Thursday, December 9, 2010

வேட்பாளர்கள் தேவை : கு.ஜ.மு.க

கு.ஜ.மு.க வரும் 2011 சட்டமன்றத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் சுருக்கம்:
1. அனைத்து வீடுகளுக்கும் இலவச லாப்டாப்(மேக்புக் புரோ).

2.அனைத்து வீடுகளுக்கு இலவச இண்டர்நெட். 99 வருடங்களுக்கு மட்டுமே இந்த சலுகை.

3. வீட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போன்

4. செல் போன் பில் 99 வருடங்களுக்கு இலவசம்(வேறு பெயரில் மாற்றமுடியாது, இறந்து போனால் சலுகை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட மாட்டாது)

5. இலவச உணவு பிட்சா,பர்கர் மாதிரியான மேற்கத்திய உணவுகளுடன், விரும்பினால் தென்னிந்திய உணவுகளும் மூன்று வேளையும் வீட்டிலேயே பறிமாறப்படும்.ஒருநாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்பவர்கள் முன்னரே பதிவு செய்யவேண்டும்.

இவ்வளவு வாக்குறுதிகள் தருவதால் கு.ஜ.மு.கவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாகிறது, எனவே வேட்பாளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பிகு1: இலவசங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் சொந்த செலவிலேயே செய்யவேண்டும்.

பிகு2: கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஜக்கம்மா மீது செய்த ஆணை மீறப்படாது.

9 comments:

ரோகிணிசிவா said...

company selavu poruppu erkaathaa,
appa yosikanummae

vasu balaji said...

மேக் புக் ஏர் வேணுமாம். எதிர்கட்சிக்காரன் குடுக்கறானாம். :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஊழல்ல வந்த அம்புட்டு பணமும் என்னாச்சு

Philosophy Prabhakaran said...

// இலவசங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் சொந்த செலவிலேயே செய்யவேண்டும் //

ஆள விடுங்கடா சாமி... அய்யய்யோ நான் "ஆள"ன்னு சொன்னது அந்த அர்த்ததுல இல்லை... எஸ்கேப்...

Philosophy Prabhakaran said...

// கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஜக்கம்மா மீது செய்த ஆணை மீறப்படாது //

அது எந்த அம்மா...

Unknown said...

எல்லாமே வேட்பாளர் சொந்த செலவில் !!

அப்புறம் இலவசம்(?) யாருக்கு?

நசரேயன் said...

ஏதாவது ஒண்ணு எனக்கு இலவசமா எனக்கு கொடுங்க

வருண் said...

மன்னிக்கவும், எனக்குப் போட்டினாலே ஆகாது! :)

தல தளபதி said...

உங்கள் தளத்தின் வாசகன் நான். நானும் இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை. என்னை வேட்பாளரா சேத்துக்குங்க.