Showing posts with label கொலவெறி. Show all posts
Showing posts with label கொலவெறி. Show all posts

Tuesday, December 22, 2009

குஞ்சுகள் ...


குஞ்சுகள் ...

தின்ன தின்ன மிச்சங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத வயிறுப் பந்து
கோழிக்குஞ்சுகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகள் கனமின்றி காற்றில் உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
போன்று உரித்த கோழி
என்வீட்டு அறுவாமனையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
தின்று அலுத்துப் போய்
கக்கூஸ் தேடி அலைகையிலே
இன்னுமொரு குஞ்சு
என் வீட்டு அறுவாமனையில்
என் தொப்பை வளர்க்க!

Tuesday, June 16, 2009

தொவையல் : புதுக்கவிதை தேடுபவர்கள் பாவம்

கடந்த ஒரு மாத காலமாக நேரமின்மை காரணமாக பதிவெழுதாமல் இருந்த போதும் கூகிள் மூலமாக பலர் என்னுடைய பதிவைத் தேடி படித்தபடி இருந்தனர். நான் கூட நானும் பிரபலம் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா பாருங்க எதைத்தேடி வந்திருக்காங்கன்னு.

முக்கியமாக டீச்சர், டியூசன் டீச்சர் என்று தேடி என்னுடைய குடுகுடுப்பை: டியூசன் டீச்சர் விமர்சனம் படித்து நொந்து போகிறார்கள்.

இன்னொரு வகையினர் கவிதை ஆர்வம் உள்ளவர்கள் புதுக்கவிதை என்று தேடி இந்தக்கவிதையை படித்து கவிதைக்கு ஒரு புது விளக்கம் இருப்பதை அறிந்து பரவசப்படுகிறார்கள்.
இது தான் அந்தப்புதுக்கவிதை
-----------------------------------
(புது) கவிதை

பேருந்து

கணினி

தொலைபேசி

அலைபேசி

புது பெயர்கள்

மட்டும் தான்

கண்டு பிடிப்போமா?

இல்லை இப்படி

கவிதையும்

எழுதுவோமா?
-------------------------------------------


என்னுடைய முந்திய பிரியாணிப்பதிவுக்கும் இனி நிறைய பேர் வரலாம் இன்பம் பெறலாம்.
---------------------------------------

நான் என்னோட எட்டு வருடமா உபயோகப்படுத்துற செல்போன் கம்பெனிய மாத்தலாம்கிற நோக்கத்தில் , இரண்டு வாரத்துக்கு முன்னாடி இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஓசி செல்போன் ஆர்டர் பண்ணி இருந்தேன். அதிலே ஒன்னு வீடு வந்து சேர்ந்தது, இன்னொன்னு வரலை. சரின்னு இன்னைக்கு இரண்டாவது முறையா கஷ்டமர் சர்வீஸுக்கு பேசினேன் 2 மணிநேர காத்திருத்தல் மட்டும் உரையாடல், கடைசில ரிபர்பிஸ்டு போன் வேணும்னா அனுப்புறோம் புதுசா ஓசி போன் இப்ப இல்லைன்னு சொன்னாங்க. என்னோட தற்போதைய போன் கம்பெனிகாரன் கொடுத்து வெச்சவன் போல, வீட்டிற்கு வந்த ஒரு போனையும் திருப்பி அனுப்ப போறேன்.இது எதுக்கு பதிவான்னு கேக்கறீங்க தானே , ரொம்ப கடுப்புல இருக்கேன் யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.

------------------------------------

கல்லூரி சாலை:

இஞ்சினியரிங் காலேஜ்ல சேர்ந்த வருடம், +2 ல ஒக்கேசனல் குரூப் எடுத்து படிச்ச பசங்களுக்கு அறிவியல் பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவார்கள் அதில் ஒரு மாணவர் கேட்ட சந்தேகம் இது.

கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்ட சந்தேகம்.

சார் முழங்கையை முன்பக்கமா மடக்க முடியுது , ஏன் சார் பின் பக்கம் மடக்க முடியல?

இந்த கேள்வி நான் கேக்கலங்க ஏன்னா நான் +2 ல ஒக்கேசனல் குரூப் இல்லை. அப்புரம் எப்படித்தெரியும். எல்லாம் செவி வழிச்செய்திதான்.

