Tuesday, March 24, 2009

நான் போட்ட தூண்டில்.

கடந்த வாரம் ஹரிணிக்கு ஸ்பிரிங் பிரேக், San Antanio Sea World, Corpus Christi beach செல்வது என முடிவெடுத்து புதன்கிழமை மதியம் பயணப்பட ஆயத்தமானோம்.

அலுவலகத்தில் நண்பர் ஒருவர், Corpus Christi ஆழ் கடலில் படகில் சென்று மீன் பிடித்த கதையை சொன்னார். எட்டு மணி நேரம் படகில் இருக்கவேண்டும் $85.00 மட்டுமே கட்டணம். எனக்கும் மீன் பிடிக்க செல்ல ஆசை, பிடித்ததை சமைத்து சாப்பிட வசதியாக சமையலைறை வசதி உள்ள வீடும் இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்தாகியாச்சு.ஆனால் எட்டு மணி நேரம் கடலிற்கு 5 வயதே ஆன ஹரிணியையும் கூட அழைத்து செல்வது உசிதமல்ல என்பதால் கடலுக்குள் போகவேண்டாம் ஆனால் கரையில் இருந்தே தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம் என்ற முடிவு செய்தோம்

செவ்வாய் இரவு பதினொரு மணியளவில் கடைக்கு சென்று எனக்கு ஒரு தூண்டில், ஹரிணிக்கு ஒரு Barbie தூண்டில் வாங்கினோம். இங்கே மீன்பிடிக்க licence தேவை என்பதால், தூண்டில வாங்கின கடையிலேயே ஒரு வருடத்திற்கான அனைத்து வகை தண்ணீரிலும்(கடல் உட்பட) மீன் பிடிக்க அனுமதி தரும் licence $45 கொடுத்து வாங்கினேன்.இப்போது நான் டெக்ஸாஸ் மாகாணத்தில் எங்கு வேண்டுமானலும் மீன் பிடிக்கலாம்.

ஒரு வழியாக San Antanio Sea World முடித்து விட்டு, Corpus Christi யை அடைந்தோம், வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு மதியம் மூன்று மணிக்குத்தான் செல்லமுடியும்.ஆனால் நான் 12 மணிக்கெல்லாம் அங்கே இருந்ததால், உடனடியாக நானும், ஹரிணியும் கடலில் தூண்டில போட்டு மீன் பிடிக்க ஆயத்தமானோம்.

ஹரிணியின் தூண்டிலில் மீன் பிடிக்கும் கொக்கி இல்லை, என்னுடைய தூண்டிலிற்கு நீல நிறத்தில் உள்ள சின்ன பொய் மீனுடன் கூடிய கொக்கியுடன் மீன் பிடிக்க ஆயத்தமானேன் , அங்கே மீன் பிடிக்க தயாராகிக்கொண்டிருந்த ஒருவரிடம் எப்படி இந்த தூண்டிலை தயார் செய்வது என்று உதவி கேட்டேன். அவரும் உங்கள் நீல நிற மீன் கொக்கிக்கு இங்கே உள்ள மீன்கள் வராது நானே ஒரு கொக்கியும், bait உம் தருகிறேன் என்றார். முழுவதும் அவரே செய்து தூண்டிலை தயார் செய்து கொடுத்தார்.

நானும் தூண்டில் கொக்கியை கடலுக்குள் தூக்கி வீசும் முயற்சித்ததில் அது ஆழமில்லாத பகுதியிலேயே விழுந்தது, பல முயற்சிகளில் அது தூர செல்லவில்லை,மீன் தூண்டிலில் நரம்பை அந்த தூண்டிலால் சுருட்டவும் முடியவில்லை. உடனே பக்கத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்டேன். அவரும் பார்த்துவிட்டு நரம்பு அறுந்துவிட்டது, அதனால் தான் தூக்கி வீச முடியவில்லை.ஏன் அறுந்தது என்பதை கண்டு பிடிக்கவேண்டும் என்று சொல்லியபடியே மீன் கொக்கியை மாட்டி சரி செய்து தந்தார்.

இதற்கிடையில் ஹரிணியின் தூண்டிலில் இருந்த நரம்பை அவள் உடல் முழுவதும் சுற்றி வைத்துக்கொண்டு எனக்கு மீன் பிடிக்க போரடிக்குது நான் மண் விளையாடப்போறேன் என்று கூறிவிட்டாள்.

நான் மிண்டும் தூண்டிலை தூக்கி கடலில் வீச பலமுறை அது அருகிலேயே விழுந்தது, தூண்டில் மீண்டும் அறுந்தது.எனக்கு இரண்டாவது முறை தூண்டில் சரி செய்தவர், தூண்டில எங்கே வாங்கினாய், எப்போது வாங்கினாய் என்றார்.

