Tuesday, October 7, 2008

சாவு காப்பீட்டின் அவசியம்.

வேலை பார்க்கும் அனைவரும் வாழ்நாள் காப்பீடு(life insurance), மருத்துவ காப்பீடு(health insurance). ஆகியவைக்கு தரும் முக்கியத்துவத்தை இறந்த பின் ஈமக்கிரியை நடத்துவதற்கு கொடுக்கிறார்களா. அதற்கான காப்பீட்டு கம்பெனி தான் சாவு காப்பீட்டு கம்பெனி.

அநாதைப்பிணம் ஆகிவிடுவோம் என்ற கவலையா? மேலும் விவரங்களுக்கு 1-xxx-xxxx-xxx என்ற எண்ணுக்கு அழையுங்கள்

மேற்கண்ட விளம்பரத்தை பார்த்த ராகவன் போன் பண்ணினான்.
டிரிங், டிரிங், டிரிங், for calims press 9, all other questions press 0.

0

வணக்கம் நான் ஸ்டெல்லா “சாவு காப்பீட்டு கம்பெனி” என்ன வேணும் உங்களுக்கு.

ராகவன் : நான் ராகவன் ,சாவுக்காப்பீடு எடுக்கலாம்னு இருக்கேன், அது பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா.?
ஸ்டெல்லா : சொல்றேன் சார், இந்த காப்பீடோட முதல் நோக்கமே யாரும் அனாதைப்பொணமா ஆகக்கூடாதுங்கிறது தான் சார். இந்த காலத்தில பிள்ளைங்க ஈமக்கிரியை நடத்துவாங்கன்னு எதிர் பார்க்க முடியாதில்லயா அதுனால இது ரொம்ப அவசியம் சார். இதுல 3 பிளான் இருக்கு சார். நான் படிக்கிறேன் கேளுங்க

பிளான் 1 : சாவு சாதா
இதுல பாடை கட்டுதல், நகராட்சி வண்டி வாடகை, வாடாமல்லி பூ மற்றும் புதைத்தல்.
இதற்கான காப்பீட்டு தொகை மாதம் 5 ரூபாய். 15 வருடங்களுக்கு. இடையில் இறந்துபோனாலும் ஈமக்கிரியை நடத்தப்படும்.
பிளான் 2: சாவு ஸ்பெசல்.
இதுல பாடை கட்டுதல், மூங்கில் பாடை வண்டி, தூக்க நாலு உறவினர்களுக்கு பணம். வாசனை திரவியம், வாசனப்பூக்கள் மற்றும் வருபவர்களுக்கு டீ ச்செலவு, விறகு எரித்தல் அல்லது மின்சார எரியல். விரும்பினால் புதைத்தல்

இதற்கான காப்பீட்டு தொகை மாதம் 10 ரூபாய். 15 வருடங்களுக்கு. இடையில் இறந்துபோனாலும் ஈமக்கிரியை நடத்தப்படும்.

பிளான் 2: சாவு பிரிமியம்.
இதுல பாடை கட்டுதல், மூங்கில் பாடை வண்டி, தூக்க நாலு உறவினர்களுக்கு பணம். வாசனை திரவியம், வாசனப்பூக்கள் மற்றும் வருபவர்களுக்கு டீ ச்செலவு சாராயச்செலவு, சந்தன விறகு எரித்தல் அல்லது மின்சார எரியல். விரும்பினால் புதைத்தலுடன் கல்லறை, சாவு ம்யூசிக் /டான்ஸ் பார்ட்டி, அதிகம் அழுபவர்களுக்கு குலுக்கல் முறையில் இறந்தவிரின் பெயரில் பரிசுகள்.

இதற்கான காப்பீட்டு தொகை மாதம் 25 ரூபாய். 15 வருடங்களுக்கு. இடையில் இறந்துபோனாலும் ஈமக்கிரியை நடத்தப்படும்.

என்ன சார் எந்த பிளான் சார் உங்களுக்கு வேணும்.


