Wednesday, September 10, 2008

தமிழ்நாடு பயணம் – சென்னை.

சும்மா சொந்தக்கதை

இந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என நினைத்தே சுமார்மூன்றாண்டுகள் ஓடிவிட்ட நிலையில், இந்த வருடம் பிப்ரவரி-மார்ச்சில்சென்னை வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் நண்பன் ஒருவரின் திருமணம்.

லுப்தான்சாவில் பயணம் பிராங்பர்ட் விமானநிலையம், இங்கு லுப்தான்சாவின்ஜெர்மானிய பணிப்பெண்களை பார்த்தவுடன் ஏனோ வாய் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலை முனுமுனுத்தது.

சென்னை விமானநிலையத்தில் ஒரு காபி குடித்துவிட்டு, எழும்பூரில் உள்ள கிருஷ்ணா விடுதியில் நானும், நண்பனும் தங்கினோம்.விடுதி வாடகை ரூ1200, பரவாயில்லை ரகம். நாளைக்கு மதியம் அஞ்சப்பர் ஒரு கை பார்ப்போம்அப்புறம் சாயங்காலமா திருமண வரவேற்புக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டுதூங்கியாச்சு.

சுமாரா மதியம் 12 மணிக்கு எந்தரிச்சி கிளம்புறதுகுள்ள மணி 3 ஆயிப்போச்சு, அப்புறம் எங்க அஞ்சப்பர். ஆனாலும் மீன் சாப்பிடற ஆசையில் விடுதியுடன் இணைந்த நெல்லையப்பர்ல வஞ்சிரம் மீன்(போலி வஞ்சிரம் போல எனக்குதோனுச்சு) கொஞ்சம் மட்டன் கறி(கொஞ்சம் சலிச்ச வாடை வந்தது, ஆனாலும்விடலை) , இலை போட்டு சோறு வெச்சவுடன் வந்துச்சு பாருங்க ஒரு வாடை என்னத்த சொல்றது. சகிச்சிகிட்டே சாப்பிட்டு ஆட்டோ புடிச்சி காஞ்சி ஹோட்டல் கல்யாண மண்டபம் போய் சேர்ந்தாச்சு.

மண்டபத்து வாசல்ல அறுக்கப்படபோற ஆடு மாதிரி தலைய ஆட்டி எல்லாரையும் மாப்பிள்ளை வரவேற்றார்.சுமாரா 20 க்கும் மேற்பட்ட கல்லூரி நண்பர்கள் வந்திருந்தாங்க. பிரம்மா ங்கிற ஒரு நண்பர் மட்டும் தங்கமணி மற்றும் பையனோட வந்திருந்தார்.மத்த எல்லாரும் வெவர மிட்டாய் நிறைய சாப்பிட்டவங்க தனியாதான் வந்திருந்தாங்க.
கலகலப்பா பழைய கதைகளை பேசிட்டு இருந்தோம், வரவேற்பு முடிஞ்சி போச்சு எல்லாம் சாப்பிட போங்கன்னு சொன்னாங்க. சாப்பிட்டோம்.

இன்னைக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகு நெருங்கிய நண்பர் நெட்டயனையும் பார்த்தேன். அவன் துபாய்ல சேப்டி இஞ்ஜினியரா இருக்கேன்னு சொன்னான். அப்படினா என்னானு கேட்டேன் அதான் சேப்டி இஞ்ஜினியர் அப்படின்ன்னான். சரி பெரியவன் சொன்னா தலயாட்டிக்க்னும் அப்படியே விட்டாச்சு.

தூங்க போயாச்சு, ஆனா மதியம் சாப்பிட்ட அசைவம் வயிற்றில்
ஏதோ பண்ணிக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் திருமணம். மீண்டும் அதே மற்றும் பல கல்லூரி நண்பர்கள், இரண்டு நண்பர்கள் தங்கமணியோடு வந்தனர்.பேசிட்டே இருந்தோமா தாலிகட்டியாச்சுன்னாங்க எனக்கு தெரிஞ்சி நாங்க யாரும் கல்யாணத்தையே பார்க்கல. முக்கியமான கதைகள் பேசினதுல கல்யாணத்தை மறந்துட்டோம். தங்கமணியோடு வந்தவர்கள் பதில்களை தயாரித்துக்கொண்டிருந்தது நன்றாக தெரிந்தது.

இரண்டு நாளும் திருமண நண்பர் கூட போட்டோ மட்டும் நல்ல பசங்களா எடுத்துக்கிட்டோம்.

மீண்டும் கிருஷ்ணா விடுதி, நெல்லையப்பர் அசைவம் தன் வேலையை காண்பித்தது.

மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருக்கும் மைத்துனர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றேன், மைத்துனரின் மனைவி மிக நன்றாக வஞ்சிரம் வறுத்து வெச்சிருந்தாங்க. சாப்பிட்டவுடன் மைத்துனர் என்னை மீண்டும் எழும்பூரில் இருக்கும் கிருஷ்ணா விடுதியில் விட்டார். நெல்லையப்பர் அசைவம் தன் வேலையை காண்பித்தது இம்முறை தொடர்ச்சியாக...

தொடரும்….

7 comments:

புதுகை.அப்துல்லா said...

அடுத்த முறை வர்றப்ப சொல்லிட்டு வாங்க. எங்க கம்பெனி கெஸ்ட் அவுசிலேயே நல்ல சாப்பாட்டோடு தங்க ஏற்பாடு பண்ணுறேன்.

குடுகுடுப்பை said...

அண்ணே புதுகை அப்துல்லா வருகைக்கும், வரச்சொன்னதுக்கும் ரொம்ப நன்றி.

அது சரி said...

கடைசில அஞ்சப்பர்ல சாப்பிட்டீரா இல்லா சாப்டலாம்னு நெனச்சதோட சரியா?

நெனச்சா முடிச்சிரணும் தல. நானா இருந்தா, கல்யாண சாப்பாடு முடிச்சிட்டு (அது அவங்க திருப்திக்காக), என் திருப்திக்கா அஞ்சப்பர்ல போயி ஒரு கை பாத்துருப்பேன் :0)

குடுகுடுப்பை said...

அது சரி, பாகம் 2 ஐ படிங்க

சந்தனமுல்லை said...

/ஜெர்மானிய பணிப்பெண்களை பார்த்தவுடன் ஏனோ வாய் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலை முனுமுனுத்தது./

அவ்வ்வ்! :-))

வில்லன் said...

//மண்டபத்து வாசல்ல அறுக்கப்படபோற ஆடு மாதிரி தலைய ஆட்டி எல்லாரையும் மாப்பிள்ளை வரவேற்றார்.//
சரியான உதாரணம்...... புது மாப்பிள்ளை எல்லாரும் அன்னைக்கு அறுக்கப்படபோற ஆடுகள் தான்......

வில்லன் said...

நெல்லையப்பர் அசைவம் தன் வேலையை எப்பதான் காமிக்காமல் விட்டது... விட்டுச்சா இல்ல திரும்பி அமெரிக்கா வர்ரவர வேலைய காட்டிட்டே இருந்துச்சா...