Tuesday, March 31, 2009

கல்பாக்கம் தந்த அனுபவம் -குகுசாஇஆக-பாகம் 3

பாகம் 2
சென்ற பகுதியில் ஒரு உண்மை சம்பவத்தை கனவு என்று சொல்லி முடிந்திருந்தேன். அது பின்னர் உண்மையாகவே ஒரு கனவாகிப்போனது.முதுகுவலி யோகாவினாலும் உணவுக்கட்டுப்பாட்டிலும் குறைந்த நிலையில் ஊருக்கு சென்றேன்.வலி குறைந்த பின்னர் வேலை தேடப்போகலாம் என்ற ஆரம்ப நிலை மாறி ஒரு மாதத்தில் ஏதாவது வேலைக்கு போ என்று பாசமும் வேறு உருவம் ஆனது.

கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்யும் ஒரு மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கம்பெனியில் ஏதோ ஒரு இஞ்ஜினியராக வேலைக்கு சேர்ந்தேன்.நான் வாங்கிய முதல் சம்பளமும் இங்கேதான். நான் பார்த்த SS பைப்பிங் வேலையில் என்னுடைய அணியில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் தொழிலாளர்கள், நான் மட்டும் சூப்பர்வைசர்ன்னு வெச்சுக்கலாம்.பெரும்பாலான வேலை IGCAR ல் தான், சூப்பர்வைசராக இருந்ததால் நிறைய அனுமின் நிலைய இஞ்ஜினியர்களுடன் பழக்கம் கிடைத்தது.

அவர்களில் ஒருவர் ஆரக்கிள் கத்துக்கொண்டிருந்தார், நான் எனக்கு ஓரளவிற்கு தெரியும் என்றேன். அவருடைய கம்பியூட்டரில் அவருக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். IGCAR ல் இருக்கும் மிகப்பெரிய நூலகத்தையும் பயன்படுத்த ஆரம்பித்தேன்.சிறிது நாட்களில் அந்த இஞ்ஜினியரும் வேலையை விட்டுவிட்டார் அமெரிக்கா செல்லும் எண்ணத்தோடு. என்னையும் இங்கே இருக்கவேண்டாம் என அறிவுரை செய்தார்.இங்குள்ள தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து முன்னேற முடியாது என்றார்.

அடுத்ததாக நான் சந்தித்த இன்னோரு நபர் புளுஸ்டார் கம்பெனியின் எஞ்ஜினியர்.அவருடனும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரும் SAP படிப்பதற்காக வேலையை விரைவில் விட்டார். நான் அப்போது ஒரு மாதம் பணி செய்து முடித்திருந்தேன்.மனசு வேலையில் ஒட்டவில்லை. ஆனால் வீட்டில் ஏதாவது வேலை செய் உத்தியோகம் புருசலட்சணம், ஆண் பிள்ளை கிடைத்த வேலையை விடக்கூடாது என்றார்கள்.

இப்படியாக இரண்டாவது மாதமும் ஓடியது, பெரும்பாலான நாட்களில் புதுப்பட்டிணம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி சமைப்பது, சமைக்காத நாட்களில் சதுரங்கப்பட்டிணம் கோட்டைக்கு முன் உள்ள ஒரு தட்டி விலாஸில் வறுத்த மீன் சாப்பிட செலவதுமாக பொழுது போனது.IGCAR ல் வேலை பார்த்தபோது காமினி மாதிரி அனுவுலை, FBTR எல்லாவற்றையும் பார்க்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம்.

ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.

ஒருவேளை தொடர்ந்து அங்கேயே வேலை பார்த்திருந்தால், நானே ஒரு கம்பெனி ஆரம்பித்து இப்போது நடைபெற்று வரும் வேலைகளில் பலவற்றை செய்திருக்கக்கூடும்.கண்டிப்பாக எதுவும் விழலுக்கு இறைத்த நீராக ஆகியிருக்காது.

மென்பொருள் வேலை பற்றிய கனவும், அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு முயற்சி செய்தால் கிட்டும் என்று சுற்றுப்புறமும்,உள்ளுணர்வும் சொன்னதால் மீண்டும் சென்னை நோக்கி,முழுசாக இரண்டு மாதம் கூட தாங்கவில்லை கல்பாக்கம் வாழ்க்கை.

என்னுடைய நண்பர்கள் பலர் அண்ணா பல்கலைக்கழகத்தில்(CEG யில்) அச்சமயம் M.E படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் M.E படிக்கப்போறேன், non -gate எழுதறேன்னு சொல்லி சென்னை வந்துட்டேன். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் நண்பர்களோடு தங்கினேன். அப்ளிக்கேசன் போடும்போதே சொன்னாங்க வேண்டாம்னு , ஆனா நான் கேக்கல, தினசரி படிச்ச இன்னோரு நண்பனை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்தேன் அந்த திருப்தியோடு அந்த முயற்சியை கைவிட்டேன்.கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.

இப்போது அண்ணாவை விட்டு திருவல்லிக்கேணி மேன்சன் வாசம். மீண்டும் சாப்ட்வேர் வேலை தேடும் படலம், நண்பர் ஒருவன் வாங்கியிருந்த கம்பியூட்டரை வைத்து இரவு பகலாக ஜாவா படித்தோம்,இதில் நான்கு பேர் என் கல்லூரி நண்பர்கள், இன்னும் சிலர் வேறு கல்லூரி, எங்கள் ஊர்க்காரர்கள் என்று ஒரு குழு உருவானது.எவ்வளவோ சிந்தனை வேறுபாடுகள் இருந்த போதிலும் ஏதோ ஒரு விதத்தில்
கல்லூரி நண்பர்கள் நான்கு பேரும் ஒரே இலக்கை நோக்கி இலக்கை அடையும் வரை பயணித்தோம்.எவ்வளவோ ஒற்றுமை இருந்தும் மற்ற என் ஊர்க்கார/சொந்தக்கார நண்பர்கள் பயனிக்க முடியவில்லை.

இதை மொக்கையாக எழுதத்தான் நினைத்தேன் இப்படி வந்துவிட்டது , அப்படியே விட்டுவிட்டேன்.

தொடரும் ...

எலெக்சன் டைம் மறக்காம ஒட்டு போடுங்க.

Monday, March 30, 2009

பிரபல பதிவர்கள் இருவர் ஒரு மொக்கை அறிமுகம்.

ஹலோ நசரேயன் நாந்தான் குடுகுடுப்பை பேசறேன்.

நசரேயன்: சொல்லுங்க என்ன என்ன நடக்கு அங்க.

குடுகுடுப்பை : நான் சமீப காலமா படிக்க ஆரம்பிச்சிருக்கிற ரெண்டு பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.