ராகவன் : மாசம் 10 ரூபாய் கம்மியாதான் இருக்கு, எனக்கு வயசும் 25 தான் ஆகுது, நான் பிளான் 2 ஐயே எடுத்துக்கிறேன்.தேவைப்பட்டா பிளான் 3 க்கு பின்னாடி மாத்திக்கிறேன்.

ஸ்டெல்லா : மாத்திக்கலம் சார், ஆனா அப்ப ப்ரிமியம் அதிகமானலும் ஆகிடும் சார்.

ராகவன் : பரவாயில்ல பிளான் 2 வே கொடுஙக.
ஸ்டெல்லா : ரொம்ப நன்றி ராகவன் சார்.

4 வருடம் கழித்து ராகவன்: காலிங் 1-xxx-xxxx-xxx,
டிரிங்…. :”

பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு : சாவு காப்பீட்டு கம்பெனி எதிர்பாராத விதமாக செத்துப்போனதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் வந்து இலவசமாக சாவு டான்ஸ் /மியூசிக் போட்டுவிட்டு செல்லலாம்”

63 comments:

பழமைபேசி said...

அண்ணா, சாவு சாவுன்னு படிக்குற அப்பெல்லாம் கிலி அடிக்குது. ராகவன் எனக்கு சித்திரகுப்தன் மாதிரியே தெரியுறான்.

நல்லா இருக்கு.....

அது சரி said...

ம்ம்ம்...

கடன் வாங்கினவன் ஓடிட்டா என்ன பண்றதுன்னு தான் இன்சூரன்ஸ் எடுத்தாய்ங்க. இப்ப இன்சூரன்ஸ் கம்பெனியே மூடிட்டா இன்னா பண்றது...கலி முத்தி போச்சி. கவிஞர் டவுசரும் கிளிஞ்சி போச்சி..

இனிமே இன்சூரன்சுக்கு ஒரு இன்சூரன்சு எடுக்க சொல்வாய்ங்களோ??

நசரேயன் said...

அது எப்படி மஞ்ச நோட்டிஸ் கொடுகாம மூடலாம்?

அது சரி said...

வம்பு இங்கும் அடாத மழை போல தொடரும் :0)

கயல்விழி said...

நல்லா இருக்கு :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்படி ஒரு கற்பனையா?உங்க கொட்டத்துக்கு எல்லையே இல்லாமப் போச்சு

Mahesh said...

எனக்கு PKS பட டயலாக் ஞாபகம் வருது... "இன்னக்கி எஞ்சோறே போச்சு... இதுல இன்சுரன்ஸ் வேறயா?" USல அவனவனுக்கு கோமணம் கிழிஞ்சு காத்துல பறக்குது... இன்சூரன்ஸ் கம்பெனியாவது பெட்டிக்கடையாவது.... தேவர் மகன் டயலாக் மாதிரி "போங்க போங்க போய் வெவசாயத்தப் பாருங்க"

தமிழ் அமுதன் said...

என்னமோ போங்க ...

RAMYA said...

அச்சச்சோ குடுகுடுப்பை

எனக்கு ஒண்ணுமே புரியலை. எந்த காப்பீட்டு எடுப்பது என்று யோசிபதற்குள் இப்படி கம்பெனி முழுகி போச்சே ஐயகோ? நான் என் செய்வேன். சரி, சரி கோவம் வேணம் அருமையான கருத்து. ஏமாறாமல் இருக்க யோசிப்போம்.

ரம்யா

குடுகுடுப்பை said...

வாங்க பழமை பேசி.
//அண்ணா, சாவு சாவுன்னு படிக்குற அப்பெல்லாம் கிலி அடிக்குது. ராகவன் எனக்கு சித்திரகுப்தன் மாதிரியே தெரியுறான்.//

பயப்படாதீங்க,நம்ம வேலை டான்ஸ் ஆடறது மட்டும் தான்

நல்லா இருக்கு...//
நன்றி

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி
//
ம்ம்ம்...

