Thursday, September 18, 2008

கடவுளுக்கு ஒரு பக்தனின் மொக்கை வேண்டுகோள்.

இந்த வேண்டுகோள் ஒன்றும் புதிதல்ல, நாத்திகர்,ஆத்திகர் என அனைவரும் அனைத்து ஊடகங்கள் வழியாக பல காலங்களாக எழுப்பும் ஒன்றுதான்.

முதல்ல என்னைப்பத்தி சொல்லிடறேன், கடவுளே உங்களுக்கு இல்லை, இந்த மனுசப் பதருகளுக்கு(நன்றி யாகவா முனிவர்).

அறை எண் 305ல் கடவுள் படத்தில வர்ற மாதிரி எனக்கு தேவையின்னா மட்டும் கடவுளை துணைக்கு கூப்பிடர சராசரி பதரு நான்.எனக்கே என் கடவுள் நம்பிக்கைமேல முழுசா நம்பிக்கை இருக்கா இல்லயானே தெரியாதவன்.

கடவுளே உலகம் முழுவதும் இந்த மனுசப் பதருங்க எதுக்கோ அடிச்சுங்கிறானுங்க , புதுசா புதுசா ஆயுதம் கண்டுபிடிச்சு சக மனுசப் பதருகளை சாவடிக்கிறாங்க. இவங்களுக்கெல்லாம் எதுனா ஒரு சேதி சொல்லப்படதா.

கடவுளே சுனாமி,பூகம்பம், சடக்குன்னு ஒரு நொடில உருவாக்கி என்னை மாதிரியே கடவுளை துணைக்கு கூப்பிடற மனுசங்களை படக்குன்னு சாவடிக்கிறீங்க. இதெல்லாம் பண்ற நீங்க அதுக்கு பதிலா உலகத்துல உள்ள ஆயுதம் முழுசா அழிச்சுபுட்டீங்கன்னா, சண்டை போடுறதுன்னா கூட கட்டிபுடிச்சுதான் உருளுவாங்க ஒன்னும் பெரிசா ஆபத்து இல்ல, இதை செய்யுங்க கடவுளே, உங்களால முடியாதது ஒன்னுமே இல்லங்கிறப்ப இதை செய்யுங்க கடவுளே.

ஆக்கிறதும்,அழிக்கிறதும் என் வேலை நீங்க தேவை இல்லாம யாரும் சண்டை போட்டுக்கபுடாதுன்னு எல்லாருக்கும் தோன்றி ஒரு சேதிய சொல்லிட்டு போங்க, நீங்க பாட்டுக்கு தேவதைகள் அனுப்பிச்சிராதீங்க இங்க ஆம்பளப்
பதருக அவங்களோட ரூம் போட்டு யோசிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க.

நான் சொல்றது உங்களுக்கு புரியலன்னா செல்வ.கருப்பையா, அது சரின்னு ரெண்டு கவிஞர்கள் அவங்க கிட்ட சொல்லி அருஞ்சொற்பொருள் இல்லாம கவிதை வழியா வேண்டுகோள் விடுக்கசொல்றேன்.

அதுவும் இல்லன்னா ராப்புன்னு ஒரு அக்கா இந்த வலைப்பதிவுல ஒன்னுமே இல்லாம தொடரும் போட்டுட்டு இருக்காங்க அவங்கள விட்டு உங்களுக்கு புரியுர மாதிரி எழுத சொல்லுவோம்.

இல்லாட்டி மங்களூர் சிவான்னு ஒருத்தர் இருக்காரு அவர விட்டுரிப்பீட்டேய்ன்னு சுருக்கமா சொல்ல சொல்றோம்.

மொத்தத்தில் நல்லத பண்ணுங்க கடவுளே.

எழுத நினைத்து விட்டுப்போனது :

கடவுளே நீங்க இதெல்லாம் செய்யலன்னா பழைமை பேசி ன்னு ஒரு வலைப்பதிவர் இருக்காரு அவரு
"கடவுள் என்றால் என்ன ?" அப்படின்னு ஒரு பதிவு போட்டுருவாரு "


கடவுளே
நான் கேட்டதுல எதுனா தப்பு இருந்துச்சுன்னா மன்னிச்சிருங்க சாமி.

17 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யோ.. அய்யோ..

நசரேயன் said...

நல்ல கருத்து மற்றும் நல்ல நடை

Anonymous said...

We worship or call god only when we have a problem. Also we always ask god to solve our problems ;)

புதுகை.அப்துல்லா said...

