Tuesday, December 14, 2010

ஜிம் அனுபவம்.

கடந்த சில வாரங்களாக என் மனைவி ஜிம்மில் சேரப்போகிறேன் நல்ல ஜிம் எதுன்னு சொல்லுங்க அப்படின்னு ஒரே குடைச்சல். அடிக்கடி வீட்டுக்கு வர விளம்பரத்தில விலை குறைந்த மாதக்கட்டணம் உள்ளதுதான் நல்ல ஜிம்முன்னு சொல்லிடலாம்கிற முடிவோட இருந்தேன். என்னுடைய நல்ல நேரம் $ 1 க்கு ஜாயின் பண்ணலாமின்னு ஒருத்தன் விளம்பரம் கொடுத்திருந்தான்.

வீட்டுக்கு வந்திருந்த கூப்பனை எடுத்துக்கொண்டு குடும்ப சகிதம் அங்கே சென்றோம், சரியான அளவுகளில் இருந்த இளம்பெண் ஒருவர் வரவேற்றார், மற்றொருவர் கேள்விகளை வீசத்தொடங்கினார்.

முதலில் என்னிடம் என்ன காரணத்துக்காக ஜிம் ஜாயின் பண்றீங்கன்னு கேட்டார்.
நான் எந்தக்காரணத்திற்கும் ஜிம்மில சேரும் யோசனையில்லை என்றேன், மனைவி இடையே குறுக்கிட்டு, நாந்தான் ஜிம்மிலே சேரப்போறேன் என்றார்.

என்ன காரணம்?

"குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகியாச்சு, ஜிம்மிலே சேர்ந்து வெயிட் குறைக்கலாமின்னு யோசிக்கறேன்"

"இதுக்கு முன்னாடி எப்ப ஒல்லியா இருந்தீங்கன்னு கேட்டாங்க" எனக்கு பகீர்னு தூக்கி வாரிப்போட்டது, ஆனாலும் அடக்கி வாசித்தேன்.

"இரண்டு வருடம் முன்னர்"

"உங்க பெண்ணும் சேருராங்களா? அவங்களுக்கு கிட்ஸ் கிளப் இருக்கு"

"யெஸ் ஐ வாண்ட் டூ ஜாயின் தி கிட் கிளப் "- மகள்

"வெரி நைஸ்"

அப்படியே எங்களை ஜிம் டூர் அழைத்துச்சென்றார், முதலில் யோகா அறையைக்காட்டினார், எனக்கும் சிறிதாக ஆசை முளைத்தது,

"முதுகு வலிக்கு எதாவது பெர்சனல் டிரெய்னர் இருக்காங்காளா?"

"ஓ யெஸ்" இப்படி ஆரம்பித்து அருமை பெருமைகளை எடுத்துரைத்தார். ஒவ்வொரு மெசினாக, அறையாக காண்பித்தார், இறுதியாக மஸாஜ் அறை மற்றும் பாத் ரூமையும் சுற்றிக்காட்டிய பின் ஜிம்மில் சேரும் பிராசஸை விவரித்தார்.

"ஜிம் அக்செஸ் மட்டும் போதும், இந்தக்கூப்பன் இருக்கு"

"ஜிம் அக்செஸ் மட்டும் மாதம் $19.99 ஒன்டைம் ரெஜிஸ்ட்டிரேசன் $199 பிராஸஸிங் $49" என்றார்.கிட்ஸ் கிளப் $99.

"அப்ப இந்தக்கூப்பன்"

"அதுவா அது வருட மெம்பர்ஷிப் சேர்ந்தா ரெஜிஸ்ட்டரேசன் கிடையாது $399 மட்டும் கட்டினா போதும் பிராஸஸிங் $39 எக்ஸ்ட்ரா"

"உங்களோட தொழில் போட்டியாளர்கள் $14.99 க்கே தராங்களே"

"எங்ககிட்ட நிறைய எக்யூப்மெண்ட்ஸ் இருக்கு"

"எனக்கு டிரெட் மில்லும் ,சைக்கிளிங் மட்டும் போதும்"- மனைவி.

"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் நான்"

நாங்க உங்க தொழில் போட்டியாளர்களை விசாரிச்சிட்டு இன்னொரு நாள் வரோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பும்போது கவனித்தோம், ஜிம்மிலே ஓடி அனைவரும் களைத்து இளைத்து விட்டிருந்தனர், கம்பேக் சூன் என்று குண்டாக இருந்த ஓனர் அலுவலக அறையிலிருந்து குரல் கொடுத்தார்.

3 comments:

Unknown said...

//"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் நான்"//

இந்த மாதிரி நெனச்சுதான் நானும் ஒரு சைக்கிள், ட்ரெட்மில், எலிப்டிகல் எல்லாம் வாங்கி வச்சேன். பட்டேல் க்ரோசரில சாம்பிராணி, சூடம் தீர்ந்ததுதான் மிச்சம். ஊர விட்டு கிளம்பும்போது அடிமாட்டு ரேட்டுக்கு ட்ரெட்மில்ல குடுத்துட்டு, மத்தத கண்டைனர்ல அள்ளிப் போட்டுட்டு வந்தேன். இங்கேயும் அதே நெலமைதான். புது வருஷத்துலருந்து ஜிம்முக்குப் போகணும் :)

நீங்க பேசாம, ஜிம்முலயே சேந்துடுங்க. நெறைய ஆப்ஷன், அப்புறம் மத்தவங்களைப் பாத்தாவது, நாமளும் இளைக்கணும்னு தோணும்!!

vasu balaji said...

தல. இது எல்லாம் உங்களுக்கு சரி வராது. பேசாம ராமகிருஷ்ணர் ஆசிரமத்துல ஒரு மாசம் இருந்து தியானம், யோகான்னு செஞ்சாதான் சரி:))

arasan said...

நல்ல பதிவு ...