Sunday, August 16, 2009

கனவு முயற்சி தன்னம்பிக்கை


ஹரிணிக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சென்ற ஆண்டு என் மனைவி முடிவெடுத்து, என்னிடம் ஹரிணியை நீச்சல் வகுப்பிற்கு அனுப்ப போகிறேன், வாரம் இருபது நிமிடம் வகுப்பு, மாதத்திற்கு $85 கட்டணம் என்றாள், எனக்கு நீச்சல் தெரியும் நான் கற்றுக்கொடுக்கிறேன் என்றேன். உங்களை நம்பி நீச்சல் குளத்தில் பாப்பாவை விட முடியாது, முறையாக நீச்சல் கற்றுக்கொண்டால்தான் முடியும் என முடிவு செய்து, இரண்டு மாதம் அந்த வகுப்பில் நீச்சல் கற்றுக்கொண்டாள், பட்டிக்காட்டில் பிறந்த எனக்கு அவர்கள் நீச்சல் கற்றுக்கொடுக்கும் முறையில் ஏனோ மனம் ஒட்டவில்லை. ஒரு மாதத்தில் ஐஸ் ஸ்கீரீம் ஸ்கூப், floaty என சில புதிய வார்த்தைகள்தான் கற்றுக்கொண்டால் ஆனால் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நீச்சல் குளத்தில் நானே அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தேன், ஆனாலும் அவளிடம் பயம் போகவில்லை, கையை வீசி நீச்சலடிக்காமல் என்னைப்பற்றிக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள், ஆழம் என்னவோ மூன்று அடிதான் அவள் மூழ்கும் அளவுக்கு ஆழம் இல்லை. நான் அவளிடம் நீச்சல் என்பது தண்ணீரில் இருக்கவேண்டும், ஆனால் தரையைத்தொடாமல் இருக்க முயற்சிசெய்யவேண்டும் என்றேன்.

இரண்டு நாளில் கொஞ்சம் கொஞ்சமாக நான் சொல்வதில் அவளுக்கு நம்பிக்கை வந்தது, ஒரு நாள் அவளாக

I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it
I think I can really do it,I think I can really do it.

என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள், பின்னர் மூன்று மீட்டர் தூரத்தை கால் தரையில் படாமல் கடந்தாள்.இந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் ஆச்சர்யம் தருவதாக இருந்தது. அதே நாளில் தொடந்து பதினொரு முறை மூன்று மீட்டர் தொலைவைக்கடந்தாள். அவங்க அம்மாவை கூப்பிட்டு நீச்சலடித்து காண்பித்தாள், இன்னமும் மூன்று அடி ஆழப்பகுதியை தாண்டி நான்கு அடிப்பகுடிக்கு செல்வதில் அவளுக்கு பயம் இருக்கிறது, ஆனால் அவள் கடந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அவளுக்கும் நான்கு அடி ஆழப்பகுதியிலும் நீச்சல் கற்றுத்தந்துவிடுவார் என்று அப்பா மேல் நம்பிக்கை இருக்கிறது.

நீச்சலடிக்கவேண்டும் என்ற அவளின் கனவு, இலக்கை நோக்கிய விடாமுயற்சி,பயிற்சி, மனதினுள் அவளுக்குள்ளாகவே உருவாக்கிக்கொண்ட நம்பிக்கை எனக்கும் சிலவற்றில் நம்பிக்கையை அளித்திருக்கிறது.
---

நட்சத்திரப்பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், தொடர்ந்து நகைச்சுவைப்பதிவுகள் என்ற பெயரில் நான் எழுதுபவற்றை படித்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் நன்றி.

11 comments:

Jawahar said...

மிகச் சிறப்பானது. இந்தப் பதிவை வீடியோவுடன் போட்டதற்கு இரட்டை பாராட்டுக்கள். பார்க்கிற குழந்தைகளுக்கு உத்வேகம் வரும்.

http://kgjawarlal.wordpress.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீச்சல் வீராங்கனையா இப்ப ஹரிணி.. குட் குட்.. :)

நட்புடன் ஜமால் said...

நீச்சலடிக்கவேண்டும் என்ற அவளின் கனவு, இலக்கை நோக்கிய விடாமுயற்சி,பயிற்சி, மனதினுள் அவளுக்குள்ளாகவே உருவாக்கிக்கொண்ட நம்பிக்கை எனக்கும் சிலவற்றில் நம்பிக்கையை அளித்திருக்கிறது.]]

அருமை.

---------

நட்சத்திரம் நன்றாக மின்னியது.

வால்பையன் said...

சாதனை பெண் ஹரிணி வாழ்க!

நீங்களும் நீச்சல் அடிச்ச வீடியோவை போட்டிருக்கலாம்! கலாய்க்க வசதியாய் இருந்திருக்கும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do itI think I can really do it,I think I can really do it.
என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள், பின்னர் மூன்று மீட்டர் தூரத்தை கால் தரையில் படாமல் கடந்தாள்.இந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் ஆச்சர்யம் தருவதாக இருந்தது //

படிக்கின்ற எனக்குமே.

மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

குடுகுடுப்பை said...

நன்றி
ஜவர்லால்
முத்துலெட்சுமி
ஜமால்
வால்
அமித்து அம்மா

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ஹரிணி...!!!
எவ்வளவு அழகாக குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்!! :-)

உங்களை நம்பி அனுப்பிய ஹரிணியின் அம்மாவிற்கு வாழ்த்துகள்!! :-)

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ஹரிணி...!!!
எவ்வளவு அழகாக குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்!! :-)நன்றி
// உங்களை நம்பி அனுப்பிய ஹரிணியின் அம்மாவிற்கு வாழ்த்துகள்!! :-)//

:)))))))))))))))

அது சரி(18185106603874041862) said...

great!!!

அது சரி(18185106603874041862) said...

//
இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நீச்சல் குளத்தில் நானே அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தேன், ஆனாலும் அவளிடம் பயம் போகவில்லை
//

இது, கத்துக்குடுக்குறது யாருன்னு நல்லா தெரிஞ்சதால இருக்கும் :0)))

Prapa said...

நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.