Monday, December 29, 2008

சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : பெய்ஜிங் உணவு - பாகம் 2

பாகம் 1

இந்த பதிவில போட்டோ போடலாம்னு நெனச்சு கோடக்கேலரிய ரெண்டு வருசத்துக்கு அப்புரம் லாகின் பண்ணி பாத்தா ஒரு ஆல்பத்தையும் காணோம், வீட்ல போயி பேக்கப் ஹாட்டிஸ்க் முழுவதும் தேடிப்பாத்துட்டேன் அங்கேயும் காணோம்.சீனப்பயணத்துக்கு அடையாளமா ஒரு போட்டோ கூட இல்ல அதுனால என் அனுபவத்தை மட்டும் எழுதறேன்.இந்தப்பகுதி முழுவதும் உணவு, கண்டிப்பாக சீன உணவு சீனாவில் வேறு சுவை.இங்கே அமெரிக்காவில் அமெரிக்கப்படுத்தப்பட்ட சீன உணவுக்கும் அதற்கும் நிறைய வித்தியாசம்

நான் பார்த்து பேசிய வரை அல்லது எனக்கு புரிந்தவரை அரசியல்/மதம் விசயத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. பெரும்பாலனாவர்களுக்கு அன்றைய பிழைப்பு உணவு இது தாண்டி ஒன்றும் யோசிக்க நேரமில்லையாகவும் இருக்கலாம்.

உணவுப்பிரியனான நான் முதலில் சாப்பிட நினைத்தது பீஜிங் டக், சாங்க்பிங்க் ஏரியாவில் உள்ள ஒரு உணவகத்தில் நானும் என்னுடன் வந்த சீனரும் பீஜிங் டக் ஆர்டர் செய்தோம். ஒரு முழு வாத்தை ஏதோ மசாலா தடவி எண்ணெயில் வறுத்து நம் கண் முன்னால் ஒரு டிராலியில் கொண்டு வந்து நிறுத்தினார்.பின்னர் சிறிய துண்டுகளாக நாம் சாப்பிடும் வரை வெட்டி தட்டுகளில் வைத்தார், தொட்டுக்கொள்ள மிளகு,உப்பு ஏதோ சீன மசால கலந்த ஒரு பொடியில் தொட்டு சாப்பிட்டால் சுவை ஆஆஆஆஆஆஹாஹாஹாஹா.ஒரு முழு வாத்தையும் இருவரால் சாப்பிட்டு முடிக்க இயலவில்லை, பார்சல் கட்டி ஹோட்டல் அறையில் இரவு உணவுக்கு மிச்சம் உள்ள வாத்து சரியாக இருந்தது.

நண்பர்களின் எச்சரிக்கையினால் தங்கியிருந்த இடத்தின் மேற்குப்பகுதியில் உள்ள உணவகங்களுக்கு செல்லவில்லை,அங்கே ஆமை ரத்தத்தை பச்சையாக குடிப்பார்களாம், பின்னர் சமைத்து சாப்பிடுவார்களாம்.நமக்கு இன்னும் அந்த அளவு சகிப்புத்தன்மை வரலை.முடிந்த வரை தங்கியிருந்த இடத்தில் காலை உணவு பல நேரங்களில் அரிசி கஞ்சி வாங்கி சாப்பிடுவேன், மதியம் பல சுவைகளில சிக்கன்,நூடுல்ஸ் ஆகவோ பிரையாகவோ, சில நேரங்களில் டம்ப்ளிங்ஸ். டம்ப்ளிங்ஸ் நல்ல சுவை.பல நேரங்களில் மீன்.

நான் தங்கியிருந்த நேரத்தில் பஞ்சாபி தம்பதிகள் அங்கு இருந்தனர்,ஒரு சிரியன் அவர் சீனம் நன்றாக பேசுவார், அவர்களும் நல்ல உணவுப்பிரியர்கள் அவர்களோடு சேர்ந்து ஒரு நாள் ஒரு உணவகத்தில் இரால் வருவல்,மீன் மற்றும் சிக்கன் பல பெயர்களில் சாப்பிட்டோம்.உயிரோடு தொட்டியில் இருக்கும் இரால் மீன்களை நம் கண் முன்னால் பிடித்து எடை போட்டு அப்படியே இரண்டு நிமிடம் கொதிக்கும் நீரில் அவித்து ஒரு கிலோ காஞ்ச மிளகாய் மற்றும் சில சீன மசாலா உப்போடு சேர்த்து வறுத்து கொடுத்தார்கள்.மிளகாய்க்கு இடையில் உள்ள இரால்களை பொறுக்கி சாப்பிடவேண்டும், மிளகாயை கொட்டிவிடுவார்களாம்.

