Wednesday, November 24, 2010

ஒபாமா அதிபராக உள்ள ஊரில் வாழும் முட்டாளின் கேள்வி?

நாஞ்சில் பிரதாப்™ 24 நவம்பர், 2010 7:11 pm
//தங்களின் தொண்டையில் மாட்டிய முள்ளாகிப்போனதை உணர்த்துகிறது.//

:))

சிலபேரு ஓபாமா ஊர்ல வேலைபார்க்கறதுனால தங்களையும் ஒபாமான்னே நினைச்சுட்டு இருக்காங்க அதான் பிரச்சனை... ஏன் அவங்களே இங்கவந்து இப்படி வாழ்ந்து காட்டட்டுமே...அதுக்கு மட்டும் கப்சிப்...இவங்கல்லாம் கலைஞர் மாதிரி ஊருக்கு உபதேசம் பண்ற கோஷ்டிகள்...
//
ஒபாமா அதிபராக உள்ள் அஊரில் வேலை பார்ப்பவர்களின் ஒருவராகிய நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நானும் திருமணம் செய்துதான் வாழ்கிறேன் எனக்கும் லிவிங் டுகெதரில் இருக்கும் பிரச்சினைகள் புரிகிறது, ஆனால் நான் சொல்வது என்னவென்றால் ஒருவன் லிவிங் டுகெதரில்(எந்த நாட்டிலும்) வாழ்ந்தால் அதில் தலையிடும் உரிமை எனக்கு இல்லை என்கிறேன். ஆனால் சிலர் "விபச்சாரம் விபச்சாரி" என்று கலாசாரத்தோடு பேசுகிறார்கள். இந்திய சுப்ரீம் கோர்ட் லிவிங் டுகெதர் தனிப்பட்டவர்களின் உரிமை/ தவறில்லை என்று கூறியிருப்பதாக அறிகிறேன், அந்த நீதிபதிகளும் திருமணம் ஆனவர்களாக இருக்கக்கூடும், லிவிங் டுகெதரில் நம்பிக்கை இல்லாதவர்களாவும் இருக்கக்கூடும், அதனை எப்படி அழைப்பார் நாஞ்சில் பிரதாப், மேலும் அவரிடம் இன்னொரு கேள்வி லிவின் டுகெதரில் இந்தியாவில் வாழும் யாரோ ஒருவரை எப்படி தடுப்பீர்கள்? அதற்கான செயல்முறை என்ன?

//கலைஞர் மாதிரி ஊருக்கு உபதேசம் //

லிவிங் டுகெதர் விசயத்தில் எனக்கு உபதேசம் செய்யும் உரிமை இல்லை என்பதே என் நிலை? உபதேசம் செய்வது யார்? சொல்லலாமே?

ஜோதிஜி என்ற பதிவர் கூறுகிறார்

செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !

பதிவுலகத்தில் மட்டும் முகவரி முகம் காட்டாமல் தங்களது நப்பாசைகளை கொட்டி தீர்க்க ஆட்கள் இருப்பதால்(?)//


எனக்குத் தெரிந்து லிவிங் டுகெதருக்கு ஆதரவாகவோ அல்லது அதை எதிர்க்க எமக்கு உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்தவர்கள் யாரும் யாரையும் விபச்சாரி/விபச்சாரம் செய்கிறவன் என்று கூறவில்லை, உலகத்தின் முகம் காட்டாமல் நப்பாசைகள் என்று கூறியிருக்கிறீர்கள். என்ன மாதிரி நப்பாசை என்று கூறலாமே.? தலையிட உரிமையில்லை என்பது நப்பாசையா?

லிவிங் டுகெதர் என்ற ஒரு ஒப்பந்ததில் வாழ்பவர்கள் உரிமையில் தலையிட எனக்கு உரிமையில்லை, அது எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுதான் என் நிலை, தலையிட உரிமை இருக்கிறது என்பவர்களில் சிலர் விபச்சாரி/விபச்சாரம் என்று பிரச்சாரம் செய்வேன் என்று நாகரிகத்துடன் கூறி விட்டார்கள், மற்றவர்கள் எப்படி தலையிடுவீர்கள் என்று தெளிவாக விளக்கவும். ஜெயந்தி அமுதா கிருஷ்ணா போன்ற பதிவர்கள் மிகத்தெளிவாக லிவிங் டுகெதரில் வரும் ஆபத்தை விளக்கியிருந்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றி.

தனி மனித தாக்குதல் யாருடைய பெயரைக்குறிப்பிட்டும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவே இது பற்றிய என்னுடைய கடைசிப்பதிவு.


