Friday, April 2, 2010

நடராஜ நிலை நாரைபோல்

குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்கள் பருகியபடி
ஆடிக்கொண்டிருக்கும் பாலா

இல்லாத கழிப்பிடத்தில்
ஈர்ப்பியல்பில்லாதியங்கி
வழியெதுவும் தெரியாது
விரைந்து கொண்டிருக்கும் உச்சா..

தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெங்கே?

சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..!

10 comments:

அது சரி(18185106603874041862) said...

//
தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெங்கே?
//

அப்பிடி தொலைஞ்சு போன வேட்டியெல்லாம் கணக்கெடுத்தா தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, ஆந்திரா கர்நாடகா கேரளான்னு தென்னாட்டுக்கே இலவச வேட்டி குடுத்துருக்கலாம் தல!

(பாண்டிச்சேரிக்கு தேவையில்ல...நாட்டுல பாதி வேட்டி தொலையறதே அங்க தான்...)

குலவுசனப்பிரியன் said...

புலவரே மண்டபத்தில் வேறு யாரும் எழுதிக் கொடுத்ததை மறந்துவிட்டு சொந்தக் கதை சொல்கிறீர்களா?

Unknown said...

இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு

Anonymous said...

//சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..! //

இந்த வரிகள் நல்லா இருக்கு......

//கணவன் குடித்த போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..! //

மறுபடியும் டாஸ்மாக் போயிட்டு வந்துரவேண்டியது தான்...வேற வழி....

vasu balaji said...

அதாருங்க பாலா:))..வேட்டிய விட லுங்கிதான் சரியோ

vasu balaji said...

முகிலன் said...

/இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு/

அர்த்தமே இல்லைன்னாலும் இப்படிதான் சொல்லணும். இல்லாட்டி இது கூட புரியலையான்னு எளக்கியம் போஸ்ட் போயிடும்:))

கலகலப்ரியா said...

\\முகிலன் said...
இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு\\

இந்த விஷயம் குடுகுடுப்பையாருக்கு தெரியுமா...0))

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

வில்லன் said...

//
குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்கள் பருகியபடி
ஆடிக்கொண்டிருக்கும் பாலா//

உமக்கும் பதிவர் பாலாவுக்கும் எதாவது "துண்டு போடுறதுல" இல்ல பிரியாணி சாபிடுரதுல.. சண்டையா என்ன ?????? இப்படி போட்டு தாக்கிருக்கீறு..... பாவம் அவரு... ந்ஜோந்து நூடுல்ஸ் ஆகி உமக்கே சாப்பாடா ஆய்ருவாறு போல இருக்கு...

வில்லன் said...

//சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா

சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..!//

எந்த ஆணுக்காவது குடிச்ச போதை எறங்காம இருக்குமா பொண்டாட்டிய பாத்த பிறகு....