Friday, September 19, 2008

சும்மா குழம்பும் தங்கமணியின் அலும்பும்.

எங்க வீட்டில இப்பெல்லாம் செட்டி நாட்டு சமையல்தான். தங்கமணி இந்த பதிவை படிச்சிட்டு ஒரே கலக்கல் சமையல்தான். ஒரு நாள் செட்டி நாட்டு ஆட்டுக்கறி குழம்பு, வெண்டைக்காய் மண்டி,கள்ள வீட்டு அவியல்னு ஒரே கலக்கல் தான்.

வீட்டில காய்கறி எதுவும் இல்லாத அன்னைக்கு ஒரு உடனடி குழம்பு எப்படி வைக்கிறதுன்னு ஒரு நல்ல எண்ணத்தில செட்டி நாட்டு ஆச்சி சும்மா குழம்பு எப்படி வைக்கிறதுன்னு சொல்லிருந்தாங்க.இந்த குழம்பு 10த்தே நிமிடத்தில் வெக்கலாமாம்.

தங்கமணி இன்னைக்கு நான் சும்மா குழம்பு வைக்கப்போறேன்னு சொன்னாங்க. காய்/கறி இல்லாத அன்னைக்கு வெக்கலாமேன்னேன் நான்.

நான் சொன்னப்புறம் சும்மா குழம்பு இன்னைக்கேன்னு உறுதியாச்சு, சும்மா குழம்பு சின்ன வெங்காயம் போட்டு வெச்சாதான் நல்லா இருக்கும் நீங்க உடனே எங்கயாவது போய் வாங்கிட்டு வாங்கன்னாங்க. இல்ல ரொம்ப பசிக்குது பெரிய வெங்காயம் போட்டே வெய்யேன்னேன். இன்னைக்கு சாப்பிட முந்தா நாள் வெச்ச அவியல் இருக்கு இது நாளான்னிக்கு சாப்பிடத்தான் அப்படின்னாங்க.

எங்க வீட்ல இரண்டு பேரும் வேலைக்கு போறதால வழக்கமா தினமும் வேலை முடிச்சி வந்து சமையல் நடக்கும், ஆனா அன்னைக்கி சமைச்சதை அன்னிக்கே சாப்பிட முடியாது. ரத்னா ஸ்டோர்ஸ் எவர் சில்வர் பாத்திரத்தில ப்ரிட்ஜ்ல வெச்சு, அதை இரண்டாவது நாள் மைக்ரோவேவ் சேப் பீங்கான் பாத்திரத்துக்கு மாத்தி சுட வெச்சி சாப்பிடறதுதான் புரோட்டோகால். அது ஏன்னு இன்னக்கி வரைக்கும் எனக்கு தெரியாது. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

கார் எடுத்துட்டு போயி 12 மைலுக்கு அப்பால உள்ள வியட்நாமியன் கடையில் சின்ன வெங்காயம் மட்டும் வாங்கிட்டு வந்தேன்.சின்ன வெங்காயம் $1.25 அதுக்கு கேஸ் $4.00.

இதற்கிடையில் மிளகாய், மல்லி எல்லாத்தையும் வ(க)றுக்கும்போது வந்த வாடையில் fire alarm அடிச்சி அது ஒரு பக்கம்.ஆச்சியோட சும்மா குழம்பு பதிவை சுடச்சுட படிச்சிட்டே சமையல் நடந்துச்சு,மொத்தமா இந்த சும்மா குழம்ப வெக்கிறதுக்கு சும்மா 3 மணி நேரம் ஆச்சு.

ஒரு வழியா சும்மா குழம்பு வெச்சாச்சு, ஒரு மாறுதலுக்கு இன்னைக்கே இத சாப்பிடலாம்னு திடீர் உத்தரவு. ஏனோ தெரியல வாயில வெக்கவே முடியல ,ஆச்சி சொன்னபடிதான் சமைச்சேன்,நீங்க வாங்கிட்டு வந்த வெங்காயம் சரியில்லை அதான் இப்படி ஆச்சுன்னாங்க.

சும்மா குழம்பு பத்தி ஒரு பதிவு எழுதிருக்கேன், சூட்டோட சூடா இந்த பதிவை இனைச்சுடலாம்னு அனுமதி கேட்டேன். இரண்டு நாளைக்கு அப்புறம் இனைக்கலாம் அப்படின்னாங்க, இது சூடான பதிவல்ல ரெண்டு நாள் பழசு.

பி.கு : ஆச்சியோட சமையல் குறிப்பு மிகவும் அருமை

20 comments:

Anonymous said...

