Monday, September 22, 2008

இன்று முதல் பட்டை சாராயம்.

இது நாள் வரைக்கும் எனது முதண்மை தொழிலான குடுகுடுப்பைக்காரன் வேலையை செய்துகொண்டிருந்த நான். குருவி மாதிரி சம்பாதிச்ச காசெல்லாம் இந்த ஸ்டாக் மார்க்கெட்ல போட்டதுல என்னோட உடைகளெல்லாம் போன வருடமே உருவிட்டாங்க.

நானும் மனம் தளராமல் குடுகுடுப்பைக்காரனுக்கு பேய்,பிசாசு,அவட்டைகளிடம் பேசும்போது உடைகள் தேவையில்லை என்பதாலும், குறி சொல்லும்போது இரவில் செல்வதாலும்,நாடு முழுவதும் உள்ள மின்வெட்டும் எனக்கு உதவியாக இருந்து உடையை பற்றி கவலைப்படாமல் என் தொழிலை செய்துகொண்டிருந்தேன்.

ஆனால் இப்போது அடித்த ஸ்டாக் மார்க்கெட் சூறாவளி எனது உடுக்கையையும் பாதியாக உடைத்து விட்ட காரணத்தினால் என்ன செய்வது என புரியவில்லை.

இதற்கிடையில் வீட்டில் குழந்தை, பாதியாக உடைந்த உடுக்கை ஆனியில்லாத பம்பரம் போல் உள்ளதாகவும்.அதற்கு ஆனி வாங்கி தரும்படி படுத்துவதால், ஆனி வாங்குவதற்க்காக பணம் தேவைப்படுவதால், சிறிது காலம் குடிசைத்தொழிலான பட்டை சாராயம் காச்சலாம் என்றிருக்கிறேன். இதற்கு உங்களுடைய பேராதரவை எதிர் நோக்கி உள்ளேன்.

தொழில் தர்மம் கருதி, பட்டை சாராயம் தயாரிக்கும் முறை,பயன்படுத்தும் பொருள் மற்றும் அதன் பயன்களையும் உங்களுக்கு தருகிறேன்.

தேவையான பொருட்கள்:
1. கெட்டுப் போன சக்கரை ,சக்கரை ஆலை கழிவுகள்.
2. பவர் போன பேட்டரிகள்.
3. செத்துப்போன பாம்பு,பல்லி,பூரான்,கரண்ட் (இருந்தா) கம்பியில் அடிபட்ட காக்கா,சீக்கில் செத்த கோழி மற்றும் சில
4. யூரியா(அம்மோனியா)
5. கடைகளில் அழுகிப்போன பழங்கள்/காய்கறிகள் குப்பைத்தொட்டியில் வீசிய பிறகுதான் பொறுக்கவேண்டும்.
6. கல்யாண மண்டபம்/ஹோட்டல் குப்பைத்தொட்டியிலும் பொறுக்கலாம்.
7. வர மிளகாய்
8. பொரொப்ரைட்டரி மிக்ஸ்.(தொழில் ரகசியம்)
9. ஊறவைக்கும்போது நமக்கே தெரியாமல், நல்லபாம்பு மற்றும் சில விஷ ஜந்துக்கள் பானையில் விழக்கூடும்.
10. காய்ச்சி வடிக்க தேவையான கலன்கள் மற்றும் விறகு போன்றவை திருடிக்கொள்ளவேண்டும்.

செய்முறை:
மேற்கண்ட பொருட்களை, ஒரு பெரிய மண்பானையில் வைத்து ஊற வைக்கவேண்டும். கிட்டதட்ட ஒரு வாரம் வரை ஊற வைத்தால் சுவை(?) நன்றாக இருக்கும். டிமாண்ட் அதிகமாக இருந்தால் கொஞ்சம் அதிகம் அம்மோனியா மற்றும் உச்சாவையும் சேர்த்து மூன்று நாட்களில் காய்ச்சி வடிக்கலாம்.(பதிவின் நீளம் கருதி காய்ச்சி வடித்தல் முறை விளக்கம் இல்லை)

காய்ச்சி வடிக்கப்பட்ட பின் குப்பைத்தொட்டியில் மற்றும் ரோட்டோரத்தில் வீசப்பட்ட பால் பாக்கட் போன்றவற்றில் உலகத்தரத்தில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

நன்மைகள்:

இந்தியாவில் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் மிக்க காய்ச்சிகள் உள்ளதால் சொற்ப விலையில் தயாரிக்கமுடியும், இந்த தொழில்நுட்பம் நமக்கே சொந்தமானலும் மேலை நாட்டை சார்ந்த சில கம்பெனிகள் காப்புரிமை பெற்றுவிட்ட காரணத்தினால், நம்முடைய பங்கு அதில் காய்ச்சிகளாக மட்டுமே, இருந்தாலும் நல்ல சம்பளத்தில் MNC வேலை. இருந்தாலும் மேலை நாடுகள் பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் கவனம் செலுத்தலாம்.

