Monday, December 1, 2008

கல்லூரி சாலை : ஸ்காலர்ஷிப் பணமும் பாரிஸ் வீட்டு விருந்தும்.

கல்லூரி இரண்டாமாண்டு, குறிப்பிட்ட வருமானத்துக்கு குறைவாக உள்ள மாணவர்களுக்கு அரசு தரும் ஸ்காலர்ஷிப் பணம் ஆயிரம் ரூபாய் என நினைக்கிறேன்.(எனக்கு கிடையாது,அப்பா ஆசிரியர் அதனால் வருமானம் அதிகம் ). இதை பெரும்பாலும் கல்லூரி செமஸ்டர் பீஸ் /அல்லது மெஸ் பில்லில் கழித்துக்கொள்வார்கள்.அந்த மாதிரி ஒரு சமயத்துல சில நண்பர்கள் கிட்ட மிஞ்சி இருந்த பணத்தை வெச்சிட்டு நண்பன் பாரிஸ் வீட்டிற்கு விருந்து சாப்பிட போறதுன்னு முடிவாச்சு.

பாரிஸோட சொந்த ஊரு, அறந்தாங்கி பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமம். ஊருக்கு போயி ஒரு அதிகாலை நேரத்தில இறங்கினோம். பக்கத்தில இருக்கிர ஒரு குளத்திலதான் குளியல், அதுக்கு பக்கத்தில இன்னோரு குளம் அதுதான் நல்ல தண்ணி குளம், மக்கள் அந்த தண்ணிய எடுத்துட்டு போயி தேத்தாங்க்கொட்ட அப்படின்னு ஒன்னு குடத்துல போட்டு தெளியவெச்சுதான் குடிப்பாங்களாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இருந்தாலும் தண்ணீர் பெரும்பாலும் வருவதில்லை.

காலை சாப்பாடு, நாங்க ஒரு அஞ்சு பேரு போயிருந்தோம், நெறய இட்லி வெச்சுருந்தாங்க, நாங்களும் சுடச்சுட சாப்பிட்டே இருந்தோம், பாரிஸ் வந்தான் ஏண்டா பரதேசி நாயகளா, இது கிராமம்டா , இப்படி ஒருத்தன் இருவது இட்லி தின்னா வீட்ல உள்ள பொம்பளங்க என்னடா நெனப்பாங்க. அதுவும் எங்க வீட்டு இட்லி நல்லாவே இருக்காதுன்னு எங்க ஊர்ல எல்லாரும் சொலவாக, இதப்போயி இருவது, எந்திருங்கடா அப்படின்னு வெரட்டி காலை டிபன் ஒரு வழியாக முடிக்கப்பட்டது.

இட்லி போன வேகத்தை புரிந்துகொண்ட வீட்டினர் மதியத்திக்கு நெறய மட்டன் பிரியாணி பண்ணி வெச்சுருந்தாங்க, பழையபடி வெட்டல்.

அப்புறம் எல்லாரும் ரெண்டு நாள் தங்கினோம், இடியாப்பம்,சிக்கன் தூக்கம் வெட்டிப்பேச்சு, முடிச்சி ஊரு கெளம்பும்போது பாரிஸ் செஞ்ச காரியம் இதுதான்.

அவங்க அம்மாகிட்ட போயி காலேஜுக்கு ஸ்காலர்ஷிப் பணம் 2000 கட்டனும் குடு அப்படின்னான்.

அவங்க அம்மாவும் நீங்கெல்லாம் ஸ்காலர்ஷிப் பணம் கட்டியாச்சா தம்பிகளா எங்ககிட்ட கேட்டுட்டு பாரிஸ்கிட்ட ஒரு சந்தேகத்தோட/பாசத்தோட/நம்பிக்கையோட 2000 ரூபாய் கொடுத்தாங்க.

பி:கு: பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.

