Monday, November 9, 2009

வில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.

கடந்த அக்டோபர் 24 அன்று , நசரேயனின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி கடலில் முத்து தவிர அனைத்தும் எடுத்தவருமான வில்லன் அவர்கள், வில்லாதி வில்லி(பெயர் உதவி நசரேயன்), மற்றும் மகளுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதிலிருந்து நசரேயன் சினிமா எடுக்க ஆசைப்படுவது நன்றாக தெரிந்தது, அதில் வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையிலேயே வில்லன் என்ற பெயரை பதிவுலகத்தில் பின்னூட்டமிட வைத்துக்கொண்டாராம்.

என்னுடைய பதிவுகள் நசரேயன் பதிவுகள் எல்லாம் படிப்பீர்களா என்று வில்லியிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் நசரேயனின் மனைவியின் நல்ல நண்பர், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போனில் பேசிக்கொண்டிருப்போம், அதனால் கண்ட குப்பைகளை படிக்க நேரமில்லை என்றார்.

வில்லன் அதிகம் டீ குடிக்கிறார், என்னுடைய மகளுக்கு பாட்டு கிளாஸ் இருந்ததால், எங்க வீட்டம்மா மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், நான் டீ போட்டு தருகிறேன் என்றேன், வில்லி அவர்கள் நான் நல்ல முறையில் டீ போட்டுத்தருகிறேன் என்றார்.அவர் விருப்பத்தை மீறமுடியவில்லை, அவரே இஞ்சியெல்லாம் போட்டு ஒரு அண்டாவில் டீ தயாரித்தார், நான் ஒரு டம்ளரும் வில்லன் அவர்கள் மூன்று டம்ளரும் குடித்தோம். இதற்கிடையே வெளியே சென்றிருந்த மகளும், அம்மிணியும் வந்துவிட்டனர்.

பரவாயில்லையே டீ போட்டு வெச்சிருக்கீங்க என்றபடியே அண்டாவில் இருந்து ஒரு டம்ளர் டீயை எடுத்துக்கொண்டார், குடிக்கும் முன்னர் டீ போட்டது வில்லி எனச்சொல்லிவிட்டேன். டீ நல்லா இல்லைன்னு சொல்ல வாய்ப்பில்லை என்பதால், டீ சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. அண்டாவில் மிச்சமிருந்த டீயை வில்லனும் நானும் மீண்டும் சுடவைத்து குடித்தோம்.

இடையில் நசரேயனுக்கு வில்லன் போன் பண்ணி படத்துக்கு ஹீரோ கிடைத்துவிட்ட செய்தியை சொன்னார்.நசரேயன் டைரக்டரானால் விரைவில் உங்கள் அபிமான ஹீரோவை வெள்ளித்திரையில் காணலாம்.கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இப்படியே போனது, இந்த நேரத்தில் வில்லனின் மகள் எந்த சலனமும் இல்லாமல் டோராவை பார்த்துக்கொண்டிருந்தார்.

போனில் பேசும்போது நசரேயன் அவர் வீட்டுக்கு வரச்சொன்னார், வரும்போது நிறைய துண்டு வாங்கிவரச்சொல்லி இருக்கிறார்,வீட்டில் இருந்த துண்டு, அவர் ஊர் கடைகளில் உள்ள துண்டுகளையெல்லாம் யாருக்கோ எதற்கோ போட்டு விட்டாராம்.

சந்திப்பில் நடந்தவைகளை 95% மிகைப்படுத்தி எழுதி பத்திரிகை தருமத்தை காப்பாற்றியிருக்கிறேன்.

இரண்டாவது சந்திப்பு.

