Thursday, May 28, 2009

பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும்.

ஈழப்போரில் விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் அழித்து முடித்த குடும்பங்களில் எஞ்சியுள்ள குழந்தைகளை, குறைந்த பட்சம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தமிழக அரசு , மத்திய அரசு உதவியுடன் தத்தெடுக்கவேண்டும்.

அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் கல்வியை தமிழகம் வழங்கவேண்டும்.செலவை தமிழக மக்கள்,புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நிதி திரட்டுவதன் மூலமும், தன்னார்வத்தொண்டு நிறுவணங்கள் மற்றும் தமிழக அரசும் ஏற்கலாம்.

இவ்வளவு பெரிய மனித அவலத்தை தடுக்க இயலாத நாம் அதில் சிலருக்கு கல்வியாவது கொடுத்து, மாறுபட்ட இந்த உலகச்சூழலில் இந்த அனாதைக்குழந்தைகள் தன் வாழ்க்கைப்பாதையை அமைத்துச்செல்ல வழி செய்து கொடுக்கலாம்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை முன்னிலைப்படுத்துவற்கு காரணம், குறைந்த பட்சம் அரசியல் தீர்வென்ற பெயரில் இலங்கையில் வாழும் உரிமை எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு கொடுக்கப்படலாம். ஆனால் அப்போதும் இந்தக்குழந்தைகளை யாரும் கவனிக்கும் நிலையில் மிச்சமுள்ள தமிழ்க்குடும்பங்கள் இருக்காது.

மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முயற்சிக்கவேண்டும்.

Tuesday, May 12, 2009

ஆணழகன் அப்துல்லாவுடன் ஒரு அனுபவம்.

அப்துல்லா என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர், இவர் அணியும் கூலிங் கிலாஸ்க்காக அவரை நாங்கள் ஆணழகன் என்றே அழைப்பது வழக்கம்.ஒரு நாளும் இல்லாமல் திடீரென இந்த வாரம் தனது வீட்டுக்கு அழைத்தான்.

புதுக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான திருமயத்தில் உள்ள கோவில் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லா இருக்கும்.பாட்டுக்கச்சேரி,கரகாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம் அதுவும் நத்தம் சாந்தி,புதுக்கோட்டை திலகவதின்னு பிரபலங்களின் ஆட்டம் .(உண்மையா இப்படி இரண்டு பேரு இருக்காங்களா). வந்து பாரு ரகளையா இருக்கும். உடனே கெளம்புவோம் அப்படின்னான்.

நமக்குதான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே பிரியாணி வாய்ப்பை விடுவமா.

நான்,புதுக்கோட்டையை சேர்ந்த இன்னொரு நண்பர் மற்றும் அப்துல்லா மூவரும் இரவு 7 மணியளவிற்கு திருமயம் வந்து சேர்ந்தோம். முன்னமே சொல்லியிருந்ததால் மீன் சமைத்து வைத்திருந்தார்கள் நல்லா சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.

அப்துல்லாவின் தந்தை ஆசிரியர், ஆசிரியருக்கே உரித்தான அனைத்து கேள்விகளையும் கேட்டார். நாங்களும் மழுப்பி அப்படி இப்படி பதில் சொல்லி தப்பிச்சோம்.

இரவு 11 மணியளவில் திருவிழாவிற்கு சென்றோம், இன்று நிகழ்ச்சியில் வள்ளி திருமணம் நாடகம். பபூன் வந்து வாய் கூசாமல் கெட்ட ஜோக்குகளை அடித்தார். அனைவரும் பரவசப்பட்டு சிரித்தோம். அப்துல்லா கொஞ்சம் அதிகம்.

வீட்டுக்கு வந்து தூங்கினோம், அடுத்த நாள் ஒரு மலையை குடைந்த குளத்தில் காலை குளியல். வழக்கம் போல நல்ல சாப்பாடு மட்டன் பிரியாணியுடன். வழக்கம் போல் அப்துல்லா அப்பாவின் கேள்விகள்.

இன்னைக்கி பகலில் திருமயம் கோட்டை பார்க்க போனோம். நல்ல அழகான கோட்டை, மேலே ஒரு சுணை இருந்தது , தண்ணீர் பச்சை கலரில் இருந்தது, வேடிக்கை பார்ப்பவர்கள் அதனை தூர்த்தே தீருவது என்ற முடிவில் சிறிய கற்களை எடுத்து சுணையில் போட்டனர்.அப்துல்லாவும் தன் பங்கிற்கு ஒரு பெரிய கல்லை போட்டார்.

கீழே ஒரு கோவில் அங்கு யாரும் அதிகம் வருவதில்லை போல இருந்தது, என்னோட வந்த நண்பர் கொஞ்சம் பக்தி அதிகம், கோவிலுக்கு சென்றோம்.கோவிலின் அழகை ரசித்தேன்.