கடன் வாங்கினவன் ஓடிட்டா என்ன பண்றதுன்னு தான் இன்சூரன்ஸ் எடுத்தாய்ங்க. இப்ப இன்சூரன்ஸ் கம்பெனியே மூடிட்டா இன்னா பண்றது...கலி முத்தி போச்சி. கவிஞர் டவுசரும் கிளிஞ்சி போச்சி..
//

புது டவுசருமா?
/இனிமே இன்சூரன்சுக்கு ஒரு இன்சூரன்சு எடுக்க சொல்வாய்ங்களோ??
//
அந்த கம்பெனியே ஏன் நீங்களே ஆரம்பிக்ககூடாது

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
/அது எப்படி மஞ்ச நோட்டிஸ் கொடுகாம மூடலாம்?//

அதுக்கெல்லாம் காசு இல்லங்க, வந்தீங்களா நல்லா டான்ஸ போடுங்க.கேள்வியெல்லாம் கேக்கப்படாது

ஸ்ரீதர்கண்ணன் said...

அருமை .. :)))

குடுகுடுப்பை said...

வம்பு இங்கும் அடாத மழை போல தொடரும் :0)
/
தாராளமா பண்ணுங்க அது சரியார்
/

குடுகுடுப்பை said...

வாங்க கயல்விழி

//நல்லா இருக்கு :)//

நெஜமாத்தான் சொல்றீங்களா

குடுகுடுப்பை said...

வாங்க T.V.Radhakrishnan
//இப்படி ஒரு கற்பனையா?உங்க கொட்டத்துக்கு எல்லையே இல்லாமப் போச்சு//

இதுல பாதிதான் கற்பனை.

குடுகுடுப்பை said...

வாங்க Mahesh

//"USல அவனவனுக்கு கோமணம் கிழிஞ்சு காத்துல பறக்குது... "//

கோமணம் இருந்தாதானே கிழியும்

//இன்சூரன்ஸ் கம்பெனியாவது பெட்டிக்கடையாவது.... தேவர் மகன் டயலாக் மாதிரி "போங்க போங்க போய் வெவசாயத்தப் பாருங்க"//

பாத்து கன்னட நாட்டுக்காரன் காதுல விழப்போகுது

புதுகை.அப்துல்லா said...

குடுகுடுப்பைக்கே குடுகுடுப்பை அடிக்கிறாய்ங்களேப்பா
:))))))

http://urupudaathathu.blogspot.com/ said...

சாவடிக்காம உட மாட்டீங்கன்னு நினைக்குறேன் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

அநாதைப்பிணம் ஆகிவிடுவோம் என்ற கவலையா?////

ஏன் கூட அவங்களும் சாவாங்களா ??

http://urupudaathathu.blogspot.com/ said...

மேலும் விவரங்களுக்கு 1-xxx-xxxx-xxx என்ற எண்ணுக்கு அழையுங்கள்///

கூப்டு பார்த்தேன் ,, ஒன்னிம் ரெஸ்பான்ஸே இல்ல

http://urupudaathathu.blogspot.com/ said...

வணக்கம் நான் ஸ்டெல்லா “சாவு காப்பீட்டு கம்பெனி” என்ன வேணும் உங்களுக்கு.
///////

நீங்க தான்.. ஹி ஹி ஹி

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமா, எதுக்கு இந்த கொலை வெறி தாக்குதல்

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன தலிவரே??? போதுமா, இல்ல வேணுமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் 25

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
என்ன தலிவரே??? போதுமா, இல்ல வேணுமா??//


தாராளமாக அள்ளி வழங்கும் அணிமா அண்ணன் வாழ்க!

அது சரி said...
This comment has been removed by a blog administrator.
குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன்
// என்னமோ போங்க ...//
என்ன பண்றது, எல்லோரும் சேர்ந்து ஆடுவோம்

குடுகுடுப்பை said...

