Showing posts with label கவுஜ. Show all posts
Showing posts with label கவுஜ. Show all posts

Thursday, November 10, 2011

எவருமில்லாமலில்லை


முதுகுக்கு
இந்தப் பக்கம்
இந்த மூஞ்சி
முகம் மாற்றி
அகம் மாற்றி
உனக்காகவே
காத்துக் கொண்டிருக்கிறது


உயிர்விட்டு
உயிரை வாங்குகிறது
ஊதிய சிகரெட்டுகள்
துண்டுகள் எண்ணிக்கை
ரொம்ப லேட் என்றே
உறுதி செய்கின்றன


எச்சரிக்கையை
ஏளனம் செய்தபடி
ஊதியபடி நிற்கிறது
மூஞ்சி..

காதலி
அவன் காதலனுடன்
இருக்கையைப் பின் தள்ளி
இறுக்கமாக
காதலிக்க கற்றுக்கொண்டேன்..
காதலி மட்டும் தேவை..

Friday, November 5, 2010

நனவில் நிற்காதவை..

பெய்யாமழையில் நனைந்தாடும் ஈச்ச மரத்தின்
உதிராத இலைகளில்
வறண்டும்...
காய்க்கிறது காய்..

பாலையில்
புழுதி மண்ணாட்டி
புலர் பொழுதில்
அடித்து சென்ற காற்று
வரைந்து விட்டுப் போன
மணலோவியங்களில்
காலப் புள்ளிகளாக
ஒட்டகத் தடங்கள்

மெச்சுவதாயின் எனை மெச்சு
மணல் காற்றுக்கு ஈடு கொடுத்து
அடுக்காக நிமிர்ந்து நிற்கும்
ஒற்றை கள்ளி..

பேரீத்தம் பழத்திடம்
நெருங்கியமர்ந்து
பேரம் பேசும்
இரட்டை தேனீக்கள்..

வெப்பம் சுமந்த மண்ணில்
பெய்யாது நகர்ந்து போன
பொய் மேகம்..

இன்றோ
இந்தப் பிறவியில்..
நான் உண்ட பேரீச்சை..

பேரீத்தம் கொட்டை தாண்டி இலை வருகிறது
பனிமழை கொட்டியதும்
கொட்டியது இலை...



Friday, October 22, 2010

ருசி

விடாதழைத்த
தொலைபேசி மணியை நிராகரித்தேன்..
சற்றுத் தாமதித்து
IM ல் செய்தி வந்தது
பிஸி என்று ஸ்டேட்டஸ்
வாசல் அடைத்தேன்
இன்பாக்ஸில் புதிய மெயில்
உட்புகுந்தது..
அசைத்துப் பார்த்தது
ஆனாலும் அலட்சியம் செய்தேன்
பின்பக்கன் கை நீட்டி
நெட்டி முறித்தேன்
சொப்பனத்தில் காணாக்கூடாத..
டேமேஜர்
நேரில் வந்து ஸ்டேட்டஸ்
கேட்டார்
ஜாக்கி Vs Anti ஜாக்கி..
உச்சகட்டம் அடைந்துள்ளது..
இன்னும் இரு வாரம் ஆகும்...
முடிய என்றேன்

Sunday, June 6, 2010

டீக்கடையில் வாழ்பவை

வெட்டிப் பேச்சுக்கேற்ப..
கூட்டம் சேரும்..
முச்சந்திகள்..

தேனீரில் சேர்க்கப்பட்ட..
செயற்கை வண்ணம்..
ருசிப்பதாக..
உறிஞ்சிக் கொண்டிருக்கும்..
அல்லக்கை கொழுந்துகள்..

பணம் தருவதாகச் சொல்லி..
வடை எண்பதை எடுத்து..
கடனை கடையில் வைத்து..
வெட்டிப்பேச்சை சிரமேற்கொண்டு..
தினம் பேசித் திரியும்..
இணையத்தின் சாதகத்தால்..

இட ஒதுக்கீடுகள் பல..
உடையவனை அடைய முடியாமல்..
தாத்தன் அப்பா அம்மா
நான் என் வாரிசு என் வாரிசின்...
பேரன் வரை அடைவது..
சமுதாயச் சிறப்பென்றும்..
தன் சாதியில் முதல் முறை பயனாளிக்கு
தகுதி போதாதென்றும் ..

இன்னும் பற்பல கணக்கு..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
உயர்சாதியை காட்டி..
உயர்கல்வியில் தனக்கு..
ஒரு சீட்டு எனும்..
உயரிய நோக்குடன்.. !


