Thursday, May 28, 2009

பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும்.

ஈழப்போரில் விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் அழித்து முடித்த குடும்பங்களில் எஞ்சியுள்ள குழந்தைகளை, குறைந்த பட்சம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தமிழக அரசு , மத்திய அரசு உதவியுடன் தத்தெடுக்கவேண்டும்.

அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் கல்வியை தமிழகம் வழங்கவேண்டும்.செலவை தமிழக மக்கள்,புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நிதி திரட்டுவதன் மூலமும், தன்னார்வத்தொண்டு நிறுவணங்கள் மற்றும் தமிழக அரசும் ஏற்கலாம்.

இவ்வளவு பெரிய மனித அவலத்தை தடுக்க இயலாத நாம் அதில் சிலருக்கு கல்வியாவது கொடுத்து, மாறுபட்ட இந்த உலகச்சூழலில் இந்த அனாதைக்குழந்தைகள் தன் வாழ்க்கைப்பாதையை அமைத்துச்செல்ல வழி செய்து கொடுக்கலாம்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை முன்னிலைப்படுத்துவற்கு காரணம், குறைந்த பட்சம் அரசியல் தீர்வென்ற பெயரில் இலங்கையில் வாழும் உரிமை எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு கொடுக்கப்படலாம். ஆனால் அப்போதும் இந்தக்குழந்தைகளை யாரும் கவனிக்கும் நிலையில் மிச்சமுள்ள தமிழ்க்குடும்பங்கள் இருக்காது.

மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முயற்சிக்கவேண்டும்.

15 comments:

நசரேயன் said...

//
மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முயற்சிக்கவேண்டும்//

மாநில அரசிலே பெரிய ஐயா குடும்பம் தானே இருக்கு !!

Anonymous said...

நல்ல யோசனை...

முதலில் அந்த மக்களை முகாம்களில் இருந்து விடுவிக்கட்டும்..

பழமைபேசி said...

எந்த ஒரு முயற்சிக்கும், தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் சுமூகமாக ஒன்றுபட வேண்டும்.

இதரகட்சிகள், ஆளுங்கட்சித் தலைவர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என் இரண்டு பேரையும் அனுசரித்துப் போக வேண்டும்.

ஊடகங்களின் கோயபல்சு பிரசாரத்துக்கு மசியக் கூடாது. ஏன் இன்னும் வலையுலகிலேயே, விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது நடந்து கொண்டுதானே இருக்கிறது?

சுமூக மனப்பான்மையுடன் செயல்பட்டு, காரியத்தை சாதிப்பதில்தான் தமிழனின் ஆக்கப்பூர்வ செயல்கள் இருக்க வேண்டும்.

இனியும் கடுமையாக விமர்சிப்பது சுமூக நிலைக்கு வழி கோணாது.

அது சரி(18185106603874041862) said...

//
அழித்து முடித்த குடும்பங்களில் எஞ்சியுள்ள குழந்தைகளை, குறைந்த பட்சம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தமிழக அரசு , மத்திய அரசு உதவியுடன் தத்தெடுக்கவேண்டும்.
//

அவர்கள் சீக்கிய குழந்தைகளாகவோ, குறைந்த பட்சம் ஹிந்தி பேசத் தெரியாத குழந்தைகளாகவோ இருப்பதால், அவர்களையும் அழித்து விட்டால் பிரச்சினை தீர்ந்தது என்று பொருளாதாரப்புலி மண் மோகனும், இந்திய தேசியவியாதிகளும் முடிவெடுப்பார்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும். //

வழிமொழிகிறேன்

புல்லட் said...

இப்பிடி நினைக்கிறதுக்கே நிறைய நன்றிகள் குடுகுடுப்பை அண்ணா... :(

Anonymous said...

true.

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு! நல்ல எண்ணங்கள்! அதற்குமுன் இங்கு இருக்கும் முகாம்களில் ஒரு முறை எட்டிப் பார்க்கலாம்! ஆனால் அதற்கும் பல தடங்கல்கள் இருக்கிறது போல!

வெற்றி-[க்]-கதிரவன் said...

இது எல்லாம் நடக்காது... இந்த ரெண்டு அரசாங்கமும்.. தமிழ்நாட்டுல குழந்தை இல்லாதவங்க மற்றும் விருப்பமுள்ள அனைவரும் தத்தெடுக்க ஒத்துக்கிட்டாலே நிறையபேரு முன்வருவாங்க.. அத கூட இந்த ரெண்டு அரசாங்கமும் ஒத்துக்குமான்னு தெரியல :(

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

நல்ல இடுகை. நல்ல எண்ணங்கள்.

நீங்கள் கூறி இருப்பது போல் நெருக்காமனவரகள் இது போல் பல நல்ல காரியங்களை செய்ய உதவி செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.

நம் தமிழ் மக்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் செய்வதை நம் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் நினைக்க வேண்டும்.

நீங்கள் அந்த நினைப்பை தூண்டி வீட்டிருக்கிறீர்கள். இப்போதாவது ஒரு நல்ல தீர்வை அனைவரும் அறியும்படி சம்பத்தப்பட்டவர்கள் எடுத்தால் மிகவும் நன்றாகவும்.
உபயோகமாகவும் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை.

சிறந்த உங்களின் நோக்கம் வரவேற்கும்படி இருக்கின்றது.

உங்கள் எண்ணங்கள் நிறைவேற நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

Unknown said...

Good Thought.

வில்லன் said...

ஐயா குடுகுடுப்பை.. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்... இந்திய அரசாங்கத்த நம்புறதுக்கு ஒரு புறம். அப்படியே நம்ம வலைப்பதிவர் தொடர்பு வழியாக நாம எதாவது செய்தால் ரொம்ப நல்லா இருக்கும். எதாவது வழி இருந்தால் சொல்லவும்.

வில்லன் said...

"திமுக பெயர் மாற்றம்" என்று பதிவு போட்ட நசறேயனுக்கு ரொம்ப நல்லா உறவு இருக்குமே தமிழக முதல்வரோட. யோவ் நசரேய கொஞ்சம் முயற்சி பண்ணுறது தான...

உடன்பிறப்பு said...

இதை நீங்கள் எழுதிய அன்றே நான் வாசித்துவிட்டேன் குடுகுடுப்பை. நம்மால் முயன்றதை செய்வோம்