முடிஞ்சா இதப்படிங்க

வருங்கால முதல்வர்: தஞ்சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் - பாகம் 2

34 comments:

RAMYA said...

me the Ist

RAMYA said...

//
காலை சாப்பாடு, நாங்க ஒரு அஞ்சு பேரு போயிருந்தோம், நெறய இட்லி வெச்சுருந்தாங்க, நாங்களும் சுடச்சுட சாப்பிட்டே இருந்தோம், பாரிஸ் வந்தான் ஏண்டா பரதேசி நாயகளா, இது கிராமம்டா , இப்படி ஒருத்தன் இருவது இட்லி தின்னா வீட்ல உள்ள பொம்பளங்க என்னடா நெனப்பாங்க. அதுவும் எங்க வீட்டு இட்லி நல்லாவே இருக்காதுன்னு எங்க ஊர்ல எல்லாரும் சொலவாக, இதப்போயி இருவது, எந்திருங்கடா அப்படின்னு வெரட்டி காலை டிபன் ஒரு முடிக்கப்பட்டது.
//

இப்படியா திம்பீங்க? பாவி மக்கா....

RAMYA said...

//
இட்லி போன வேகத்தை புரிந்துகொண்ட வீட்டினர் மதியத்திக்கு நெறய மட்டன் பிரியாணி பண்ணி வெச்சுருந்தாங்க, பழையபடி வெட்டல்.

//

காலைலே சாப்பிட்டதே 4 நாட்களுக்கு வரும், இதிலே மதியம் மட்டன் வேறு மறுபடியுமா??????

ராஜ நடராஜன் said...

பாரிஸோட வீட்டு விலாசம் கொஞ்சம் கொடுங்களேன்!ஏன்னா கல்லூரி விடுதியில் இட்லி தின்பதில் நான் தான் இரண்டாவது.இன்னொருத்தன் 30 இட்லி சாப்பிட்டு பரிசை தட்டிகிட்டுப் போயிட்டான்!

RAMYA said...

//
பி:கு: பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.
//


அருமையான மனசு பாரிசுக்கு, கொஞ்சம் நம்ப முகவரியும் தர்றேன், பாரிஸ் கிட்டே கொடுத்து வைக்கவும். எதுக்கும் ஒதவும்

பழமைபேசி said...

இட்லி சாப்பிடணும் போல இருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ரசிக்கும்படி இருந்தது.

Thamizhan said...

கிராமத்து அன்பும் விருந்தோம்பலும் இன்னும் அப்படியே வாழ்கின்றது.
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன்,நம்மால் முடிந்த அள்விற்கு கிராமங்களில் வசதிகளைப் பெருக்கித் தருவதுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோலும்.

மங்களூர் சிவா said...

நாங்களும் 'அட்டெண்டன்ஸ் ஃபீஸ்' எல்லாம் கட்டியிருக்கம்ல
:)))))))))))

கபீஷ் said...

நல்லாருந்தது இந்த பதிவு!
பாரிஸ் ரொம்ப நல்லவரா இருக்கார், அவங்க அம்மா இவ்வளவு அப்பாவியா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாரிஸ் ரொம்ப நல்லவரு..எவ்வளவு இட்லி போட்டிருக்கார்..போதாக்குறைக்கு மட்டன் பிரியாணி வேற..நல்லவேளை ..அவர்கிட்ட தட்சணை கேட்காம இருந்தீங்களே

கபீஷ் said...

பழம எப்பவும் சாப்பாட்டப் பத்தியே நினைக்கக் கூடாது. அப்புறம் உங்க அப்பச்சிய கனவில வர சொல்லிருவேன்.


தமிழன் ரொம்ப அழகா ஒரு கருத்து சொல்லியிருக்கார். அவருக்கு ஒரு ஓ.

குடுகுடுப்பை, கொஞ்சம் உ.வ பட்டு உங்க பதிவ என் பதிவா நெனச்சிட்டு இத எழுதிட்டேன். டோண்ட் மைண்ட் ப்ளீஸ்

நசரேயன் said...