பஞ்சாபி மேடம் இரால் சுத்தப்படுத்தி அப்புரம் வறுக்க மாட்டீங்களான்னு கேட்டாங்க, முடியாது அதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகும் அப்படின்னு சொல்லி மறுத்துட்டாங்க. இரால் சாப்பிட நல்லா ஜீஸுயா இருந்துச்சு, அவங்க யாரும் இரால் சரியா சாப்பிடலை மீண்டும் நானே பேக்கிங், சும்மா சொல்லக்கூடாது சுவை அருமை.

மீன் உணவு மின் வருவல் கிட்டத்தட்ட நம்மூரு மாதிரிதான், அதுவும் உயிரோட பக்கத்துல உள்ள தொட்டில நீந்திகிட்டு இருக்கும் நாம மீன காமிக்கனும் உடனே சமையல்தான். அதுல பீஜிங் ஸ்டைல் பிஷ்னு ஒரு மெனு, மிளகாய அரைச்சு ஊத்தி காரம்னா தாங்க முடியல ஆனா மீன் ருசிதான், அப்புரம் ஒரு நாள் நம்மூரு குளத்து கெளுத்தி மாதிரி ஒன்னு நான் உடகாந்திருந்த டேபிள் வெச்சே குழம்பு வெச்சு தந்தாங்க தனியா ஆடுனாலும் அடிச்சு ஆடுனேன்.

மற்றொரு நாள் நண்டு உயிரோட இருந்த ஒரு பெரிய நண்டு ஆர்டர் பண்ணினேன், சமைச்சு அந்த ஓட்டயும் கொண்டு வந்து வெச்சாங்க கூடவே வழக்கமா குடுக்குர ரெண்டு குச்சி, இத வெச்சு எப்படி நண்டு சாப்பிட முடியும்,அப்புரமா ஒரு கத்தியும் கைக்கு ஒரு பிளாஸ்டி உறையும் கொடுத்தாங்க, நானும் வெட்டிப்பாத்தேன், ம்ஹீம் நமக்கு கையில எடுத்து கடிச்சு சாப்பிடனும். பாத்தேன் பார்சல் பண்ண சொல்லி நிம்மதியா அறைல வந்து பிரிச்சு மேஞ்சாச்சு. நான் சாப்பிட்ட நண்டுகளில் சுவையான நண்டுகளில் இதுவும் ஒன்று.

ஒரு கொரியன் உணவகத்தில் ஒரு நாள் சைவ பஜ்ஜிக்களும், மட்டன் ப்ரை கொஞ்சம் சுட்ட மீன் சாப்பிட்டேன் இது நம்ம பஞ்சாபிகாராரோட போய் சாப்பிட்டது,இவைகள் சீன உணவோடு கொஞ்சம் மாறுபட்டு இருந்தது, விலை மிக மலிவு மூனு பேருக்கு 75 யுவான் தான், நான் சாப்பிட்ட நண்டு மட்டும் 275 யுவான்.

பஞ்சாபிகாரருக்கு சீனாவில் தெருக்கடைகளில் சாப்பிட ஆசை அவரோடு சேர்ந்து தெருக்கடைகளில் விற்கும் சிக்கன் வருவல், மீன் வருவல்/பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டேன் சில கடைகளில், இது மாலை நேர உணவு, சுகாதாராம் சென்னை ரோட்டுக்கடைகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அதே போல் சுவையும்.