கல்லூரி நண்பன் சென்னையில் வசிக்கிறான், ஹீஸ்டனில் ஒரு வருடம் ஆன்சைட் அசைன்மெண்டுக்காக வந்திருக்கிறார், இந்தவாரம் டாலஸூக்கு மனைவி, மற்றும் குழந்தையுடன் வந்திருந்தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். வெள்ளிக்கிழமை காலையிலேயே சொல்லிவிட்டான் சரக்கு வாங்கி வைக்கச்சொல்லி, என் புண்ணியத்துல நீயும் உன் புண்ணியத்துல நானும் அடிக்கவேண்டியதுதான், உன் பேர சொல்லி மனைவிகிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்னு சொன்னான். வெள்ளிக்கிழமை மாலை வேறு வேலைகளால் குறித்த நேரத்தில் அவன் வாங்கி வைக்கச்சொன்ன ஹாட் வாங்க முடியவில்லை. இதற்கிடையில் சரக்கு வாங்கியாச்சா என உறுதிப்படுத்திக்கொள்ள நண்பன் போன் பண்ணினான், இல்லடா இன்னும் சரக்கு வாங்கவில்லை என்றேன். டேய் எப்படியாவது வாங்கி வெச்சிருடா, இன்னொரு ஃபிரண்ட் வேற வராப்ல நைட்டே ஊத்திருவோம்னான். நான் இருக்கும் ஊரில் ஹாட் லிக்கர் விற்க தடையாம் நல்லவனான எனக்கு இது தெரியாது,மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கரோனாவை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நடுச்சாமத்தில் வந்து சேர்ந்தான் நண்பன், அவனுடன் வந்த அவன் மகனை பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி, என் வீட்டம்மா கேட்டபோது அவனுக்கு பெண் குழந்தை என்று சொல்லியிருந்தேன். அவர்களிடமும் சிரித்துக்கொண்டே சொன்னேன். நண்பனின் மனைவி உங்க பெண்ணுக்கு என்ன வயசு எனக்கேட்டார், ஆறு வயது என்றேன். ஆறா இவரு நாலுன்னுல்ல சொன்னாரு, ஆனாலும் பரவாயில்லை ஆண் பிள்ளைன்னு சொல்லலை அப்படின்னார்.

அடுத்த நாள் பகல் பொழுது வீட்டில் சென்றது, அதே நாளில் ஹாலோயின் திருவிழாவும் வந்ததால் , வீட்டிற்கு கேண்டி வாங்க நிறைய குழந்தைகள் வந்தனர், என் மகளும் , நண்பரின் மகனும் கேண்டி வாங்க சென்றுவிட்டனர். நான் எங்களுக்கான கேன் டீ வாங்க, டாலஸில் இருக்கும் குடி குடி (goodygoody) என்ற கடைக்கு சென்று சரக்கு வாங்கினேன், சரக்கு விற்பவர் எனக்கு 21 வயது ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள அடையாள என்னிடம் மட்டும் கேட்டார், என்னுடன் வந்த திருமணம் ஆகாத என் நண்பரின் நண்பனிடம் கேட்கவில்லை, நான் என்னுடைய அடையாள அட்டையை காண்பித்து 23 வயது ஆன விசயத்தை உறுதிப்படித்தியபின்னரே சரக்கு விற்றார்.

கொஞ்சமாக குடித்தோம், அப்போது சில உண்மைகள் வெளிவந்தது, என் நண்பர் பர்மிசன் வாங்காமல் நன்றாக திட்டு வாங்கியிருக்கிறான் என்று நண்பரின் நண்பர் சொன்னார். அப்படியே நீங்க பிளாக் படிப்பீங்களா, உங்க கம்பியூட்டர்ல தமிழ்மணம், பிளாக்ஸ்பாட் உரல் மட்டும்தான் ஹிஸ்டரில இருக்குன்னு கேட்டார்.

ஆமாம் படிப்பேன் நான்கூட குடுகுடுப்பை என்ற பெயரில் பதிவு எழுதுகிறேன் என்றேன். ஓ நீங்கதான் குகுவா நான் உங்க பிளாக் படிப்பேன், வடிவேலு கமல்ஹாசன் உரையாடல் சூப்பர் அப்படின்னார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி, நான் இப்பொழுது நேரமின்மையால் அதிகம் படிப்பதுமில்லை எழுதுவதும் இல்லை என்றேன்.

இரவு முழுவதும் கள் ஊறும் கல்லூரி நினைவுகள் ,முதல் மின்னசோட்டாவில் ஏழு வருடம் முன் சந்திந்தது வரை நிறைய பேசினோம். நண்பன் இப்போது நல்ல நிலையில் உள்ளான், எனது மனைவி அவரைப்பற்றி ரொம்ப, ரொம்ப நல்லவரா இருக்கிறார் அப்படின்னு ஆச்சர்யப்பட்டார்.