யானை பசிக்கு சோள பொறியா?

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

பழம எப்பவும் சாப்பாட்டப் பத்தியே நினைக்கக் கூடாது. அப்புறம் உங்க அப்பச்சிய கனவில வர சொல்லிருவேன்.


தமிழன் ரொம்ப அழகா ஒரு கருத்து சொல்லியிருக்கார். அவருக்கு ஒரு ஓ.

குடுகுடுப்பை, கொஞ்சம் உ.வ பட்டு உங்க பதிவ என் பதிவா நெனச்சிட்டு இத எழுதிட்டேன். டோண்ட் மைண்ட் ப்ளீஸ்
//
நெறய எழுதுங்க , நெறய உ.வ.படுங்க. வ.முதல்வர்லேயும் போய் கமெண்டு போடுங்கண்ணே:)

நசரேயன் said...

/*
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இருந்தாலும் தண்ணீர் பெரும்பாலும் வருவதில்லை
*/
தண்ணி சுத்திகரிப்பு தொட்டியா இல்லை தண்ணி சுத்திகரிப்பு தொட்டியா?

தாரணி பிரியா said...

:)நல்லாவே சாப்பிட்டு இருக்கிங்க சார்

பணத்தை அவர் இஷ்டத்துக்கு செலவு செய்யமா வேற ஒருத்தருக்கு உதவி செஞ்சு இருக்காரே உங்க நண்பர்க்கு நிஜமாவே நல்ல மனசுதான்

Anonymous said...

20 இட்லி / 30 இட்லி தின்ன கணக்கெல்லாம் சொல்லாதீங்க.. வயிறு நிறைய சாப்பிட்டோம் சொல்லுங்க போதும்..

சில விஷயங்களில் கணக்கு சொல்லாமல் இருப்பது நல்லது..

புரிஞ்சுதா ??

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
ரம்யா
ராஜ நடராஜன்
பழமைபேசி
முத்துலெட்சுமி-கயல்விழி
Thamizhan
மங்களூர் சிவா

குடுகுடுப்பை said...

வாங்க கபீஷ்

நல்லாருந்தது இந்த பதிவு!
பாரிஸ் ரொம்ப நல்லவரா இருக்கார், அவங்க அம்மா இவ்வளவு அப்பாவியா?//

அரைகுரைய தெரிஞ்ச அப்பாவி.

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

பாரிஸ் ரொம்ப நல்லவரு..எவ்வளவு இட்லி போட்டிருக்கார்..போதாக்குறைக்கு மட்டன் பிரியாணி வேற..நல்லவேளை ..அவர்கிட்ட தட்சணை கேட்காம இருந்தீங்களே

//

2000 வாங்கிட்டுதான் வந்தோம் + பஸ் செலவு

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

யானை பசிக்கு சோள பொறியா?

//

நீங்க வந்தத நான் சொல்லவே இல்ல, ஏன் இப்படி மாட்டிக்கறீங்க

குடுகுடுப்பை said...

வாங்க தாரணி பிரியா
:)நல்லாவே சாப்பிட்டு இருக்கிங்க சார்

பணத்தை அவர் இஷ்டத்துக்கு செலவு செய்யமா வேற ஒருத்தருக்கு உதவி செஞ்சு இருக்காரே உங்க நண்பர்க்கு நிஜமாவே நல்ல மனசுதான்
//

ஆமாங்க ரொம்ப நல்லவந்தான்.

குடுகுடுப்பை said...

வாங்க இராகவன், நைஜிரியா

20 இட்லி / 30 இட்லி தின்ன கணக்கெல்லாம் சொல்லாதீங்க.. வயிறு நிறைய சாப்பிட்டோம் சொல்லுங்க போதும்..

சில விஷயங்களில் கணக்கு சொல்லாமல் இருப்பது நல்லது..

