Tuesday, March 31, 2009

கல்பாக்கம் தந்த அனுபவம் -குகுசாஇஆக-பாகம் 3

பாகம் 2
சென்ற பகுதியில் ஒரு உண்மை சம்பவத்தை கனவு என்று சொல்லி முடிந்திருந்தேன். அது பின்னர் உண்மையாகவே ஒரு கனவாகிப்போனது.முதுகுவலி யோகாவினாலும் உணவுக்கட்டுப்பாட்டிலும் குறைந்த நிலையில் ஊருக்கு சென்றேன்.வலி குறைந்த பின்னர் வேலை தேடப்போகலாம் என்ற ஆரம்ப நிலை மாறி ஒரு மாதத்தில் ஏதாவது வேலைக்கு போ என்று பாசமும் வேறு உருவம் ஆனது.

கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்யும் ஒரு மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கம்பெனியில் ஏதோ ஒரு இஞ்ஜினியராக வேலைக்கு சேர்ந்தேன்.நான் வாங்கிய முதல் சம்பளமும் இங்கேதான். நான் பார்த்த SS பைப்பிங் வேலையில் என்னுடைய அணியில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் தொழிலாளர்கள், நான் மட்டும் சூப்பர்வைசர்ன்னு வெச்சுக்கலாம்.பெரும்பாலான வேலை IGCAR ல் தான், சூப்பர்வைசராக இருந்ததால் நிறைய அனுமின் நிலைய இஞ்ஜினியர்களுடன் பழக்கம் கிடைத்தது.

அவர்களில் ஒருவர் ஆரக்கிள் கத்துக்கொண்டிருந்தார், நான் எனக்கு ஓரளவிற்கு தெரியும் என்றேன். அவருடைய கம்பியூட்டரில் அவருக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். IGCAR ல் இருக்கும் மிகப்பெரிய நூலகத்தையும் பயன்படுத்த ஆரம்பித்தேன்.சிறிது நாட்களில் அந்த இஞ்ஜினியரும் வேலையை விட்டுவிட்டார் அமெரிக்கா செல்லும் எண்ணத்தோடு. என்னையும் இங்கே இருக்கவேண்டாம் என அறிவுரை செய்தார்.இங்குள்ள தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து முன்னேற முடியாது என்றார்.

அடுத்ததாக நான் சந்தித்த இன்னோரு நபர் புளுஸ்டார் கம்பெனியின் எஞ்ஜினியர்.அவருடனும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரும் SAP படிப்பதற்காக வேலையை விரைவில் விட்டார். நான் அப்போது ஒரு மாதம் பணி செய்து முடித்திருந்தேன்.மனசு வேலையில் ஒட்டவில்லை. ஆனால் வீட்டில் ஏதாவது வேலை செய் உத்தியோகம் புருசலட்சணம், ஆண் பிள்ளை கிடைத்த வேலையை விடக்கூடாது என்றார்கள்.

இப்படியாக இரண்டாவது மாதமும் ஓடியது, பெரும்பாலான நாட்களில் புதுப்பட்டிணம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி சமைப்பது, சமைக்காத நாட்களில் சதுரங்கப்பட்டிணம் கோட்டைக்கு முன் உள்ள ஒரு தட்டி விலாஸில் வறுத்த மீன் சாப்பிட செலவதுமாக பொழுது போனது.IGCAR ல் வேலை பார்த்தபோது காமினி மாதிரி அனுவுலை, FBTR எல்லாவற்றையும் பார்க்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம்.

ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.

ஒருவேளை தொடர்ந்து அங்கேயே வேலை பார்த்திருந்தால், நானே ஒரு கம்பெனி ஆரம்பித்து இப்போது நடைபெற்று வரும் வேலைகளில் பலவற்றை செய்திருக்கக்கூடும்.கண்டிப்பாக எதுவும் விழலுக்கு இறைத்த நீராக ஆகியிருக்காது.