நசரேயன்: புதுமுகத்தைதானே அறிமுகப்படுத்துவாங்க, நீங்க பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்துறது கொஞ்சம் வேடிக்கையாவுள்ள இருக்கு.அதோட அறிமுகப்படுத்துறதுக்குன்னு ஒரு தகுதி வேணாமா ? அது உங்களுக்கு இருக்கா? சரி பரவாயில்லை யாரந்த அந்த பிரபலங்கள்.

குடுகுடுப்பை : ஆதாயம் இல்லாம ஆத்தைக்கட்டி இறைப்பமா நம்ம.அது புல்லட் பாண்டின்னு ஒரு யாழ்ப்பாணம் பதிவர். ரொம்ப பகடியா எழுதறாப்ள.

அதே சமயத்தில சமூக சிந்தனையோட யாழ்ப்பாணத்தை போருக்குப்பின் எப்படி மீள் கட்டமைப்பது பற்றியும் எழுதறாப்ள, .

திடீர்னு பறவை,விலங்குகள் மேல் காதல் கொள்கிறார், .

தன்னுடைய துறை சார்ந்தும் நல்லா எழுதுறார்.


பெண்கள்னா அவருக்கு கொஞ்சம் பயம் போல,அதுலேயும் ஈழப்பெண்கள் அவரு மேல பெரிய காண்டா இருக்காங்களாம், கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கீனம்.அதுனால தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க .

நசரேயன்: பாத்திரலாம் மாப்பிள்ளை எப்படி லெட்சணமா இருப்பாரா?

குடுகுடுப்பை : நல்லாதான் இருந்தாராம் ஆனா வில்லு படம் பாக்கப்போயி பல்லு போயிருசாம் இப்போ?

நசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா?

குடுகுடுப்பை : யாழ்ப்பாணம் கள்ளும், கருவாட்டுக்குழம்பும் வெச்சுத்தரேண்ணார். போதுமா?

நசரேயன் : அது போதுமே நமக்கு. அப்புரம் அந்த இன்னொருத்தர் யாரு?

குடுகுடுப்பை : அது லோக்கல் ஆளுதான், ரொம்ப பெரியவர்.சினிமா டைரக்டர். ஒருவர் வாழும் ஆலயம்னு நல்ல சினிமாவெல்லாம் எடுத்து இருக்கார். இப்போ பதிவுலகில் கலக்கிட்டு இருக்கார்.

இந்த முழுமை பதிவைப்பாருங்க எப்படி கலக்குறார்னு.


நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு? ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா?

குடுகுடுப்பை : இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) படிச்சுப்பாருங்க, பாலச்சந்தரோட பிளம்கேக் ரேகா கணக்கில இளமை பொங்கி வழியுது.

நசரேயன் : வழியுதா? அப்ப ஒகே ?நமக்கு சினிமாவில ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

குடுகுடுப்பை : அவரு நமக்கு ரொம்ப குளோஸ்ப்பா டெய்லி போன்ல பேசுவோம், இப்பக்கூட ஒரு படம் எடுக்கிறது சம்பந்தமா பேசினோம், நான் உனக்கு ரெகமண்ட் பண்ணி இருக்கேன். இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) கதையில வர்ற கன்னிகா மாதிரி யாப்பிலக்கணம் தவறாத பெண்தான் ஹீரோயின்.அத தாங்கிற வெயிட்டான ஒரு அண்ணன் ரோல் தேவைப்படுது அது நீங்க பண்றீங்க, பாசமலர்ல சிவாஜிக்கு கிடைச்ச மாதிரி நல்ல பேரு கிடைக்கும். அண்ணனா இருந்தாலும் நீங்கதான் ஹீரோ ஆனா உங்களுக்கு ஜோடி கிடையாது. கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.

நசரேயன்: என்னது ஜோடி இல்லையா? சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்

குடுகுடுப்பை : ஒரு தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கார், நான் உங்களைத்தான் சொல்லி இருக்கேன், நீங்க தயாரிச்சாதான் அந்த ரோல் உங்களுக்கு அதுதான் ஒரே ஒரு கண்டிசன்.

நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.

குடுகுடுப்பை : போட்டிரலாம் ஆனால் அவரு பேர "புதுமை ஏசி"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.

நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா?

குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.

பிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.

இன்று விடுமுறை.

எனது பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி,
தவிர்க்க இயலாத காரணத்தினால் என் பதிவின் கதை,வசனகர்த்தா இன்று விடுமுறை அதனால் .இன்று பதிவு கிடையாது.
நன்றி
குடுகுடுப்பை

Thursday, March 26, 2009

தங்கமணி தந்த அதிர்ச்சியும், பட்டேலின் டிவிடி விளக்கமும்

தங்கமணி தந்த அதிர்ச்சியும், பட்டேலின் டிவிடி விளக்கமும்

அலுவலகத்துக்கு கார் ஓட்டிட்டு போய் பார்க்கிங் லாட்ல நிறுத்தி கார பூட்டிட்டு போறதுன்னா ரொம்ப போரடிக்கிற விசயம் எனக்கு இல்லீங்க, அப்புரம் யாருக்குன்னெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அந்த மாதிரி அலுப்பா இருக்கிற நாளெல்லாம் நாந்தான் அவுங்க கம்பெனி வாசல் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வருவேன், மாலை 4.50 லேந்து போன் வரும் எப்ப கெளம்புறீங்க , இன்னும் என்னா பண்றீங்க, லேட்டாகுது போய் பாப்பாவை பிக் அப் பண்ணனும் அப்படின்னு, சரின்னு நானும் உடனே கிளம்பி போய் அவங்க ஆபிஸ் வாசல்ல அரை மணி நேரம் வெயிட் பண்ணி கூட்டிட்டு போறது அடிக்கடி நடக்கறது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது, கார்ல போகும் போது இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டாங்க. ஏங்க எனக்கும் உங்க ஆபிஸ்லேயே ஒரு வேலை கெடச்சா நல்லா இருக்கும்லன்னு கேட்டாங்க. நான் அந்த அதிர்ச்சிலேர்ந்து எப்படி விலகுறதுன்னு யோசிச்சு ஏதாவது நல்ல தமிழ்ப்படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி வழக்கமா போற இந்தியன் குரோசரிக்கு போய் எதுனா புதுப்பட தமிழ் டிவிடி இருக்கான்னு கேட்டேன்.