கொஞ்சம் பின்னால் சென்னைக்கு செல்வோம், படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம், இரவு பகலாக படிப்போம் ஆனால் இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய ஒருவித தயக்கம்,வேலை தேடும் முயற்சியே செய்யாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக போயிருந்தது. அந்த நேரத்தில் இந்த நண்பன் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான், அவனாகவே என்னுடைய ரெஸ்யூம் உள்ள பிளாப்பி டிஸ்க்கை எடுத்து, பிரிண்ட் எடுத்து அவனுடைய கம்பெனியில் கொடுத்து இண்டர்வியூ ஏற்பாடு செய்தான், வேலையும் கிடைத்தது. அவன் இந்த உதவியை செய்யாமல் போயிருந்தால் நான் இண்டர்வியூ பயத்தில் எதுவும் செய்யாமல் வாழ்க்கையில் வீணாகப்போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.இவ்வளவு பெரிய உதவி செய்த அவனுக்கு நன்றி என்று வாய் திறந்து இதுவரை சொன்னதில்லை.

வேலை தேடுபவர்கள் முதலில் செய்யவேண்டிய கடமை, தேடும் துறையில் நல்ல அறிவுடன் இருக்கவேண்டும், அதற்கு இரவு பகல் பாராமல் உழைக்கத்தேவையிருந்தால், அதை செய்யவேண்டும், இண்டர்வியூ பயங்களை கண்டிப்பாக நீக்கவேண்டும். என் நண்பர் போன்ற நல்ல நண்பர்கள் எல்லாருக்கும் கிடைப்பார்களா என்று சொல்லமுடியாது, அப்படியே கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்றும் சொல்லமுடியாது.

பில்டிங்க் ஸ்டராங்க் பேஸ்மேண்ட் வீக்கு அப்படி என்ற நிலை இல்லாமல், முதலில் இலக்கு நோக்கிய தயாரிப்பு, இண்டர்வியூ, நட்பு வட்டாரத்தின் உதவி என்று இருந்தால் எந்த இலக்கும் சாத்தியமே.

10 comments:

வில்லன் said...

பதிவில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால்....... நண்பர் குடுகுடுப்பை ஒரு நாள் அவசரமாக போன் செய்தார். வில்லன் எங்கள் வீட்டில் ஒரு விழா ஏற்பாடு செய்திருக்கிறோம், இதுவே எங்க ஊரா (இந்தியா) இருந்தால் காசு கொடுத்து நெறையபேர வாழ்க போடவும் கைதட்டவும் ஏற்பாடு செய்திருப்பேன் இங்க யாருமே சிக்கல என்றார். சரி என்ன கூலியா கொடுபிங்க என்று கேட்டேன்....நல்ல செட்டிநாடு சாப்பாடு (வத்த கொழம்போட) கெடைக்கும் என்று சொன்னார். மனசுல ஒரு சின்ன நற்பாசை. இருக்குற எகோனோமில மூணு பேருக்கு செட்டிநாடு போய் சாப்பிடனும்னா கொறஞ்சது நாற்பது வெள்ளி வேணும். நல்ல சாப்பாட ஏன் விடுவானேன்னு சரி நான் வரேன் என்று சம்மமதம் தெரிவித்தேன். சரியான நேரத்துக்கு வரணும் வந்து என்ன பத்தி நல்லா துதி பாடனும், வாழ்க போடணும் கைதட்டனும்னு ஏகப்பட்ட கண்டிடின். சரின்னு இருபத்தி நாலாம் தேதி 11 மணியளவில் அண்ணன் குடு குடுப்பை வீட்டை நோக்கி எங்கள் பழைய வாகனத்தில் (1987 மேக்) மெதுவாக பயணத்தை தொடர்ந்தோம்.... ட்ராபிக் மற்றும் பல்வேறு இன்னல்களால் சிறிது தாமதம். அதற்குள் பத்து முறை போன் வந்தது. எங்க இருகிங்க!!! வந்த எல்லாரும் கெளம்ப போறாங்க சீகிரம் வந்து சொன்னத செய்யுங்கன்னு...என்ன பண்ண!!! வாகனம் மெதுவாகவே ஊர்ந்தது. எப்படியோ போய் சேர்ந்தோம். அனேகமாக எல்லாரும் சாப்பிட்டாகி விட்டது... சொன்ன வேலைய கச்சிதமா செய்து முடிச்சேன் முயன்ற மட்டும். அவங்க தங்கமணிய பாக்கும்போதெல்லாம் குடுகுடுப்பை நல்லவரு வல்லவரு அப்படின்னு ஒரே துதி பாடினேன்.

