Wednesday, January 5, 2011

வரலாறு திரும்புகிறது.

ஆகஸ்ட் 11 ,3009.

ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று திண்ணியத்தில் உயர்சாதிக்காரர் வீட்டிலும் வயல்களிலும் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியினரான மூர்த்தி தேவர், குரு ஐயங்கார், ஷண்முக நாயக்கர் ஆகியோர், உயர்சாதிப்பண்ணையார் முருகப் பறையனார் வீட்டில் உள்ள கோவிலின் உள்ளே சென்று சாமி கும்பிட்டதற்காக முருகப்பறையானாரும் அவரது மனைவி சசிரேகா பறைச்சியாரும் , கீழ்சாதி தேவப்பயலுக்கும் பாப்பாரப்பயலுகளுக்கு என்னடா திமிரு, நாயக்கப்பயலும் இவனுங்க கூட சேர்ந்து கொட்டமடிக்கிறீர்களா என்ன தைரியம் இருந்தா கோவிலுக்குள்ள நுழைவீங்க என்று கூறியவாரே வாயில் மலத்தை கரைத்து ஊற்றி முப்பத்தொண்றாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சாதி வன்கொடுமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த உலக நாட்டுத்தலைவர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

சவூதி அரேபியா பிரதமர் ஸ்வாதி நாயர் வழிபாடு அனைவருக்கும் பொதுவானது , அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.அந்நாட்டுச்சட்டம் தனிமனித வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் கடந்த 50 வருடமாக இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளங்கள் தவிர மற்ற மத வழிபாட்டுத்தளங்களை வெடி வைத்து தகர்ப்போம் என்று கூறிய தீவிரவாதக் குழுவை இரும்புக்கரம் கொண்டு தான் அடக்கியதை, துபாய் பிரதமர் குட்டி முகமது பாராட்டியதை நினைவு கூர்ந்தார்.இவர் சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு ஓட்டுரிமையும் , ஓட்டுனர் உரிமையும் வழங்கி புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சிய பிரதமர் சொராஸ்டிர் அகமதுவும்,குர்து பிரதமர் முகமது சேக்கும் தங்களது கணடனத்தை தெரிவித்தனர்.

பாலஸ்தீன பிரதமரும், இஸ்ரேலியப் பிரதமரும் ஜெருசலத்திலிருந்து விட்ட கூட்டறிக்கையில் இம்மாதிரி நிகழ்வுகள் களையப்பட்டு எங்களைப்போல ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றனர்.

மனித உரிமை எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என சீன ஜனநாயக கூட்டமைப்பின் தலைவர் தியானென்மென் சதுக்கத்தில் இருந்தபடியே இச்செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் சந்திரகுப்த மவுரியர், எங்களின் ஆதித்தாயகமான இந்தியாவில் இவ்வாறு நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். இவர் புத்த மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும் மீளக்கட்டிந்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை இந்த நிகழ்வு கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊரில் இப்படி நடப்பது வருத்தமளிப்பதால் தான் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக கூறினார். கி.பி 2700 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு நிகராக சிங்களர்களுக்கும் உரிமையை தன் எள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை வாங்கிந்தந்ததையும், கி.பி 2500 ல் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையை தன் எள்ளெள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை தீர்த்துவைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது, பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்று தள்ளாத வயதிலும் உறுதிபடக்கூறினார்.

கடைசி நேரத்தகவலின்படி கருப்புசாமி தேவர், மற்றும் கபாலி ஐயர் தலைமையில் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.

38 comments:

நட்புடன் ஜமால் said...

3009 என்னா

3000009 லையும் இப்படி இருக்குமோ என்னவோ ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //

:))

குடுகுடுப்பை said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //

:))//

:)))

Anonymous said...

எந்தக்காலத்திலயும் சாதி ஒழியாதுங்கறீங்க.
//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை இந்த நிகழ்வு கண்டிக்கப்படவேண்டிய ஒன்று//

கடைசீல கவுத்திட்டீங்களே:)

மோகன் கந்தசாமி said...

யப்பா! ஸ்வாமி!! ... சிரிச்சி மாளலை!!! :-))))

வால்பையன் said...

இவைகளையெல்லாம் செவ்வாய் கிரகத்து அதிபர் வால்பையன் சிரித்து கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்!