அதுக்கு பட்டேல்காரு சொன்னாரு ,தமிழ்கி , மேரா இண்டர்னெட்கி டவுண்லோடுகி, ஒன்லி ஹிந்திகாருதான் ஒரிஜினல் டூப்ளிகேட் டிவிடி வாங்குராங்கன்னு ரொம்ப ஆதங்கப்பட்டாரு. ஆனா நிறைய பழைய தமிழ்படம் ரெண்டலுக்கு இருக்கு அதுல போய் பாருங்கண்ணார்.நான் போய் தேடிப்பாத்தேன் முதல்ல என் கண்ணுல பட்டது ஸ்ருதிலயம் டிவிடியோட 2 in 1 டிவிடி ஒன்னு.

அதுல இருந்த படங்கள்

வல்லரசு
சிட்டிசன்.

இதுக்கு பேருதான் 2 in 1 அட்டாக்கா?

Wednesday, March 25, 2009

எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம்

முற்றுப்புள்ளி வைத்தேன்.
முதலில் முற்றுப்புள்ளி கூடாது
முற்றுப்புள்ளி மேல் மறைத்து கோடு போட்டேன்
கோட்டின் மேல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
கோடு தெரிந்தது
முற்றுப்புள்ளி தெரியவில்லை.

தனியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
முற்றுப்புள்ளி தெரிந்தது
ஆனால் ஏன் அந்த முற்றுப்புள்ளி
என புரியவில்லை
படித்து பார்த்தேன் கவிதை
போல் தெரிந்தது
ஆனால் புரியவில்லை

கவிதை படிப்பவனுக்கு
ஏதோ ஒன்றாக புரியும்.
அதனால் இதற்கு மேல்
இதற்கு விளக்கமில்லை.


எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.

முரண் தொடை: காதறுந்த ஊசியும்....

நல்லா போடுங்கப்பா தமிழ்மணத்தில எதிர் வோட்டு.

பாகம் 2 : குடுகுடுப்பை சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன கதை

பாகம் 1.

லாக் அவுட் பண்ணாமல் வீட்டிற்கு சென்று , அங்கே நான் தங்கியிருந்த வீட்டில் உள்ள நண்பர்களிடம் என்னமோ நான் சரியா பண்ண்லைன்னு சொன்னேன். அவர்கள் யாருக்கும் கம்பியூட்டர் அவ்வளவு பரிச்சயமில்லை. அதில் ஒரு நண்பர் கவலையை விடுங்க போ பில்லராண்ட ஒரு பீர போட்டு அப்படியே ரோட்டுக்கடையில ஒரு தோசையை சாப்பிட்டு வருவோம்னார். அப்படியே செய்து தூங்கிப்போனேன்.

சில நாட்களில் நான் என்ன படிக்கிறேன் என்பது புரிய ஆரம்பித்தது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் SSI சென்று கம்பியூட்டர் லேப் பயன்படுத்தினேன்.அங்கு எனக்கு சொல்லிக்கொடுத்த பிரகாஷ் என்ற ஒரு ஆசிரியர் நீங்க நல்லபடியாக வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்.ஒரு வழியாக நன்றாக கற்றுக்கொண்ட பின் வேலை தேடுவது எப்படி என்ற பிரச்சினை எழுந்தது. சரியான படி ஆலோசனை சொல்ல ஆளில்லை. நான் தங்கியிருந்த இடத்தில் யாரும் சாப்ட்வேர் துறையிலும் இல்லை அதுதான் நான் செய்த தவறு.

வேலை தேடிக்கொண்டிருந்தபோது திடீரென என் முதுகுவலி படுத்த ஆரம்பித்தது அதற்கு இயற்கை முறை சிகிச்சை பெறுவதற்காக அரும்பாக்கத்தில் உள்ள ஒரு இயற்கை மருத்துவமனையில் 15 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன்.

அந்த மருத்துவமனையில் முதுகுத்தண்டுவட பிரச்சினைக்கென்றே வடிவமைக்கப்பட்ட யோகாசனங்கள் உட்பட , நீராவிக்குளியல், இயற்கை உணவுகள் என மருத்துவம் நன்றாக சென்றது. அங்கே நான் தங்கியிருந்த பொது அறையில் நான்கு நபர் தங்கலாம். என்னுடன் தங்கியிருந்தது 5 பெண்களை பெற்ற 50 வயது மதிக்கதக்க தந்தை மற்றும் இரண்டு தாத்தாக்கள்.

அந்த தாத்தாக்களோடு பேச திவ்யா என்ற ஒரு அழகிய பெண் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருப்பார். அந்தப்பெண்ணை நானும் யோகா செய்யும் அறையில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியதில்லை.இப்படியாக போய்க்கொண்டிருக்கையில் அந்த 5 பெண்களை பெற்ற தந்தை என்னிடம் சொன்னார், திவ்யாவுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களை பார்க்கத்தான் வருகிறாள் என்றார்.

நான் அப்படியெல்லாம் இருக்காதேன்றேன், அவர் நான் 5 பெண்களை பெற்றவன் அவர்களின் மனநிலை புரிந்தவன், நீங்கள் பேசுங்கள் அதைத்தான் அந்தப்பெண் எதிர்பார்க்கிறாள் என்றார். அந்தப்பெண் இஞ்சினியரிங் படித்துக்கொண்டிருக்கிறாள்/அல்லது படித்து முடித்தவள் என்பது அவர் எங்க ரூம் தாத்தாவிடம் பேசுவதில் இருந்து புரிந்தது.

நானும் அடிக்கடி பார்ப்பேன் அந்தப்பெண்ணும் அடிக்கடி பார்ப்பாள், யோகா செய்யும் போது அவள் என்னையே பார்த்ததை நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனாலும் ஒருநாளும் பேசும் துணிச்சல் மட்டும் வரவில்லை.

சிகிச்சை முடிந்து வெளியேறும் நாளில் மருத்துவமனை வரவேற்பறையில் நான் நண்பர்களுக்காக காத்திருந்தேன் அவளும் அங்கேயே என் முன்பாக உட்கார்ந்திருந்தாள் ஆனால் இருவரும் இப்போதும் பேசவில்லை ஒரு வழியாக நண்பர்கள் வந்தார்கள் என்னைக்கூட்டி சென்று விட்டார்கள் நான் கடைசி வரை பேசவில்லை.

சரி சாப்ட்வேர் இஞ்சினியர் ஆன கதைன்னு சொல்லிட்டு இப்படி என்னமோ கதை சொல்லிட்டிருக்கியேன்னு நீங்க பின்னூட்டமிடலாமின்னு யோசிக்கறது புரியுது, அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.

நினைவுகள் தொடரும்

Tuesday, March 24, 2009

நான் போட்ட தூண்டில்.

கடந்த வாரம் ஹரிணிக்கு ஸ்பிரிங் பிரேக், San Antanio Sea World, Corpus Christi beach செல்வது என முடிவெடுத்து புதன்கிழமை மதியம் பயணப்பட ஆயத்தமானோம்.

