Thursday, September 11, 2008

தமிழ்நாடு பயணம் – சென்னை --2

கு.ஜ.மு.க: தமிழ்நாடு பயணம் – சென்னை.

இரவு முழுவதும் வயிறு பிரச்சினை செய்து கொண்டிருந்தது, பக்கத்தில் உள்ள மருந்துக்கடையில் நண்பர் சில மாத்திரை வாங்கி கொடுத்தார்.அன்று முழுவதும் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.

கடந்த ஒரு வருடமாக தேனிலவில் இருந்த என் நண்பன் நட்புக்காக இரண்டு நாள் என்னுடன் தங்கி இருந்தான். மேலும் அண்மையில் திருமணமான எனது இன்னொரு நண்பர் அன்றுதான் பாங்காக்கில் இருந்து வந்து பார்த்தான். ஆனால் ஒரு சிறிய மாற்றம் அவன் அந்த பச்சை ஜீன்சை போட்டிருக்கவில்லை. ஒருவேளை தங்கமணி போடக்கூடாது சொல்லிட்டாங்க போல.

அன்று மாலை தேனிலவு நண்பனை வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டு, எதிரில் உள்ள மத்ஸ்யா என்ற சைவ உணவகத்தில் இட்லி வாங்கிக்கொண்டு லிப்ட்ல வரும்போது மயக்கமடைவது தெரிந்தது.

ஏதோ சத்தம் கேட்டது, கொஞ்சமாக கண் விழித்து பார்த்தேன். மூன்று நபர்கள் என்ன ஆச்சு சார் எனக்கேட்டனர். கைப்பிடித்து எழுப்பிவிட்டனர். கீழே விழுந்ததில் பொட்டில் அடிபட்டு சிறிது ரத்தத்துடன் வீங்கியிருந்தது.

அந்த மூவரும் என்னை எனது அறையில் விட்டுவிட்டு தெரிந்தவர்களிடம் பேசச் சொன்னார்கள். நான் எனது நன்றியை தெரிவித்தேன்.நண்பன் மற்றும் மைத்துனருக்கு பேசினேன்,மைத்துனர் செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர். இரவு நேர வேலை அன்று, தனக்கு தெரிந்த மருத்துவமனை ஒன்றில் சேரச்சொன்னார்.

இரவு 11 மணியளவில் கீழ்ப்பாக்கம் நியு ஹோப் மருத்துவமனை
நானும் எனது அதே தேனிலவு நண்பரும்.(இப்படி நான் பதிவு எழ்திக்கொண்டிருந்தால் இதன் நேர் எதிராக உள்ள மருத்துவமனையில் விரைவில் என்னை சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் என வீட்டில் ஒருவர் எச்சரிக்கிறார்)

முதல் வேலையாக அறையின் விலையை சொன்னார்கள் ஒரு நாளைக்கு ரூ1500 ஏசி போட்டால் ரூ 300 அதிகம். பின்னர் மருத்துவம் ஆரம்பம்..

டிஹைட்ரேசன் ஆனதால் நிறைய சலைன் கொடுத்தாங்க. இரண்டு நாள் அங்கேதான்.

தாம்பரத்தில் இருந்து மைத்துனரும், புதுக்கோட்டையில் இருந்து எனது தங்கை கணவரும் அடுத்த நாள் பார்க்க வந்து விட்டனர்.

மைத்துனர் சொன்னார் மென்பொருள் காரங்க மற்றும் அமெரிக்காவில இருந்து வரீங்கன்னு தெரிஞ்சா, புட் பாய்ஸனுக்கெல்லாம் 3 நாள் அட்மிட் பண்ணி, ரூ35000 பில் பண்ணிருவாங்கலாம். எனக்கு அவரு புண்ணியத்துல ரூ15000 க்குள்ள தான் வந்துச்சு.நண்பர் நெட்டையன் ரூ15000 பில் என்றவுடன், மூனாவதுமாடி வேலையை அப்புறம் எப்படி முடிக்கிறது என்றார்.

மொத்தத்தில் 15 நாள் விடுமுறையில் 4 நாள் முடிந்தது.
ஒன்று புரிந்தது, ஒரு நாள் வாயைக்கட்டியிருந்தால் இதெல்லாம் இல்லை.

ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையும் சாப்பிட்டப்ப எல்லாம் ஒன்னும் பண்ணலயே ஏன்? நான் படித்த கல்லூரி விடுதி சாப்பாடு கூட ஒன்னும் பண்ணல.

