Tuesday, May 12, 2009

ஆணழகன் அப்துல்லாவுடன் ஒரு அனுபவம்.

அப்துல்லா என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர், இவர் அணியும் கூலிங் கிலாஸ்க்காக அவரை நாங்கள் ஆணழகன் என்றே அழைப்பது வழக்கம்.ஒரு நாளும் இல்லாமல் திடீரென இந்த வாரம் தனது வீட்டுக்கு அழைத்தான்.

புதுக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான திருமயத்தில் உள்ள கோவில் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லா இருக்கும்.பாட்டுக்கச்சேரி,கரகாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம் அதுவும் நத்தம் சாந்தி,புதுக்கோட்டை திலகவதின்னு பிரபலங்களின் ஆட்டம் .(உண்மையா இப்படி இரண்டு பேரு இருக்காங்களா). வந்து பாரு ரகளையா இருக்கும். உடனே கெளம்புவோம் அப்படின்னான்.

நமக்குதான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே பிரியாணி வாய்ப்பை விடுவமா.

நான்,புதுக்கோட்டையை சேர்ந்த இன்னொரு நண்பர் மற்றும் அப்துல்லா மூவரும் இரவு 7 மணியளவிற்கு திருமயம் வந்து சேர்ந்தோம். முன்னமே சொல்லியிருந்ததால் மீன் சமைத்து வைத்திருந்தார்கள் நல்லா சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.

அப்துல்லாவின் தந்தை ஆசிரியர், ஆசிரியருக்கே உரித்தான அனைத்து கேள்விகளையும் கேட்டார். நாங்களும் மழுப்பி அப்படி இப்படி பதில் சொல்லி தப்பிச்சோம்.

இரவு 11 மணியளவில் திருவிழாவிற்கு சென்றோம், இன்று நிகழ்ச்சியில் வள்ளி திருமணம் நாடகம். பபூன் வந்து வாய் கூசாமல் கெட்ட ஜோக்குகளை அடித்தார். அனைவரும் பரவசப்பட்டு சிரித்தோம். அப்துல்லா கொஞ்சம் அதிகம்.

வீட்டுக்கு வந்து தூங்கினோம், அடுத்த நாள் ஒரு மலையை குடைந்த குளத்தில் காலை குளியல். வழக்கம் போல நல்ல சாப்பாடு மட்டன் பிரியாணியுடன். வழக்கம் போல் அப்துல்லா அப்பாவின் கேள்விகள்.

இன்னைக்கி பகலில் திருமயம் கோட்டை பார்க்க போனோம். நல்ல அழகான கோட்டை, மேலே ஒரு சுணை இருந்தது , தண்ணீர் பச்சை கலரில் இருந்தது, வேடிக்கை பார்ப்பவர்கள் அதனை தூர்த்தே தீருவது என்ற முடிவில் சிறிய கற்களை எடுத்து சுணையில் போட்டனர்.அப்துல்லாவும் தன் பங்கிற்கு ஒரு பெரிய கல்லை போட்டார்.

கீழே ஒரு கோவில் அங்கு யாரும் அதிகம் வருவதில்லை போல இருந்தது, என்னோட வந்த நண்பர் கொஞ்சம் பக்தி அதிகம், கோவிலுக்கு சென்றோம்.கோவிலின் அழகை ரசித்தேன்.

அப்துல்லா ஆவலோடு எதிர் பார்த்த இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனது, முதலில் குறவன் குறத்தி ஆட்டம் பார்க்க போனோம், ஆபாசத்தின் உச்சகட்டம், தூக்கம் வேறு கண்ணை சுழற்றியது, அந்த பக்கம் பாட்டுக்கச்சேரி அங்கே போனோம் இளையராஜா பாடல்களை கொலை செய்து கொண்டிருந்தார்கள். சரிடா வீட்டுக்கு போலாம்னேன், நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தோம், முன் ஹாலில் அனைவரும் பாய் விரித்து தூங்கினோம்.

