Thursday, February 4, 2010

தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

நுனிப்பாதம் கொண்டு பூமி தொட்டு
கிராபிக்ஸ் உதவியோடு மிதந்தாடியோடி
டூப்பின் உதவியுடன் மரம்தாவி,மலைதாவி
டிரெய்ன் அருவி குருவி எல்லாம் தாவி
நளினமான நடிகையின் அரையாடை சுற்றிய
இடையை நுகர்ந்து நடன இயக்குனரின்
உதவியுடன் குழைந்து சுற்றிவந்து ஆடி
நடிகையின் அப்பா பணக்கார வில்லன் நடிகருடன்
மோதி துணை நடிகர் அடிவாங்கி
பூனையுமாகிப்போனதால் நீ சிங்கமானதை
ரசிக்க என் சொந்த நிலமதில் விளைந்த நெல்லை
விற்று உன் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய
காவடி எடுத்து பாலாபிசேகம் முடிந்து நூறு ரூபாய்
அதிகம் கொடுத்து தியேட்டருக்குள்ளே படம்
பார்க்காமலேயே விசிலடித்து கைதட்டி ரசித்து
வீடு வந்து விகடன் படித்தேன் படம் பாடாவதி
தோல்வி உறுதி என்று படித்து வெற்றியாக்க
மிச்சமிருந்தை நெல்லையும் விற்று ஐம்பதாவது
முறையாக படத்தை பார்த்த பின் என்னை நீ அறிக்கை
மூலம் பாராட்டியதில் அகம் மகிழ்ந்து இருக்கையில்
அடுத்தபடம் பற்றிய உன் அறிக்கை
படமும் வந்து வெற்றிப்படமும் ஆகி ஆக்கப்பட்டு
நீயும் சொல்லாமல் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்கப்போக
இப்போது வந்த தமிழ்ப்படமும் பார்த்து
சிரித்து ரசிக்க பக்குவப்பட்டது என் மனசு
மீண்டும் உன்னிடமிருந்து அறிக்கை அமிஞ்சிக்கரையில்
இருந்து என் ரசிகர்கள் என் உயிர் மயிரென்று
அடுத்தப்படம் வருவது தெரிகிறது
நீயும் நுனிப்பாதத்தில் ஆரம்பிக்கப்போகிறாய்
நானும் நெல் விற்பனையில் ஆரம்பிக்கப்போகிறேன்.
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.

அசல் இங்கே

பிகு: சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்.

29 comments:

நசரேயன் said...

//சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்//

பார்த்திட்டு விமர்சனம் எழுத௬டாது

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

//சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்//

பார்த்திட்டு விமர்சனம் எழுத௬டாது
///

னோ டீல்

கயல் said...

//
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.
//
:))

கலகலப்ரியா said...

ஆ...!!!! இயற்கையை விட கிராபிக்ஸ் நல்லாதான்யா இருக்கு..!! இது நமக்கு தோணாம போச்சே...! ஆமா முகிலன் போஸ்டர் அடிச்சு ஒட்டினாங்க.... நீங்க டிரெயிலர் கூட இல்லாம படமே போட்டுட்டீங்களே...!!! இது எப்டி நியாயம்... (அப்பாடா... இனி முகிலன் பாடு குடுகுடுப்பையார் பாடு... =)))

Thekkikattan|தெகா said...

:)) எப்படீய்யா இப்படியெல்லாம்...

கலகலப்ரியா said...

// கயல் said...

//
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.
//
:))//


ம்க்கும்... கயலு... சிரிப்பு வேறயா நடக்கட்டு நடக்கட்டு... =))

vasu balaji said...

இலக்கிய அணித்தலைவர் முன்னறிவிப்புச் செய்த பிறகும் முந்திக் கொண்டு எதிர் கவுஜை போட்டது ஏன்? இளைய சோழர் சட்டத்துறைத் தலைவர் கேள்வியை நிச்சயம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். (பழைய பிரியாணி மேல பழியப்போட்டு எஸ்ஸாயிக்குங்க தலைவரே)

வில்லன் said...

//மரம்தாவி,மலைதாவி
டிரெய்ன் அருவி குருவி எல்லாம் தாவி//

அவன் என்ன நடிகனா? இல்ல கொரங்கா??..... இப்படி தாவி தாவி அலையை....

வில்லன் said...

////சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்//

நீறு தியேட்டருக்கு போனா என்ன திருடபோனா எங்களுக்கு என்ன.........சும்மா படம் பாக்க போறதை எல்லாம் பதிவுல போட்டுட்டு... கொஞ்சம் விட்டா குளிக்க போறேன் சாப்பிட போறேன்னு கூட பதிவுல "அப்டேட்" பண்ணுவீரு போல.....??

கேக்குறதுக்கு படிக்குறதுக்கு நாலு கேனபசங்க கெடச்சா என்ன வேணும்னாலும் எழுதுவீங்க போல....இருக்கட்டும் இருக்கட்டும்....

வில்லன் said...

/நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.//

அது என்ன டப்பா??? சோப்பு டப்பாவா இல்ல பவுடர் டப்பாவா??????? எதெல்லாம் குடுக்கான்களா இப்ப படத்துல....

வில்லன் said...

/கலகலப்ரியா said...

ஆ...!!!! இயற்கையை விட கிராபிக்ஸ் நல்லாதான்யா இருக்கு..!! இது நமக்கு தோணாம போச்சே...! ஆமா முகிலன் போஸ்டர் அடிச்சு ஒட்டினாங்க.... நீங்க டிரெயிலர் கூட இல்லாம படமே போட்டுட்டீங்களே...!!! இது எப்டி நியாயம்... (அப்பாடா... இனி முகிலன் பாடு குடுகுடுப்பையார் பாடு... =)))//
என்னது இதுகூட எங்க பாண்டியர் முகிலன் ஆரம்பிச்சு வச்சதா தெரியாம போச்சே??????? யோவ் சோழர் இதென்ன திருட்டுத்தனம்.... எங்க அந்த "அதுசரி" (ஜிங் ஜாக் - "அதுசரின்னா" அப்படித்தான அர்த்தம்... எதுக்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடுறது.......) ....பேசமாட்டாரே இப்ப?????

வில்லன் said...

// வானம்பாடிகள் said...


இலக்கிய அணித்தலைவர் முன்னறிவிப்புச் செய்த பிறகும் முந்திக் கொண்டு எதிர் கவுஜை போட்டது ஏன்? இளைய சோழர் சட்டத்துறைத் தலைவர் கேள்வியை நிச்சயம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். (பழைய பிரியாணி மேல பழியப்போட்டு எஸ்ஸாயிக்குங்க தலைவரே)//
நடக்காதுடே!!!!!!!!!!!!!!!!!!!!! நாங்க எப்பவும் உசாரு....

காக்கை நோக்கறியும்.....
கொக்கு டப்பரியும்....

நாங்க (பாண்டியர்கள் ) எல்லாம் காக்கை மாதிரி... துப்பாக்கிய பாத்தவொடனே எஸ்கேப்.........அண்ணாச்சி குடுகுடுப்பை (சோழர்கள் எல்லாம்) கொக்கு மாதிரி.....துப்பாகியால சுட்டபோரவுதான் தெரியும்...

குடுகுடுப்பை said...

இலக்கிய அணித்தலைவர் முன்னறிவிப்புச் செய்த பிறகும் முந்திக் கொண்டு எதிர் கவுஜை போட்டது ஏன்? இளைய சோழர் சட்டத்துறைத் தலைவர் கேள்வியை நிச்சயம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். (பழைய பிரியாணி மேல பழியப்போட்டு எஸ்ஸாயிக்குங்க தலைவரே)////

அதென்ன அவர் மட்டும் இளைய சோழன், நான் என்ன பழைய சோழனா?

பழைய பல்லவர மாணவரணித் தலைவராக்குனதுக்கு இதுதான் பரிசா?

Unknown said...

சூப்பரு...

இங்கே இலக்கிய அணி, பொதுச் செயலாளர் என்று பிரித்துப் பேசி, கழகத்தை காங்கிரஸ் ஆக்கிவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்...

இந்தக் கவிதையை கழகத்தின் சொத்தாகவே பார்க்கிறோம்.. :))

குடுகுடுப்பை said...

முகிலன் said...

சூப்பரு...

இங்கே இலக்கிய அணி, பொதுச் செயலாளர் என்று பிரித்துப் பேசி, கழகத்தை காங்கிரஸ் ஆக்கிவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்...

இந்தக் கவிதையை கழகத்தின் சொத்தாகவே பார்க்கிறோம்.. :))//

இன்னொரு பாண்டியர் உளருகிறாரே ஏன்?

குடுகுடுப்பை said...

Thekkikattan|தெகா said...