பீஜிங் டக் சாப்பிட்ட ஓட்டலில் விலாங்கு மீன் பார்த்தேன் ஆனால் அங்கே மீண்டும் செல்ல வாய்ப்பு இல்லை, அந்த வருத்தம் இன்னும் உள்ளது.அங்கே இருந்த kfc போன்ற அமெரிக்க உணவகங்களில் நான் ஒருநாளும் சாப்பிடவில்லை, மொத்தத்தில் உணவு விசயத்தில் சீனாவில மிக திருப்தியாக சாப்பிட்டேன்.இந்தியா கிச்சன் என்ற இந்திய உணவகத்திற்கும் செல்லும் வாய்ப்பு அமையவில்லை.

அடுத்து கிரேட்வால், forbidden city மற்றும் palace சென்ற அனுபவம்...

46 comments:

கபீஷ் said...

சரியான சாப்பாட்டு ராமன் :-):-)

பழமைபேசி said...

//அந்த அளவு சகிப்புத்தன்மை வரலை//

அது சகிப்புத்தன்மையா????

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு அந்த சாப்பாடை பார்சல் பண்ணுங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

///இந்த பதிவில போட்டோ போடலாம்னு நெனச்சு கோடக்கேலரிய ரெண்டு வருசத்துக்கு அப்புரம் லாகின் பண்ணி ///

இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி முயற்சி செஞ்சிருக்கலாம் ...

http://urupudaathathu.blogspot.com/ said...

//வீட்ல போயி பேக்கப் ஹாட்டிஸ்க் முழுவதும் தேடிப்பாத்துட்டேன் அங்கேயும் காணோம்.///

வைச்ச இடத்துல தேடாம இப்படி அங்க அங்க தேடினா எப்படி கிடைக்கும் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

.//இங்கே அமெரிக்காவில் அமெரிக்கப்படுத்தப்பட்ட சீன உணவுக்கும் அதற்கும் நிறைய வித்தியாசம்///

என்ன?? குமுதத்துல வாற மாதிரி ஆறு வித்தியாசங்கள் இருக்குமா?

http://urupudaathathu.blogspot.com/ said...

//நான் பார்த்து பேசிய வரை அல்லது எனக்கு புரிந்தவரை அரசியல்/மதம் விசயத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. ///

அப்படியா??
புதிய தகல்வல்களுக்கு மிக்க நன்றி

நசரேயன் said...

ஒ.இது தான் பதிவு சாப்பாடா?

http://urupudaathathu.blogspot.com/ said...

//உணவுப்பிரியனான நான் முதலில் சாப்பிட நினைத்தது பீஜிங் டக்,///

இப்போவாச்சும் ஒத்துக்கிடீங்கலே நீங்க ஒரு மிக பெரிய ராமன் தான் என்று

நசரேயன் said...

/*
நான் பார்த்து பேசிய வரை அல்லது எனக்கு புரிந்தவரை அரசியல்/மதம் விசயத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. பெரும்பாலனாவர்களுக்கு அன்றைய பிழைப்பு உணவு இது தாண்டி ஒன்றும் யோசிக்க நேரமில்லையாகவும் இருக்கலாம்.
*/
ரெம்ப நல்லவங்க அவங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஒரு முழு வாத்தை ஏதோ மசாலா தடவி எண்ணெயில் வறுத்து நம் கண் முன்னால் ஒரு டிராலியில் கொண்டு வந்து நிறுத்தினார்.///

ஆஹா இப்பவே நாக்குல எச்சி ஊறுதே !!!

நசரேயன் said...

ஒரு கோல் கீப்பருக்கு இவ்வளவு சாப்பாடு தேவையா?

http://urupudaathathu.blogspot.com/ said...

//பார்சல் கட்டி ஹோட்டல் அறையில் இரவு உணவுக்கு மிச்சம் உள்ள வாத்து சரியாக இருந்தது.///

அதானே பார்த்தேன், அங்க போயும் நம்ம ஊரு மரியாதையை காப்பாத்திட்டீங்க ..

http://urupudaathathu.blogspot.com/ said...

///நமக்கு இன்னும் அந்த அளவு சகிப்புத்தன்மை வரலை.///

அப்போ இப்போ??

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

//உணவுப்பிரியனான நான் முதலில் சாப்பிட நினைத்தது பீஜிங் டக்,///

இப்போவாச்சும் ஒத்துக்கிடீங்கலே நீங்க ஒரு மிக பெரிய ராமன் தான் என்று
//

எப்ப நான் ஒத்துக்கலை,என்ன போட்டாலும் சாப்பிடுவோம் மூக்கு முட்ட

http://urupudaathathu.blogspot.com/ said...