அலுவலகத்தில் நண்பர் ஒருவர், Corpus Christi ஆழ் கடலில் படகில் சென்று மீன் பிடித்த கதையை சொன்னார். எட்டு மணி நேரம் படகில் இருக்கவேண்டும் $85.00 மட்டுமே கட்டணம். எனக்கும் மீன் பிடிக்க செல்ல ஆசை, பிடித்ததை சமைத்து சாப்பிட வசதியாக சமையலைறை வசதி உள்ள வீடும் இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்தாகியாச்சு.ஆனால் எட்டு மணி நேரம் கடலிற்கு 5 வயதே ஆன ஹரிணியையும் கூட அழைத்து செல்வது உசிதமல்ல என்பதால் கடலுக்குள் போகவேண்டாம் ஆனால் கரையில் இருந்தே தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம் என்ற முடிவு செய்தோம்

செவ்வாய் இரவு பதினொரு மணியளவில் கடைக்கு சென்று எனக்கு ஒரு தூண்டில், ஹரிணிக்கு ஒரு Barbie தூண்டில் வாங்கினோம். இங்கே மீன்பிடிக்க licence தேவை என்பதால், தூண்டில வாங்கின கடையிலேயே ஒரு வருடத்திற்கான அனைத்து வகை தண்ணீரிலும்(கடல் உட்பட) மீன் பிடிக்க அனுமதி தரும் licence $45 கொடுத்து வாங்கினேன்.இப்போது நான் டெக்ஸாஸ் மாகாணத்தில் எங்கு வேண்டுமானலும் மீன் பிடிக்கலாம்.

ஒரு வழியாக San Antanio Sea World முடித்து விட்டு, Corpus Christi யை அடைந்தோம், வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு மதியம் மூன்று மணிக்குத்தான் செல்லமுடியும்.ஆனால் நான் 12 மணிக்கெல்லாம் அங்கே இருந்ததால், உடனடியாக நானும், ஹரிணியும் கடலில் தூண்டில போட்டு மீன் பிடிக்க ஆயத்தமானோம்.

ஹரிணியின் தூண்டிலில் மீன் பிடிக்கும் கொக்கி இல்லை, என்னுடைய தூண்டிலிற்கு நீல நிறத்தில் உள்ள சின்ன பொய் மீனுடன் கூடிய கொக்கியுடன் மீன் பிடிக்க ஆயத்தமானேன் , அங்கே மீன் பிடிக்க தயாராகிக்கொண்டிருந்த ஒருவரிடம் எப்படி இந்த தூண்டிலை தயார் செய்வது என்று உதவி கேட்டேன். அவரும் உங்கள் நீல நிற மீன் கொக்கிக்கு இங்கே உள்ள மீன்கள் வராது நானே ஒரு கொக்கியும், bait உம் தருகிறேன் என்றார். முழுவதும் அவரே செய்து தூண்டிலை தயார் செய்து கொடுத்தார்.

நானும் தூண்டில் கொக்கியை கடலுக்குள் தூக்கி வீசும் முயற்சித்ததில் அது ஆழமில்லாத பகுதியிலேயே விழுந்தது, பல முயற்சிகளில் அது தூர செல்லவில்லை,மீன் தூண்டிலில் நரம்பை அந்த தூண்டிலால் சுருட்டவும் முடியவில்லை. உடனே பக்கத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்டேன். அவரும் பார்த்துவிட்டு நரம்பு அறுந்துவிட்டது, அதனால் தான் தூக்கி வீச முடியவில்லை.ஏன் அறுந்தது என்பதை கண்டு பிடிக்கவேண்டும் என்று சொல்லியபடியே மீன் கொக்கியை மாட்டி சரி செய்து தந்தார்.

இதற்கிடையில் ஹரிணியின் தூண்டிலில் இருந்த நரம்பை அவள் உடல் முழுவதும் சுற்றி வைத்துக்கொண்டு எனக்கு மீன் பிடிக்க போரடிக்குது நான் மண் விளையாடப்போறேன் என்று கூறிவிட்டாள்.

நான் மிண்டும் தூண்டிலை தூக்கி கடலில் வீச பலமுறை அது அருகிலேயே விழுந்தது, தூண்டில் மீண்டும் அறுந்தது.எனக்கு இரண்டாவது முறை தூண்டில் சரி செய்தவர், தூண்டில எங்கே வாங்கினாய், எப்போது வாங்கினாய் என்றார்.

நான் வால்மார்ட்டில் நேற்றிரவுதான் தூண்டிலும் licence ம் வாங்கினேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் licence எல்லாம் தொழில்முறை மீன் பிடிப்பவர்களுக்கும்,நிறைய மீன் பிடிப்பவர்களுக்கும்தான் தேவை உன்னை மாதிரி மீன் பிடிக்கவே தெரியாதவர்களுக்கும் ஒன்றிரண்டு மீன் பிடிப்பவர்களுக்கும் தேவையில்லை என்றார்.அப்படியே அந்த தூண்டிலில் பிரச்சினை உள்ளது திரும்பக்கொடுத்துவிட்டு புது தூண்டில் வாங்கி மீன் பிடிக்க கற்றுக்கொள்ளசொன்னார்.

பெருத்த ஏமாற்றத்துடன் அங்கே இருந்த ஒரு கடல் மீன் கடையில் பெயர் தெரியாத ஒரு பெரிய மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டேன்.

ஆனால் மீன் விரைவில் பிடிக்கப்படும்.

Monday, March 16, 2009

குடுகுடுப்பை சாப்ட்வேர் எஞ்சினியர் ஆன கதை.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சு ஒரு லேத் பட்டறை ஆரம்பிச்சு டயர் வண்டி செஞ்சு பொழச்சுக்கலாம்னுதான் நெனச்சேன். ஆனால் நடந்ததோ வேற மாதிரியா போச்சு. அதற்கான ஆரம்ப அடித்தளம் கல்லூரி முதலாண்டிலேயெ போடப்பட்டது.

காலேஜ் முதல் வருசத்தில ஒரு கம்பியூட்டர் பேப்பர் இருந்துச்சு, கடம் போட்டு பாஸ் பண்ணும் கலை எனக்குத்தெரியவில்லை. இந்த பேப்பர நானும் அஞ்சாவது செமஸ்டர் வரைக்கும் எழுதினேன். எப்படியோ அஞ்சாவது செமஸ்ட்டர்ல ஒரு வழியா புரிஞ்சு பாஸ் பண்ணிட்டேன்.