அப்துல்லா ஆவலோடு எதிர் பார்த்த இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனது, முதலில் குறவன் குறத்தி ஆட்டம் பார்க்க போனோம், ஆபாசத்தின் உச்சகட்டம், தூக்கம் வேறு கண்ணை சுழற்றியது, அந்த பக்கம் பாட்டுக்கச்சேரி அங்கே போனோம் இளையராஜா பாடல்களை கொலை செய்து கொண்டிருந்தார்கள். சரிடா வீட்டுக்கு போலாம்னேன், நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தோம், முன் ஹாலில் அனைவரும் பாய் விரித்து தூங்கினோம்.

திடீரென்று விழித்து பார்த்தேன், இருவரையும் காணவில்லை. அப்படி, இப்படி கஷ்டப்பட்டு புது இடத்தில எப்படியோ தூங்கிட்டேன். அப்துல்லா இப்படி தனியா விட்டுட்டு போவன்னு நான் எதிர் பார்க்கலை.

காலையில கேட்டேன் எங்கடா போனிங்க? அதுக்கு இங்கதாண்டா தூங்கினோம் அப்படின்னு வாய் கூசாம் பொய் சொன்னங்க ரெண்டு பேரும்.டேய் நான் முழிச்சிட்டுதான் இருந்தேன் சொல்லுங்கடான்னு கேட்டேன்.

இல்ல குறவன் குறத்தி ஆட்டம் சூப்பர், அதை பார்க்காம எப்படிடா தூக்கம் வரும்,வாழைக்காய் வெட்டுறது வரைக்கும் பாத்துட்டு தான் வந்தோம்னு சிரிப்பு வேற. வந்ததே அதுக்குதானேன்னான் வேற.தனியா வந்தா எங்கப்பா ஆப்பு வெச்சுருவாரு அதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் துணைக்கு ...

ரொம்ப பேசின உங்கப்பாகிட்ட நீ எதுக்கு வந்தங்கிற விசயத்தை சொல்ல வேண்டி வரும்னேன். நீ முதல்ல பஸ் ஏருன்னு ஏத்தி விட்டுதான் அடுத்த வேளை பார்த்தான்.

பி.கு1 : புதுகை.அப்துல்லாவும் எனது நண்பர் திருமயம் அப்துல்லாவும் சொந்தக்காரங்களான்னு புதுகை.அப்துல்லா அண்ணன் தான் சொல்லனும்.

பி.கு2 :முற்றிலும் பொய் கலந்த ஒரு உண்மை அனுபவம்.

பி.கு3 : கவர்ச்சிக்காக இந்த தலைப்பு

புது பதிவிற்கான வாய்ஸ் மறுபதிவு.

Friday, May 1, 2009

ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?

ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?

"ரஜினிய நல்ல நடிகன்னு கடந்த இருபதுவருட படங்களை பார்த்து சொல்லமுடியாது.... ஆனா ரஜினிகிட்ட எதோ ஒரு ஈர்ப்பு இருக்குன்னு நம்புராக... அந்த ரகம் நீங்கள்...."

முள்ளும் மலரும் மாதரி "இல்லாத நடிகையின் பொல்லாத நாய்" உண்மையில் நல்ல பதிவு...


ஹரிணியின் பதிவுகளை மிகவும் விரும்பி பார்பேன்...
(மனதை கொள்ளைகொண்டது ஹரிணியின் தமிழ் எழுத்துக்கள் பதிவு...).


இப்படி ஒரு வாசகர் எனக்கு ஒரு (நூறு) கடிதம் எழுதியிருந்தார். நானும் என்னுடைய நடையில் இதை வைத்து ஒரு பதிவு போட அனுமதி கேட்டிருந்தேன். நேரமின்மை மற்றும் எழுதும் மனநிலையில் இல்லாததால் எழுதவில்லை.இந்த பதிவு கூட ஒரு அறிவிப்புதான்.

என்னை ரஜினியுடன் ஒப்பிட்டபின் சும்மா இருக்க முடியுமா, நானும் அவர் இமயமலையில் போய் ஒய்வெடுக்கற மாதிரி பதிவுக்கு கொஞ்சம் ஓய்வு. நாளைக்கே கூட திரும்பி வருவேன். லேட்டா கூட வருவேன். வராமலும் இருப்பேன்.ஆனா கண்டிப்பா ஒரு வாய்ஸ் கொடுத்துட்டு வருவேன்.

ஹரிணியின் பதிவுகள் இனி கலைக்கூடம் வலைப்பூவில் தனியாக வரும்.

தொடர்ந்து படித்து ஊக்கமளிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.