--------------------------
நான் எழுதிய முதல் கொலைவெறிக்கவுஜ

நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.

Wednesday, March 25, 2009

எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம்

முற்றுப்புள்ளி வைத்தேன்.
முதலில் முற்றுப்புள்ளி கூடாது
முற்றுப்புள்ளி மேல் மறைத்து கோடு போட்டேன்
கோட்டின் மேல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
கோடு தெரிந்தது
முற்றுப்புள்ளி தெரியவில்லை.

தனியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
முற்றுப்புள்ளி தெரிந்தது
ஆனால் ஏன் அந்த முற்றுப்புள்ளி
என புரியவில்லை
படித்து பார்த்தேன் கவிதை
போல் தெரிந்தது
ஆனால் புரியவில்லை

கவிதை படிப்பவனுக்கு
ஏதோ ஒன்றாக புரியும்.
அதனால் இதற்கு மேல்
இதற்கு விளக்கமில்லை.


எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.

முரண் தொடை: காதறுந்த ஊசியும்....

நல்லா போடுங்கப்பா தமிழ்மணத்தில எதிர் வோட்டு.

Friday, February 13, 2009

காதலர் தினம் இந்தியாவில் மாபெரும் வெற்றி.

கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு பெரும் இடைஞ்சல் கொடுத்ததாக வந்த செய்தியையும் மீறி காதலர் தினம் மாபெரும் வெற்றி.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காதலர் தின ஆதரவாளர்கள் போட்டி போட்டு பிங்க ஜட்டி வாங்கினர்,பல இடங்களில் பிங்க் ஜட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.பிங்க ஜட்டியை வாங்கி சேனா தலைமையிடத்திற்கு அனுப்ப கூரியர் சர்வீஸ் நிறுவணங்கள் இரவு பகலாக வேலை செய்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர் தினத்தன்றும், மற்றும் ஜட்டி அனுப்புவர்களுக்கும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் கூட புடவை வழங்கப்படும் என்ற சேனாவின் அறிவிப்பின் படி அவர்களும் புடவை கொள்முதலில் இறங்கியுள்ளனர்.புடவை வியாபாரம் அமோகமாக இருக்கும் என ஜவுளிக்கடை அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜட்டிக்கம்பெனி,கூரியர் சர்வீஸ் கம்பெனி,புடவைக்கம்பெனி ஸ்டாக்குகள் திங்கள் அன்று உச்சத்தில் பறக்கும் என ஸ்டாக் மார்க்கெட் ஜோசியர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மொத்தத்தில் காதலர் தினம் வெற்றி பெற்றதாக வியாபாரிகள் அறிவிப்பு.

Friday, November 14, 2008

ஏய் ஆண்மகனா நீ ?

பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.

மீசை வைத்தவன் நீ
மீசையை மழித்தவன் நீ

பெண்களைப் புரியாதவனும் நீ
பெண்ணுரிமை கண்டவனும் நீ

கடவுளை கண்டுபிடித்தவன் நீ
கும்பிட வழிமுறை கண்டவன் நீ

காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ

சட்டம் கண்டுபிடித்தவனும் நீ
சாதியை கண்டுபிடித்தவன் நீ

சண்டை போட்டவனும் நீ
சாகப்போறதும் நீ

வீணாப்போன நீ
விளங்காம போன நீ

Friday, October 31, 2008

பதிவர்களுக்கு ஒரு கேள்வி.?

பல பதிவர்கள் / ஆர்குட் புரொபைளில், பிடித்த புத்தகம் பகுதியில் கீழ்கண்ட பெயர்களை காணலாம்

ஹாரி பாட்டர்.
ஷிட்னி ஷெல்டன்
ஜெப்ரி ஆர்தர்.
டேனியல் ஸ்டீல்

தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன்,சாண்டில்யன், சுஜாதா,கல்கி
பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்.

மற்றும் பல

இதையெல்லாம் சும்மா போட்டுக்கலாமா. இல்ல உண்மையாவே படிச்சாதான் போடனுமா?

இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?

பி:கு: சில சீரியஸான பதிவெழுதி களைச்சிபோயிட்டேன், அதான் இப்படி மன்னிச்சு விட்டுருங்க..