Tuesday, April 20, 2010

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

1.

பலகாரம் தின்றபின்
செரிப்பதாய் கனவுகளுக்கிடையே
பாயாசத்தில் முங்கி நீந்துகையில்
காற்றுக் குமிழிகளாய்
வெளியேறும் வறுத்த
கோழியின் வாசம்
முழுதாய் தின்றபின்
மெல்ல எழுந்து கைகழுவும் நேரம்
பாக்கெட் சாக்லேட் உந்தி எழ
சாக்லேட் பேப்பர் குப்பையிட
காலிடறி வறுகடலை கண்டதும்
குடலை அடைந்ததும்
குளக்கரைக்கு ஓடித்திரும்புகையில்...
கையில் கொக்கும் மீனுமாய்!

2.

தினம் சிக்கன் வாங்க அலுப்பு
பதப்பட்ட சிக்கன் கால்கள்
சுடவைத்து ஆறும் முன்
வாயில் .

Friday, April 2, 2010

நடராஜ நிலை நாரைபோல்

குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்கள் பருகியபடி
ஆடிக்கொண்டிருக்கும் பாலா

இல்லாத கழிப்பிடத்தில்
ஈர்ப்பியல்பில்லாதியங்கி
வழியெதுவும் தெரியாது
விரைந்து கொண்டிருக்கும் உச்சா..

தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெங்கே?

சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..!

Wednesday, March 24, 2010

உப்புக்கண்டம் ஆ.

கருப்பாக இருந்தாலும் அவை வெள்ளாடுகளாகவே அறியப்பட்டன..
காட்டிலும் நாட்டிலும் மேட்டிலும் மேய்ந்துவிட்டிருந்தன..
கீதாரியின் கொட்டடியிலும் ஆட்டுக்காரர் கொட்டகையிலும் புளுக்கையிட்டன..
மங்கள நாளொன்றில் அவை வெட்டப்பட்டன..
அடுப்பிலிட்ட தீயில் அருமையா வெந்தன..
செந்தீக்கள் சில பிரியாணி சட்டியின் மேல் போடப்பட்டன..
சட்டியிலிருந்தவை எலும்பு நீக்கி உண்ணப்பட்டன..
சில நேரங்களில் எலும்பும் சேர்த்தே உண்ணப்பட்டன..

அடிச்சட்டியில் சாரணி கொண்டு கீறப்பட்டது..
அங்கே கொழுப்பு ரசம் தெளிக்கப்பட்டது..
கருப்பு பிரியாணியும் கொழுப்பு ரசத்துடன்
சுவைக்கப்பட்டதால் காணாமல் போயின..
மொய்யிடும் நேரமென்று உடுக்கை அடித்தார்..
கறி சாப்பிட்டு காலாற நடப்பது இதயத்திற்கு ஏற்றதென்றார்..
மொய்யிடாம காலாற நடப்பது இதயத்திற்கு இன்னமும் பிடித்திருக்கிறதாம்..
அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமாம்..

சுற்றிலும் கொட்டிக் கிடந்த பாத்திரம் ஒதுக்கி ..
சமைக்கப்படாமல் மிச்சமிருந்த கறியை கண்டேன் களித்தேன்..
வெள்ளாடு!
கருப்புத்தோல் கொஞ்சம் காசும் ஆனது..
உப்புக்கண்டம்..!
கற்பனையிலே மனம் ஓடியது..
இரு சுவைகளின் மணமும் எனக்குத் தெரிந்திருந்தது..
உடனே மறக்காது ஏற்றிவிட்டேன் மஞ்சளும்,காரமும், உப்பும்..
நறுமணமுள்ள இந்த கண்டங்களுக்கு..
மன்னிக்கவும்..
இந் நவீன பேக்கன்களுக்கு..
ஒரு சதை உண்டு..!