வாங்க RAMYA
// அச்சச்சோ குடுகுடுப்பை

எனக்கு ஒண்ணுமே புரியலை. எந்த காப்பீட்டு எடுப்பது என்று யோசிபதற்குள் இப்படி கம்பெனி முழுகி போச்சே ஐயகோ? நான் என் செய்வேன். சரி, சரி கோவம் வேணம் அருமையான கருத்து. ஏமாறாமல் இருக்க யோசிப்போம்.
//
பரவாயில்லை என்கிட்ட பணத்தை கொடுங்க நான் நல்ல கம்பெனியா பாத்து முதலீடு பண்றேன்

குடுகுடுப்பை said...

வாங்கா ஸ்ரீதர்கண்ணன்

//அருமை .. :)))//

நன்றிங்க

குடுகுடுப்பை said...

வாங்க புதுகை.அப்துல்லா

//குடுகுடுப்பைக்கே குடுகுடுப்பை அடிக்கிறாய்ங்களேப்பா
:))))))//

கம்பெனி என்னுது இல்லங்கோ, நான் டான்ஸர்தான்

குமரகம் எப்படி இருந்துச்சி, பாசில் குடிசையை நீங்க வாங்கிட்டதா ஒரு பேச்சு அடிபடுது

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது_அணிமா

//சாவடிக்காம உட மாட்டீங்கன்னு நினைக்குறேன் ??
//
இல்லங்க நீங்க பணம் போடனும் அப்புறம் டான்ஸ்/ பாட்டு மட்டும் ஆடுனா போதும்.

//மேலும் விவரங்களுக்கு 1-xxx-xxxx-xxx என்ற எண்ணுக்கு அழையுங்கள்///

கூப்டு பார்த்தேன் ,, ஒன்னிம் ரெஸ்பான்ஸே இல்ல//

பரவாயில்ல பணத்தை அனுப்ப ஒரு நைஜீரியா ஐடியா தரேன்

குடுகுடுப்பை said...

//உருப்புடாதது_அணிமா said...

அநாதைப்பிணம் ஆகிவிடுவோம் என்ற கவலையா?////

ஏன் கூட அவங்களும் சாவாங்களா ??//

அதுக்கு தான் கம்பெனி அவுட் ஆச்சே நீங்கெல்லாம் அழுவனும் இப்போ

//உருப்புடாதது_அணிமா said...
என்ன தலிவரே??? போதுமா, இல்ல வேணுமா??//
போதும்னே ரொம்ப நன்றி

குடுகுடுப்பை said...

அது சரி சொன்னது
//ஆனா, நான் சொன்ன‌ ட‌வுச‌ர் உங்க‌ ட‌வுச‌ர்.. நீங்க‌ தானே ச‌மீப‌த்தில‌ க‌விதை எழுதுன‌து? உங்க‌ ட‌வுச‌ரும் கிளிஞ்சி போச்சி தான‌ ;0) த‌விர‌, நான் என்னை போயி க‌விஞ‌ருன்னு சொல்வேனா?//

என்கிட்ட டவுசரும் இல்ல,கவிஞனும் இல்ல அப்புரம் எங்க கிளியறது

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமா, அந்த அமெரிக்கா அமெரிக்கா பதிவு எங்க???

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

// ஆமா, அந்த அமெரிக்கா அமெரிக்கா பதிவு எங்க???

//

தரமா இல்லன்னு தூக்கிட்டேன்!!:)

http://urupudaathathu.blogspot.com/ said...

இது எல்லாம் கொஞ்ச ஓவருங்கோ??

நாங்க எல்லாம் தரம் பார்த்தா எழுதுறோம் ??
என்னை நீங்க ரொம்ப கேவலபடுதுறீங்க ..( அவ்வவ் )

http://urupudaathathu.blogspot.com/ said...

இது எல்லாம் கொஞ்ச ஓவருங்கோ??

நாங்க எல்லாம் தரம் பார்த்தா எழுதுறோம் ??
என்னை நீங்க ரொம்ப கேவலபடுதுறீங்க ..( அவ்வவ் )

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ஆமா, அந்த அமெரிக்கா அமெரிக்கா பதிவு எங்க???
//

இதில் மறுமொழியாளர்த் திலகம் அணிமாவின் கைவரிசை இருக்குமோ எனும் ஐயம் உள்ளக்கிடை நெல்லிக்கனி போல் தெரிகிறது. சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

குறிப்பு: இது ஒரு கலாய்ப்புப் பின்னூட்டம்

குடுகுடுப்பை said...

