Tuesday, November 4, 2008

நம்பர் ஜாக்பாட் - TCO 9663.

சின்ன வயசில கோடை விடுமுறைக்கு பட்டுக்கோட்டைல இருக்கிற தாத்தா வீட்டுக்கு போவோம். எங்க ஊருல பஸ்ஸெல்லாம் கெடயாது, அதுனால தாத்தா வீட்டு வாசல்ல உக்காந்து போற வர்ற பஸ்ஸ வேடிக்கை பாக்கிறதுதான் முக்கியமான வெளயாட்டு.தாத்தா வீடு இருக்கிற இடம் மதுக்கூர் ரோடு,ஆனாலும் எதிர்த்தாப்ல போற முத்துப்பேட்டை ரோட்ல போற பஸ்ஸயும் பாக்கலாம்.பஸ்ஸே பாக்காத பட்டிக்காட்டான் ரெண்டு ரோட்டுல போற பஸ்ஸ பாத்து ஒரே சந்தோசந்தான்.

அப்போ எனக்கு 10 வயசுக்குள்ளதான் இருக்கும், எங்க சின்ன மாமாதான் எங்களுக்கு கூட்டாளி, அவருக்கு என்னோட பத்து வயசு கூட இருக்கும். பக்கத்தில இருக்கிற அதிராம்பட்டினம் காலேஜ்ல படிச்சிட்டுருந்தாரு.கிராமத்திலேந்து வர்ற எங்களுக்கு எங்க தாத்தா செலவுக்கு காசு கொடுப்பாரு அத வெச்சி எதித்தாப்ல உள்ள போணி கடைல போண்டா வாங்கி சாப்புடுவோம்.

எங்க மாமா அவருக்கு சிகரெட் அடிக்க அந்த காச எங்ககிட்டேர்ந்து புடுங்க ஒரு வழி கண்டுபிடிச்சாரு, அதுதான் இந்த நம்பர் ஜாக்பாட் கேம்.
மதுக்கூர் ரோட்ல அடுத்து வர்ற பஸ்ஸோட ரெஜிஸ்ட்ரேசன் எண்ணோட கூட்டுத்தொகை யாரு சரியா சொல்ராங்களோ அவர்தான் கேம் வின்னர்.(9+6+6+3 =24 = 2+4 =6). இந்த கேம்ல ஜெயிக்கிறவங்களுக்கு 25 காசுன்னு நெனக்க்கிறேன். எப்பயுமே அவருதான் ஜெயிப்பாரு ஏன்னா அவருக்கு அந்த ரோட்ல போற பஸ்ஸெல்லாம் அத்துப்படி. ஆனாலும் இந்த கேம் ஒரு பைத்தியம் மாதிரி தொத்திக்கிச்சு, முழு நேரமும் தாத்தாகிட்ட காச வாங்கி மாமாவோட கத்தரிக்கோலுக்கு உதவியா இருந்தோம்.

இந்த கேம் எனக்கு கொடுத்த ஒரு பழக்கம் என்னன்னா எந்த வாகனம் போனாலும் நம்பர் பிளேட் படிக்காம விடமாட்டேன்.காலேஜுக்கு போனப்புறமும் இது தொடர்ந்துச்சு, கேமா வெளயாடரதுல்ல ஆனா சும்மா சில நண்பர்கள்கிட்ட ரோட்ல போகும்போது எதித்தாப்ல வர்ற பஸ் நம்பர சொல்லிட்டே தம் அடிச்சிக்கிட்டு போவோம்.

அப்படி ஒரு நாள் போகும் போதுதான் என்னோட மாமா இறந்து விட்டார் என்ற தந்தி வந்தது.குடிப்பழக்கத்தினால் தன் காதலை இழந்து,காதலை இழந்ததால் மேலும் குடி அதிகமாகி ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 32. இந்த நம்பர் பிளேட்டை பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் வரும். அமெரிக்கா வந்த பிறகு அவ்வளவாக நம்பர் பிளேட் அவரை ஞாபகப்படுத்துவதில்லை இன்னும் சொல்லப்போனால் மறந்தேவிட்டேன். ஆனால் புதுகை.அப்துல்லாவின் தீபாவளி நினைவுகள் பதிவு எங்கள் நண்பன் மாமா அறிவழகனை ஞாபகப்படுத்திவிட்டது.