//நசரேயன் said...

ஒரு கோல் கீப்பருக்கு இவ்வளவு சாப்பாடு தேவையா?///

அதானே, இந்தளவுக்கு தேவையா ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///சில நேரங்களில் டம்ப்ளிங்ஸ். டம்ப்ளிங்ஸ் நல்ல சுவை.பல நேரங்களில் மீன்.///

கப்ளிங் தெரியும் அது என்ன டம்ப்ளிங்

http://urupudaathathu.blogspot.com/ said...

///நண்பர்களின் எச்சரிக்கையினால் தங்கியிருந்த இடத்தின் மேற்குப்பகுதியில் உள்ள உணவகங்களுக்கு செல்லவில்லை///

நல்ல நல்ல பிரண்ட்ஸ் இருக்காங்க போல இருக்கு ..?

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

///சில நேரங்களில் டம்ப்ளிங்ஸ். டம்ப்ளிங்ஸ் நல்ல சுவை.பல நேரங்களில் மீன்.///

கப்ளிங் தெரியும் அது என்ன டம்ப்ளிங்//

கொழுக்கட்டை மாதிரி வெள்ளையா இருக்கும், உள்ளே கொஞ்சம் சிக்கனோ/ வெஜ்னா கீரை மாதிரி எதுவோ ஒன்னு இருக்கும்.

http://urupudaathathu.blogspot.com/ said...

//அடுத்து கிரேட்வால், forbidden city மற்றும் palace சென்ற அனுபவம்...///

அடுத்த பதிவுக்கு இப்பவே துண்டு போட்டுக்கிறேன்

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

//அடுத்து கிரேட்வால், forbidden city மற்றும் palace சென்ற அனுபவம்...///

அடுத்த பதிவுக்கு இப்பவே துண்டு போட்டுக்கிறேன்//

எதுக்கும் வேற ஒரு துண்டு வெச்சுக்கங்க, பதிவு போட ஒரு வாரத்துக்கு மேல ஆகும், அதுவரைக்கும் நீங்க.........நல்லா இருக்காது

http://urupudaathathu.blogspot.com/ said...

//குடுகுடுப்பை said...

கொழுக்கட்டை மாதிரி வெள்ளையா இருக்கும், உள்ளே கொஞ்சம் சிக்கனோ/ வெஜ்னா கீரை மாதிரி எதுவோ ஒன்னு இருக்கும்.//

நீங்க சொல்றத பார்த்தா எனக்கு இன்னும் கப்ளிங் நியாபகம் தான் வருது...

http://urupudaathathu.blogspot.com/ said...

//குடுகுடுப்பை said...

எப்ப நான் ஒத்துக்கலை,என்ன போட்டாலும் சாப்பிடுவோம் மூக்கு முட்ட///

அப்போ நீங்களும் என்னை மாதிரி தானா?>?

http://urupudaathathu.blogspot.com/ said...

//குடுகுடுப்பை said...

எதுக்கும் வேற ஒரு துண்டு வெச்சுக்கங்க, பதிவு போட ஒரு வாரத்துக்கு மேல ஆகும், அதுவரைக்கும் நீங்க.........நல்லா இருக்காது///

அப்பாடி ... அப்படின்னா இன்னும் ஒரு வாரம் நிமதியா இருக்கலாம்னு சொல்லுங்கஸ்..
பரவால்ல, அந்த துண்ட வைச்சே சமாளிசிக்கிறேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

naan thaan 25

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

naan thaan 25//

எனக்கு உங்கள விட ஒரு வயசு கூட

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

ஒ.இது தான் பதிவு சாப்பாடா?//

எல்லாம் சமையல் குறிப்பு போடுறாங்க நான் சாப்பாட்டு குறிப்பு போடறேன்

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

சரியான சாப்பாட்டு ராமன் :-):-)
சரியா சொன்னீங்க

நட்புடன் ஜமால் said...