திடீரென்று விழித்து பார்த்தேன், இருவரையும் காணவில்லை. அப்படி, இப்படி கஷ்டப்பட்டு புது இடத்தில எப்படியோ தூங்கிட்டேன். அப்துல்லா இப்படி தனியா விட்டுட்டு போவன்னு நான் எதிர் பார்க்கலை.

காலையில கேட்டேன் எங்கடா போனிங்க? அதுக்கு இங்கதாண்டா தூங்கினோம் அப்படின்னு வாய் கூசாம் பொய் சொன்னங்க ரெண்டு பேரும்.டேய் நான் முழிச்சிட்டுதான் இருந்தேன் சொல்லுங்கடான்னு கேட்டேன்.

இல்ல குறவன் குறத்தி ஆட்டம் சூப்பர், அதை பார்க்காம எப்படிடா தூக்கம் வரும்,வாழைக்காய் வெட்டுறது வரைக்கும் பாத்துட்டு தான் வந்தோம்னு சிரிப்பு வேற. வந்ததே அதுக்குதானேன்னான் வேற.தனியா வந்தா எங்கப்பா ஆப்பு வெச்சுருவாரு அதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் துணைக்கு ...

ரொம்ப பேசின உங்கப்பாகிட்ட நீ எதுக்கு வந்தங்கிற விசயத்தை சொல்ல வேண்டி வரும்னேன். நீ முதல்ல பஸ் ஏருன்னு ஏத்தி விட்டுதான் அடுத்த வேளை பார்த்தான்.

பி.கு1 : புதுகை.அப்துல்லாவும் எனது நண்பர் திருமயம் அப்துல்லாவும் சொந்தக்காரங்களான்னு புதுகை.அப்துல்லா அண்ணன் தான் சொல்லனும்.

பி.கு2 :முற்றிலும் பொய் கலந்த ஒரு உண்மை அனுபவம்.

பி.கு3 : கவர்ச்சிக்காக இந்த தலைப்பு

புது பதிவிற்கான வாய்ஸ் மறுபதிவு.

31 comments:

நசரேயன் said...

எல்லாமே புரியுது இது ஒன்னை தவிர
வாழைக்காய் வெட்டுறது??

Anonymous said...

" வாழைக்காய் வெட்டுறது வரைக்கும் பாத்துட்டு தான் வந்தோம்" தயவு பண்ணி இது என்னன்னு சொல்லிடுங்க.

M.Rishan Shareef said...

அட நம்ம அப்துல்லாஹ் பற்றிச் சொல்றீங்களா? :)

ஆமா..வாழைக்காய் வெட்றதுன்னா என்ன ?

புதுகை.அப்துல்லா said...

எம்.ரிஷான் ஷெரீப் said...

அட நம்ம அப்துல்லாஹ் பற்றிச் சொல்றீங்களா? :)
//

இல்லை ரிஷான். அவர் சொல்வது அவருடைய நண்பர் அப்துல்லாவைப் பற்றி. அவர் குறிப்பிடும் ஊரான திருமயம் எங்கள் புதுக்கோட்டையில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் தான் உள்ளது.


//ஆமா..வாழைக்காய் வெட்றதுன்னா என்ன ?
//

நோன்பு முடிந்த பிறகு விளக்கமாவே மெயில் அனுப்புறேன் ரிஷான் :)

புதுகை.அப்துல்லா said...

பி.கு1 : புதுகை.அப்துல்லாவும் எனது நண்பர் திருமயம் அப்துல்லாவும் சொந்தக்காரங்களான்னு புதுகை.அப்துல்லா அண்ணன் தான் சொல்லனும்.

//

எனக்கு அங்கு உறவினர் யாரும் இல்லை குடுகுடுப்பையாரே.

அப்புறம் எனக்கு ஓரு தனிப்பதிவு இருக்குன்னீங்க...தனி ஆப்புன்னு சொல்லி இருக்கலாம் :))))))

புதுகை.அப்துல்லா said...