உலகமெங்கும் காஸ்ட் கட்டிங் நடப்பதால் ஸ்காட்ச் போன்ற மது வகைகளுக்கு மாற்றாக நூற்றில் ஒரு பங்கு குறைந்த செலவில் ராஜ போதை தரும் பட்டை சாராயம் வழங்கலாம்.

வீட்டுக்கடனில் திவால் ஆகும் நிலையில் உள்ள வங்கிகள் இந்த தொழில்முனைவோர்களுக்கு கடன் கொடுத்து திவாலில் இருந்து தப்பிக்கலாம்.இத்தொழில் திவால் ஆக வாய்ப்பு மிகக்குறைவு,வீடு வாங்கியவர்கள் இதனைக் குடித்து கவலை மறக்கலாம்

இதனை குடிப்பதால் எடுக்கும் வாய் நாற்றத்தால் எப்படி டைவோர்ஸ் செய்வது (ஆண்/பெண் இரு பாலருக்கும்) என்ற பிர்ச்சினை தீர்ந்து உடனடி தீர்வுக்கு வாய்ப்பு அதிகம்.

மேற்கண்ட பலன்கள் பொய்த்தாலும், உச்சகட்ட நன்மையாக இதனை குடிப்பவர்கள் இந்த நரக பூமியில் இருந்து, குடித்தவுடன் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு உறுதி(99.99%).

கடவுள் தான் பாவம், விரைவாக சொர்க்கம் நோக்கி வரும் கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.

பி.கு: பாக்கியராஜின் நேற்று இன்று நாளை மாதிரி தொடர்பற்ற ஒரு சும்மா பதிவு. யாரும் முயற்சி பண்ணி பார்க்காதீங்க, அப்புறம் பட்டையை கழட்டிருவாங்க பின்விளைவுகளுக்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த பதிவை படிச்சிட்டீங்க மறக்காம உங்களோட பின் விளைவுகள் என்ன சொல்லிட்டு போங்க.

25 comments:

செல்வ கருப்பையா said...

ஊருல காய்ச்சி குடிச்சுகிட்டு இருந்தவனெல்லாம் இங்க வந்து ஸ்காட்ச் குடிச்சுகிட்டிருந்தோம். ஸ்டாக் மார்க்கட் சூறாவளி இங்கன ஸ்காட்ச் குடிச்சுகிட்டு இருக்குறவங்கல எல்லாம் காய்ச்சிக் குடிக்க வச்சுடுச்சு.

புதுகை.அப்துல்லா said...

குடிக்கையில என்ன...படிக்கையிலேயே தலைய சுத்துது ((((((:)))))))

Anonymous said...

Amma ippadi saraku adichitu uddukai adichitu iruntha Thangamani kovichikitu amma vittuku poida poranga.

Is there really a recipe to make it at home? Check this out http://www.sysindia.com/forums/Kitchen/posts/778.html

அது சரி said...

ஓஹோ, இது தான் உங்க டவுசர் கிளிஞ்சி போன கதையா?

நீங்க எந்த ஸ்டாக் மார்க்கெட்ல விளையாடுறீங்க? இன்டியன்? அமெரிக்கன்? பிரிட்டிஷ்?

ரெசிப்பி பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நமக்கு குடிக்கத்தான் தெரியுமே தவிர வடிக்கத் தெரியாது :0)

அது சரி said...

//
நானும் மனம் தளராமல் குடுகுடுப்பைக்காரனுக்கு பேய்,பிசாசு,அவட்டைகளிடம் பேசும்போது உடைகள் தேவையில்லை என்பதாலும்..
//

அது என்ன அவட்டை? நாயா?

நசரேயன் said...

முதல் ஆர்டர் நான் கொடுக்கிறேன்..
வீட்டுக்கு வந்து கொடுக்கிற சேவை வசதி இருக்கா?

குடுகுடுப்பை said...

வாங்க கருப்பையா அண்ணே
//ஊருல காய்ச்சி குடிச்சுகிட்டு இருந்தவனெல்லாம் இங்க வந்து ஸ்காட்ச் குடிச்சுகிட்டிருந்தோம். ஸ்டாக் மார்க்கட் சூறாவளி இங்கன ஸ்காட்ச் குடிச்சுகிட்டு இருக்குறவங்கல எல்லாம் காய்ச்சிக் குடிக்க வச்சுடுச்சு.//

என்ன ஒரு தொடர் பதிவே போடலாம் போல

குடுகுடுப்பை said...