நன்றி AMIRDHAVARSHINI AMMA

குடுகுடுப்பை said...

//உருப்புடாதது_அணிமா said...

இது எல்லாம் கொஞ்ச ஓவருங்கோ??

நாங்க எல்லாம் தரம் பார்த்தா எழுதுறோம் ??
என்னை நீங்க ரொம்ப கேவலபடுதுறீங்க ..( அவ்வவ் )
//

அந்த பதிவு நான் சொல்ல வந்ததுக்கு மாறான எதிர்விளைவை ஏற்படுத்திச்சி அதுனால தான்.

புதுகை.அப்துல்லா said...

பாசில் குடிசையை நீங்க வாங்கிட்டதா ஒரு பேச்சு அடிபடுது
//

என்னாது நான் வாங்கிட்டேனா? நல்லா கிளப்புறீகப்பா ரூமரு
:))))))))

http://urupudaathathu.blogspot.com/ said...

///////பழமைபேசி said...

இதில் மறுமொழியாளர்த் திலகம் அணிமாவின் கைவரிசை இருக்குமோ எனும் ஐயம் உள்ளக்கிடை நெல்லிக்கனி போல் தெரிகிறது. சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

குறிப்பு: இது ஒரு கலாய்ப்புப் பின்னூட்டம்
////////////


இது மாதிரி பின் குறிப்பு போட்டுட்டா, நான் நம்பிடுவனா??

நான் அவன் இல்லீங்க...

நம்புங்க..

இதுல என்னோட கை, (கால், மூக்கு, காது, கண்ணு) எந்த வரிசையும் கிடையாது...

http://urupudaathathu.blogspot.com/ said...

சாவு சாதா///


சாவு மசாலா ரெண்டு அண்ணனுக்கு...( தோசை ஆர்டர் கேக்குற மாதிரியே இருக்கு _)

http://urupudaathathu.blogspot.com/ said...

///பிளான் 2: சாவு ஸ்பெசல்.

பிளான் 2: சாவு பிரிமியம்.////


அது எப்படி ரெண்டு ப்ளான்னும் ஒரே எண்ணில் வரும்.. ( தப்ப தப்பா கண்டுபிடிக்காம, ரைட்டா தப்ப கண்டுபிடிச்சுட்டேன்)

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி எனக்கு எந்த பிளான் நல்லா வொர்க் அவுட் ஆகும்? சொல்லுங்க பார்ப்போம்.. கரெக்டா சொன்னா உங்களுக்கு ஒரு ப்ரீமியர் இலவசம்

http://urupudaathathu.blogspot.com/ said...

///சாவு காப்பீட்டு கம்பெனி எதிர்பாராத விதமாக செத்துப்போனதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் வந்து இலவசமாக சாவு டான்ஸ் /மியூசிக் போட்டுவிட்டு செல்லலாம்”////


ஏய் டண்டனக்க டணக்கா..
ஏய் டண்டனக்க டணக்கா..
ஏய் டண்டனக்க டணக்கா..
ஏய் டண்டனக்க டணக்கா..

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதிகம் அழுபவர்களுக்கு குலுக்கல் முறையில் இறந்தவிரின் பெயரில் பரிசுகள்.
////


போயிட்டியே ராசா.........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

இந்த அம்பது போட எப்படி கஷ்டபடவேண்டியதா இருக்கு..

சோடா குடுப்பா.

http://urupudaathathu.blogspot.com/ said...

மூச்சு வாங்குது..
ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்..

ஜியா said...

அருமையான பின்னவீனத்துவ கதை... :))))

இங்க அமெரிக்கால இதுக்கும் காப்பீடு இருக்குன்னு வெளம்பரம் பாக்கும்போதே கிலியாச்சு.. அடப்பாவிகளா, இதுக்கு கூடவான்னு :)))

அது சரி said...