\\"சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : பெய்ஜிங் உணவு\\

அங்குன ஏதும் ஜோசியம் சொன்னியளா

அ.மு.செய்யது said...

//பின்னர் சிறிய துண்டுகளாக நாம் சாப்பிடும் வரை வெட்டி தட்டுகளில் வைத்தார், தொட்டுக்கொள்ள மிளகு,உப்பு ஏதோ சீன மசால கலந்த ஒரு பொடியில் தொட்டு சாப்பிட்டால் சுவை ஆஆஆஆஆஆஹாஹாஹாஹா.//

ந‌ல்ல‌ ப‌திவு ந‌ண்ப‌ரே !!!!!
ஒருவேளை வ‌ட‌கிழ‌க்கு ஆசிய‌ நாடுக‌ள் முழுவ‌தும் இந்த கார‌ உண‌வு சூட்சும‌ம் தானா ??
நானும் ந‌ம்மூர் சென்னையில் கிடைக்கும் வியாச‌ர்பாடி ப‌ர்மிய‌ உண‌வுக‌ளைப் ப‌ற்றி எழுதியிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் பாருங்க‌ள்.

இராகவன் நைஜிரியா said...

////நான் பார்த்து பேசிய வரை அல்லது எனக்கு புரிந்தவரை அரசியல்/மதம் விசயத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. ///

நானும் பார்த்த வரையில், அவர்களுக்கு மதம், அரசியல் இரண்டிலும் ஈடுபாடு இல்லை

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
//பார்சல் கட்டி ஹோட்டல் அறையில் இரவு உணவுக்கு மிச்சம் உள்ள வாத்து சரியாக இருந்தது.///

அதானே பார்த்தேன், அங்க போயும் நம்ம ஊரு மரியாதையை காப்பாத்திட்டீங்க ..//

சைனாவில், எந்த உணவுக்கூடத்தில் சாப்பிட்டாலும் மிச்சம் உள்ள உணவை பார்சல் கட்டி கொடுத்துவிடுவார்கள்

குடுகுடுப்பை said...

எனக்கு அந்த சாப்பாடை பார்சல் பண்ணுங்க

December 29, 2008 4:44 PM
Delete
Blogger உருப்புடாதது_அணிமா said...

///இந்த பதிவில போட்டோ போடலாம்னு நெனச்சு கோடக்கேலரிய ரெண்டு வருசத்துக்கு அப்புரம் லாகின் பண்ணி ///

இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி முயற்சி செஞ்சிருக்கலாம் ...//
ஆமாம் நீங்க சொல்றதுதான் சரி.

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

.//இங்கே அமெரிக்காவில் அமெரிக்கப்படுத்தப்பட்ட சீன உணவுக்கும் அதற்கும் நிறைய வித்தியாசம்///

என்ன?? குமுதத்துல வாற மாதிரி ஆறு வித்தியாசங்கள் இருக்குமா?//

இங்கே இனிச்சு கெடக்கும்,அங்கே உரைச்சு கெடக்கு

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//அந்த அளவு சகிப்புத்தன்மை வரலை//

அது சகிப்புத்தன்மையா????//

இதுக்கு நீங்க ஒரு பாட்ட போடுங்க

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

//வீட்ல போயி பேக்கப் ஹாட்டிஸ்க் முழுவதும் தேடிப்பாத்துட்டேன் அங்கேயும் காணோம்.///

வைச்ச இடத்துல தேடாம இப்படி அங்க அங்க தேடினா எப்படி கிடைக்கும் ??//

எங்கண்ணு தெரிஞ்சாதானே?

குடுகுடுப்பை said...

அதிரை ஜமால் said...

