்தில் 10-20% வால்யுதான் இருக்கும்!//

காரை இருவது வருஷமெல்லாம் வச்சிப்பாங்களா என்ன? 5 வருஷதுக்கு மேல ஒரே வண்டி (2 wheeler / car) ஓட்டுறது போர்***

I get attached to my car ங்க. கார் டிப்பெண்டபிளா இருந்தால் போதுங்க. பொதுவா நீங்க சொல்றபடிதான் மக்கள் 5 வருசத்துல காரை மாத்திடுவாங்க! நான் ரொம்ப கன்செர்வேடிவ் போல! :)))

வருண் said...

***குடுகுடுப்பை said...

உடனே என் காரை வாங்கிங்கலாமே? டிப்ரிசியேசனுக்கு வாய்ப்பு கம்மி,லக்சுரியஸ் காரும் கூட***

பழைய கார் வாங்கிய அனுபவம்னு போட்டு பதிவெழுதிட்டு, இப்போ கார் விக்கிற டீலராயிட்டிங்க!!!

sriram said...

//குடுகுடுப்பை said...
உடனே என் காரை வாங்கிங்கலாமே? டிப்ரிசியேசனுக்கு வாய்ப்பு கம்மி,லக்சுரியஸ் காரும் கூட//

தல: உங்க கார் டிப்ரிசியேட் ஆவுறதுக்கு வாய்ப்பு சுத்தமா இல்லை, ஆனா அப்ரிசியேட் ஆக வாய்ப்பு இருக்கு, எப்படின்னு கேக்கறீங்களா?
இன்னுமொரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ பத்திரமா வச்சுக்கோங்க, Antique Status கெடைச்சபுறம் விலை பிச்சிகிட்டு போகும் பாருங்க.

நான் போன நவம்பரில் கார் மாத்திட்டேன், புது கார் ஆறே மாசத்தில் ஒரு ஆக்சிடெண்டில் Total ஆகிடிச்சு. புது காரா இருந்த்தால இன்சூரன்ஸ் கம்பெனி கூட சண்டை போட்டு Total பண்ண வச்சேன். புது கார் வாங்கினதில இது ஒரு உபயோகம், Used car ஆக இருந்திருந்தா இந்நேரம் Accident History உள்ள கார் ஓட்டிக்கிட்டு இருந்திருப்பேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

//ஒரு சிலர் "கார்ல" தன் பணத்தை செல்வழிப்பதைவிட "வீட்டில்" செலவழிப்பதுண்டு. காரணம், கார் டிப்ரிசியேட் ஆயிண்டே போகும். வீடு அப்ப்ரிசியேட் ஆகும்! :)//

நான் வாங்குன மூனு காரும், ஒரு வீடும் வாங்குன வெலைய விட குறைவாத்தான் போச்சு. அமெரிக்காவுல, எதுவும் நடக்கலாங்க. இருக்குறவரைக்கும் அனுபவிச்சுக்கவேண்டியதுதான், நான் அனுபவிச்சேன் :)