:)) எப்படீய்யா இப்படியெல்லாம்...//

சோழ வம்ச கவுஜ

Unknown said...

//ஆமா முகிலன் போஸ்டர் அடிச்சு ஒட்டினாங்க.... நீங்க டிரெயிலர் கூட இல்லாம படமே போட்டுட்டீங்களே...!!! இது எப்டி நியாயம்... (அப்பாடா... இனி முகிலன் பாடு குடுகுடுப்பையார் பாடு... =))) //

இந்த சிண்டு முடியிற வேலையெல்லாம் இங்க வேணாம்.. சண்டையெல்லாம் நாங்க தானாவே போட்டுக்குவோம். யாரும் தூண்டி விடவேண்டியதே இல்லை.

வில்லன் said...

/முதலாம் குடுகுடுப்பை சோழன் said...


Thekkikattan|தெகா said...

:)) எப்படீய்யா இப்படியெல்லாம்...//

சோழ வம்ச கவுஜ///

யாரப்பா அது முதலாம் குடுகுடுப்பை சோழன்..... அநியாயமா என்ன கொலகாரனாக்காதிங்க .....

வேணும்னா இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போல 23ஆம் சோழன்னு வச்சுக்குங்க.....உங்க கட்சி படத்துல இம்சை அரசன் 23ஆம் புலிகேசி ஆட்சி போலத்தான் நடக்குது.....

வில்லன் said...

///"தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்"//
நாங்கல்லாம் கருப்பா இருக்கோம்னு குயில்கள்னு சொல்லுறீரோ?? குசும்பு ரொம்ப ஜாஸ்தியா போச்சு வர வர......

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு....
சாமி கருப்புதான் திங்கும் கரும்பு கருப்புதான்....

வில்லன் said...

/ முதலாம் குடுகுடுப்பை சோழன் said...


Thekkikattan|தெகா said...

:)) எப்படீய்யா இப்படியெல்லாம்...//

யாரந்த முதலாம் குடுகுடுப்பை சோழன்...

I AM GOING TO REPORT AS SPAM......

Unknown said...

// முதலாம் குடுகுடுப்பை சோழன் said...
Thekkikattan|தெகா said...

:)) எப்படீய்யா இப்படியெல்லாம்...//

சோழ வம்ச கவுஜ
//

ரெண்டாவதா ஒரு குடுகுடுப்பை வந்தாத்தான் முதலாம்னு போட்டுக்கணும். அப்ப முதல் குடுகுடுப்பையோட ஆட்சி முடியிதுன்னு சொல்லுங்க...

குடுகுடுப்பை said...

நாந்தான் கம்பெனி ஓனர்

வில்லன் said...

//இந்தக் கவிதையை கழகத்தின் சொத்தாகவே பார்க்கிறோம்.. :))///

கவிதையை எல்லாம் கழகத்தின் சொத்தாக வழங்க வேண்டாம்.....ஏற்கனவே காசு இல்லாம கட்சி காத்தாடுது!!!!

நான்தான் பொருளாளர்....பணமா கொடுங்க.... அக்கௌன்ட்க்கு transfer பண்ணுங்க இல்ல MONEY ஆர்டர் பண்ணுங்க .

வில்லன் said...

குடுகுடுப்பை

முதலாம் குடுகுடுப்பை ஆட்சி ஒரே நாளுல முடிஞ்சுபோசி........

இப்ப முதலாம் குடுகுடுப்பை சோழன் வந்துருக்கான்.... இவன் எத்தன நாலு தாக்கு புடிப்பான்னு பாப்போம்...

அரங்கப்பெருமாள் said...

விஜய் படம்,அஜித் படம் பார்க்காதீங்கண்ணே. அதெல்லாம் பார்த்தா இப்படி எழுதத் தோணும். பதிவு போட எதுவும் கிடக்கலன்னா பார்க்கலாம்ண்ணே....

Anonymous said...

ஒரிஜினலை விட சுலபமா விளங்குது.
ப்ரியா கோவிக்காதீங்க :)

Vidhoosh said...

kavuja kavuja...

:'(
:'(
:'(
:'(
:'(
:'(
:'(
:'(
:'(

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

ஒரிஜினலை விட சுலபமா விளங்குது.
ப்ரியா கோவிக்காதீங்க :)//

அவங்க ஒரு விளங்க முடியா கவுஜ.

குடுகுடுப்பை said...

கயல் said...

//
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.
//
:))//

நன்றி