Tuesday, September 2, 2008

புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர்

வலைத்தளத்தில் மென்பொருளாளர்களை காழ்ப்புணர்சியோடு நிறைய பேர் கொத்தடிமை என்றெல்லாம் திட்டுகிறார்கள். அம்மாதிரி ஒரு பதிவில் எங்கோ படித்த பின்னூட்டத்தில் புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர் போன்ற ஒரு ஆரோக்கியமான சர்ச்சையும் பார்க்க முடிந்தது. அதையே கொஞ்சம் மொக்கையா நம்ம பதியாலாம்னு…

புராடக்ட் மென்பொருளாளர்:

ஒரு புராடக்ட் எப்பவுமே தரமா இருந்தாதான் அதை வாங்குவாங்க அதுனால இவங்க எப்பவும் ஏன்? எதற்கு? எப்படி ? என்று பல கேள்விகள் கேட்டு நல்ல தரக்கட்டுப்பாட்டுடன் தான் டெலிவெரி பண்ணுவார். இதனால இவர்கள் வாரத்திற்கு ஒரு பதிவுதான் போடமுடியும்.

கிடைக்கிற நேரத்தில் நிறைய படிப்பார்கள். அதனை எப்படியாவது தன்னோட புராடக்ட்ல ஒரு வசதியா கொண்டு வர முயற்சிப்பாங்க, அதுனால் அதிகம் பின்னூட்டமெல்லாம் போடமாட்டாங்க. மாதத்திற்கு சில பின்னூட்டங்கள் இடுவார்கள்.

சர்வீஸ் மென்பொருளாளர்:

இவருக்கும் சரி இவரை உபயோகப்படுத்துறவரும் சரி எதுவா இருந்தாலும் உடனே வேனும், பிரச்சினை உடனே தீரனும். தரமெல்லாம் ஒரு பொருட்டே கெடயாது. (அப்பதான் பிரச்சினை வரும் தீத்துகிட்டே இருக்கலாம்). இந்த காரணங்களால் இவர்கள் குறைந்தது வாரத்திற்கு 3 அல்லது 4 பதிவுகள் போடுவார்கள்.

எப்பயுமே எதையாவது தேடிக்கிட்டே இருப்பார்கள் (வெட்டி ஒட்ட). பதிவு படிச்சு நிறைய பின்னூட்டமெல்லாம் போடுவார்கள். அடிக்கடி மறுமொழி திரட்டிகளில் பெயர் வரும்.

-------------------------


இந்த இரண்டு தரப்பை சேர்ந்த சிலர் கிடைக்கிற நேரத்தில் நிறைய படிப்பாங்க ஆனால் பதிவோ, பின்னூட்டமோ போடமாட்டாங்க.


இந்த இரண்டு பக்கத்திலும் தவறு நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. புராடக்ட்காரங்க மொக்கையாவும் குடுக்கவும் சர்வீஸ் காரங்க நல்லதா கொடுக்கவும் வாய்ப்புகள் உண்டு. பொதுவா சொன்னா இரண்டு மென்பொருள் தரப்பினரும் ரொம்ப flexible, தேவைக்கேற்ப மாறிப்பாங்க.

மொத்தத்தில் கஸ்டமர் சாட்டிஸ்பேக்ஸன்(!) தான் முக்கியம் என்கிற மந்திரத்தை
மீறாதவர்கள்.


மொத்தத்தில் இரண்டு தரப்பும் சக்கையும், மொக்கையும் கலந்த பதிவுகளை தர வல்லவர்கள்.

அப்போ நான் யாரு?


நான் இந்த இரண்டு தரப்பையும் சேராத ஒரு துன்பதிவாளர்.


பி.கு: இந்த பதிவை படிக்காத யாரிடமும் நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்பதை துணிச்சலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா.

மீள்பதிவு காலம்.

21 comments:

Anonymous said...

//உடனே தீரனும். தரமெல்லாம் ஒரு பொருட்டே கெடயாது. (அப்பதான் பிரச்சினை வரும் தீத்துகிட்டே இருக்கலாம்). //

அது மேட்டரு.

ம்ம்ம் இந்த மாதிரியெல்லாம் எப்ாடி யோசிக்கறீங்க?
அநேகமா நா முத... ம்ம் என்ன பத்தி நானே சொல்லக்கூடாது!!!