யப்பாடா நமக்கு இனிமே கம்பியூட்டர் தொல்லை இல்லைன்னு நெனச்சப்போ ஆறாவது செமஸ்ட்டர்ல ஒரு கம்பியூட்டர் பேப்பர வெச்சிட்டாங்க. அது ஆறுல போச்சு,ஏழுலயும் போச்சு ஆனா எட்டுல விடமாட்டோம்ல தூக்கியாச்சு.

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மாணவன் ஆன நான் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க் பாடத்தை நான்கு ஆண்டும் படிக்க நேர்ந்தது பாடத்திட்டத்தின் தேவை, ஆனால் தொடர்ந்து நான்கு ஆண்டு இரண்டு கம்பியூட்டர் பேப்பரை படிக்க நேர்ந்ததுதான் விதியின் விளையாட்டு.

நிற்க ஆனா இந்த நான்கு ஆண்டில் எங்க காலேஜ்ல கம்பியூட்டர நான் பார்த்ததேயில்லை. எங்கள் கல்லூரி கம்பியூட்டர் லேப் வாசலில் செருப்பு கழட்டி கெடக்கும் அதுதான் நான் பார்த்திருக்கேன். மெக்கானிக்கல் பசங்கள உள்ள விடமாட்டாங்க மத்த பிராஞ்ச் காரங்கள உள்ள விடுவாங்களான்னு எதிர்கேள்வி கேட்டா என்கிட்ட பதில் இல்லை. மத்தபடி நான் கம்பியூட்டருன்னு நினைத்து பார்த்தது திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்டல ஒரு சொட்டையரு டிக்கெட் கொடுக்கிற மெசினத்தான்.

மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆயாச்சு ஆனா முழுசா செமஸ்ட்டர் பீஸ் கட்டல அதுனால மார்க் ஷீட் வாங்கமுடியாது.வீட்ல அந்தக்காச வாங்கி எட்டாவது செமஸ்ட்டரில் சுற்றுலா போயாச்சு. நண்பன் பாரிஸ்கிட்ட ஒரு 5000 கொடுடான்னு கேட்டேன் அவன் வீட்ல காலேஜ் முடிச்சதுக்கப்புரம் ஸ்காலர்ஷிப் வாங்கமுடியல.அதுனால அவன்கிட்டயும் காசு இல்லை.

அப்பாகிட்டேயே மீண்டும் வந்தேன் 5000 ரூபாய் காசு கட்டனும் காலேஜுக்கு அப்பதான் மார்க் சீட் வாங்கலாம் அப்படின்னேன். அவரும் கேள்வி கேட்காமல் கொடுத்தார்.

ஒருநாள் வேலைதேடி சென்னை வந்தேன், மேற்கு மாம்பலத்தில் சில நண்பர்கள் உதவியுடன் ஒரு பேச்சுலர்ஸ் வீட்டில் தங்கினேன்.அம்பத்தூர்ல உள்ள நிறைய கம்பெனிகளுக்கு ரெஸ்யூம் அனுப்பிச்சேன் ஒன்றும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் ECE படிச்ச நாநா எதோ கம்பியூட்டர் படிச்சு வேலை பார்க்கிரதா கேள்விப்பட்டேன். ஒருநாள் அவனையும் பார்த்தேன் தண்ணி அடிச்சிட்டு இங்கிலீஸ்ல பேச முயற்சி பண்ணிட்டு இருந்தான் என்னையும் கம்பியூட்டர் படிக்க சொன்னான்.மெக்கானிக்கல்காரன் கம்பியூட்டர் படிச்சா வேலை கிடைக்குமாடான்னேன், அதெல்லாம் கிடைக்கும் அப்படின்னான்.ஆமா இவனுக்கே ஒருத்தன் வேலை கொடுத்தப்போ நமக்கு கிடைக்காதான்னு எனக்கும் தோனுச்சு.

ஒருவழியா கம்பியூட்டர் கிளாஸ் சேர திரும்பவும் அப்பாகிட்ட காசு கேட்டேன், வழக்கம்போல் அவரும் கொடுத்தார்.திநகர் SSI யில் ஆரக்கிள் சேந்தாச்சு. முதநாள் கிளாஸ் அப்பதான் கம்பியூட்டர (மானிட்டர்)கிட்ட பார்க்கிறேன். .அதுவும் கருப்பு கலர்ல unix dummy work station

வாத்தியார் வந்தாரு எல்லாரும் usename : password உருவாக்குங்க அப்படின்னார்

எனக்கு இந்த ரெண்டு வார்த்தையுமே புதுசு, பக்கத்தில இருந்தவருகிட்ட கேட்டேன், உங்க பேரு என்னன்னு கேட்டார்,
நான் : குடுகுடுப்பை

உங்க usename குடுகுடுப்பை பாஸ்வோடு: குடுகுடுப்பை123 அப்படின்னார். அவரு அந்த மெசின்ல எனக்கு அடிச்சும் கொடுத்தாரு. ஒரு மணி நேரம் ஆச்சு. நான் ஒன்னும் பண்ணாம முழிச்சிட்டே உக்காந்திருந்தேன்.

ஒரு மணி நேரம் ஆன பின்னர் வாத்தியார் வந்தாரு.
"other than current batch please logout" அப்படின்னாரு.

எனக்கு ஒன்னும் புரியல,ஆனா out அப்படின்னா வெளியே போகச்சொல்றாரு அப்படின்னு நினைத்து அப்படியே எந்திருச்சி வெளில வந்துட்டேன்.

மீண்டும் லாகின் பண்ணுவோம்.

Tuesday, March 10, 2009

வெண்ணிலா கபடிக்குழுவும் என் ஊர் கபடிக்குழுவும்.

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு யதார்த்தமான சினிமா. கிராமத்திருவிழாக்காட்சி முதல் உள்ளூர் கபடி போட்டிகள் வரை நிறைய காட்சிகள் என் கிராம வாழ்க்கையோடு ஒத்துப்போனதால், ஒரு திருவிழா பார்க்கும் நினைப்பும்,உண்மையான கபடி போட்டி பார்க்கும் எண்ணத்தை விதைத்தது இந்த படம்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஊர் நினைவுகளை கொஞ்சம் அதிகமாவே கிளறியது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கபடி விளையாடுவதை காண்பிப்பது ,கபடி என்ற விளையாட்டு தெரியாதவர்களுக்கு இது சற்றே பிடிக்காமல் போகலாம். கிராமம் சார்ந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும், முற்றிலும் நகரத்தில் வாழ்ந்த சென்னை-28 மக்களுக்கு இந்தப்படம் மற்றொரு சென்னை-28, கிரிக்கெட்டுக்கு பதிலாக ஏதோ கபடி என்ற ஒரு விளையாட்டு.படத்தின் கதை, காட்சிகளுக்குள் நான் போக விரும்பவில்லை. முடிந்தால் திருட்டு டிவிடிலாவது படத்தை பாருங்கள்.