நீங்க திருந்தவே போறதில்லை என்று!

Unknown said...

கலக்கிட்டிங்க தலை..
அதுலயும் ரொம்ப நுண்ணியமா எழுதி இருக்கீங்க.. தியானென்மன் சதுக்கத்தில் இருந்து சீனப் பிரதமர், சௌதி அதிபர் ஸ்வாதி நாயர், பெர்சியா பிரதமர், குர்து பிரதமர், ஸ்டீபன் காந்தி...

இதெல்லாம் போக, இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை கூட தீர்ந்து விடும், இலங்கை பிரச்சனைக்கு கூட தீர்வு வந்து விடும், ஆனால் ஜாதி மட்டும் அழியவே அழியாது...

அது மாதிரி இந்த பி.ஜே.பி காரங்க அப்பவும் ராமர் கோவில் பிரச்னையை வச்சுதான் அரசியல் பன்னுவங்கன்னும் நல்லா எழுதி இருக்கீங்க..

ரசிச்சு சிரிச்சேன்.

மதிபாலா said...

சிரிச்சு ரசிச்சேன்.

நட்சத்திரம் ஃபார்முக்கு வந்தாச்சு..

அடிச்சு தூள் கெளப்புங்க.

சந்தனமுல்லை said...

:-)) செம நக்கல்! ரசித்தேன்!

குடுகுடுப்பை said...

முகிலன் said...

கலக்கிட்டிங்க தலை..
அதுலயும் ரொம்ப நுண்ணியமா எழுதி இருக்கீங்க.. தியானென்மன் சதுக்கத்தில் இருந்து சீனப் பிரதமர், சௌதி அதிபர் ஸ்வாதி நாயர், பெர்சியா பிரதமர், குர்து பிரதமர், ஸ்டீபன் காந்தி...

இதெல்லாம் போக, இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை கூட தீர்ந்து விடும், இலங்கை பிரச்சனைக்கு கூட தீர்வு வந்து விடும், ஆனால் ஜாதி மட்டும் அழியவே அழியாது...

அது மாதிரி இந்த பி.ஜே.பி காரங்க அப்பவும் ராமர் கோவில் பிரச்னையை வச்சுதான் அரசியல் பன்னுவங்கன்னும் நல்லா எழுதி இருக்கீங்க..

ரசிச்சு சிரிச்சேன்.
//
துபாய் அதிபர் குட்டி முகமது மறந்துராதீங்க, ஞாபக வெச்சுக்கொள்ளு

ரெட்மகி said...

;)

அமுதா கிருஷ்ணா said...

உண்மை வலிக்கிறது சார்..

தமிழநம்பி said...

குடுகுடுப்பை,

உங்கள் அறிமுக உரை படித்தேன்.
ஈர்க்கப் பட்டேன்.

நகைச்சுவையாக எழுதப்பட்ட வரலாற்றுக் கதைக் கருத்தும் பிடித்திருந்தது.

கொஞ்சம் மொழிச் செப்பத்தோடு எழுதினால், எல்லாரையும் ஈர்க்கும் என்பது என் எளிய கருத்து.

முரளிகண்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பை

மருதநாயகம் said...

இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி//

என்னது அப்போதும் காந்தியா?

Unknown said...

//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //
:-)

//.. செவ்வாய் கிரகத்து அதிபர் வால்பையன் ..//

:-D

குடுகுடுப்பை said...

நன்றி ஜமால்
நன்றி சுரேஷ்
நன்றி சின்ன அம்மிணி
நன்றி மோகன்
நன்றி வால்
நன்றி முகிலன்
நன்றி மதிபாலா
நன்றி சந்தனமுல்லை
நன்றி ரெட்மகி
நன்றி அமுதா கிருஷ்ணா

குடுகுடுப்பை said...

தமிழநம்பி said...

குடுகுடுப்பை,

உங்கள் அறிமுக உரை படித்தேன்.
ஈர்க்கப் பட்டேன்.

நகைச்சுவையாக எழுதப்பட்ட வரலாற்றுக் கதைக் கருத்தும் பிடித்திருந்தது.

கொஞ்சம் மொழிச் செப்பத்தோடு எழுதினால், எல்லாரையும் ஈர்க்கும் என்பது என் எளிய கருத்து.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பேச்சு வழக்கில் எழுதுவது எனக்கு எளிதாக உள்ளதால் அப்படியே எழுதுகிறேன்.