அப்பாடி அதுல நம்ப பேரு எங்கயும் இல்ல....தப்புச்சேன் :))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
சுடர்மணி,நசரேயன்

அய்யா நசரேயன், உங்க பதிவு பிடிச்சி உங்கள என் கடைக்கு கூப்டேன், உங்க பதிவோட பாதிப்புதான்(காப்பி இல்லை:-)) இது.பாராட்டெல்லாம் கொஞ்சம் அதிகமுங்கோ

குடுகுடுப்பை said...

வாங்க அனானி
//We worship or call god only when we have a problem. Also we always ask god to solve our problems ;)//

மனுசங்களுக்கு சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இல்லீங்க அதான், கடவுளுக்கே வேண்டுகோள்.

குடுகுடுப்பை said...

வாங்க புதுகை.அப்துல்லா

அப்பாடி அதுல நம்ப பேரு எங்கயும் இல்ல....தப்புச்சேன் :))

உங்களுக்கு தனிப்பதிவுதான், உங்களோட அந்த மூத்திர கவிதையை வெச்சு உங்களையும் கொண்டு வரலாம்னு நெனச்சேன் ஆனா நீளம் கருதி...

செல்வ கருப்பையா said...

குடுகுடுப்பையாரே - ஏன் இந்த வெறி எங்க மேல? கடவுள்கிட்டயே போட்டுக் குடுத்திட்டீங்க. ஓ... கடவுள்கிட்ட பேசறதா இருந்தாலே யாருக்கும் புரியாததா பேசனுங்கறதுனாலையா?

அது சரி said...

என்னவே, நம்பள வம்புக்கு இழுக்கறீரு? கவிதையெல்லாம் நம்ம செல்வ கருப்பையா எழுதுவாரு. ரொம்ப தெளிவா கொழப்புவாருல்லா? நம்மள விட்டுடும்.

கடவுள நாம முன்ன பின்ன பாத்ததில்லையா, அதனால வந்தாலும் அடையாளம் தெரியாது. ஐடி கார்டு கேப்போமுல்ல?

செல்வ கருப்பையா said...

என்ன வோய் அது சரி! என்கூட கூட்டு சேருவீருன்னு பாத்தா உடுக்கை அடிக்க கெளம்பிட்டீரு? வேதாளத்துகிட்ட எல்லாம் பேசுறீரு? கடவுள் கிட்ட பேசக்கூடாதா?

ஹலோ, குடுகுடுப்பையாரே - நீரு உடுக்கை அடிச்சு ஆண்டவனைக் கூப்பிட வேண்டியது தானே? ஐ டி எல்லாம் நான் ஏற்பாடு பண்ணி தரேன.

குடுகுடுப்பை said...

வாங்க கருப்பையா, அது சரி

//வெறி எங்க மேல? கடவுள்கிட்டயே போட்டுக் குடுத்திட்டீங்க. ஓ... கடவுள்கிட்ட பேசறதா இருந்தாலே யாருக்கும் புரியாததா பேசனுங்கறதுனாலையா?//

என்னமோ மனுசங்க கிட்ட மாட்டி விட்ட மாதிரி பயப்படுரீங்க, கடவுள் ஒன்னும் பண்ணமாட்டருங்க, அவருக்கு எல்லாம் தெரியும் உங்க கவிதைய புரிஞ்சுக்க மாட்டாரா

குடுகுடுப்பை said...

\\ஹலோ, குடுகுடுப்பையாரே - நீரு உடுக்கை அடிச்சு ஆண்டவனைக் கூப்பிட வேண்டியது தானே? ஐ டி எல்லாம் நான் ஏற்பாடு பண்ணி தரேன.\\

உடுக்கை அடிச்சி நாங்க பேய்,பிசாசு கிட்டதான் பேசுவோம்.ஸ்டாக் மார்க்கெட் காரங்க இருந்த உடுக்கையும் பாதியா உடைச்சுப்புட்டாங்க, இனிமே பட்ட சாராயம் தான் காச்சனும்

Anonymous said...

:))

குடுகுடுப்பை said...

வாங்க ஆனந்த்
ஏதாவது சொல்லிட்டு போங்க

Subash said...

:))

Anonymous said...

உங்கள் வேண்டுகோள் அனைத்தும் வெற்றியுடன் நிறைவேறட்டும்.

நல்வாழ்த்துகள்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி சுபாஷ், அனானி