மென்பொருள் வேலை பற்றிய கனவும், அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு முயற்சி செய்தால் கிட்டும் என்று சுற்றுப்புறமும்,உள்ளுணர்வும் சொன்னதால் மீண்டும் சென்னை நோக்கி,முழுசாக இரண்டு மாதம் கூட தாங்கவில்லை கல்பாக்கம் வாழ்க்கை.

என்னுடைய நண்பர்கள் பலர் அண்ணா பல்கலைக்கழகத்தில்(CEG யில்) அச்சமயம் M.E படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் M.E படிக்கப்போறேன், non -gate எழுதறேன்னு சொல்லி சென்னை வந்துட்டேன். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் நண்பர்களோடு தங்கினேன். அப்ளிக்கேசன் போடும்போதே சொன்னாங்க வேண்டாம்னு , ஆனா நான் கேக்கல, தினசரி படிச்ச இன்னோரு நண்பனை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்தேன் அந்த திருப்தியோடு அந்த முயற்சியை கைவிட்டேன்.கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.

இப்போது அண்ணாவை விட்டு திருவல்லிக்கேணி மேன்சன் வாசம். மீண்டும் சாப்ட்வேர் வேலை தேடும் படலம், நண்பர் ஒருவன் வாங்கியிருந்த கம்பியூட்டரை வைத்து இரவு பகலாக ஜாவா படித்தோம்,இதில் நான்கு பேர் என் கல்லூரி நண்பர்கள், இன்னும் சிலர் வேறு கல்லூரி, எங்கள் ஊர்க்காரர்கள் என்று ஒரு குழு உருவானது.எவ்வளவோ சிந்தனை வேறுபாடுகள் இருந்த போதிலும் ஏதோ ஒரு விதத்தில்
கல்லூரி நண்பர்கள் நான்கு பேரும் ஒரே இலக்கை நோக்கி இலக்கை அடையும் வரை பயணித்தோம்.எவ்வளவோ ஒற்றுமை இருந்தும் மற்ற என் ஊர்க்கார/சொந்தக்கார நண்பர்கள் பயனிக்க முடியவில்லை.

இதை மொக்கையாக எழுதத்தான் நினைத்தேன் இப்படி வந்துவிட்டது , அப்படியே விட்டுவிட்டேன்.

தொடரும் ...

எலெக்சன் டைம் மறக்காம ஒட்டு போடுங்க.

23 comments:

வில்லன் said...

அய் நான் தான் மொதல்ல

வில்லன் said...

ரொம்ப நல்லா இருந்துச்சு. திருவல்லிகேணி மன்சன் போகாம யாருமே பொட்டி தட்ட வந்துருக்க மாட்டாங்கன்னு முழுமையா நம்பறேன்.

இந்த பதிவு பலரோட மலரும் நினைவுகளா இருக்கும். ஆட்டோகிராப் படம் போல.


வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

IGCAR ல் வேலை பார்த்தபோது காமினி மாதிரி அனுவுலை, FBTR எல்லாவற்றையும் பார்க்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம்.

எதெல்லாம் என்னன்னே புரியல. மணிரத்னம் படம் பாத்தாப்பல இருக்கு.

வெளக்கமா ஒரு பதிவு போடலாம்ல.

வில்லன் விமர்சன குழு

நசரேயன் said...

ம்ம்..நல்லா இருக்கு

பழமைபேசி said...

//பிடித்தால் ஓட்டுப்போடவும் //

இப்ப எல்லாம் ஆள் விட்டுப் பிடிக்கச் சொல்றாங்களாண்ணே?

ஷண்முகப்ரியன் said...

ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.//

சமயங்களில் நமது வேதனைகளைச் சொல்லுவதே எவ்வளவு பெரிய காமடி ஆகி விடுகிறது குடுகுடுப்பையாரே.பழைய நினைவுகளைப் பகிர்வதும், படிப்பதும் சுகமான அனுபவமே.சுவையான இடுகை.

குடந்தை அன்புமணி said...

நமக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை இப்படித்தான் அல்லாடணும் போல...

புல்லட் said...

பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் ...

புதியவன் said...

//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.
//

படித்து முடித்து வேலை தேடும் பலரின் நிலை இது தான்...