சுட்டில ஏதோ குழப்பம் இருக்கு. சரி செய்யுங்க.

Firefox doesn't know how to open this address, because the protocol (ttp) isn't associated with any program.

அப்படின்னு வருது.

குடுகுடுப்பை said...

நன்றி வேலன்,
சரி பண்ணியாச்சுங்க இப்போ

அது சரி said...

மார்க்கெட் நிலவரத்தை பாத்தா இனிமே நெதம் சும்மா கொழம்பு தான் போலருக்கு. அத எப்பிடி வக்கிறதுன்னு சொல்லித்தாங்க :)

கடைசில அந்த ச்சும்மா கொழம்ப சாப்டீரா இல்ல உங்க தங்கமணிக்கு தெரியாம கொட்டிட்டீரா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் முழுதும் படித்து
முடியும் வரை என்னால் முடியும் வரை
சிரித்த ஒரே (மொக்கை) பதிவு.
சூப்பர் (சும்மா) குழம்பு.
இப்படி ஒரு அரு(வ்)மையான பதிவை போட
அனுமதி கொடுத்த தங்கமணி அவர்கள் வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

சும்மா சொல்லாதீங்க..
அந்த சும்மா கொழம்பு
சும்மா சூப்பரா இருந்திருக்குமே..
சும்மா பொய் சொல்லாதீங்கப்பு
சும்மா சும்மா இப்படி
சும்மா பதிவு எழுத தானே அப்படி சும்மா சொன்னீங்க?
சும்மா சொல்லுங்க..
நான் சும்மா தான் கேக்குறேன்.. தைரியமா
சும்மாவாச்சும் சொல்லுங்க

செல்வ கருப்பையா said...

இந்த தங்கமணி எல்லாம் சேந்து ஒரு சங்கம் வச்சுருக்காங்களோ? எங்க வீட்டுல இந்த சும்மா குழம்புக்கு பேரு 'தாளிச்சு விட்ட கொழம்பு'. Fridge கண்டுபுடிச்சவனைத் தேடிப்புடிச்சு உதைக்கணும்.

துளசி கோபால் said...

//ரத்னா ஸ்டோர்ஸ் எவர் சில்வர் பாத்திரத்தில ப்ரிட்ஜ்ல வெச்சு, அதை இரண்டாவது நாள் மைக்ரோவேவ் சேப் பீங்கான் பாத்திரத்துக்கு மாத்தி சுட வெச்சி சாப்பிடறதுதான் புரோட்டோகால். அது ஏன்னு இன்னக்கி வரைக்கும் எனக்கு தெரியாது. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.//

ஏன்னா.... எவர்சில்வர் பாத்திரத்தை மைக்ரோவேவில் வைக்கக்கூடாது:-)))))

அது சரி said...

//
செல்வ கருப்பையா said...
இந்த தங்கமணி எல்லாம் சேந்து ஒரு சங்கம் வச்சுருக்காங்களோ? எங்க வீட்டுல இந்த சும்மா குழம்புக்கு பேரு 'தாளிச்சு விட்ட கொழம்பு'. Fridge கண்டுபுடிச்சவனைத் தேடிப்புடிச்சு உதைக்கணும்.

//

அவர தேடி கண்டு பிடிச்சி ஒதைக்கிறது ஒங்களுக்கு ரொம்ப ஈஸி தல. செலவு கூட ரொம்ப ஆகாது. உங்க ஊருக்கு பக்கத்து ஊரு. ஆமா, அவரு Glasgow. பேரு William Cullen. என்ன ஒரு கொடுமை, அவரு கல்லறைய தான் ஒதைக்க முடியும். ஆளு டிக்கட் வாங்கி ரெண்டு நூற்றாண்டு ஆயிடுச்சி :0)

துளசி கோபால் said...

ஆனா ஃப்ரீஸர் கண்டு புடிச்சவனைக் கையெடுத்துக் கும்பிடணும். இல்லேன்னா, என் பொழைப்பு இங்கே நாறி இருக்கும்:-)

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி,

//கடைசில அந்த ச்சும்மா கொழம்ப சாப்டீரா இல்ல உங்க தங்கமணிக்கு தெரியாம கொட்டிட்டீரா?//

இன்னக்கி அது உருமாறி, கொஞ்சம் பாசிப்பயிர் சேர்த்து,புரோட்டாக்கு ஆயிடுச்சு.

குடுகுடுப்பை said...