நான் வால்மார்ட்டில் நேற்றிரவுதான் தூண்டிலும் licence ம் வாங்கினேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் licence எல்லாம் தொழில்முறை மீன் பிடிப்பவர்களுக்கும்,நிறைய மீன் பிடிப்பவர்களுக்கும்தான் தேவை உன்னை மாதிரி மீன் பிடிக்கவே தெரியாதவர்களுக்கும் ஒன்றிரண்டு மீன் பிடிப்பவர்களுக்கும் தேவையில்லை என்றார்.அப்படியே அந்த தூண்டிலில் பிரச்சினை உள்ளது திரும்பக்கொடுத்துவிட்டு புது தூண்டில் வாங்கி மீன் பிடிக்க கற்றுக்கொள்ளசொன்னார்.

பெருத்த ஏமாற்றத்துடன் அங்கே இருந்த ஒரு கடல் மீன் கடையில் பெயர் தெரியாத ஒரு பெரிய மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டேன்.

ஆனால் மீன் விரைவில் பிடிக்கப்படும்.

28 comments:

நசரேயன் said...

நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நேற்றிரவுதான் தூண்டிலும் licence ம் வாங்கினேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் licence எல்லாம் தொழில்முறை மீன் பிடிப்பவர்களுக்கும்,நிறைய மீன் பிடிப்பவர்களுக்கும்தான் தேவை உன்னை மாதிரி மீன் பிடிக்கவே தெரியாதவர்களுக்கும் ஒன்றிரண்டு மீன் பிடிப்பவர்களுக்கும் தேவையில்லை என்றார்.அப்படியே அந்த தூண்டிலில் பிரச்சினை உள்ளது திரும்பக்கொடுத்துவிட்டு புது தூண்டில் வாங்கி மீன் பிடிக்க கற்றுக்கொள்ளசொன்னார்.//




மீனுக்குத்தானே...

ஓட்டு பொறுக்கி said...

இதை தாங்க எங்க ஊரு பக்கத்துல
' அறுக்கமாட்டான் பயலுக்கு அம்பத்தெட்டு அருவாளாம் '

(கதிர் அறுக்க தெரியாதவன் 58 அருவாள் வச்துருந்தானாம்)
அப்படின்னு சொல்லுவாங்க

எப்படியோ ரொம்ப நாள் கழிச்சு பதிவுலகத்திற்கு மீண்டும் வந்தாச்சு..

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம் //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம் //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//
அதையெல்லாம் பதிவா போட முடியாதே?

நசரேயன் said...

//இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம் //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//
அதையெல்லாம் பதிவா போட முடியாதே?//

நான் மீனை சொன்னேன், நீங்க எதை மீன் பண்ணுறீங்க

அது சரி(18185106603874041862) said...

//
நான் வால்மார்ட்டில் நேற்றிரவுதான் தூண்டிலும் licence ம் வாங்கினேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் licence எல்லாம் தொழில்முறை மீன் பிடிப்பவர்களுக்கும்,நிறைய மீன் பிடிப்பவர்களுக்கும்தான் தேவை உன்னை மாதிரி மீன் பிடிக்கவே தெரியாதவர்களுக்கும் ஒன்றிரண்டு மீன் பிடிப்பவர்களுக்கும் தேவையில்லை என்றார்.
//

வாங்குன லைசன்ஸை வீண் பண்ண வேணாம்...மாடு வளர்க்கிறதோட‌ சைடு பிஸினஸா மீன் பிடிக்கிறதும் செய்யலாமே? :0))

அது சரி(18185106603874041862) said...

//
ஹரிணியின் தூண்டிலில் இருந்த நரம்பை அவள் உடல் முழுவதும் சுற்றி வைத்துக்கொண்டு எனக்கு மீன் பிடிக்க போரடிக்குது நான் மண் விளையாடப்போறேன் என்று கூறிவிட்டாள்.
//

மண்ணுல விளையாடுனது பாப்பா மட்டும் தானா இல்ல நீங்களுமா? :0))

ஷண்முகப்ரியன் said...

காலை வணக்கம் குடுகுடுப்பை சார்.மீன் பிடிப்பதை ஒரு நல்ல சீன் பிடிக்கும் நிகழ்ச்சியாக மாற்றி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

அ.மு.செய்யது said...

//கரையில் இருந்தே தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம் என்ற முடிவு செய்தோம்//

அதெப்ப‌டிங்க‌..க‌ரையிலிருந்தே மீன் பிடிப்பீங்க‌..

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம்
//

வாட் என் ஐடியா ச‌ர்ஜி..( லைசென்ஸும் தேவையில்லை.தூண்டிலும் தேவையில்லை )

பழமைபேசி said...

// நசரேயன் said...
நீங்க வேற! மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம்
//

தூண்டிலுக்கு மீனைப் போட்டுட்டு வந்ததைச் சொல்லுறீங்களா தளபதி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொஞ்சநாளாக ஆளைக் காணுமேன்னு பார்த்துட்டு இருந்தேன்...தூண்டில் போட கத்துக்கிட்டு இருந்தீங்களா? சரிதான்...வேற ஏதாவது சிக்கிடப்போகுது

Unknown said...

