Tuesday, August 31, 2010

அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.இல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.

அமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.

அ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.

ஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.

அ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.

ஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.

அ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.

அ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.

அ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்

அ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.

ஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.

அ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.? you know what ,i dont know

அ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.

ஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.

அ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா?

அ.அதிகாரி2 : வேண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.

அனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.

அ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க?

மா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வருங்கால முதல்வரில் வந்த இடுகை மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில் மீள்பதிவாக இங்கே.

Tuesday, August 10, 2010

என் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே.

என் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே.

திடீரென வயிற்றுப்போக்கு, யோசித்தேன், கடையில் வாங்கிய இஸ்ரேல் தக்காளிதான் காரணமாக இருக்கமுடியும் என்பது வெள்ளிடை மலையாகத்தெரிந்தது, குடிக்க கூட தண்ணீர் இல்லாத இந்த பாலைவன நாடான இஸ்ரேலில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய அனுமதித்த சோலைவன நாடான அமெரிக்க ஏகாதிபத்தியமும் இதற்குக்காரணம் என்பது சொல்லியும் தெரியவேண்டுமா?

பிகு: குண்டு மிளகாய் நண்டு குழம்பிற்கும்/ வாலை மீன் குழம்பிற்கும் இஸ்ரேல் தக்காளி சேர்த்துக்கொண்டேன்.

பிகு2: பழையன கழிதலும் , புதியன புகுதலும் தமிழர் பண்பாடு ஆகையால், இன்று குவால் பறவைக்கறி சாப்பிட்டேன்.

Tuesday, August 3, 2010

குடுகுடுப்பையானது ஏன்?

தொடர்பதிவுகள் ஒரு நேரத்தில் , ஒரே மாதிரியான பதிவுகளாக வந்து சுவையற்றதாக ஆகிவிடுவதாக நினைத்ததால் , நான் இவைகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டேன்.முகிலன் என்னுடைய புகழ் பாடி பதிவெழுதியபின் யாரும் அழைக்காமல் இந்தப்பதிவை எழுத தோன்றியது.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
குடுகுடுப்பை

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.
இல்லை, குடுகுடுப்பை என்று பெயர் வைக்க சொல்லி ஜக்கம்மா சொன்னதால் வைத்துக்கொண்டேன், இந்தப்பெயரில் தமிழ் ஓவியாவிற்கு இட ஒதுக்கீடு சம்பந்தமான ஒரு பதிவில் பின்னூட்டமிட்டேன், அதற்கு அவர் "குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது " என்று சொந்தமாக பதில் அளித்திருந்தார், மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஒரு கவிஞரை விமர்சிக்கும் எண்ணத்தில் நுழைந்தது,

"நான் எழுதியது கவிதை"
என்று நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை"
என்று எழுதி நானே கவுஜர் ஆகிப்போனேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எழுத ஆரம்பித்த ஆரம்ப காலத்தில், நிறைய பதிவுகளில் பின்னூட்டமிட்டேன், கோவி.கண்ணன் பெயரையெல்லாம் பயன்படுத்தி விளம்பரம் தேடினேன், தூக்கம் விழித்து பின்னூட்டங்களுக்கு நன்றி சொன்னேன், என் இயல்புக்கு மாறானதாக தோன்றியது, கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்போது எப்போதாவது எழுதுகிறேன். பல பதிவுகளை ரீடரில் படிக்கிறேன் ஆனால் பின்னூட்டம் இட நேரம்/ சூழ்நிலை இல்லை, தற்போது விரும்பி படித்துக்கொண்டிருப்பது துளசிதளத்தின் தாய்லாந்து பயணக்கட்டுரைகள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என் பதிவுகள் பெரும்பாலும் அனுபவம் சார்ந்தவையே, எல்லா அனுபவத்தையும் பதிவுக்காக யோசிக்கத் தோன்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டேன். பதிவர் சந்தனமுல்லை, தீஷு போன்று குழந்தையின் வளர்ச்சியை எழுத நினைத்தேன், ஆனால் அந்தத்திறமை என்னிடம் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவின் மூலம் எனக்கு மாதம் ஆயிரம் டாலர் கிடைக்கிறது, அதனை எனக்கான சாராயம் மற்றும் ஊறுகாய் செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
கு.ஜ.மு.க என்ற ஓர் உறுப்பினர் கட்சி மற்றும் வருங்கால முதல்வர். இரண்டுமே தமிழ்தான் ஆனா நிறைய எழுத்துப்பிழைகளோடு இருக்கும்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கருத்து திணித்தல் செய்யும் நிறைய பதிவுகளுக்கு எதிர்வினையாற்ற ஆசைப்படுவதுண்டு, ஆனால் ஆற்றுவதில்லை.இந்த மாதிரி 10 கேள்விகள் உருவாக்குபவர்களைப் பார்த்து ஏன் இப்படி? என்று ஒரு கேள்வி கேட்க ஆசை.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அமெரிக்காவில் வசிக்கும் உலகநாதன் என்பவர்,என்னுடைய மொக்கைகள் பிடிக்கும் என்று பாராட்டினார். மற்றபடி பின்னூட்டங்கள் மூலம் பாராட்டியர்வகளே அதிகம்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பொதுச்செயலாளர் ,குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

.