\\"சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : பெய்ஜிங் உணவு\\

அங்குன ஏதும் ஜோசியம் சொன்னியளா//

அது மொழி புரிஞ்சவனுக்கே இன்னும் புரியல சீனாக்காரனுக்கு எப்ப புரிஞ்சு

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//பின்னர் சிறிய துண்டுகளாக நாம் சாப்பிடும் வரை வெட்டி தட்டுகளில் வைத்தார், தொட்டுக்கொள்ள மிளகு,உப்பு ஏதோ சீன மசால கலந்த ஒரு பொடியில் தொட்டு சாப்பிட்டால் சுவை ஆஆஆஆஆஆஹாஹாஹாஹா.//

ந‌ல்ல‌ ப‌திவு ந‌ண்ப‌ரே !!!!!
ஒருவேளை வ‌ட‌கிழ‌க்கு ஆசிய‌ நாடுக‌ள் முழுவ‌தும் இந்த கார‌ உண‌வு சூட்சும‌ம் தானா ??
நானும் ந‌ம்மூர் சென்னையில் கிடைக்கும் வியாச‌ர்பாடி ப‌ர்மிய‌ உண‌வுக‌ளைப் ப‌ற்றி எழுதியிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் பாருங்க‌ள்.//

பாத்துருவோம்

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

////நான் பார்த்து பேசிய வரை அல்லது எனக்கு புரிந்தவரை அரசியல்/மதம் விசயத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. ///

நானும் பார்த்த வரையில், அவர்களுக்கு மதம், அரசியல் இரண்டிலும் ஈடுபாடு இல்லை
//

யப்பாடா என்னோட புரிதல் சரிதான்

Anonymous said...

வாத்து, நண்டு என தினமும் சாப்பிட்டா உடம்பு சும்மா நம நம என முறுக்கெடுத்திருக்குமே!

அப்ப‌டியே கொஞ்ச‌ம் ஆயில் த‌டவாம ம‌சாஜ் எடுத்திருந்தா,
பிர‌த‌ர் விலாவாரியா 3ம் பாக‌த்தில‌ சொல்ல‌ முடியுமா?

புள்ளிராஜா

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

//ஒரு முழு வாத்தை ஏதோ மசாலா தடவி எண்ணெயில் வறுத்து நம் கண் முன்னால் ஒரு டிராலியில் கொண்டு வந்து நிறுத்தினார்.///

ஆஹா இப்பவே நாக்குல எச்சி ஊறுதே !!!//

ஆப்ரிக்கா சாப்பாடு நல்லாதானே இருக்கும், ஒரு கட்டு கட்டுங்க

குடுகுடுப்பை said...

Anonymous said...

வாத்து, நண்டு என தினமும் சாப்பிட்டா உடம்பு சும்மா நம நம என முறுக்கெடுத்திருக்குமே!

அப்ப‌டியே கொஞ்ச‌ம் ஆயில் த‌டவாம ம‌சாஜ் எடுத்திருந்தா,
பிர‌த‌ர் விலாவாரியா 3ம் பாக‌த்தில‌ சொல்ல‌ முடியுமா?

புள்ளிராஜா//

அடுத்த பாகம் மசாஜ் மற்றும் சீன மருத்துவம்தான்

Pulliraajaa said...

பிரதர்!

சொல்லதான் போறீங்க, சீக்கிரமா கொஞ்சம் விலாவாரியாகச் சொல்லுங்க. புதுவருசத்தோட பெரிசுகளுக்கு கிக்கா இருக்கட்டும். என்னமோ ஸூப் இருக்காம். குடிச்சு வந்தா வாயகராவாவது கத்தரிக்கையாவது யாரோ சீன மருத்துவத்தில சொன்ன நினைவுக்கு வருதப்பா.

அந்த சூப் ரிசிப்பியை வெளியிடா செந்தழலார், வால்பையன் என ஒரு கூட்டமே கையெடுத்துப் பாராட்டுமையா.

புள்ளிராஜா

அது சரி(18185106603874041862) said...

மீனு, நண்டு, வாத்து.....

மெதக்கிறதுல கப்பலையும், பறக்கறதுல பாராசூட்டையும் தவிர எல்லாத்தையும் சாப்ட்ருவீங்க போல :0))

CA Venkatesh Krishnan said...

என்னய மேரி சுத்த விஜிடேரின்களுக்கு பட்டினிதான் போல :(((
இல்லாகாட்டி பச்சை பச்சையா குட்துருவாங்க போல:(((

குடுகுடுப்பை said...

இளைய பல்லவன் said...

என்னய மேரி சுத்த விஜிடேரின்களுக்கு பட்டினிதான் போல :(((
இல்லாகாட்டி பச்சை பச்சையா குட்துருவாங்க போல:(((

//

சிரமந்தான்