Wednesday, March 3, 2010

கொண்டாடும் முன்பா

சம்மந்தியிடம்
கோமணத்தை வாங்கும் முறைமாமன்
மகனின்
போற்குணமும் மூப்படையா
ஜாவாவும் நல்லாபடிச்சா
மென்கூலி வேலைக்கு ஆகிப்போச்சா
வேலை மெனக்கெட்டு கோடு அடிச்சி..
டெஸ்ட்டரூ கடிச்சு வீங்கி போச்சு
டிவிட்டருல கேள்வி கேட்டு
ஆர்குட்டோட பேஸ்புக்
சேந்து ஜிமெயிலில் கோடு வந்து
வெட்டி ஒட்டுமுன்
மானம் ஏறிடுச்சு
பஸ்ஸூல பஸ்ஸூல


Tuesday, March 2, 2010

ஐஸ்

சரக்கு கிளாஸில் அதிகம் என ஒதுக்கப்பட்ட
ஐஸ் கட்டி ஒன்று கிளாஸில் உள்ள
மற்றொன்றிடம் சொல்லிக்கொண்டது
எனக்கு விடுதலை !
சரக்கின் போதையறியா பனிக்கட்டி நீ !
என்னைப்பார் போதையில் மிதக்கிறேன்.

சிலநேர போதை பின்னர் உருகி
நாளை எச்சமாகப்போகிறாய்.

வாட் டு யூ வாண்ட் சார்
மார்கரீட்டா வித் கிரஷ்டு ஐஸ்

போதையின் வாசமறியா பனிக்கட்டி
மார்கரீட்டாவுக்கு
மிக்ஸியில் அடிபட்டு
நாளை எச்சமாக இன்றே
உயிரை விட்டிருந்தது.


Friday, February 26, 2010

காலினை தீ சுடினும் ...

காலினை தீ சுடினும் ...

ரயிலில் ஏறி எங்கோ போய் விட்டு
நினைவினில் விழித்தெழுகையில்
தீராத் தேடல்
காணாமல் போன செருப்பு
திகைப்பு மீண்டெழுந்து
காலினை தீ சுடினும்
தொடர்ந்து நடை
யாரோவான கண்ணம்மாவின் கண்கள்
கண்டது குளிர்ந்தது அகம்
கனவுலகம் சென்று மிதந்து
கண்ணம்மாவின் கண்ணில் முத்தமிட்டு
உதட்டுக்கு வருகையில்
கண்ணம்மாவில் கணவன்
கட்டணக் கழிவறையிலிருந்து வெளியேறி
டேய் பேமானி என் பொண்டாட்டிய
ஏண்டா பாக்கிற
கனவுகள் கண்ணம்மாவின் உதட்டில்
கணவனின் ஈரச்செருப்பு
கண்ணத்தில் பட்டவுடன்
காணாமல் போன செருப்பு
ஞாபகம் தானாய் விழித்தெழும் நனவுகள்

Thursday, February 11, 2010

சிந்தனைக்கவுஜ

அதுல அப்படி சொல்லிருக்கு
இதுல இப்படி சொல்லிருக்கு
அதுல சிந்திக்க சொல்லிருக்க
அதுல லெப்ட்ல சிந்திக்க சொல்லிருக்கு
இதுல ரைட்ல சிந்திக்க சொல்லிருக்கு
அதுல சிந்திப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கு
இதுல சிந்திக்காட்டி தண்டனை உறுதியாக்கப்பட்டிருக்கு
அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு
அதுல தடைசெய்யப்பட்டிருக்கு
இதுல தடைசெய்யப்பட்டது சிந்திந்தால்
இதுல இந்த மாதிரி தண்டனை உறுதி
இதுல அதுல புரிந்து சிந்தனை செய்வது சிந்தனை
இதுல அதுல தாண்டி சிந்திந்தால் அது எதுல.


Thursday, February 4, 2010

தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

நுனிப்பாதம் கொண்டு பூமி தொட்டு
கிராபிக்ஸ் உதவியோடு மிதந்தாடியோடி
டூப்பின் உதவியுடன் மரம்தாவி,மலைதாவி
டிரெய்ன் அருவி குருவி எல்லாம் தாவி
நளினமான நடிகையின் அரையாடை சுற்றிய
இடையை நுகர்ந்து நடன இயக்குனரின்
உதவியுடன் குழைந்து சுற்றிவந்து ஆடி
நடிகையின் அப்பா பணக்கார வில்லன் நடிகருடன்
மோதி துணை நடிகர் அடிவாங்கி
பூனையுமாகிப்போனதால் நீ சிங்கமானதை
ரசிக்க என் சொந்த நிலமதில் விளைந்த நெல்லை
விற்று உன் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய
காவடி எடுத்து பாலாபிசேகம் முடிந்து நூறு ரூபாய்
அதிகம் கொடுத்து தியேட்டருக்குள்ளே படம்
பார்க்காமலேயே விசிலடித்து கைதட்டி ரசித்து
வீடு வந்து விகடன் படித்தேன் படம் பாடாவதி
தோல்வி உறுதி என்று படித்து வெற்றியாக்க
மிச்சமிருந்தை நெல்லையும் விற்று ஐம்பதாவது
முறையாக படத்தை பார்த்த பின் என்னை நீ அறிக்கை
மூலம் பாராட்டியதில் அகம் மகிழ்ந்து இருக்கையில்
அடுத்தபடம் பற்றிய உன் அறிக்கை
படமும் வந்து வெற்றிப்படமும் ஆகி ஆக்கப்பட்டு
நீயும் சொல்லாமல் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்கப்போக
இப்போது வந்த தமிழ்ப்படமும் பார்த்து
சிரித்து ரசிக்க பக்குவப்பட்டது என் மனசு
மீண்டும் உன்னிடமிருந்து அறிக்கை அமிஞ்சிக்கரையில்
இருந்து என் ரசிகர்கள் என் உயிர் மயிரென்று
அடுத்தப்படம் வருவது தெரிகிறது
நீயும் நுனிப்பாதத்தில் ஆரம்பிக்கப்போகிறாய்
நானும் நெல் விற்பனையில் ஆரம்பிக்கப்போகிறேன்.
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.