இப்போது எங்கள் ஊரின் கபடிக்குழுவிற்கு போவோம், மிகச்சிறிய ஊர் அதனால் ஒரு உருப்படியான கபடிக்குழு கூட கிடையாது, நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் இளைஞர்கள் சேர்ந்து ஒரு குழு உருவாக்கி போட்டிகள் நடத்தினர்.பெரும்பாலும் 50 கிலோவுக்க்கு உட்பட்டவர் கபடி போட்டிகளையே எங்கள் ஊரில் நடத்துவோம்.இதற்காக போட்டியாளர்கள் பட்டினி கிடந்து,லாசிக்ஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டு எடை குறைத்து,எடை போட்ட அனுமதி சீல் வைக்கப்பட்ட பின் நன்றாக சாப்பிடுவார்கள்,நன்றாக விளையாடுவார்கள்.கிட்டத்தட்ட பத்து வருடம் தொடர்ந்து இந்தப்போட்டிகளை நடத்தினோம்.கடைசியாக கோப்பை வென்றவர்கள் 2004 சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் கீச்சங்க்குப்பம் அணியினர்.வெளியூர்களிலும் 50 கிலோ எடைப்பிரிவில் ஓரளவுக்கு பரிசுகளை வாங்கும் அணி எங்கள் ஊர் அணி.

அணியின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும், கில்லாடி சகோதரர்கள்,கலாட்டா சகோதரர்கள், ஆறுமுகம் நினைவு அணி ,ஒரு ஊர் அணியின் பெயர் தமிழீழ விடுதலை விரும்பிகள்.

ஒருமுறை எங்கள் பகுதிக்குள் சாதாராணமாக நடக்கும் ஒரு போட்டியில் குழுக்கள் இடையே நடந்த பங்காளிச்சண்டையில் இருவர் பிரிந்து தனி அணியாக போட்டி போட வந்தனர். அவர்கள் இருவரும் அணிக்கு வைத்த பெயர்கள் சிவப்பிரகாசம் நினைவு அணி, பரமசிவம் நினைவு அணி என உயிருடன் இருக்கும் தங்கள் அண்ணன்களின்(கோச்சுகள் கூட) பெயரில்.(அப்பகுதியில் நிறைய நினைவு அணிகள் இருக்கும்) புரியாமல் நினைவு அணிகளை உருவாக்கிய கூத்துகளும் நடந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் முழுமையாக ஆக்கிரமித்ததால் கடைசியில் கபடி நின்றுபோனது.பின்னர் குடுகுடுப்பை இந்த அணியில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறேன்.

ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Monday, March 9, 2009

அமெரிக்க ரிட்டனும் சிங்கப்பூர் மொட்டையும்.

நான் முதன் முதலா அமெரிக்கா வந்தது 2000மாவது ஆண்டு, வந்து ஒரு பிரபலமான கம்பெனில புரட்சி ஏற்படுத்தப்போற ஒரு தொழில் நுட்பத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.கார் ஓட்டக்கத்துக்கிட்டு ஒரு புது கார் வாங்கியாச்சு, கார் வாங்கி 3 மாசம் கழிச்சு, (2001 மார்ச்)இந்த டாட்காம் பபுள்னால வந்த பாதிப்பு டாட்காம்ல இல்லாத என்னையும் பாதிச்சிருச்சு.

எங்க கம்பெனில என்னை கூப்பிட்டு உன்னோட கார நாங்க பத்திரமா பாத்துக்கறோம், செலவ குறைக்கனும் நீ பெங்களூர் போ இங்க உனக்கு $1000 சம்பளம் தருகிறோம் அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க, கார் லோன் $500 போக $500 மிச்சம்.

இந்தக்காட்சி இங்க இப்படி நடக்கும் முன்னாடியே, எங்க ஊருல உள்ள சில பொதுநல விரும்பிகள் குடுகுடுப்பைய இன்னும் திருப்பி அனுப்பலையா? எல்லாரையும் அனுப்பிட்டாங்களாம் அப்படின்னு விசாரனை ஓயவில்லையாம்.

பெங்களூர் போறதுக்கு முன்னாடி, ஊருக்கு கார் எடுத்துட்டு போய் இறங்கியாச்சு, பஸ்ல போயிருக்கலாம் ஆனா அமெரிக்க ரிட்டன் வேறல்ல, அதோட எங்க ஊருக்கு பஸ் எல்லாம் கெடயாது.

போய் ஒருவாரம் ஓய்வு, இந்த நாட்களில் ஒரு பொதுநல விரும்பி என்னோட நண்பர் ஒருவர்கிட்ட, என்ன உன் கூட்டாளிக்கு மொட்டை போட்டு அனுப்பிட்டாங்க போல, பத்து பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி போட்டுருப்பாங்க போலருக்கு, ஆனா நடையில ஒன்னும் வித்தியாசம் தெரியல கசையடியெல்லாம் இல்லை போலருக்கு, தன்னோட சந்தேகத்த சொல்லிருக்காரு.

ஆகா கொஞ்சம் முடிய ஒட்ட வெட்டனதுக்கு இப்படி ஒரு திரைக்கதை எழுதிட்டாங்களேன்னு நெனச்சி, சிரிச்சோம். அப்படியே ஒரு நன்னாளில் பெங்களூருக்கு வேலைக்கு போயாச்சு, அங்கே போயி ஒரு மாசம் ஆபிஸ் போயிட்டு வந்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் HR கூப்பிட்டு ஒரு புது புராஜக்ட் இன்னோரு பிரபலமான கம்பெனிலேந்து வந்திருக்கு உடனே டிக்கெட் கன்பார்ம் பண்ணிட்டு கெளம்ப சொல்லிட்டாரு, நானும் பெங்களூர்லேந்து சென்னை வந்து அடுத்த நாளே பிளைட் ஏறிட்டேன் கொஞ்சம் அழுக்குத்துணியோட.

நான் விமானம் ஏறுனதுக்கு அப்புரம், என்னை இப்ப வரவேண்டாம்னு சொல்லி போன் பண்ணாங்களாம்.அதுக்கு வாய்ப்பு இல்லை நீங்க குடுகுடுப்பையை இன்னைக்கு சாயங்காலம் சிகாகோ ஏர்போட்ல பிக்கப் பண்ணிக்கங்க அப்படின்னு சொல்லிட்டாங்களாம். அதற்கு பின் நிறைய வெற்றிகள் தோல்விகள்.ஆனால் வாழ்க்கைப்பயணம் தொடரத்தான் செய்கிறது.

