Monday, November 18, 2013

சாதியும் சான்றிதழும்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாள் எதற்காகவோ அவசரமாக சாதி சான்றிதழ் தேவைப்பட்டது, அதனை வாங்க எங்க ஊர் கிராம நிர்வாக அலுவலரைத்தேடி இரண்டு நாள் கிராம நிர்வாக அலுவலகம் அலைஞ்சதுதான் மிச்சம். கணேசன் கடைல மத்தியாணம் உச்சி வெயிலில் சுண்டக் காஞ்ச பாலில் டீ குடிச்சிட்டுருக்கும்போது ஒருநாள் நணபர் லெட்சுமணன் கிட்ட இதை சொன்னேன், உடனே அவரு சொன்னார் நாளைக்கு காலையிலேயே வண்டி எடுத்துட்டு அவரு வீட்டுக்கே போயிருவோம்.அங்கேயே ஆளை மடக்கி தள்ள வேண்டியத தள்ளி வாங்கிட்டு வந்திரலாம்.

அடுத்த நாள் எங்க வீட்ல இருந்த M80ய (80 ஒரு 40 கழண்டு போன வண்டி)எடுத்துட்டு கிளம்பினோம் , நண்பர் லெட்சுமணுக்கு சொந்தம் நண்பர்கள் என்று நிறைய பேர் VAO ஊருக்கு போகிற வழியில்.

வழியில் நடந்து வரும் ஒரு பெண்ணைப்பார்த்து லெட்சுமணின் உரையாடல்.

என்ன பாத்திமாயீ நடவுக்கு கெளம்பிட்டியளா?

ஆமாம்.

உங்க வீட்டுக்காரு பணத்தேரு ஓட்டுவாரே எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம்.

சவுதிக்கு போயி ஒட்டக சாணி அள்ளிட்டு வந்தவங்க ஒரு நாளு பேரு ஊருல வந்து அத்தர் அடிச்சிக்கிட்டு திரியிறாங்க, அப்படியே மாட்டுச்சாணி அள்ளுறது கேவலம்னு சொல்லி இந்தாளு பொழப்ப கெடுத்துபுட்டாங்க , மாட்டை வித்துப்புட்டு சவுதிக்கு போறதுக்காக பணம் கட்டிட்டு அவங்க பின்னாடியே திரியிறார்.ஒரு வருசமாச்சு இன்னும் போன பாட்டக்காணோம்.

அது சரி, எதாவது தொழில் தெரிஞ்சு போனா நல்ல வேலை கிடைக்கும், உங்க ஆளு பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத ஆளாச்சே,ஒட்டகம் பெரிசு அங்கேயே போய் அள்ளட்டும்.

போகும் வழியில் இன்னோரு ஊர், இந்த ஊர்லதான் உங்க தாத்தா மண்டையன்கிட்ட நெல்லு வட்டிக்கு கடன் வாங்குவாராம் உங்கப்பாவை படிக்க வைக்க, அறுவடை சமயத்துல களத்துலேயே நெல்லை ஏத்திட்டு போயிருவான் மண்டையன்.

கேள்விப்பட்டிருக்கேன், இது போல நிறைய பேரு வட்டிக்கு தாத்தாவுக்கு பணம் குடுத்துட்டு, நீ வாத்தியாரா இருக்கறதுக்கு நாந்தான் காரணம்னு எங்கப்பா கிட்ட சொல்ற ஒரு கும்பலே அலையுது.

அப்படியே கடந்து போய் இன்னோரு ஊரில் ஒரு கடையில் டீ குடிக்க அமர்ந்தோம்

என்ன லெட்சுமண் இரண்டு விதமா டபரா செட் வெச்சிருக்காங்க, சில்வர்ல ஒன்னு , வெங்கலத்துல ஒன்னு.

குடியான பொம்பள சனங்களுக்கு கொடுக்க சில்வர் டபரா செட், குடியான ஆம்பிளைகளுக்கு கிளாஸ், தாழ்த்தப்பட்டவகளுக்கு வெங்கல டபரா.

அது என்ன தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெங்கல டபரா?

அதுல எச்சி ஒட்டாதாம் இவங்க கண்டுபிடிப்பு, ஏரியாவில ஒருத்தன் கூட பத்தாவது படிச்சிருக்கமாட்டான் ஆனா இந்த அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் நிறையா இருக்கு.

என்னப்பா நம்ம ஊரு ஒரு ஆறு கிலோ மீட்டர் தள்ளிதான் இருக்கு, அங்கே ஆம்பிளைகளுக்கு கிளாஸ் பொம்பங்களுக்கு சில்வர் டபரா அப்படி தானே கடைகள்ல இருக்கு.