வாங்க புதுகை.அப்துல்லா
\\
குடிக்கையில என்ன...படிக்கையிலேயே தலைய சுத்துது ((((((:)))))))\\

இனிமே மொத்தமும் சுத்துற மாதிரி எழுதிடுவோம்

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

//நீங்க எந்த ஸ்டாக் மார்க்கெட்ல விளையாடுறீங்க? இன்டியன்? அமெரிக்கன்? பிரிட்டிஷ்?

ரெசிப்பி பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நமக்கு குடிக்கத்தான் தெரியுமே தவிர வடிக்கத் தெரியாது :0)//

என்னோட கவுஜ வ நல்லா குடிச்சுட்டு படிங்க

நாங்களும் கன்னி முயற்சி தான் காச்சுறது

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்.
//முதல் ஆர்டர் நான் கொடுக்கிறேன்..
வீட்டுக்கு வந்து கொடுக்கிற சேவை வசதி இருக்கா?//

ரொம்ப நன்றிங்க, வீட்ல வந்து காச்சியே கொடுப்போம் நாங்க

இது அது சரிக்கு
அவட்டைனா பேய்க்கெல்லாம் லீடர்

குடுகுடுப்பை said...

வாங்க அனானி
//Amma ippadi saraku adichitu uddukai adichitu iruntha Thangamani kovichikitu amma vittuku poida poranga.//

எங்க நடக்குது

CA Venkatesh Krishnan said...

நன்றாக இருக்கிறது குடுகுடுப்பை !

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கும் இன்றைய நிலையில், பட்டைச் சாராயத்திற்குப் பச்சைக் கொடி காட்டினாலும் காட்டி விடுவார்கள்.

ஒன்றும் சொல்வதற்கில்லை :(, ஒன்றைத் தவிர.. அதாவது

'எதிர் பாராததை எதிர் பாருங்கள்';-)

நாமக்கல் சிபி said...

:))

யூர்கன் க்ருகியர் said...

பட்டை சாராயம் எப்படி காச்சரதுன்னு சொல்லி குடுத்திட்டிங்க.!
அப்படியே பாடைய எப்படி கட்டறதுன்னு சொல்லிட்டிங்கன்னா, சாராயத்தை காச்சி குடிச்சிட்டு அப்படியே போய் பாடையில படுத்துக்க வசதியா இருக்கும்.

சாராயத்தை விட்டுட்டு பீர் காச்சரதுன்னு சொல்லி குடுத்தாலாவது கொஞ்சம் நியாயம் இருக்கும்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
இளைய பல்லவன்,

//எதிர் பாராததை எதிர் பாருங்கள்';-)//

நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும் முக்கியம் அல்லவா.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நாமக்கல் சிபி,ஜுர்கேன் க்ருகேர்.

//பட்டை சாராயம் எப்படி காச்சரதுன்னு சொல்லி குடுத்திட்டிங்க.!
அப்படியே பாடைய எப்படி கட்டறதுன்னு சொல்லிட்டிங்கன்னா, சாராயத்தை காச்சி குடிச்சிட்டு அப்படியே போய் பாடையில படுத்துக்க வசதியா இருக்கும்.//

அதையெல்லாம் பாத்துக்க சில சாவு இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கு. குடித்தவுடம் சொர்க்கம் உறுதி:-)

//சாராயத்தை விட்டுட்டு பீர் காச்சரதுன்னு சொல்லி குடுத்தாலாவது கொஞ்சம் நியாயம் இருக்கும்.//

என்ன வெச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலயே

Anonymous said...

With Best Compliments:-)

http://www.visvacomplex.com/Pattai_Kottai_Kattai.html

Anonymous said...

http://www.visvacomplex.com/Pattai_Kottai_Kattai.html

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஜேபி
உங்கள் செயல்முறை அருமை

Unknown said...

முறை தவறு.இப்படி காச்சினால் மரணம் நிச்சயம்.

Unknown said...

சும்மா மனசில் பட்டதை எழுதியிருக்கு
டைம் பாஸ் இதில் உன்மை இல்லை,

சாராயம் என்பது ஒரு மருந்து ,அதன் போதைக்காகவும்,வியாபாரத்திற்காகவும் அதன் பார்முலாவையே சீரழித்துவிட்டார்கள் அயோக்கியர்கள்

Unknown said...

சும்மா மனசில் பட்டதை எழுதியிருக்கு
டைம் பாஸ் இதில் உன்மை இல்லை,

சாராயம் என்பது ஒரு மருந்து ,அதன் போதைக்காகவும்,வியாபாரத்திற்காகவும் அதன் பார்முலாவையே சீரழித்துவிட்டார்கள் அயோக்கியர்கள்

Unknown said...

Hahaha super

மதியழகன் said...

போடா.... கேன் புண்.....ணாக்கு....

Unknown said...

Arai mentala beer......moodu....
Waste all time.....