15 comments:

பழமைபேசி said...

உள்ளேன் அண்ணே!

கபீஷ் said...

ஐய்யோ! பாவம் உங்க மாமா!

நசரேயன் said...

இப்போதைக்கு உள்ளேன், அப்புறமா விவரமா போடுறேன்

நசரேயன் said...

நானும் உங்க வருத்தத்துல பங்கு கொள்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-(((((((((

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி.

50 வது பதிவு விரைவில்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பஸ்ஸே பாக்காத பட்டிக்காட்டான் ரெண்டு ரோட்டுல போற பஸ்ஸ பாத்து ஒரே சந்தோசந்தான்.

பஸ்ஸே பாக்காத பட்டிக்காட்டான் இப்ப இருக்குறது அமெரிக்கால.
-ம்ஹீம் காலம்தான் எவ்வளவு மாற்றங்களை கொண்டுவருகிறது.

போணி கடைல போண்டா வாங்கி சாப்புடுவோம்.
அப்பயே ஆரம்பிச்சாச்சா

முழு நேரமும் தாத்தாகிட்ட காச வாங்கி மாமாவோட கத்தரிக்கோலுக்கு உதவியா இருந்தோம்.
எதித்தாப்ல வர்ற பஸ் நம்பர சொல்லிட்டே தம் அடிச்சிக்கிட்டு போவோம்.
அப்ப இப்பயும் கத்தரிக்கோலு தானா

அப்படி ஒரு நாள் போகும் போதுதான் என்னோட மாமா இறந்து விட்டார் என்ற தந்தி வந்தது
ஆழ்ந்த அனுதாபங்கள்.

எங்கள் நண்பன் மாமா அறிவழகனை ஞாபகப்படுத்திவிட்டது.

எங்கள் நண்பன் மாமா - நல்ல உறவு.
மேம்படுவதற்குள் கடவுளுக்கு அவசரம்.

தமிழ் அமுதன் said...

மதுக்கூர்,முத்துபேட்டை,அதிராம்பட்டினம்
பட்டுக்கோட்டைனு,ஊர நெனைக்க வைச்சுடீங்க

மாமா காதலுக்காக குடி பழக்கத்த விட்டிருக்கலாம்
வருத்தமா போச்சு!


நம்ம மதுக்கூர் பக்கம் வந்துருக்கியளா?அண்ணே ?

RAMYA said...

மாமாவின் மறைவு மிகவும் சங்கடமா போச்சுது. காதலுக்காக உயிர் தியாகம் என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நண்பா மாமா அறிவழகன் நினைவு உனக்குள்ளே ஒரு ஓரமா இருந்துகொண்டுதான் உள்ளது.

சரி, இப்பவும் பஸ் நம்பர் பார்த்து கொண்டே தம் அடிப்பது உண்டோ? அமெரிக்காவிலுமா ??????????

ரம்யா

குடுகுடுப்பை said...

வருகைகு நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,ஜீவன் மற்றும் ரம்யா.

Arizona penn said...

சில சமயங்களில், பல மைல்கள் தூரத்தில் இருந்தாலும், ஒரு சிறு விஷயம் போதும், நமது சிறுவயது சம்பவங்களை ஞாபகப்படுத்த !!!!!

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி selwilki

rapp said...

எல்லாருக்குமே இவைகள் உண்டென்றாலும், பண்டிகை சமயங்களில் நிகழும் சம்பவங்கள் நம்மை அடிக்கடி வருடிச் செல்லும்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ராப்

புதுகை.அப்துல்லா said...

ஒன்னாப்பு படிக்கிறப்ப வீட்டோட சிலோனுக்கு போனோம். அங்க எங்க பார்த்தாலும் தென்னமரம். பின்னர் ஒரிரு மாதம் கழித்து பட்டுக்கோட்டைக்கு ஏதோ ஒரு விஷேசத்துக்குப் போனோம். பேருந்து பட்டுக்கோட்டையை நெருங்க நெருங்க அடர்ந்த தென்னந்தோப்புகளாக வரத்துவங்கியது. அதைப் பார்த்து நான் ஹையா! சிலோன் வந்துருச்சுன்னு கத்தினோன். உங்க பதிவைப் பார்த்ததும் அந்த நினைவுகள் வந்துருச்சு