அது மட்டுமா நம்ம கணேசன் கடைல யாரு டீ குடிச்ச கிளாஸையும் கழுவறதேயில்லை, ஒருத்தன் குடிச்ச கிளாஸ்லதான் இன்னோருத்தன் குடிக்கனும்.சமத்துவம் அந்த அளவுக்கு ஆகிப்போச்சு. நம்ம ஏரியாவில கையில காசு பணம் இருக்கோ இல்லியோ படிக்க வைக்கனும்னு நெனப்பாங்க, வெள்ளை வேட்டி சட்டை கலையாம வீட்டு வாசல் தாண்ட மாட்டாங்க, நாளு கிழமைன்னா தண்ணி போடாமயும் இருக்க மாட்டோம். இவங்க எல்லாரும் காசு நிறைய வெச்சிருப்பாங்க, ஆனா கோமணத்துக்கும் வேட்டிக்கும் வித்தியாசம் தெரியாது ரெண்டும் செம்மண் கலர்லதான் இருக்கும், மிஞ்சிப்போன பக்கத்து ஊரு சந்தை வரைக்கும் தான் தெரியும்.அரசாங்க தொடர்புன்னா நாயக்கர் பாத்துக்குவாரு. அவரு எந்த ஊருலேந்து இங்க வந்தாருன்னு தெரியல பல வருசமா அவருதான் பிரசிடெண்ட், அவங்க தம்பிதான் சொசைட்டி பிரசிடெண்ட் அவங்க
சொல்றதுதான் இவங்களுக்கு வேத வாக்கு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எதிர்ப்பு கெளம்புது.

அப்படியா?

சரி VAO வீடு வந்திருச்சி ,இருக்காரான்னு பாப்போம்.

ஹலோ சார் இருங்காங்களா?

VAOவின் மகள்: அப்பா வெணூமா, அப்பா டேஞ்சூர் போயிருக்காங்க, வரதுக்கு 2 டேய்ஸ் ஆகும்.

அப்படிங்களா? நான் எனக்கு சாதி சான்றிதழ் வாங்க வந்தேன் , காலேஜ்ல அவசரமா கேக்கிறாங்க

லெட்சுமண்: நீங்க என்னா பண்றீங்க?

VAOவின் மகள்: நான் டேஞ்சூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல பிகாம் பண்ணிட்டிருக்கேன்.

லெட்சுமண்: அப்படிங்களா ? அப்பா வந்தா சொல்லுங்க இந்த மாதிரி குடுகுடுப்பை சாதி சான்றிதழ் கேட்டு வந்ததா?

VAOவின் மகள்: கேஸ்ட் செர்டிபிகேட், குடுகுடுப்பை,குடுகுடுப்பையூர், சொல்லிடறேன்.

ஏமாற்றத்தோடு திரும்பி வந்தோம், லெட்சுமண் சொன்னார். இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ.

32 comments:

நசரேயன் said...

//
இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ//

யோவ்.. இதுக்கு தான் போற வார இடத்திலே எல்லாம் துண்டு போடாம என்னை மாதிரி நல்ல பையனா இருக்கனுமுன்னு சொல்லுறேன்

நட்புடன் ஜமால் said...

சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும்
\\


நல்ல எண்ணம் தான்

அ.மு.செய்யது said...

சாதி சான்றிதழ் கிடைக்கலனா என்ன ??

கடைசில வச்ச டிவிஸ்டு பிடிச்சிருந்துது..

குடந்தை அன்புமணி said...

ஜாதி சான்றிதழ் வாங்கிறதுக்கு பதிலா கலப்பு மண சான்றிதழ் தான் கிடைக்கும் போலிருக்கு...

ரெட்மகி said...

ahha

வால்பையன் said...

சாதி சான்றிதழ் வாங்குவதை விட,
வீ.ஓ பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு சாதியை ஒழிப்பது நல்லது!

கலையரசன் said...

//குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும்//

அப்ப இன்னம் நடக்கலையா அது? அட போப்பா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே.. அந்த கடைசி வசனம் என்னமோ அவர் பேசின மாதிரி இல்லை.. அது உங்க ஆசை தானே?

குடுகுடுப்பை said...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே.. அந்த கடைசி வசனம் என்னமோ அவர் பேசின மாதிரி இல்லை.. அது உங்க ஆசை தானே?
//

அது மட்டும்தான் அவர் வசனம்.:))))))))

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

//
இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ//

யோவ்.. இதுக்கு தான் போற வார இடத்திலே எல்லாம் துண்டு போடாம என்னை மாதிரி நல்ல பையனா இருக்கனுமுன்னு சொல்லுறேன்//

என்னையும் ரவுடிங்கறீங்க

RAMYA said...

//
சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும்
//

அது சரி இது வேறேயா
அப்புறம் என்னா ஆச்சு??

RAMYA said...

என்ன முடிவாக இருக்குமோன்னு யோசிச்சேன்.

சூப்பர் ட்விஸ்ட் கலக்கிட்டீங்க குடுக்டுப்பையாரே :))

RAMYA said...

