Monday, January 3, 2011

மனம்போன போக்கில் மாடு போன போக்கில்

மனம் போன போக்கில் வீட்டின் கொள்ளைப்புறத்திலிருந்து நடந்து கொண்டிருந்தேன், தூரத்திலிருந்து உத்திராபதியின் குரல் கேட்டது.

"மாப்பிளை உங்க மாடு எங்க வீட்டு தொட்டிய மொட்டை அடிக்குது, பிடிச்சிக்கட்டுங்க"


உத்திராபதிக்கு நான் பங்காளி அதனால் என் வீட்டு மாடு அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன், அப்படியே சித்தன் கடையில் டீ குடிக்கும் எண்ணத்தோடு மேலும் நடந்தேன்.

"மாப்பிளை தமிழ்ல தானே சொல்றேன் மாட்ட புடிச்சு கட்டுங்க"

இதுவரை அமைதியாக இருந்த வாத்தியார் சங்கரன் வாயைத்திறந்தார்.

"பரவாயில்லை மாப்பிளை நீங்க இங்கிலிசுலேயே சொல்லுங்க அப்புறமா புடிச்சி கட்டுறேன்"

"இந்த எடக்கு மயிருக்கெல்லாம் கொறச்ச இல்ல மாட்டைப் புடிச்சி கட்டலைன்னா, நான் புடிச்சி கட்டி ரெண்டு நாளைக்கு தீனி போடமாட்டேன்"
உத்திராபதி இப்போது என்னைக் கை காட்டி கூப்பிட்டான்.

"டேய் நீதான் இன்ஜினியருக்கு படிச்சிருக்க, இந்த சின்னப்பள்ளிக்கூடத்தான், என்னை இங்கிலீசுல மாடு புடிச்சி கட்டச்சொல்றான், நீ கொஞ்சம் இங்கிலிசுலே மாடு கட்டச் சொல்லி சொல்லுடா"

"இல்ல உத்திராபதி, நான் படிச்சது இன்ஜினியரிங் இங்கிலீசு அதுல மாடு புடிச்சி கட்டுறதுக்கெல்லாம் சொல்லித்தரலை"

"சரி ஏதோ படிச்சத சொல்லு , மாப்பிளை என்ன பண்ணுறார்னு பார்ப்போம்"

"டியர் மாப்பிள், யுவர் மொட்டைமாட் ஜம்புடு தி வேலி அன்ட் ஈட்டிங் தி பருத்திகொட் இன் உத்திரன்ஸ் வாட்டர் டேங், பிளீஸ் யூ கட் தி மொட்டமாட் இன் தி மொள ஸ்டிக்"

"மாப்பிளை நீங்க சொன்னது மாதிரியே என் பங்காளி இங்கிலீசுல சொல்லிட்டான் இப்பயாச்சும் கட்டுங்க"

"அவன் என் மொட்டமாடி தண்ணித்தொட்டி வேலி தாண்டி ஊத்தி வேஸ்டாப்போகுது, ஸ்டிக் வைச்சு அடைக்கச்சொல்றான், ஆனாலும் இன் ஜினியர்னா இன் ஜினியர்தான்"

"இல்ல சார் நான் மொட்டை மாட்டைத்தான் கட்டச்சொன்னேன்"

"என்ன இன் ஜினியரே , மோழ மாட்ட மொட்டை மாடின்னு சொல்றீங்க, என்னத்த படிச்சியளோ போங்க, உங்கப்பாரு காசு உன் படிப்பு என்னமோ போங்க, நீங்க படிச்சிப்புட்டு மாடியும் கட்டவேண்டாம் , மாடும் கட்டவேண்டும் கக்கூஸாவாது கட்டப்பாருங்க"

"காலைல டீக்குடிக்கலாமின்னு இந்தப்பக்கம் வந்ததுக்கு எனக்கு வேணும்"
இப்படியாக வெட்டிப்பேச்சு ஓட்க்கொண்டிருக்கையில் கொண்டியாரகள்ளி, சத்தம் போட்டுக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"ஏன்டா வாத்திப்பயலே மோழ மாட்டை அவுத்து விட்டு என் பயித்தை மொட்டையடிக்கலாமின்னா இருக்க, மாட்டை அவுத்து விட்டுப்புட்டு இங்க என்னடா பேச்சு வேண்டிக்கெடக்கு, இன்னொரு வாட்டி மாடு அந்தப்பக்கம் மாடு வந்திச்சு,பள்ளிக்கூடத்து வேலில ஆடு மேஞ்சா ஆட்டுக் காத அறுப்பியாமே நீ, நான் உன் காதை அறுத்துப்புடுவேன் பாத்துக்க"

8 comments:

Anonymous said...

முதல் பந்தி எனக்கே எனக்கு. சிறுகதை அருமை..........

வருண் said...

***நான் உன் காதை அறுத்துப்புடுவேன் பாத்துக்***

யப்பா! :)

குடுகுடுப்பை said...

நன்றி அங்கீத வர்மா, வருண்

Philosophy Prabhakaran said...

எழுத்து நடை அருமை... பேச்சு வழக்கை அப்படியே பதிவு செய்த விதம் சூப்பர்...

ILA (a) இளா said...

இங்க பார்ரா.... ஒருத்தரு எழுத்தாளர் ஆவுறாரு

பழமைபேசி said...

மாடு மேய்க்கப் போனேன்...
மனதுக்கினிய கதை ஒன்று வாங்கி வந்தேன்...
நான் டாலசில் மாடு மேய்க்கப் போனேன்..
நல்ல மெக்சிக்கோ அம்மணியப் பார்க்கலானேன்...

மாடு மேய்க்கப் போனேன்...
மனதுக்கினிய கதையொன்று வாங்கி வந்தேன்!!

ஆகா..அஃகஃகா...அஃகஃகா...
மாடு மேய்க்கப் போனேன்...
மனுதுக்கினிய கதையொன்று வாங்கி வந்தேன்....

மாதேவி said...

ஹா...ஹா.

Chitra said...

வட்டார பேச்சு வழக்கில் கலக்கிப்புட்டீகளே!