தொடுப்புகள்.

http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_2071.html
http://sunmarkam.blogspot.com/2010/11/blog-post_24.html

Tuesday, November 23, 2010

மக்களாட்சி, முதலாளித்துவம், ஊழல்

மக்களாட்சி, ஊழல் முதலாளித்துவம் எல்லாம் பிரிக்க முடியாத புளிக்குழம்பு மாதிரி ஆகிவிட்ட நிலையில், ஊழலை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, இந்த வருடத்திற்கான ஊழல் இவ்வளாக இருக்கும் என்று கண்காணிப்புக்குழு வைத்து அதற்குத் தகுந்தாற்போல் ஊழல் பணத்தில் தேர்தல் நடத்தி, ஒரு ஓட்டுக்குக்கான குறைந்த தொகை இவ்வளவு, அதிகமாக வேட்பாளரின் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானலும் கொடுக்கலாம் என்று அரசே நிர்ணயம் செய்தால், ஊழல் பணத்தை வெளிநாட்டில் பதுக்குவதை தடுக்கலாம்.

ஊழல் பணமும் மக்களுக்கே அளிப்பதன் மூலம் இது மக்களாட்சி என்றும் மார்தட்டிக்கொள்ளலாம். ஊழல் பணம் மக்களிமே வந்து சேர்வதால் அவர்களில் சிலர் முதலாளி ஆகலாம், தொழில் தொடங்கலாம், அவர்களில் திறமையானவர்கள் மக்களாட்சியை ஊழல் மூலம் நிர்ணயிக்கலாம், சிலர் வேட்பளாரகலாம் இப்படியான ஒரு சுழற்சித்தததுவமே நாட்டின் இன்றைய தேவை என்று கூறி என் சீரிய சிந்தனையை உங்கள் முன் வைக்கிறேன்.

பஞ்சரான பஸ்கள்.

லிவிங் -டுகெதர் இருவரின் உரிமை அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்பவர்கள் பொத்திக்கொண்டு இருக்கலாம். அது கலாச்சார சீரழிவு தடுத்தே ஆகவேண்டும் என்பவர்கள் எப்படி தடுப்பார்கள். சும்மா டவுட்டுதான்.

கலாச்சாரம்கிறது மென்பொருள் மாதிரி(software) வெர்சன் 1.0 .2.0 அப்படின்னு வந்துகிட்டே இருக்கும். திடீர்னு ஹாட்டுவேர் இந்த சாப்ட்வேரையெல்லாம் சப்போர்ட் பண்ணாது , அப்புறம் புது சாப்ட்வேர், டெஸ்டிங் வெர்சனிங்க் இப்படி தொடர்ந்து தன்னை மாற்றியபடியே வலுவூட்டிக்கொண்டிருக்கும். சில பேரு திடீர் அந்தக்காலத்து மெயின்பிரேம் அவ்ளோ பெரிசு கட்டாயம் ஏசி வேணும், இந்தக்காலத்த்து காட்ஜெட்லாம் வாய்க்கா வரப்புல வெச்சுக்கிட்டு கட்டுப்பாடு இல்லாம திரியுது சீக்கிரம் கெட்டுரும் அப்படின்னு விமர்சனம் பண்ணுவாங்க, அதையும் உள்வாங்கி அடுத்த வெர்சன் சாப்டுவேர எழுதித்தானே ஆகனும்.

பார்ப்பானீயம் ஒரு சாதியைப் பற்றி பேசுவதில்லை என்றால் மற்ற மொழிகளில் அதன் பெயர் என்ன? பதிவா போடலாமா?

முட்டைகள் கூமுட்டைகள் ஆவதைத் தடுக்க, பீரோவால் முட்டை உற்பத்தி தடை செய்யப்பட்டதன் மூலம் கூமுட்டைகள் ஒழிக்கப்பட்ட புரட்சி நடந்தது, இப்போது எழும் முட்டையின் வடிவம் என்ன என்ற வரலாற்றுக் கேள்விக்கு விரைவில் பீரோவால் முடிவு செய்யப்படும்.

பிகு: பீரோ செவ்வக வடிவத்தில் இருக்கும் என்று நினைத்தால் அதற்கு இந்த பஸ் பொறுப்பல்ல.

நான் கலாச்சாரத்தை விட நினைச்சாலும் கலாச்சாரம் என்னை விடமாட்டேங்குது.இதில சில பஸ் பொருந்தாத் திருமணம் மாதிரி இருக்கும், கலாச்சாரத்துக்கு உட்பட்டு அவைகள் இணைந்தே இருக்கின்றன.

Monday, November 22, 2010

Marrige,Living Together - TIME ல் வெளிவந்த ஆராய்ச்சி

ஆராய்ச்சி

பிகு: மேற்குலக மொழியான ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை.

Tuesday, November 16, 2010

லிவிங் டுகெதர்- Living Together.


