Wednesday, October 28, 2009

பன்றி ஆராய்ச்சி உதவி தேவை.

உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, கண்டுபிடித்த மருந்து வேலை செய்கிறதா என்ற ஆராய்ச்சி, டாமிபுளு பன்றிக்காய்ச்சல் வந்த அனைவருக்கும் தேவையா ? இல்லையா? பன்றி ஃபுளூ,மற்ற ஃபுளூவைவிட எந்தவிதத்தில் அபாயமானது என்ற ஆராய்ச்சி, பன்றி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பன்றிக்காய்ச்சல் என்ற ஒன்றே இருந்திருக்காது என்ற தெளிவான ஆராய்ச்சி முடிவு.

இந்த மாதிரி ஆராய்ச்சிகளுக்கிடையில். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் காட்டுப்பகுதியில் வசிக்கிறார்.அவர் வீட்டு நாய் கொண்டுவந்த அவர் வீட்டருகே போட்ட இந்த மண்டை பன்றியினுடையதா என்ற சந்தேகத்தில் உள்ளார். இந்த முக்கியமான ஆராய்ச்சியை நாங்கள் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறோம்.


இந்த பன்றி மண்டை என் கைக்கெட்டும் தூரத்தில் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக உள்ளது. இது உண்மையாகவே பன்றி மண்டையா என பன்றியும் தெரிந்த பதிவர்கள் பின்னூட்டத்தில் எங்கள் ஆராய்ச்சிக்கு உதவலாம்.

பி.கு: பெப்பரோனி பிஸ்ஸா சாப்பிடுபவர்கள் எல்லாம் பன்றியும் தெரிந்தவர் என்றால், அந்த வகையில் நானும் பன்றியும் தெரிந்தவர் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆனாலும் இது பன்றி மண்டையா என எனக்கு தெரியவில்லை.

12 comments:

சுப்ரமணி said...

அடா கொக்க மக்கா,ஐயர் பயல் நீ
பெப்பரோனிப் பிக்ஸா தின்கிறியா??
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.பன்றி ஆராய்ச்சிக்கு முதல் உன் ஆராட்சி எனக்குத் தேவை
சுப்ரமணி

Anonymous said...

பாத்தாலே பயங்கரமா இருக்குது. என்னான்னு எனக்கு தெரியாதுப்பா

குடுகுடுப்பை said...

சுப்ரமணி said...

அடா கொக்க மக்கா,ஐயர் பயல் நீ
பெப்பரோனிப் பிக்ஸா தின்கிறியா??
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.பன்றி ஆராய்ச்சிக்கு முதல் உன் ஆராட்சி எனக்குத் தேவை
சுப்ரமணி
//

நீங்க அய்யரா , இல்லை என்னை அய்யருன்னு சொல்றீங்களா? சகலமும் தின்னும் நான்-ஐயர் நான்.

Kumky said...

ஜக்கம்மா.,
இவங்க அட்டூழியம் தாங்கமுடியலயே....

எது எப்படியோ குடுகுடுப்பை...அந்த பிராணியானது சிரிச்சுகிட்டே உயிர் விட்டிருக்கும்னு மட்டும் தோன்றது.

பித்தனின் வாக்கு said...

மேல்தாடை குறுகியும், கீழ் தாடை பெரிதும் ஆக இருந்து கடைவாய்ப் பற்கள் உள்ளதால் இது பன்றியின் தலைதான் என இந்த பன்னி உறுதியளிக்கின்றது. பற்களின் வரிசை அமைப்பு நாய்க்கு ஒத்து இருந்தாலும், கீழ் தாடையின் குழிவான அமைப்பு இது பன்றி என்பது எனது கருத்து. நன்றி.

ரவி said...

இன்றைக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடப்போறாங்க எனக்கு, மருத்துவரிடம் கேட்டுவருகிறேன்.

Unknown said...

பெப்பரோனி பிட்ஸா சாப்புடுற உங்களுக்கே தெரியலைன்னா, எங்களுக்கு எல்லாம் எப்புடி தெரியும்? ஆனா ஒண்ணு. இது கண்டிப்பா மனுசத்தலை இல்லை.. (அப்போ நீ மனுசக்கறி திங்கிறவானான்னு கேக்கப்படாது)

பழமைபேசி said...

அண்ணே, நல்லா இருக்கீங்களா?

SUFFIX said...

இது குட்டி டினோசர் மண்டை ஓடா இருக்கும்னு நினைக்கிறேன்!! அதை பத்திரமா அங்கேயே வச்சிருங்க.

வில்லன் said...

ரொம்ப முக்கியம். எதோ வேலையத்த மாமியா வீடசுத்தி எதோ பணிநாலாம் அந்த கதைய இருக்கு. வேலையத்த நாசுவன் பூனை மயித்த செரச்சானாம்.....

இப்படி சரியான மொக்கை பதிவு போட்ட எவன் கடைக்கு வருவான். போன் போட்டு தான் கடப்பக்கம் வரச்சொல்லி கெஞ்சனும் (என்ன கூப்பிட்ட மாதிரி).

வில்லன் said...

// செந்தழல் ரவி said...
இன்றைக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடப்போறாங்க எனக்கு, மருத்துவரிடம் கேட்டுவருகிறேன்.//

என்னது பன்னிக்கு போடுற ஊசிய உங்களுக்கு போடுறாங்களா???? நெசமாவா.......அப்பா உங்களுக்கு ஊசி போடுறத பாக்க நெறைய கூட்டம் வருமே!!!!!!!!

வில்லன் said...

எனக்கு இத பாத்தா எதோ முன்னோர்கள் மண்டை ஓடு மாதிரி இருக்கு. நல்ல மூக்கும் முழியுமா!!!!!!!!!!!