அசல் இங்கே

பிகு: சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்.

Wednesday, January 13, 2010

பிரித்தலும்,மேய்தலும், கோர்த்தலும்


தலையை மட்டும் குழம்பு வைக்கலாம்
சொல்கிறாள் அம்மா.
குடல் பொறியல் செய்யலாம்
சொல்கிறார் அப்பா
தொடைக்கறி முடிச்சுகள் உடுத்தியபடி.
உப்புக்கண்டம் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் காய வைத்துக்கொண்டிருந்தாள்
வாசம் இழுத்தபடியே
அவனை பார்க்கிறேன்
கழுத்தில் பளபளத்தது புதுமணி.
வெறும் எலும்புதானா, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
ஏறிக்கெழுத்தி வலையில் பிடிபட்டது
மாமனாரும் வந்து சேர்ந்தார் சாக்கு நிறைய மீனோடு.
தாலி கட்டியவனை புளிவாங்க அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்து
சாக்கு மீனும் சமைத்தெடுத்து
பிரித்து மேயப்பட்டது மீன்கள்
தட்டு மட்டும் முட்களுடன்.
சாப்பிட்டு முடித்து ஏப்பம்
விட்டுத் திரும்புகையில்
அவனது
கழுத்து மணி ஓசை
விரைவில் உப்புக்கண்டம் ஆகப்போவது
தெரியாமல்
அவனது தொடைய பிரித்துக் கோர்ப்பது
யார்??

அசல் இங்கே


Tuesday, January 12, 2010

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது

தூக்கி வீசப்பட்ட ஊறுகாய் பாட்டில்

சரக்கு மட்டும் ஊறுகாயற்று

எனக்கு நானே சமாதானம் கொண்டவன் போல்

சாவதானமாகவே குடித்தேன்

சைடிஷ் இல்லாமல் குடிப்பவன் என்ற

பெருமைகளை புறம் தள்ளி

சரக்கு மட்டுமே கதி

சரக்குக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

போதையில் மூழ்கிப்போய்

ஊறுகாய் தவிர்க்கப்பழகி

முழுதும் குடித்தபின்

அடுப்படியில்

எனக்கே எனக்கென சமைத்த

சிக்கன் ஊறூகாய்

சட்டி நிறைய

கிடைத்த குஷியில்

சரக்கு தேடினேன்

பூட்டப்பட்ட வீட்டில்

சரக்கில்லாமல் தேம்பியழும் நான்

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!

அசல் இங்கே


Friday, January 8, 2010

அடைக்கப்படாத கடை

கிளர்ந்தெழும் பசி
அடங்காப் பசி
பசியில் துடிக்கும் சோகம்
அடையப்படா உணவு
பசியில் கண்டபடி உண்டபின்
எப்போதும் பெருங்கொண்ட ஏப்பம்
எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அடையாளம் பிரிக்கும்
உறுப்புகளை மறந்து போ
உள்ளிருக்கும் சதை
வறுத்து சிவக்கட்டுமே;
அந்த வெளிச்சத்தில் பார்
தின்றால் ருசிக்கத்தான் செய்யும்
ஆனாலும் !?
பட்டியல் படித்து விலை அறிந்ததால்
நீ ஆடு
நீ கோழி
நீ மீன்
ஏதும் அறியா எண்ணற்ற உயிர்களுக்கு !
விலைப்பட்டியல் அதிகாரச் சின்னங்கள் ஆனதும்
அதற்கொரு கடை!
அதற்கொரு கத்தி !
அதற்கொரு எடை.
ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
கடைகாரனுக்கு ;
மாயா லோகத்தின்
மயக்கும் வசீகரங்களில்
சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்
ஒரு வெஜிடேரியன் பெண்ணை அவன் லுக்கும்போது
அவனிடம் நான்
கேட்டுக் கொள்வது
ஆடும், கோழியும், மீனும்
இலவசமாய் ...
எனக்கே கிடைக்கட்டும்!