இந்த வாய்ப்பை நான் இழந்திருந்தாலும் இன்னோரு முறை எனக்கு கிடைத்துதான் இருக்கும் அல்லது இந்தியாவில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்.

இந்தமுறை சற்றே கடினமான உலகப் பொருளாதார நெருக்கடிதான், ஆனாலும் ஒருநாள் கண்டிப்பாக மீண்டு வரும்,அதுவரை தாக்குப்பிடித்தல் மட்டுமே இன்றைய தேவை, அதுவும் நடக்கும்.யாரோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்படுகிறோம், யாரோ சிலர் செய்த நன்மையினால்தான் இந்த வாய்ப்புகள் பெற்றோம் என்பதும் உண்மைதானே.

Sunday, March 8, 2009

முன்னணி நடிகர்கள் ஒரு கலந்துரையாடல்.

கார்த்திக்: வாங்க ழாக்டர் விஷய், எப்படி இருக்கீங்க

விஜய்: வணங்கங்கண்ணா? நீங்க எப் படி இருக் கீங்கண்ணா?அப்ப பாத்த மாதிரியே இளமையாவே ஜம்னு இருக்கீங்க.

கார்த்திக்: அது ஒன் ழும் இல்லை, பலவிதமான எக்ஷெச்ஷ் பண்ணி பாடி இப்படி வெஷ்சிருக்கேன்ஷ்.நீங்க கூட இப்ப என்ன மாதிழியே நல்லா பேசறீங்க உங்களுக்கு என்னை மாதிழியே நல்ல எழிர்காளம் இழுக்கு.

விஜய்: ?!?!#> இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா உங்க அளவுக்கு என் நால தெலிவா பேஷ முடியாது, ஆனாலும் சீக்கிரம் உங்கள மாதிரியே ஆயிடுவேன்.உங்க அரசியல் வால்க்கை எப்படி போகுது கார்த்திக் சார்.

கார்த்திக்: ரொம்ப நல்லா போகுது, நீங்க கூட கஷ்சி ஆரம்பிக்க போறதா பேஷிக்கிறாங்க, சினிமாவில மட்டும் இல்லை அரசியலேயும் என்னோட இடத்தை நீங்க அடையனும் என்னுடைய ஆஷிர்வாதம் எப்பயும் உண்ழ்டு.

விஜயகாந்த்: என்ன அரசியல் அப்படின்னு சத்தம் கேக்குது, என்னோட கூட்டனி மக்கள் கூடத்தான்.

கார்த்திக்: கவழைப்படாதே விஷயகாந்த், நான் உன் நண்பன் இருக்கேன்.காங்கிரஸ் துரத்தி விட்டாங்கன்னு யோஷுக்கவேண்டாம் என்னோட கூட்டனி வெச்சுக்கங்க 39 உங்களுக்கு ஒன்னு எனக்கு.

விஜயகாந்த்: நாற்பதும் நமக்கே.

சிரஞ்சீவி: நாந்தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர், இன்னும் திராவிட கணக்குல கொஞ்சம் மிச்சம் இருக்கு.

கார்த்திக்: ஷிரஞ்சீவீ நீங்க எடுத்துக்கோங்க, நாங்க டெல்லிக்கு குறி வைக்கிறோம்.40 எம்பி கொடுத்தா ஒரு தமிஷனை பிரதமரா ஆக்குரதா ஷுவாமி ஷொல்லிருக்கார்.அப்ப நாந்தான் அடுத்த பிரதமர். ஏன்னா நீங்க தெலுங்கர்னால பிரதமர் வாய்ப்பை இழக்குறீங்க.

விஜயகாந்த்: அடிச்சன்னா மதுரைல போயி விலுவ பாத்துக்க.நானும் தமிலந்தான்.

அஜித்: தல்லாகுளம்,மேலமாசிவீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல்,ஆரப்பாளையம்,கோரிப்பாளையம்,அனுப்பானடி,செல்லூர்.....

விஜய்: என்னடா இங்க நாராசமா ஒரு குரலு.ஒரே நாய்ஸா இருக்கு.

அஜித்: மதுரைன்னு ஒரு சத்தம் கேட்டுதே, நம்ம ஏரியாவாச்சே அதான்.

விஜய: ஏற்கனவே காணமப்போன அத்திப்பட்டி சிட்டிசன் தான் நீங்க

அஜித்: அதான் குருவி பறந்து போய் அத்திப்பட்டிய கண்டுபிடிச்சிருசே நண்பரே

விஜய்: நாம ரெண்டு பேரும் சண்டை போடறதுனால யாருக்கு லாபம், பேசமா நாம ரெண்டு பேரும் ஒரு படத்துல இணைந்து மிரட்டுவோம்.

அஜித்: நாம ரெண்டு பேரும் நடிக்கறதுனால, படம் பாக்கிறவங்களுக்குதான் நஷ்டம்,ஒரே கூட்டில ஏகனையும்,குருவியையும் யோசிச்சி பாத்தாலே மிரட்டுதுல்ல.

விசால்: சத்யம் மேல சத்தியமா சத்யம் மாபெரும் வெற்றிப்படம்.

அஜித்& விஜய்: தோ பாருடா இப்படி கூட முழு பூசணிக்காய மறைக்கலாம் போல.


ரஜினிகாந்த்: நான் வேணும்னா வாய்ஸ் கொடுக்கவா?

அனைவரும்: அண்ணா உங்க வாய்ஸ போயி இமயமலைப்பக்கமா நின்னு அப்படியே சீனாக்காரனுக்கு கொடுங்க.

ரஜினிகாந்த்: சீனாக்காரனுக்கு நான் வாய்ஸ் கொடுத்தா புரியாதேப்பா.

கமல்ஹாசன்: நான் பேசுவது மட்டும் தான் தமிழனுக்கு புரியவில்லை என்று நினைத்தீர்களா நண்பரே. ஃகாஃகாஃகாஃகா....

கருணாஸ்: என்னா ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு, உங்க எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள், நான் ஹீரோவா நடிக்கற படத்தில காமெடியன் ரோல் இருக்கு யாராச்சும் பண்றீங்களா?

கஞ்சா கருப்பு: 305 நம்பர் ரூம்காரரே ஒரு திண்டுக்கல் பூட்டு ஒன்னு கொடுங்க,ஒருத்தருக்கு வாய்ப்பூட்டு போடனும்..

ஒரு குரல்: எல்லாரும் கெளம்புங்க குறள் தொலக்காட்சிக்காரங்க குடும்பத்தோட இந்த கலந்துரையாடல்ல கலந்துக்க வராங்க.

அனைவரும் :யம்மாடி தப்பிச்சோம்டி.

