Tuesday, December 14, 2010

குடுகுடுப்பைக்காரன் உலகத்தரத்தில் தமிழ்த்திரைப்படம்.

-----------------
?

என்னுடைய நீண்ட நாள் கனவு, அதை நனவாக்கமுடியுமான்னு சந்தேகம் என் ஆழ்மனதில் ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது, அதன் காரணமாகவே என்னுடைய வலைப்பக்கத்திற்கு குடுகுடுப்பை என்று பெயர் வைத்து நடத்தினேன்.%&* அதன் பலன் வலைப்பதிவர்களில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று வெறிபிடித்து அலையும் நசரேயனின் நட்பு கிடைத்தது. எங்களுக்குள் ஒரு வலைற்றி ஒத்துப்போனது, பதிவர்கள்/வாசகர்கள் பலர் இருவரும் ஒருவரோ என எண்ணுமளவுக்கு எழுத்துப்பிழைகள் முதல் கருத்துப்பிழைகள் வரை ஒன்றாகவே பயணித்தோம்.

இப்படியாக ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது என்னையே ஹீரோவாக @$***&^ வைத்து என்னுடைய தயாரிப்பில் அவர் இயக்குவதாக ஒரு கதை சொன்னார், கதை சொன்னவிதம் பிடித்திருந்தது, ஆனாலும் பாட்டி வடை சுட்ட கதைய சுட்ட டோராக்கதைப்போல் எங்கேயோ கேட்ட மாதிரி உள்ளுணர்வு உருத்திக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் கடந்த வருடம் ஃபெட்னாவில் (*&&^%) பிரியாமணியை பார்த்தது முதல் தானும் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதாகவும், தானே அப்படத்தை தயாரிக்கவும் தயார் என்றும் கூறினார்.

ஒரு நாள் என்னுடைய குடுகுடுப்பைக்காரன் கதையைக் கூறினேன், அதற்கு பொருத்தமான ஹீரோவாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் சொன்ன போது சற்றே அதிர்ந்தாலும், குடுகுடுப்பை என்ற பெயரில் வலைப்பதிவு நடத்தும் நீங்களே ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கேட்டார், அந்தக்காலத்து மிலிந்த் சோமன் போல் இருக்கும் நான் குடுகுடுப்பைக்காரன் கேரக்டரில் அவ்வளவாக பொருந்தமாட்டேன் என்பதை *&^ உணர்த்தினேன். இப்படித்தான் படம் உருவானது.

?
கதை ஒன்றும் புதிதல்ல, அதோட ஒன்லைன் சொல்லிடறேன், கதையின் நாயகன் இரவெல்லாம் தூங்கமாட்டான்,பகல் முழுவதும் தூங்குவான். நேர்மாறாக கதையின் நாயகி இரவெல்லாம் தூங்குவாள், பகலெல்லாம் தூங்கமாட்டாள். இவர்கள் எப்படி சந்திப்பார்கள் காதல் செய்வார்கள் அப்படிங்கிறது அருமையா படம் பிடிச்சிருக்கோம். ??{*&^ ரொம்ப நல்லா வந்திருக்கு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இந்தவகை காட்சிப்படுத்தல் நிச்சயமா புதிய சிந்தனைதான்.

காதல் கதைன்னு சொன்னப்புறம் வில்லன் இல்லாமல் சுவராஸ்யம் இருக்காதல்லவா, இந்தப்படத்தோட வில்லன் வழக்கமான வில்லன் கிடையாது ஒரு சுவராஸ்யமான கேரக்டர், இவர் இருபத்து நாலு மணி நேரமும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார், ஆனால் எப்படி ஹீரோ , ஹீரோயினுக்கும் இடைஞ்சல் தருவார் அப்படிங்கறது படத்தோட ஹைலைட்.

?

உலகத்தரத்தில் குடுகுடுப்பைக்காரனின் காதலை சொல்லனும்னு முடிவு செஞ்சப்பவே இசை உலகத்தரத்திலே !!@&%^*#) இருக்கனும்னு சொல்லிட்டேன், ஒரு சின்ன சாம்பிள் சொல்றேன் உடுக்கை ஒலியை உலகத்தரத்தில் கொண்டுவருவதற்காக, செவ்விந்திய டிரம்ஸ்,நைஜீரீயாவின் பாரம்பரிய இசை,தென்னமெரிக்காவில் ^}{{ உடுக்கை போன்ற வடிவத்தில் உள்ள இசைக்கருவிகளெல்லாம் கலந்து, கடைசியில் மங்கோலியர்கள் சண்டைக்கு கிளம்பும் முன்னர் அடிக்கும் தப்பட்டை இசையையும் கலந்தவுடன் , அச்சுப்பிசகாமல் குடுகுடுப்பைக்காரன் அடிக்கும் உடுக்கை ஒலி உலகத்தரத்தில் கிடைத்தது, லண்டன்ல வெச்சி ரெக்கார்ட் பண்ணிருக்கோம்.

?

கண்டிப்பாக இந்தப்படம் எந்த உலகப்படத்தின் சாயலிலும் இருக்காது, குடுகுடுப்பைக்காரனின் காதல் உலகத்தரத்தில் உருவாகும் தமிழ்ப்படம், தியேட்டர் கிடைத்தவுடன் உங்களின் பார்வைக்கு.

பிகு: பதிவு உலகத்தரத்தில் உள்ளது என்பதை உணர்த்தவே, ஆங்காங்கே குறியீடுகள்.

நன்றி பிச்சைப்பாத்திரம் சு.க.

9 comments:

க ரா said...

valthugal :)

vasu balaji said...

ரெட் சன் பிக்சர்ஸா?

குறும்பன் said...

உலகத்தர படம் தமிழில் தந்ததிற்கு பாராட்டுகள்.
வெளியீடு:
ஜெயண்ட் ரெட் இல்லாட்டி கிளவுட் மூன். இல்லாட்டி கருணாநிதியின் மிக நெருங்கிய சொந்தக்காரங்க.

ILA (a) இளா said...

குறியீடுகள்- அபாரம் :)

பொன் மாலை பொழுது said...

பொங்கல் ரிலீசா ? இல்லை புதுவருட தினமே ரிலீசா?
சீக்கிரம் ஆகட்டும். இந்தமேரிக்கு ஒரு முன் நவீனத்துவ திரைபடம் பாக்க எங்களுக்கு ஆசைதான்.

Unknown said...

அடடா! எங்க தளபதிக்கு டிமிக்கி கொடுத்துட்டீங்களே.

சரக்குன்கிற வார்த்தை வராததினால் ஒதுங்கி வழி விட்டுட்டாரா?

நசரேயன் said...

ஒரு குத்துபாட்டாவது இருக்குமா ?

பிரபாகர் said...

கலக்கல் பாஸ்... ஐட்டம் சாங், பைட் எல்லாம் இருக்குமா?...

பிரபாகர்...

குடுகுடுப்பை said...

அய்யா நசரேயா டைரக்டர் நான் அதுல மூக்கை நுழைக்கப்படாது