Anonymous said...

:))) me the first !!!!!!

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஹை சுபாஷ்

சின்னப் பையன் said...

:-)))))

குடுகுடுப்பை said...

வாங்க ச்சின்னப்பையன்
எதயாவது எழுதிட்டுபோங்க

Tech Shankar said...

Product Manager Vs Service Engineer

Good Yaar.

How did you think like that. Great

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம்

ஜக்கம்மாவிற்கு ரெண்டு அனுபவமும் உண்டுங்க.

உடன்பிறப்பு said...

போடுங்கம்மா ஓட்டு குடுகுடுப்பைய பாத்து

குடுகுடுப்பை said...

உடன்பிறப்பு said...

போடுங்கம்மா ஓட்டு குடுகுடுப்பைய பாத்து//

கு.ஜ.மு.க வுக்கு உடன்பிறப்பின் ஓட்டு உடன்பிறப்பு மீது தி.மு.க நடவடிக்க்கை

Anonymous said...

//அப்போ நான் யாரு?//

தெரியலையேப்பா

நசரேயன் said...

//நான் இந்த இரண்டு தரப்பையும் சேராத ஒரு துன்பதிவாளர்.//

நுண் பதிவர்னும் சொல்லலாம், ஆராட்சி அப்படியல்லவா இருக்கு

பழமைபேசி said...

அப்பச் சரி...

நட்புடன் ஜமால் said...

மொத்தத்தில் இரண்டு தரப்பும் சக்கையும், மொக்கையும் கலந்த பதிவுகளை தர வல்லவர்கள்.\\

நல்லா சொன்னேள் போங்கோ!

சந்தனமுல்லை said...

நல்ல ஆராய்ச்சி.

//நான் இந்த இரண்டு தரப்பையும் சேராத ஒரு துன்பதிவாளர்.//

:-))

//பி.கு: இந்த பதிவை படிக்காத யாரிடமும் நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்பதை துணிச்சலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

அவ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

// நசரேயன் said...

//நான் இந்த இரண்டு தரப்பையும் சேராத ஒரு துன்பதிவாளர்.//

நுண் பதிவர்னும் சொல்லலாம், ஆராட்சி அப்படியல்லவா இருக்கு//

ரிப்பீட்டு!

உடன்பிறப்பு said...

குடுகுடுப்பை said...

கு.ஜ.மு.க வுக்கு உடன்பிறப்பின் ஓட்டு உடன்பிறப்பு மீது தி.மு.க நடவடிக்க்கை

/\*/\

கு.ஜ.மு.க வில் பொருளாளர் பதவி கிடைக்குமா

Senthil said...

hi,

//அம்மாதிரி ஒரு பதிவில் எங்கோ படித்த பின்னூட்டத்தில் புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர் போன்ற ஒரு ஆரோக்கியமான சர்ச்சையும் பார்க்க முடிந்தது.

Can you give the link to this, i work for a product company, interested to know what others saying, thanks

குடுகுடுப்பை said...

Senthil said...

hi,

//அம்மாதிரி ஒரு பதிவில் எங்கோ படித்த பின்னூட்டத்தில் புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர் போன்ற ஒரு ஆரோக்கியமான சர்ச்சையும் பார்க்க முடிந்தது.

Can you give the link to this, i work for a product company, interested to know what others saying, thanks//

This was written almost a year back. I forgot the blog name.

வில்லன் said...

இப்ப என்ன சொல்லவர்ரிங்க...நீங்க புராடக்ட் மென்பொருளாளர்: "தல" நசரேயன் சர்வீஸ் மென்பொருளாளர் அப்படின்னா?????????????. விளக்கம் தேவை

வில்லன் said...

Senthil said...

hi,

//அம்மாதிரி ஒரு பதிவில் எங்கோ படித்த பின்னூட்டத்தில் புராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர் போன்ற ஒரு ஆரோக்கியமான சர்ச்சையும் பார்க்க முடிந்தது.

Can you give the link to this, i work for a product company, interested to know what others saying, thanks//

This was written almost a year back. I forgot the blog name.


please try the below link

http://it.toolbox.com/blogs/original-thinking/the-difference-between-product-and-software-28244

Senthil said...

thanks villan