மொழியில் என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.

குடுகுடுப்பை said...

நன்றி மருதநாயகம்
நன்றி முரளிக்கண்ணன்
நன்றி பட்டிக்காட்டான்

கோவி.கண்ணன் said...

:)

கற்பனை நல்லாத்தான் இருக்கு ! இதெல்லாம் நடந்தாலும் நவீனத் தீண்டாமை. கஷ்டம் கஷ்டமே !

சுரேகா.. said...

சூப்பர்!
எல்லா இடத்திலும் உங்கள் அற்புத கற்பனைத்திறனும், உலக அறிவும் ஜொலிக்கிறது...
வாழ்த்துக்கள் சார்!

CA Venkatesh Krishnan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பை!!

அருமையான கான்செப்ட். காலம் மாறினாலும் சிலதெல்லாம் மாறாதுன்னு சொல்றீங்க.

நல்லாயிருக்கு.

ஷண்முகப்ரியன் said...

அருமையான கற்பனை குடுகுடுப்பை சார்.சிரித்தபடியே சிந்திப்பது எல்லோராலும் முடியாது.மனமுந்த பாராட்டுக்கள்.

அது சரி(18185106603874041862) said...

கனவுகளுக்கு ஏது எல்லை?? கனவு என்னவோ நல்லாத் தான் இருக்கு.


//
.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.
//

இது உங்க டிபிகல் குடுகுடுப்பை குத்து :0)))

குடுகுடுப்பை said...

நன்றி கோவி
சுரேகா
இளைய பல்லவன்
அது சரி

பின்னோக்கி said...

நிலைமை மாறிடுங்க..நம்பிக்கை இருக்கிறது

பெருசு said...

தமிழ்நாட்டின் நிரந்திரமுதல்வர் முபபத்திமூன்றாம் நிதியை மறந்துட்டீங்களே!!!!

அரசூரான் said...

//இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். // மேலும்
தேவைப்பட்டால் இலங்கையிலிருந்து ”தமிழ் ஈழ அமைதிகாக்கும் படை”-யை தமிழக்த்திற்க்கு அனுப்பி நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி செய்வதாகவும் கூறியுள்ளார்.

நசரேயன் said...

இடுகையும் திரும்புதோ?

Yoga.s.FR said...

எப்புடீங்க உங்களால மட்டும் இது மாதிரியெல்லாம் முடியுது????????????!!!!!!!!

vasu balaji said...

சந்தடி சாக்கில இலங்கை இஸ்ரேல் அமெரிக்கான்னு கொடச்சல் நாடுங்களா வளைச்சி போட்டீங்களே தல:))

க.பாலாசி said...

அதுசரி.. அப்பவும் ராமர் பிரச்சனை தீராதுபோலருக்கே..

Unknown said...

செம நக்கல். இயலாமையை நன்கு வெளிப்படுத்துகிறது. படிக்கும் போதே ஒரு புன்னகையை கொண்டு வருகிறது.

காலங்கள் மாறும்.
காட்சிகள் மாறும்.
பசி பிணி தொடரும்.
ஆக மொத்தம் எதுவும் மாறாது.
...ம்ம்ம்.

பழமைக்கும் தளபதிக்கும் ஆட்சியல பங்கு கொடுக்காம விட்டுட்டீங்க.

குடுகுடுப்பை said...

பழமைக்கும் தளபதிக்கும் ஆட்சியல பங்கு கொடுக்காம விட்டுட்டீங்க. //
இந்திய ஜனநாயகத்தை அமெரிக்காவுக்கு மாற்றிய பின் குடுகுடுப்பை குடும்பம் மட்டுமே அதிபர்களாக இருக்கமுடியும், பழமையும்,நசரும் வாழ்க , ஒழிக போடலாம் தடையேதும் இல்லை.

Unknown said...

I had a real hearty laugh to see your reply.

வருண் said...

யாரை யாரையோ போஸ்ட் மாடர்ன் எழுத்தாளர்னு சொல்றாங்க. ஆனால் உண்மையிலேயே அது நீங்க தானுங்க, கு கு ! :-)

சிவகுமாரன் said...

//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //


.....ஆசை தோசை அப்பளம் வடை.

priyamudanprabu said...

இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.
////

HA HA