புரிஞ்சுதா ??//

//
40 , 50 ண்னு சொன்னா நல்லா இருக்காதுன்னுதான் கொறச்சி சொன்னேன்.அணிமா அண்ணன் வயிறு நெறய சாப்பிட்டாரமே.

நசரேயன் said...

/*
பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.
*/
நான் படிக்கும் போது இப்படி ஒரு ஆள் இல்லாம போய்ட்டாரே?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவங்க அம்மாகிட்ட போயி காலேஜுக்கு ஸ்காலர்ஷிப் பணம் 2000 கட்டனும் குடு அப்படின்னான்.

ஓஹ் வீட்டுல வாங்கறதுக்கு பேருதானா ஸ்காலர்ஷிப் எனக்கு தெரியாமா போச்சே இதுவரைக்கும்.

பி:கு: பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.
நல்ல பாரிஸ்

ஆமா, பாரிஸ் இப்ப என்ன பண்றார்.

காலை சாப்பாடு, நாங்க ஒரு அஞ்சு பேரு போயிருந்தோம், நெறய இட்லி வெச்சுருந்தாங்க, நாங்களும் சுடச்சுட சாப்பிட்டே இருந்தோம்,
இது தெரிஞ்ச கதைதானே, எப்படியும் நீங்க ஒரு 25 இட்லியாவது உள்ள தள்ளியிருக்க மாட்டீங்க.

வீட்டினர் மதியத்திக்கு நெறய மட்டன் பிரியாணி பண்ணி வெச்சுருந்தாங்க
எத்தனை ஆடு காவு கொடுத்தாங்க. அத சொல்லலியே.

நவநீதன் said...

// பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான் //
உங்க கூட சேந்துட்டு அவரு எப்படீங்க இவ்வளவு நல்லவரா இருக்காரு...
ஹி.. ஹி...

தமிழ் அமுதன் said...

இட்லிக்கு தொட்டுக்க என்னா
வைச்சாங்கன்னு சொல்லவே இல்ல?

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
அமிர்தவர்ஷினி அம்மா,
நவநீதன்,
ஜீவன்

rapp said...

அவர் வீடு இருக்கப்பட்ட வீடுங்கறபட்சத்தில் ரொம்ப நல்ல நண்பர்தான். இல்லைன்னா கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளயார்க்கு ஒடைக்கிரமாதிரிதானே:):):)

சரி ஒரு செமஸ்டர்ல இப்டி செஞ்சார் ஓகே, மத்தவாட்டில்லாம் ஸ்வாஹாதானா, இல்லை அப்போவும் கர்ணப்பிரபுவாதான் இருப்பாரா:):):)

அது சரி said...

//
பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.
//

ம்ம்ம்...செஞ்சது நல்ல விஷயம் தான்..ஆனாக்கூட, அநியாயமா தெரியுது...இதுக்கு சாப்ட்ட இருவது இட்லிக்கு ஒரு இட்லி ரெண்டு ரூவான்னு உங்கள்ட்டயே வசூல் பண்ணிருக்கலாம் :))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றிராப்,அமிர்தவர்ஷினி அம்மா, அது சரி
//ஆமா, பாரிஸ் இப்ப என்ன பண்றார்.//


இப்போ நவீன அரிசி ஆலை வெச்சுருக்கான் ரொம்ப நல்லா இருக்கான். இப்ப கூட போன் பண்ணி ஒரு 100 மூட்டை அரிசி ஷ்காலர்ஷிப்பா கேட்டேன், அதுக்கப்புறம் ஆளக்கானோம்.:)

Anonymous said...

//பி:கு: பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.//

பி:கு ரொம்ப டௌசிங். நல்ல காரியத்துக்காக பொய் சொல்லுறதுல தப்பே இல்ல

துளசி கோபால் said...

அடப்பாவி(களா)

ஸ்காலர்ஷிப் பணத்தை வீட்டுலே வாங்குவீங்களா!!!!!

Unknown said...

:)))))