வாங்க AMIRDHAVARSHINI AMMA
சொல்லிட்டேங்க

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது_அணிமா

//நான் சும்மா தான் கேக்குறேன்.. தைரியமா
சும்மாவாச்சும் சொல்லுங்க//

சும்மா ஜம்னு இருந்துச்சுங்க

குடுகுடுப்பை said...

வாங்க கருப்பையா
//Fridge கண்டுபுடிச்சவனைத் தேடிப்புடிச்சு உதைக்கணும்.//
உங்க வீட்லயும் பீருக்கு தடையா

குடுகுடுப்பை said...

வாங்க துளசி டீச்சர்

//ஏன்னா.... எவர்சில்வர் பாத்திரத்தை மைக்ரோவேவில் வைக்கக்கூடாது:-)))))//

யாராவது எவர்சில்வர் பாத்திரத்தை தடை பண்ண மாட்டாங்களா?

கோவி.கண்ணன் said...

//இதற்கிடையில் மிளகாய், மல்லி எல்லாத்தையும் வ(க)றுக்கும்போது வந்த வாடையில் fire alarm அடிச்சி அது ஒரு பக்கம்.ஆச்சியோட சும்மா குழம்பு பதிவை சுடச்சுட படிச்சிட்டே சமையல் நடந்துச்சு,மொத்தமா இந்த சும்மா குழம்ப வெக்கிறதுக்கு சும்மா 3 மணி நேரம் ஆச்சு.//

செம கலக்கல் நகைச்சுவை

Anonymous said...

எங்க வீட்டில எவர்சில்வருக்கு இல்லாம நேராவே பீங்கான் இல்லாட்டி ப்ளாஸ்டிக் பாத்திரத்துக்கு போயிரும் சாப்பாடு. யாரு ரெண்டு பாத்திரம் கழுவரது. :)

Anonymous said...

ஆமாம் அதுல சும்மா குழம்புக்கு ரெசிப்பியே காணோம். ??

வில்லன் said...

சும்மா கதை எல்லாம் வேண்டாம். எப்பவும் செட்டிநாடு மெஸ் சாப்பாடுதான்னு சட்டு புட்டுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான. வாழ்க "டாலஸ்" செட்டிநாடு மெஸ்...

வில்லன் said...

//ஒரு வழியா சும்மா குழம்பு வெச்சாச்சு, ஒரு மாறுதலுக்கு இன்னைக்கே இத சாப்பிடலாம்னு திடீர் உத்தரவு. ஏனோ தெரியல வாயில வெக்கவே முடியல ,ஆச்சி சொன்னபடிதான் சமைச்சேன்,நீங்க வாங்கிட்டு வந்த வெங்காயம் சரியில்லை அதான் இப்படி ஆச்சுன்னாங்க.//

"வெள்ளக்காரன் சாம்பார் வச்ச மாதிரி. "

எங்க வீடு பக்கத்துக்கு வீடுகார வெள்ளகார தொரை எங்க வீட்டுல சாப்பிட்ட சம்பார நனசிகிட்டு வெள்ளையமாவ சாம்பார் வைக்க சொன்னாங்களாம்... அவங்களும் வந்து எங்க வீடு தங்கமணிகிட்ட குறிப்பு எழுதிகிட்டு போயி சமசாங்கலாம்...... வாய்ல வைக்க முடியலயாம்.... அப்படி இருக்கு உங்க வீடு திடீர் கொளம்பு சமாசாரம். அதெல்லாம் கை வண்ணம் சார். "ஏட்டு சொரக்காய் கறிக்கு உதவாது".

Unknown said...

எங்க வூட்டுல இந்தியால இருந்து வரும்போதே பல சைஸ்ல சில்வர் பாத்திரம் வாங்கிட்டு வந்தாங்க. அப்புறம், ரெண்டு ரெண்டு பத்திரமா வெளக்க முடியலைன்னு மனு போட்டதும், பல சைஸ்ல பிளாஸ்டிக் பாத்திரம் வாங்கி வச்சாங்க. எவனோ ஒரு பாழாப் போன ஜப்பான்காரன் பிளாஸ்டிக் பாத்திரத்த மைக்ரோ வேவ் பண்ணா கான்செர் வரும்னு கண்டு பிடிச்சிருக்கான்னு சொல்லிட்டு, ஒரு செட்டு கண்ணாடி பாத்திரமும் ஒரு செட்டு பீங்கான் பாத்திரமும் வாங்கிட்டு வந்துட்டு, இப்போ சொல்றாங்க - என்ன வீடு பாத்திருக்க? பாத்திரம் வைக்க கூட ஸெல்ப் ஸ்பேஸ் இல்லைன்னு குறை சொல்றாங்க. என்னத்த சொல்றது?