இங்கே அசல்

Tuesday, December 22, 2009

குஞ்சுகள் ...


குஞ்சுகள் ...

தின்ன தின்ன மிச்சங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத வயிறுப் பந்து
கோழிக்குஞ்சுகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகள் கனமின்றி காற்றில் உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
போன்று உரித்த கோழி
என்வீட்டு அறுவாமனையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
தின்று அலுத்துப் போய்
கக்கூஸ் தேடி அலைகையிலே
இன்னுமொரு குஞ்சு
என் வீட்டு அறுவாமனையில்
என் தொப்பை வளர்க்க!

Monday, September 14, 2009

கவிதையில்லா கவிதை

எந்த ஊர் என்றவனே
அத்திக்காய் காய் காய்
கிலியில் கிளியைக் கிழித்து
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வாழ்வனத்தில் வழியும் துளிகள்
மரணம் உன்னைக் காதலிக்கிறது
மீண்டும் சந்திப்போம்

நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்

பச்சைமிளகாய் இளவரசி
வெளிச்ச அழைப்புகள்
அன்புடன் இதயம்
கிடைக்கும் இடங்கள்
சரணமென்றேன்


----

அன்புடன் புகாரி என்ற பதிவரின் லேபிள்களே மேலே இருக்கும் கவிதையில்லா கவிதை. அவரிடம் அனுமதி கேட்காமலே பதிவிடுகிறேன் புகாரி புகார் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்.

அவரைப்படிக்க அறிதலில்லா அறிதலுக்கு செல்லுங்கள்.

அறிதலில்லா அறிதல்

Saturday, September 12, 2009

அழகு நீ கோடி அழகு

நீள் ஆறுகள்
குறுக்கே பாலங்கள்
ஆதிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மரங்கள்
அலைபாயும் மின்இலைகள்
கரண்ட் பில்
குறைத்திடவே
லேட்டாக பள பளக்கும்
வெள்ளைநிற பல்புகள் ...
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் போட
நிறவெறி அப்பளமாய்
உடைந்தது பிரச்சினையே
ரிசெசன் ஒரு கண்ணிலா
மருத்துவம் மறு கண்ணிலா
உலகம் ஒரு வெண்ணிலா
இல்லாத அப்பளப்பிரச்சினை
தடுக்க பீருருஞ்சும் தலைமகன்...
மேலேப் பறக்கும் செலவினங்கள்...
தேவை உடனடி
பச்சை நிற பணம்.
பணம் ... பச்சை பணம் ... பண எந்திரம்
அழகே...!
பணம்
அழகே ..!
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!


அசல் இங்கே

Wednesday, September 2, 2009

மழிக்க சிரைக்க

சலூன்கள்

திறக்கப்படும்

நேரத்தில்

தாடி

சிரைக்கப் படுகையில்

மெதுவாக முளைத்திடும்

தாடியின் ஆயுள்

அடுத்து சலூன்

திறக்கப்படும் வரையோ ?!

சிரைக்கப் படுதலும்

வளர்தலுமாக

நகர்கின்றன தாடிகள்

சலூன்களை நோக்கி...!
கனவுகள் இங்கே

Tuesday, September 1, 2009

அழுக்கான வேட்டிகள்

அசுத்தமான கோடுகளுடன்
அழுக்காக கட்டிக் கொண்ட
ஒரு வேட்டி
துவைக்க முடிந்தும்
துவைக்க நினைத்தும்
துவைக்காமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
வேட்டியை
தாண்டியபடியே நிற்கும்
கால்களுடன்
தள்ளாடிய நடை
சிவந்த பார்வை
திமிர்ந்த பானச் செருக்கும்
கொண்டவனாய்
நிற்பவன்
.
.
.
.
.
ஆண்

இப்படியும் கவிதை எழுத முடியும் இங்கே சென்று படியுங்கள்