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...

ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.//

சமயங்களில் நமது வேதனைகளைச் சொல்லுவதே எவ்வளவு பெரிய காமடி ஆகி விடுகிறது குடுகுடுப்பையாரே.பழைய நினைவுகளைப் பகிர்வதும், படிப்பதும் சுகமான அனுபவமே.சுவையான இடுகை.//

வேதனையான விசயம்தான், ஆனால் ஒரு மாற்றத்தை உடனடியாக கொண்டுவந்த நிகழ்ச்சி, மகிழ்ச்சியாக முடிந்தது.

குடுகுடுப்பை said...

வில்லன் said...

அய் நான் தான் மொதல்ல

வில்லனுக்கு முதல்ல வந்தாலும்,கடைசில ஒன்னும் கெடைக்காது கதைப்படி

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க! பழசை நினைச்சுப் பார்க்கறது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும்! சென்ட்ரல் கவர்மென்ட் சயிண்டிஸ்ட் ஆ நீங்க!!

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க! பழசை நினைச்சுப் பார்க்கறது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும்! சென்ட்ரல் கவர்மென்ட் சயிண்டிஸ்ட் ஆ நீங்க!!
//

காண்டிராக்ட் கம்பெனில கூலிய சயிண்டிஸ்ட்னு கூப்புட்ட உங்கள எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.
//

அனைவரின் வாழ்கையிலும் வழிகாட்ட வழிபோக்கர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்...

குடுகுடுப்பை said...

புதியவன் said...

//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.
//

படித்து முடித்து வேலை தேடும் பலரின் நிலை இது தான்...//

நிம்மள் எப்படி கவிதை எழுதறீங்கன்னு இப்பதான் புரியுது

ராஜ நடராஜன் said...

கல்பாக்கம்ன்னு சொன்னதும் தரமணி,மாமல்லபுர ரோட்டு பழைய நினப்பு வந்துருச்சு.

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

கல்பாக்கம்ன்னு சொன்னதும் தரமணி,மாமல்லபுர ரோட்டு பழைய நினப்பு வந்துருச்சு.
//

எதோ வில்லங்கமா இருக்கே

குடுகுடுப்பை said...

புல்லட் பாண்டி said...

பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் //

ரொம்ப நன்றி நெல்லை மாப்பிள்ளை.

Anonymous said...

கல்லூரி படிப்பு முடித்து சில காலம் கல்பாக்கம் சுற்றி உள்ள கிரமகளில் குடிபெயர் தொழிலார்கள் பற்றி UNDP-காக ஆய்வு நடத்திய காலம் நினைவுக்கு வருகிறது குறிப்பாக SADRAS தட்டி விலாஸ் and கல்பாக்கம் பஸ் 118 (I guess)

Nithy Toronto

குடுகுடுப்பை said...

Anonymous said...

கல்லூரி படிப்பு முடித்து சில காலம் கல்பாக்கம் சுற்றி உள்ள கிரமகளில் குடிபெயர் தொழிலார்கள் பற்றி UNDP-காக ஆய்வு நடத்திய காலம் நினைவுக்கு வருகிறது குறிப்பாக SADRAS தட்டி விலாஸ் and கல்பாக்கம் பஸ் 118 (I guess)

Nithy Toronto//

கொஞ்சகாலம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். 118 ஏதான். சட்றாஸ் தட்டிவிலாஸ் கண்டிப்பா மறக்க முடியாது

வில்லன் said...

//சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.
//

ஏன் ரோசம் வந்து வேலைய உட்டுடிறாக்கும்........ வேல வெட்டி இல்லாதப்ப என்ன ரோசம் வேண்டி கெடக்கு.

வில்லன் said...

// புல்லட் பாண்டி said...
பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் ...//

ஏன் பாண்டி போண்டியாகவா!!!!!!!!!!!!!!!! ஹி ஹி ஹி

வில்லன் said...

//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.
//

இப்பவும் சிகரெட் தண்ணி உண்டா இல்ல எல்லாத்தையும் ஓரம் கட்டிடிங்களா!!!!!!!!!!