//
குறை ஒன்றும் இல்லை !!! said...
அண்ணே.. அந்த கடைசி வசனம் என்னமோ அவர் பேசின மாதிரி இல்லை.. அது உங்க ஆசை தானே?
//

அநியாயத்துக்கு எல்லாரும் உங்களை சந்தேகப்படற மாதிரி இருக்கே :-)

அது சரி(18185106603874041862) said...

//
இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ
//

சாதி சான்றிதழ் கிடைச்சுதா இல்ல சாதி மாற்றம் தான் நடந்துச்சா?? :0))

நானும் தான் ஒரு தாசில்தார் வீட்டுக்கு போனேன்...அவரு பாட்டி தான் வீட்ல இருந்துச்சி....ம்ம்ம்ம்...எல்லாம் நேரம்!

அது சரி(18185106603874041862) said...

//
பதிவர் குடுகுடுப்பை at 4:38 PM
//

இதை "பொதுச் செயலாளர், கேஜேஎம்கே"ன்னு மாத்திடலாமே?

சந்தனமுல்லை said...

//
ஏமாற்றத்தோடு திரும்பி வந்தோம், லெட்சுமண் சொன்னார். இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ. //

ஹிஹி!

சந்தனமுல்லை said...

//நசரேயன் said...

//
இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ//

யோவ்.. இதுக்கு தான் போற வார இடத்திலே எல்லாம் துண்டு போடாம என்னை மாதிரி நல்ல பையனா இருக்கனுமுன்னு சொல்லுறேன்//

அவ்வ்வ்வ்!!!

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

சாதி சான்றிதழ் கிடைக்கலனா என்ன ??

கடைசில வச்ச டிவிஸ்டு பிடிச்சிருந்துது..//

அது மட்டுமே வெச்சு பின்னப்பட்ட அனுபவம்.

குடுகுடுப்பை said...

குடந்தை அன்புமணி said...

ஜாதி சான்றிதழ் வாங்கிறதுக்கு பதிலா கலப்பு மண சான்றிதழ் தான் கிடைக்கும் போலிருக்கு..//

அந்த விஏஓ வீட்லேயும் பொண்ணு இருந்தா

குடுகுடுப்பை said...

ரெட்மகி said...

ahha//

ஒன்னும் பயப்படாதீங்க தம்பி

குடுகுடுப்பை said...

வால்பையன் said...

சாதி சான்றிதழ் வாங்குவதை விட,
வீ.ஓ பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு சாதியை ஒழிப்பது நல்லது!//

சாதி மாறி கல்யாணம் பண்ணா சாதி ஒழுஞ்சிருமா?

வில்லன் said...

//நசரேயன் said...
//
இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ//

யோவ்.. இதுக்கு தான் போற வார இடத்திலே எல்லாம் துண்டு போடாம என்னை மாதிரி நல்ல பையனா இருக்கனுமுன்னு சொல்லுறேன்//

துண்டு போடுறதுக்கும் ஒரு மூஞ்சி வேணும்ல..... நம்ம பாத்தா துண்டு போடலாம்ம்னு நேனைக்குரதுக்குள்ள துண்ட தூக்கிட்டு ஓடி போயருவாங்கள.... என்ன பண்ண.... நம்ம பொறந்த நேரம் அப்படி அம்மாவாசை......

வில்லன் said...

//சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும்//

ரொம்ப வசதியா போய்ருக்கும். வரவன் போறவன் எல்லாத்துக்கும் சாதி சான்றிதல், பிறப்பு இறப்பு சான்றிதல் எல்லாம் குடுக்க காசு வங்கி குடும்பத்த ஒட்டிரலாம்ள... இப்படி வந்து அந்நிய நாட்டுல கண்டவன் பேச்செல்லாம் கேக்க வேண்டி வந்துருக்காது. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடிங்க போங்க.

வில்லன் said...

//இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ//


சரி பொண்ணு எப்படி இருந்துசின்னு சொல்லவே இல்லையே...... அதையும் சொல்லிடுங்க... இல்ல மண்டையே வெடிச்சிரும் போல இருக்கு ப்ளீஸ்.

வில்லன் said...

//இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ//

எங்க ஊருலயும் VAO இருக்கார் ஆனா பொண்ணு தான் இல்ல.... எல்லாம் ஒரு மச்சம்,நேரம் எல்லாம் நல்ல இருக்கணும்.......எதோ இப்ப இருக்குற VAO க்கு super பொண்ணு இருக்காம்.....இருந்து என்ன்ன பண்ண...... கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.....


உப்பு விக்க போனா மழை வருது. பஞ்சு விக்க போனா காதடிக்கி.... எல்லாமே தலைகீழ்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும்
\\

:)))))))))))))))))))

RATHNESH said...

முடிவு அருமையாக இருந்தாலும், லட்சுமணனுடனான உங்கள் பயண விவரிப்பை இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Vignesh said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Vignesh said...

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

Vignesh said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let's keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News