திருமணம் ஆகாத இருவர் சேர்ந்து வாழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்புடையதல்ல(இதுவும் மாறலாம்), ஆனால் யாரோ இருவர் திருமணம் என்ற ஒப்பந்தம் செய்யாமல், அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ஒப்பந்தந்ததுடன் சேர்ந்து வாழ்ந்தால் அதில் தலையிடும் உரிமை எனக்கு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, லிவிங் டுகெதரில் எனக்கு நம்பிக்கையில்லை என்பது கருத்து,

திருமணத்தை அனுமதிக்கமாட்டேன், லிவிங் டுகெதரை அனுமதிக்கமாட்டேன் என்பது வன்முறை.

நன்கு புரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.

Friday, November 5, 2010

நனவில் நிற்காதவை..

பெய்யாமழையில் நனைந்தாடும் ஈச்ச மரத்தின்
உதிராத இலைகளில்
வறண்டும்...
காய்க்கிறது காய்..

பாலையில்
புழுதி மண்ணாட்டி
புலர் பொழுதில்
அடித்து சென்ற காற்று
வரைந்து விட்டுப் போன
மணலோவியங்களில்
காலப் புள்ளிகளாக
ஒட்டகத் தடங்கள்

மெச்சுவதாயின் எனை மெச்சு
மணல் காற்றுக்கு ஈடு கொடுத்து
அடுக்காக நிமிர்ந்து நிற்கும்
ஒற்றை கள்ளி..

பேரீத்தம் பழத்திடம்
நெருங்கியமர்ந்து
பேரம் பேசும்
இரட்டை தேனீக்கள்..

வெப்பம் சுமந்த மண்ணில்
பெய்யாது நகர்ந்து போன
பொய் மேகம்..

இன்றோ
இந்தப் பிறவியில்..
நான் உண்ட பேரீச்சை..

பேரீத்தம் கொட்டை தாண்டி இலை வருகிறது
பனிமழை கொட்டியதும்
கொட்டியது இலை...Wednesday, November 3, 2010

கோழி அப்டேட்ஸ் - (அசைவம்).

சமீப காலங்களில் தொப்பையை குறைக்கிறேன் என்று ஓட் மீல்ஸ், ஆஸ்பரகஸ் வாரம் இருமுறை மீன் இப்படியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், ஆனாலும் குறையவில்லை காரணம் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் கொடும்பசியில் பத்து தோசை வரை சாப்பிட்டதுதான்.

அதனால் மீண்டும் வழக்கம்போல் சாப்பிடுவோம் என்று முடிவு செய்தேன், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் தீபாவளி டின்னருக்கு அழைத்திருந்தார்கள், வழக்கமாக செட்டிநாடு உணவகத்திலிருந்து உணவு வரும், இம்முறை வேறு இடத்திலிருந்து வந்தது சுத்தமாக சுவையற்ற சைவ உணவு, கடுப்புடன் அடுத்தநாள் கொஞ்சம் சிக்கனை அவனில் பேக் செய்து சாப்பிட்டு, அன்றைக்கு மதியம் இருந்த ஒரு பிறந்த நாள் விருந்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகை கோழி உணவுகளையும் உண்டாயிற்று. ஞாயிற்றுக்கிழமையாகிய அன்றே ஹச் மார்ட் என்ற கடைக்கு சென்று இரால், போர்ஜி என்னும் ஒரு வகை மீன் வாங்கி ஞாயிறு இரவும், திங்களும் ஓடியது, திங்கள் இரவுக்கு இரால் செய்யும் முன் பசிக்கும் என்பதால் ,பசிக்கு ஸ்வதேசியில் மட்டன் பிரியாணி வாங்கித் தனியாக தின்றேன், எதுக்கும் இருக்கட்டும் என்று பேக்கப்புக்காக வாங்கிய சிக்கனும் இன்றோடு முடிந்துவிட்டது.

உடம்பு பற்றிய அக்கறை மீண்டும் எழுகிறது எனவே நாளை முதல் சப்வேயில் foot long வீட் பிரட்டுடன் டர்க்கி பேகன் சாண்ட்விட் சாப்பிடலாம் என்றிருக்கிறேன். சனிக்கிழமை ஹச் மார்ட்டில் ஒரு பெரிய மீனை வாங்கி சுட்டுத்திங்கவேண்டும் என்றும் தொன்றுகிறது, இப்படிப்பட்ட நினைப்புகளோடு தொப்பையைக் குறைக்கமுடியாது என்றும் தெரிகிறது.

டயட்டு டயட்டுன்னு சொல்றாங்களே அதை எப்படி செயல்படுத்துறதுன்னு யாராவது விளக்கம் குடுங்க சாமியளா?

Monday, November 1, 2010

ரசனையால் ரசனை

பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.