ஆமா, நீங்க "அமெரிக்கா அமெரிக்கா அப்புறம் பேரிக்கா" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டதா தெரியுது. ஆனா காணோம். அது எங்க போச்சி?

கயல்விழி said...

//ஆமா, நீங்க "அமெரிக்கா அமெரிக்கா அப்புறம் பேரிக்கா" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டதா தெரியுது. ஆனா காணோம். அது எங்க போச்சி?//

நான் ஏதோ விளையாட்டுக்கு கிண்டல் பண்ணியதால் டிலிட் பண்ணியாச்சு :(

Anonymous said...

நண்பர் அடலேறு(http://adaleru.wordpress.com) சொல்லி இருப்பது என்னவென்றால்:

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்ச்சி பற்றி:

குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

மேலும் விபரங்களுக்கு:

9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬

உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….

அடலேறு

நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குடுகுடுப்பை said...

///பிளான் 2: சாவு ஸ்பெசல்.

பிளான் 2: சாவு பிரிமியம்.////


அது எப்படி ரெண்டு ப்ளான்னும் ஒரே எண்ணில் வரும்.. ( தப்ப தப்பா கண்டுபிடிக்காம, ரைட்டா தப்ப கண்டுபிடிச்சுட்டேன்)//

தப்பு கண்டுபிடிச்ச அணிமா அண்ணன் வாழ்க.

குடுகுடுப்பை said...

வாங்க ஜி

// அருமையான பின்னவீனத்துவ கதை... :))))//

பின்னவீனத்துவம் அப்படீன்னா என்னாங்க?

குடுகுடுப்பை said...

வாங்க பதிவு.

நீங்க என் பதிவு பற்றியும் எதாவது சொல்லியிருக்கலாம்

Unknown said...

எதுக்கு இப்படி?

குடுகுடுப்பை said...

வருகைகு நன்றி prasannah
// எதுக்கு இப்படி?//

என்ன சொல்றீங்க? புரியல.

குடுகுடுப்பை said...

//ஆமா, நீங்க "அமெரிக்கா அமெரிக்கா அப்புறம் பேரிக்கா" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டதா தெரியுது. ஆனா காணோம். அது எங்க போச்சி?//

இந்த தலைப்புல கொஞ்ச நாள் கழிச்சி எழுதுவோம்

அது சரி said...

//
கயல்விழி said...
//ஆமா, நீங்க "அமெரிக்கா அமெரிக்கா அப்புறம் பேரிக்கா" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டதா தெரியுது. ஆனா காணோம். அது எங்க போச்சி?//

நான் ஏதோ விளையாட்டுக்கு கிண்டல் பண்ணியதால் டிலிட் பண்ணியாச்சு :(

//

அப்பிடியா? அண்ணாச்சிக்கு கோவம் வர்றா மாதிரி அப்பிடி என்னங்க சொன்னீங்க?

குடுகுடுப்பை அண்ணாச்சி, உங்களுக்கு ரொம்ப கோவம் வரும் போலருக்கே.. நான் வேற அப்பப்ப வகை தொகை தெரியாம கும்மி அடிக்கிறேன்..

குடுகுடுப்பை said...

//அது சரி சொன்னது

குடுகுடுப்பை அண்ணாச்சி, உங்களுக்கு ரொம்ப கோவம் வரும் போலருக்கே.. நான் வேற அப்பப்ப வகை தொகை தெரியாம கும்மி அடிக்கிறேன்..//

என்க்கு கோபம்லாம் வராதுண்ணா, அந்த பதிவு எனக்கே தெவையில்லனு தோனுச்சு அதான். மத்தபடி உங்க கும்மியை தொடருங்கள். அது தான் இப்ப டானிக்கா மாதிரி

துளசி கோபால் said...

அட! சாவை நான் எப்படி மிஸ் பண்ணினேன்???
நல்லவேளை சொன்னீங்க.

நல்லா இருக்குப்பா.

பின்னூட்டங்கள் எல்லாம் களேபரமா அமர்க்களப்படுது:-))))