எப்படியோ வத்த கொளம்பு சோறு கெடச்சது. சாப்பிட்டு விட்டு கெளம்பலாம்னு பாதா, சொன்ன வேலைய ஒழுங்கா செய்யல அதனால இந்த பாத்திர பண்டங்கள கழுவி கொண்டு போயி செட்டிநாடு கடைல கொடுக்க ஒழுங்கா உதவி செய்யுங்கன்னு சொல்லி எங்க ஐதர் அலி காலத்து வண்டி சாவிய புடிங்கி வச்சுட்டாரு. என்ன பண்ண. கழுவி சுத்தம் பண்ணி எடுத்துட்டு அவரு வண்டில கூட்டிட்டு போனாரு... அந்த மாதிரி வண்டில மொத மொதல்ல பயணம். குளு குளுன்னு ac போட்டு அசத்திட்டாரு. அந்த மாதிரி வண்டில முதல் முதல்ல பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. போகும் வழில பலதரபட்ட உரையாடல்கள். இந்தியா இலங்கை மற்றும் அமெரிக்க அரசியல், நடப்பு பத்தி. அப்புறம் சொன்ன மாதிரி நசரேயன் போன், டீ எல்லாம் முடித்து கெளம்ப 7 மணி ஆகிவிட்டது.

பின்குறிப்பு :

இன்று காலை மீண்டும் அண்ணன் குடுகுடுப்பை இடம் இருந்து தொலைபேசி அழைப்பு. வில்லன் சொன்ன வேலைய அன்றைக்கு சரியாய் செய்யல அதனால இன்னொரு நாள் வீட்டுக்கு வந்து தங்கமணி கிட்ட என்ன பத்தி நல்லா துதி பாடனும்னு. நல்லா பாடினா விருந்து wineநோடன்னு .... சரி கெடைக்கும் வாய்ப்பை ஏன் விடுவானேன்னு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னிக்கு வரணும்னு அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் வில்லன்..........

நசரேயன் said...

//போனில் பேசும்போது நசரேயன் அவர் வீட்டுக்கு வரச்சொன்னார், வரும்போது நிறைய துண்டு வாங்கிவரச்சொல்லி இருக்கிறார்,வீட்டில் இருந்த துண்டு, அவர் ஊர் கடைகளில் உள்ள துண்டுகளையெல்லாம் யாருக்கோ எதற்கோ போட்டு விட்டாராம்.//

இப்ப எல்லாம் கழுத்துக்கு தான் துண்டு வருது

வில்லன் said...

//குடி குடி (goodygoody) என்ற கடைக்கு சென்று சரக்கு வாங்கினேன், சரக்கு விற்பவர் எனக்கு 21 வயது ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள அடையாள என்னிடம் மட்டும் கேட்டார், என்னுடன் வந்த திருமணம் ஆகாத என் நண்பரின் நண்பனிடம் கேட்கவில்லை, நான் என்னுடைய அடையாள அட்டையை காண்பித்து 23 வயது ஆன விசயத்தை உறுதிப்படித்தியபின்னரே சரக்கு விற்றார்.//

இந்த நக்கலு தான வேண்டாம்கறது. எனக்கு கூட தெரியும் இந்த குடி குடி (goodygoody) கடை. கடை ஒனரு தமிழ்காரன்னு நெனைக்கேன் அதான் சரியான பேரு வச்சுருக்கான் கடைக்கு குடி குடி (goodygoody) ன்னு.