அப்துல்லா என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்,
//

நீங்க எந்தக் கல்லூரியில் படிச்சீங்க அண்ணே?

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நசரேயன்,ஆத்திபன்,எம்.ரிஷான் ஷெரீப் மற்றும் புதுகை அப்துல்லா

//ஆமா..வாழைக்காய் வெட்றதுன்னா என்ன ?//

இது சுஜாதாவோட மெக்சிகன் சலவைக்காரி ஜோக் மாதிரின்னு வெச்சுக்கங்க

குடுகுடுப்பை said...

புதுகை.அப்துல்லா சொன்னது

//அப்புறம் எனக்கு ஓரு தனிப்பதிவு இருக்குன்னீங்க...தனி ஆப்புன்னு சொல்லி இருக்கலாம் :))))))//

இதுக்கு பேரு இல்லாமலில் இருத்தல், நீங்க சொல்ற மாதிரி ஆப்பு இலக்கணம் எல்லாம் இல்லை.

நீங்க எந்தக் கல்லூரியில் படிச்சீங்க அண்ணே?

தனியா. இந்த காலேஜில படிச்சவனெல்லாம் பதிவு எழுதுறான் அப்ப்டின்னு அப்புறம் சோறுதின்னதாத்தா சண்டைக்கு வந்துருவாரு

செல்வ கருப்பையா said...

//பி.கு2 :முற்றிலும் பொய் கலந்த ஒரு உண்மை அனுபவம்.//
நீங்க தூங்குனதா சொன்னது தானே அந்த பொய்?

அது சரி said...

வாழை மரம் வெட்றது தெரியும். யாருக்குன்னா கல்யாணம் ஆகாட்டி, வாழைமரத்தை வெட்டிருவானுங்க. என்னமோ அந்த மரத்தால தான் இவன் கல்யாணம் நின்னு போன மாதிரி :0(

அது என்னா வாழைக்காய் வெட்றது? இதுல உள்குத்து எதுவும் இருக்கா?

குடுகுடுப்பை said...

வாங்க கருப்பையா
//நீங்க தூங்குனதா சொன்னது தானே அந்த பொய்?//

பிரபலங்கள் இல்லாததால் நான் ஆட்டம்
பாக்க போவலைங்கோ

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி
//அது என்னா வாழைக்காய் வெட்றது? இதுல உள்குத்து எதுவும் இருக்கா?//

எனக்கு தெரிஞ்சா வெளக்கமா சொல்லிர மாட்டனா

cheena (சீனா) said...

அய்யொ அடிச்ச மறுமொழியக் காணோமே !! அப்துல்லாவின் சதியா ?

ம்ம்ம்ம் - புதுக்கோட்டை அப்துல்லான்னு நினைச்சு படிச்சு கடைசிலே திருமயம் அப்துல்லான்னு புரிஞ்சு ....ம்ன்ம்ம்ம்ம்

ஆமா அதென்ன வாழக்கா கதெ ?

புதுகை அப்துல்லா - நோன்பு தான் முடிஞ்சிடுச்செ - ரிஷானுக்கு பதில் அனுப்பியாச்சா ? ஆமான்னா எனக்கு பார்வேர்டு இல்லன்னா எனக்கு காபி - அனுப்புறீங்களா

http://urupudaathathu.blogspot.com/ said...

இது ஒரு நல்ல அனுபவம்..

http://urupudaathathu.blogspot.com/ said...

/// நசரேயன் said...

எல்லாமே புரியுது இது ஒன்னை தவிர
வாழைக்காய் வெட்டுறது??///

அப்போ “மத்தது” எல்லாம் புரிஞ்சுதா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///நமக்குதான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே பிரியாணி வாய்ப்பை விடுவமா.///

ஹி ஹி... அதானே.. நாம எல்லாம் கூப்புடாமலே கல்யானத்துக்கு போறவங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

//வாழைக்காய் வெட்டுறது///

எனக்கு மட்டும் சொல்லுங்க...
( பிரியானி வாங்கி தாரேன்.)

http://urupudaathathu.blogspot.com/ said...