குடுகுடுப்பையின் நலம் விரும்பிகள்: இப்படி எழுதுனா ரசிகர்கள் சண்டைக்கு வரமாட்டாங்களா?

குடுகுடுப்பை: அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு, நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு அவங்களுக்கு தெரியும்.

Wednesday, March 4, 2009

சாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன்.

நடேசனும் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பியூட்டர் இஞ்சினியரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்தான். அவனுடைய கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வீவ் எல்லாம் கிடையாது. மென்பொருள் வேலை என்றால் அது தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கிடைக்கும் ஆகையால் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தான். மதுரையிலேயே சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் இருந்தா நல்லாருக்கும், நம்ம ஏரியா சும்மா லந்தக்கொடுக்கலாம்.சென்னைக்கு இப்பதான் முதன் முறையா போறோம் என்ன ஆகும்னு தெரியலேயேங்கற கவலையோடு சென்னையை வந்தடைந்தான்.நண்பர்களின் உதவியோடு திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் மாதம் 1000 ரூபாய் வாடகைக்கு தங்கினான்.

அங்கே இங்கே கேட்டு எப்படியோ ரெஸ்யூம் எல்லாம் பிரிப்பேர் பண்ணிட்டான். நண்பர்கள் சொன்னபடி consultancy முகவரி எல்லாம் எப்படியோ நண்பர்கள் வைத்திருந்த விசிட்டிங் கார்டு மூலம் சேகரிச்சு எல்லாருக்கும் ரெஸ்யூம் அனுப்பி வெச்சான்.

நடேசன்: மாப்பிள்ளை என்னடா ஒருத்தனும் கூப்பிடலை.

ராகவன்: ஒருத்தன் கூடவா கூப்பிடலை.

நடேசன்: ஒருத்தன் மட்டும் கூப்பிட்டான் இஸ்மாயில் ஹார்ட்வேர்ஸ் கன்சல்ட்டண்சிங்கற கம்பெனிலேந்து, ஆனா ஏன் பழைய இரும்பு கடைக்கு(காயிலாங்கடைக்கு) கம்பியூட்டர் பயோடேட்டாவா அனுப்பிச்சீங்கன்னு கேட்டாருடா.

ராகவன்: டேய் கூபே, அது நம்ம காயல்பட்டிணம் கீமியோடா சொந்தக்காரன் பழைய இரும்புக்கடை விசிட்டிங் கார்டுடா அதுக்குமா ரெஸ்யூம் அனுப்பி வைச்ச.

நடேசன்: கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன். சரி விடு ரொம்ப கடுப்பா இருக்கு உட்லண்ட்ஸ்ல விஜயகாந்த படம் போட்டிருக்கான் போயி சிரிச்சிட்டு வருவோம்.

ராகவன் : சரிடா, போவோம் டேய் அப்படியே ஜாவா கிளாஸ் போடா, ஜாவாவுக்கு நிறைய ஓப்பனிங் இருக்கு, ரெஸ்யூம்ல ஜாவா தெரியும்னு போடுறா. அப்படியே ஹிண்டு பேப்பர பாத்து ஜாவா கேக்கிறவனுக்கெல்லாம் அனுப்பி வைடா.

நடேசன்: சரிடா படிக்கிறேன்.மாப்பிள்ளை இன்னைக்கு சாப்பிட்ட அந்தக்கடைல இனிமே சாப்பிடக்கூடாதுடா, தேங்காய்ப்புண்ணாக்குல சட்னி அரைப்பான் போல ஒரே மாட்டுத்தொட்டி வாடை வருது.

ராகவன் : அதெல்லாம் சகிச்சிட்டு போடா மேன்சன் வாழ்க்கை அப்படிதான்.காசு இல்லாட்டி பொறி, வாழைப்பழம் சிகரெட், ஆனா வந்த நோக்கம் தவறக்கூடாது.
.................................

சில மாதங்கள் கழித்து.

நடேசன் : மாப்பிள்ளை நீ சொன்ன மாதிரி நிறைய ஓப்பனிங்ஸ் இருக்குடா ஹிண்டு பேப்பர்ல எல்லாத்துக்கும் அனுப்பிட்டேன்.மேட்ரிமோனியல் செக்சன்ல பெண்ணுக்கு ஜாவா தெரியும் அமெரிக்காவில் உள்ள மாப்பிள்ளை தேவைன்னு ஒரு விளம்பரம் இருந்தது அது தவிர ஜாவன்னு வந்த எல்லா விளம்பரத்துக்கும் இமெயில் அனுப்பிட்டேன்ண்டா.

ராகவன்: கவலைப்படாத வேலை கெடச்சிரும்.

............................

நடேசனை ஒரு பிரபலமான கம்பெனி நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர் அங்கே

ஹச்சார்: வாங்க நடேசன் உங்க ஸ்டெரெத் வீக்னஸ் என்ன?

நடேசன்: (மனசுக்குள்ளே) ஆந்திரா மெஸ்ல அடிச்சி வெரட்டுற வரைக்கும் சாப்பிடுவேன்னா சொல்லமுடியும். நான் நல்லா டீம்ல வேலை பாப்பேன். வீக்னெஸ்னா அடிக்கடி விஜயகாந்த படம் பாப்பேன்.

ஹச்சார்: உங்க மார்க்சீட் பாத்தேன் நீங்க நிறைய அரியர் வெச்சு பாஸ் பண்ணி இருக்கீங்க எங்க கம்பெனி பாலிஸி படி எங்களுக்கு கன்ஸிஸ்டண்ட் பெர்பார்மர்தான் தேவை.

நடேசன்: நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.

ஹச்சார்: ஆனா எட்டாவது செமஸ்ட்டர்ல எல்லாத்தையும் பாஸ் பண்ணி உங்க கண்ஸிஸ்டண்ஸி போச்சு, நீங்க போகலாம்.(மனசினுள்)வந்துட்டானுங்க மதுரைலேந்து.
-----------------------

திருவல்லிக்கேனி மேன்சன்:

ராகவன்: இண்டர்வியூ என்னடா ஆச்சு.

நடேசன்: கண்ஸிஸ்ட்டண்ட் பெர்மார்மன்ஸ் இல்லன்னு போக சொல்லிட்டாங்கடா.

ராகவன்: டேய் கவலைப்படாத நீ ஜாவால நல்லாதான் பண்றே, நல்ல திறமை இருக்கு உனக்கு எங்க கம்பெனில ஜாவா ஓப்பனிங்க் இருக்கு உன்னை ரெபர் பண்ணிருக்கேன் கெடச்சிடும், அதுக்கு அப்புறம் அடிச்சு ஆடுறா.

நடேசன்: மதுரைக்காரங்க தோத்துருவமா என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.