அவன் உங்கல பாத்து இந்த பெரியவருக்கு என்ன இந்த வயசுல குடி வேண்டி கெடக்குன்னு நெனச்சு அடையாள அட்டை கேட்டுருப்பான். பக்கத்துல நின்ன அந்த பால் குடி மறவாத அந்த பச்ச புள்ளைய (திருமணம் ஆகாத என் நண்பரின் நண்பனிடம்) பாத்து இறக்கப்பட்டு கொடுதுருப்பான் சரக்கு... ரொம்ப தான் நெனப்பு.

வில்லன் said...

/எனது மனைவி அவரைப்பற்றி ரொம்ப, ரொம்ப நல்லவரா இருக்கிறார் அப்படின்னு ஆச்சர்யப்பட்டார்.//

அப்படின்னா எங்கள பத்தி என்ன சொன்னாங்க. எடுத்து விடும் அதையும். கண்டிப்பா இந்த மாதிரி நல்லா சொல்லி இருக்க வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் ரொம்ப ஒன்னும் மோசமா திட்டலையே!!!!.....

அடுத்த நேரம் கிங்க்ஜக் அடிக்க வரும் போது உள்ள விடுவாங்களா இல்ல வாச படிய டமுன்னு சாதி வெற்டிருவாங்களா?

Unknown said...

//இடையில் நசரேயனுக்கு வில்லன் போன் பண்ணி படத்துக்கு ஹீரோ கிடைத்துவிட்ட செய்தியை சொன்னார்//

வில்லன் என்னைப் பார்க்கவே இல்லையே அப்புறம் எப்படி ஹீரோ கிடைத்து விட்டதாக நசரேயனிடம் சொன்னார்? என் ஃபோட்டோ எதையாவது காட்டினீர்களா என்ன?

// நான் என்னுடைய அடையாள அட்டையை காண்பித்து 23 வயது ஆன விசயத்தை உறுதிப்படித்தியபின்னரே சரக்கு விற்றார்//

எத்தனை வருசத்துக்கு முன்பு 23 வயது?

ஆனா ஒன்னு, எவ்வளவு மொக்கையா பதிவு போட்டாலும் கடசியில ஒரு மெசேஜ் சொல்றிங்க பாருங்க, அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

Kumky said...

:-))

பதிவும் பின்னூட்ட வில்லத்தனமும் கலக்கல்ஸ்....

ஷண்முகப்ரியன் said...

வேலை தேடுபவர்கள் முதலில் செய்யவேண்டிய கடமை, தேடும் துறையில் நல்ல அறிவுடன் இருக்கவேண்டும், அதற்கு இரவு பகல் பாராமல் உழைக்கத்தேவையிருந்தால், அதை செய்யவேண்டும், இண்டர்வியூ பயங்களை கண்டிப்பாக நீக்கவேண்டும். என் நண்பர் போன்ற நல்ல நண்பர்கள் எல்லாருக்கும் கிடைப்பார்களா என்று சொல்லமுடியாது, அப்படியே கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்றும் சொல்லமுடியாது. //

a good advice,sir.

RAMYA said...

குடுகுடுப்பை பதிவு ரொம்ப சூப்பர்!!

எப்படியோ மறைத்த உண்மைகளை வில்லன் போட்டு உடைச்சுட்டாறு
நண்பர்கள் சந்தித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

நல்ல அனுபவம் இல்லையா குடுகுடு! நண்பர் நசரேயன் அவர்களுக்கு துண்டு கிடைச்சுதா இல்லையா??

கிடைக்கலேன்னா திருப்பூர்லே இருந்து வாங்கி அனுப்பறோம்.

சரி வில்லன் குடும்பத்துக்கு மட்டும்தான் சாப்பாடு போடுவீங்களா?

குடுகுடு எங்களுக்கெல்லாம் சாப்பாடு கிடையாதா:(

ஆனா ஒன்னும் சாப்பாடு போட்டு உங்களைபத்தி உயர்வா சொனாதான் விடுவீங்க போல :)

இல்லேனா மாவாட்டனுமா?

அது சரி :)

உங்க பதிவும் நல்லா இருக்கு வில்லன் பின்னூட்டத்திலே கொடுத்த விவரமும் சூப்பர்!

பித்தனின் வாக்கு said...

நல்ல மலரும் நினைவுகள். பிரிந்த நண்பர்களை சந்திப்பது என்பது அலாதியானது. நன்றி குடுகுடுப்பையாரே.

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் நன்றி.