சென்னையில் நான் சாப்பிட நினைத்த எதையும் சாப்பிட முடியாமல் அடுத்த நாள் திருப்பூருக்கு, அங்கே அண்ணன் வீட்டில் 10 நாள் ஓய்வு பத்திய சாப்பாட்டோடு.

மீண்டும் மாடும் மாடு சார்ந்த மாகாணத்தில் பொட்டிதட்ட,
மீண்டும் பழையபடி குளிரூட்டப்பட்டு, சுடவைக்கப்பட்ட சாப்பாடு(global warming க்கு இதுவும் காரணமோ இருக்குமோ)


முற்றும்.

11 comments:

புதுகை.அப்துல்லா said...

அட உங்க தங்கை எங்க ஊரில தான் இருக்காங்களா?

புதுகை.அப்துல்லா said...

புதுக்கோட்டையில் இருந்து எனது தங்கை கணவரும்
//

அட உங்க தங்கை எங்க ஊரில தான் இருக்காங்களா?

துளசி கோபால் said...

ஊருக்குப்போறதே சில வாரங்கள். அதையும் 'வேற எங்கியாவது கழிக்க' வேணாமுன்னு நான் ரொம்பக் கவனமா இருப்பேன்.

ஆசைப்பட்டதைக் கண்ணால் மட்டும் தின்னுட்டுவருவேன்.


முக்கியமா....தண்ணீர். கவனம் தேவை.

"சூஷிச்சால் துக்கமில்லா"

எந்தா....மனசிலாயோ? :-))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி அப்துல்லா.

ஆமா நகராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டுகிறார்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்.

//ஊருக்குப்போறதே சில வாரங்கள். அதையும் 'வேற எங்கியாவது கழிக்க' வேணாமுன்னு நான் ரொம்பக் கவனமா இருப்பேன்.//

மிக்க சரி

சந்தனமுல்லை said...

:-( அவ்வ்வ் என்ன கொடும கு.ஜ.மு.க இது?!

/ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையும் சாப்பிட்டப்ப எல்லாம் ஒன்னும் பண்ணலயே ஏன்? நான் படித்த கல்லூரி விடுதி சாப்பாடு கூட ஒன்னும் பண்ணல./

:-)))) கல்லைக்கூட செரிக்கும் வயசு?!!

கலகலப்ரியா said...

//global warming க்கு இதுவும் காரணமோ இருக்குமோ//

கண்டிப்பா.. =))

வில்லன் said...

//(இப்படி நான் பதிவு எழ்திக்கொண்டிருந்தால் இதன் நேர் எதிராக உள்ள மருத்துவமனையில் விரைவில் என்னை சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் என வீட்டில் ஒருவர் எச்சரிக்கிறார்) //
உலகத்துக்கே தெரியும் யாரு அதுன்னு. சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.....

வில்லன் said...

//டிஹைட்ரேசன் ஆனதால் நிறைய சலைன் கொடுத்தாங்க. இரண்டு நாள் அங்கேதான்.//

ஓ!!!!!!!!! உங்களுக்குமா... நசறேயனுக்கு நல்லா அனுபவம் உண்டே... அவர கேட்டா நல்லா மருத்துவம் சொல்லுவரே....

வில்லன் said...

//ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையும் சாப்பிட்டப்ப எல்லாம் ஒன்னும் பண்ணலயே ஏன்? நான் படித்த கல்லூரி விடுதி சாப்பாடு கூட ஒன்னும் பண்ணல. சென்னையில் நான் சாப்பிட நினைத்த எதையும் சாப்பிட முடியாமல் அடுத்த நாள் திருப்பூருக்கு//

இதெல்லாம் ரொம்ப ஓவரு.... கல்லூரி சாப்பாடு என்ன அவளவு கேவலமா. ரொம்ப பிளான் பண்ணினா அப்படிதான். அதுவும் முன்பெல்லாம் அளவா சாபிட்டிருபீறு ஒன்னும் பண்ணாது. இப்ப காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி சோத்துக்கு அலைஞ்சி கண்டதையும் கண்டபடி சாப்பிடிருப்பீறு அதன் விளைவு.... எல்லாம்...

கொங்கு நாடோடி said...

அய்யா
உண்மையை சொல்லுங்கோ, அஞ்சப்பர் அல்லது நிங்கள் சாப்பிட சாப்பாடு கரணம் இல்லை என்று நினைக்கிறேன் உங்கள் drhydrationuku. எல்லாம் நம்ப டாஸ்மாக் பன்னுகிரவேலை.