//புதுகை.அப்துல்லாவும் எனது நண்பர் திருமயம் அப்துல்லாவும் சொந்தக்காரங்களான்னு புதுகை.அப்துல்லா அண்ணன் தான் சொல்லனும்.
/////

அப்போ இது நிஜமாவே அவரு இல்லியா???

http://urupudaathathu.blogspot.com/ said...

///வாழைக்காய் வெட்டுறது///

பஜ்ஜி போடவா???

( அப்பாவியாய் கேள்வி கேக்கும் சங்கம்)

http://urupudaathathu.blogspot.com/ said...

//குடுகுடுப்பை said...

இது சுஜாதாவோட மெக்சிகன் சலவைக்காரி ஜோக் மாதிரின்னு வெச்சுக்கங்க///

அய்ய... அப்போ இது அந்த மாதிரி கதையா??

( சீக்கிரம் ஜொள்ளுங்க)

http://urupudaathathu.blogspot.com/ said...

தனியாளா நானும் எவ்ளோ நேரம் தான் அடிக்கிறது..
யாராச்சும் வாங்கப்பா கும்மிக்கு..

http://urupudaathathu.blogspot.com/ said...

//இவர் அணியும் கூலிங் கிலாஸ்க்காக அவரை நாங்கள் ஆணழகன் என்றே அழைப்பது வழக்கம்.///

கூலிங்கிலாஸுக்கும் ஆணழகனுக்கும் என்னங்க சம்மந்தம்??

ராஜ நடராஜன் said...

எலெக்சன் முடிஞ்சு வந்திட்டீங்க போல இருக்குது.

ராஜ நடராஜன் said...

எம்புட்டு பேரு கேட்கிறாங்க வாழைக்காய் வெட்டலப் பத்தி.சொல்லிடுங்க என்கிட்ட மட்டும்.

எத்தனையோ வெட்டு கேள்விப் பட்டுட்டு இது மட்டும் எப்படி நம்மகிட்ட இருந்து தப்பிச்சுச்சு?இல்லிங்களா அண்ணன்மாரே!அய்யாமாரே!

ராஜ நடராஜன் said...

//கூலிங்கிலாஸுக்கும் ஆணழகனுக்கும் என்னங்க சம்மந்தம்??//

அண்ணன் அணிமா திருவிழா கூலிங்கிளாசெல்லாம் பார்க்கறதில்ல போல இருக்கு.அப்ப வால மீனுக்கும் கண்ணாடி?

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

Bhuvanesh said...

//முற்றிலும் பொய் கலந்த ஒரு உண்மை அனுபவம்.//

நண்பர் உங்கள கூப்டது போய்.. நீங்களா வாழைக்காய் வெட்டுறது பாக்கறதுக்காக அடம்புடுச்சு தான போனீங்க ?

(ஆமா இந்த வாழைக்காய் வெட்டுறதுனா என்ன ?)

ராஜ நடராஜன் said...

பதிவு எழுதறத விட்டுட்டதா பழமைகிட்ட கூவிகிட்டு இருந்தீங்க.இது எப்போதிருந்துன்னு பார்க்க வந்தேன்.

வில்லன் said...

//ஆமா..வாழைக்காய் வெட்றதுன்னா என்ன ?//

எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகனும்.

வில்லன் said...

கரகாட்டம் குத்தாட்டம் எல்லாம் பாத்திங்களா???..... லெமன் சிட்டில கரகாட்டம் ஏற்பாடு பண்ணுறதே நம்ம நசரேயன் தான்.

Anonymous said...

நத்தம் சாந்தி,புதுக்கோட்டை திலகவதி இவர்கள் இருவரும் 1990 களில்
மிகப்பிரபலம் . இவர்களின் ஆட்டத்த்திர்க்கென்றே பெரிய ரசிகர்
கூட்டம் உண்டு.(நானும் ஒருவன்).இப்பொழுது திலகவதியின் மகள்
சங்கீதா ஆட வந்து விட்டாள்.