உங்க தூண்டிலுக்கு மீன் விழலை, அந்த மீனுக்குதான் உங்க தூண்டில் விழுந்திருச்சி போல

புதியவன் said...

//பெருத்த ஏமாற்றத்துடன் அங்கே இருந்த ஒரு கடல் மீன் கடையில் பெயர் தெரியாத ஒரு பெரிய மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டேன்.

ஆனால் மீன் விரைவில் பிடிக்கப்படும்.//

இந்த முறையாவது பெயர் தெரிஞ்ச மீனா பார்த்து பிடிங்க...

குடந்தை அன்புமணி said...

தூண்டில் போடாம வலை வீசியிருக்கலாம். அடுத்தவாட்டி முயற்சி பண்ணுங்க!

புல்லட் said...

அடச்சே பிள்ளைக்கு முன்னால மானம் போட்டுதே...
பிள்ளை அங்கால மண் விளாண்டிட்டிருக்கிற நேரமாப்பாத்து வாங்கின மீனைதூண்டில் கொழுவில மாட்டி ஒரு சீனைப்போட்டிருக்கலாம்.. கிக்கி.. :)

ஆமா ஊளரில குளத்துல மீன் பிடிச்சா மானம் பொயிடும்... அமெரிக்காவில பிடிச்சா பசன் ம்ம்ம்... :)

வேத்தியன் said...

ஐயா..
இதுவல்லவா அனுபவம்...
:-)

வேத்தியன் said...

ஆனா ஒன்னுங்க...
பிடிக்காத மீனுக்கு $45 குடுத்து license வாங்கின ஒரே ஆளு நீங்களா தான் இருப்பீங்க...
:-)

வேத்தியன் said...

ஆனால் மீன் விரைவில் பிடிக்கப்படும்.//

நடந்தா சந்தோஷம் தான்...
:-)
முன்கூட்டியே வாழ்த்துகள் சொல்லிடுறேன்...
:-)

சந்தனமுல்லை said...

:-)))))

சந்தனமுல்லை said...

//தூண்டில வாங்கின கடையிலேயே ஒரு வருடத்திற்கான அனைத்து வகை தண்ணீரிலும்(கடல் உட்பட) மீன் பிடிக்க அனுமதி தரும் licence $45 கொடுத்து வாங்கினேன்.//

அதுக்கு ஒழுங்கா மீனையே வாங்கி்யிருக்கலாம்! :-))

சந்தனமுல்லை said...

//இப்போது நான் டெக்ஸாஸ் மாகாணத்தில் எங்கு வேண்டுமானலும் மீன் பிடிக்கலாம்.//


ஆல் தி பெஸ்ட்...சீக்கிரம் மீன் பிடிக்க கத்துக்கிட்டு பணக்காரராக வாழ்த்துகள்!
வலை போடறதை ஏன் ட்ரை செய்யக்கூடாது??

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லவேளையா மீன் தப்பிக்கிச்சு,

நாங்கதான்............

இப்ப தூண்டில்ல மாட்டிக்கிட்டோம்.

பேசாம நீங்க நசரேயன் சொன்னதை செய்யலாம்....

:)))))))))))

தங்க்ஸ் பின்னூட்டமெல்லாம் படிப்பாங்களா...............

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி

வில்லன் said...

""ஆனால் மீன் விரைவில் பிடிக்கப்படும். ""

சார் அதெல்லாம் ஒரு கலை. எல்லாரும் பண்ண முடியாது. எங்களுக்கெல்லாம் அது கை வந்த கலை. என்னா நாங்க கடக்கரைல இருந்து வந்தவங்க. தூண்டில் இல்லாமலே மீன் பிடிப்போம்.

இப்பதான் ஒரே மாகனதுல இருக்கமே.... விரைவில் சந்தித்து மீன் புடிச்சிருவோம்

வில்லன் said...

// நசரேயன் said...
நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம்//

ஆமா நீங்க வேற மீன் புடிச்ச லச்சணம் தான் வொளகதுக்கே தெரியுமே.

குடுகுடுப்பை பாவம். மீம் வந்து தானா சிக்கினாலும் விடுருவாறு (உபயம் குடுகுடுப்பை முதுகு வலி வைத்தியம்)......

வில்லன் said...

?????????? நசரேயன் said...
//இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

நீங்க வேற மீனுக்கு தூண்டில் போட்டு இருக்கலாம் //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//
அதையெல்லாம் பதிவா போட முடியாதே?//

நான் மீனை சொன்னேன், நீங்க எதை மீன் பண்ணுறீங்க??????????????


ஆமா ஆமா எங்களுக்கு தெரியாது நீறு பனமரத்துக்கு கீழ இருந்து பால்தான் குடிப்பிருன்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!