Tuesday, December 30, 2008

சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : மஸாஜ்,குளியல் மற்றும் சில மக்கள் - பாகம் 3

பாகம் 1

பாகம் 2

பார்த்த இடங்களை பார்க்கும் முன்னர் சீன மஸாஜ்,மருத்துவம் மற்றும் சந்தித்த சில மனிதர்கள் பற்றி எழுதுகிறேன்.அங்கே தங்கியிருந்த நாட்களில் சில நாட்கள் ஒரு பிரபலமான சீன முறை மருத்துவமனையில் மஸாஜ்,அக்குபஞ்சர்,பாடி பாத், ஸ்டீம் பாத்தெல்லாம் எடுத்தேன்.

மஸாஜ் டாக்டர் பெயர் ஏதோ ஒரு குவாங், அவருக்கு ஒரு வரி கூட ஆங்கிலம் தெரியாது, ஆனாலும் அவரிடமும் உரையாடினேன்.சீன மஸாஜ் நம்ம ஆயுர்வேத எண்ணெய் மஸாஜிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அவரு கை விரல்களை மடக்கி நம்ம உடம்பு முழுவதும் பகுதி பகுதியா தேய்ச்சபடி ஒரு ரவுண்டு வருவார், மஸாஜ் பண்ணும் இடத்தில் ஒரு இலேசான துணி போட்டு அது மேலதான் மஸாஜ் பண்ணுவாங்க.

இவரு நல்லா மஸாஜ் பண்ணுவாராம் அதுனால வெளிநாட்டுக்காரங்களுக்கு இவர்தான் பண்ணுவாராம், மஸாஜ் பண்ணுர இன்னோரு பொண்ணு சொன்னுது,இவரில்லாத ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவ்வளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது, அந்த மஸாஜ் ரூம்ல பட்டையெல்லாம் போட்டு ஒரு வடிகலன் இருந்தது, அத கொஞ்சம் குடிக்க சொன்னாரு, மூக்கு கிட்ட போனப்பவே தெரிஞ்சது நம்மூரு பட்டை சாராயம் மாதிரி, ஆனா இது சும்மா பட்டைய ஊரவெச்சு கொஞ்சமா வடிச்சி அந்த மஸாஜ் டாக்டருங்க ராத்திரில குடிக்கவாம்.

பேருதான் டாக்டரு அவங்களுக்கு கொடுக்கிர சம்பளத்தில மூனு நண்டு வாங்கலாம் அவ்ளோதான்,அவரோட பையன் ஒரு நாள் வந்திருந்தாரு என்கிட்ட ஆங்கிலத்தில பேசச்சொல்லி அதக்கேட்டதுல நம்மூரு அம்மாக்கள் குழந்தைகள் மம்மின்னு சொல்றத கேக்கறதோட அதிகமா இருந்துச்சு அவரோட மகிழ்ச்சி.மஸாஜ் பண்ணி முடிச்சவுடன் ஒரு புத்துணர்வு கண்டிப்பா கிடைக்கும்.இந்த மஸாஜ் டாக்டருக்கு சாக்கியமுனி பத்தி தெரிஞ்சிருக்கு அதாங்க புத்தர், ஆனா அவருக்கு பக்தியெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் லெனின் தெரியுமான்னு நான் நிறைய பேருகிட்ட கேட்டேன் ஒருத்தருக்கும் தெரியல.நான் கேட்டது புரியாம கூட இருந்திருக்கலாம், நம்ம ராகவன் பின்னூட்டத்தில சொல்வார்.

ஒரு நாள் என்னோட முதுகுவலிக்கு அக்குபஞ்சர் எடுத்தேன், மூனு ஊசிய வெச்சு முதுகுல மாட்டிவிட்டாங்க அப்ப வலிச்சது அப்புரம் கொஞ்ச நாளைக்கு வலி கம்மியா இருந்தது, நிரந்தர தீர்வு கண்டிப்பா இதன் மூலம் கிடைக்காதுன்னு தெரிஞ்சது.

இப்போ சீன மருத்துவக்குளியல் நல்லா சுடுதண்ணில சீன மூலிகைகளை போட்டு 45 நிமிடம் படுத்துக்கனும், தண்ணியோட சூடுதாங்க முடியுதான்னு அந்த குளியல கவனிச்சுக்கிர பொண்ணுகிட்ட சொல்லனும்,ஆனா அவங்களுக்கு hot,cold ன்ன என்னன்னே தெரியாது.சரின்னு நான் சீனம் கத்துக்கிட்டேன்.

எனக்கு தெரிந்த சில சீன வார்த்தைகள்
ழங்மா -- hot
coldக்கு மறந்து போச்சு
நேகா - நீங்கள் நலமா ?ஹலோ சீனர்கள் போன் எடுத்து பேசும் முதல் வார்த்தை இது.(ஹலோ அல்ல)
சியசிய -- நன்றி (மேலதிகத்தகவல்)
சாய்ஜியன் -- பை
டொய்புச்சிய - மன்னிக்கவும்
தவ்ஷங்கா -- காலை வணக்கம்

இவ்ளொதான் எனக்கு தெரிந்த சீனம், அதே போல foot bath, அப்படின்னு ஒன்னு மூலிகைய போட்டு அதுல ஒரு இருபது நிமிடம் கால் வெச்சிருக்கனும்.அப்படி வெச்சிருந்தா கால் பாதம் வழியா மருந்து சேருமாம்.எனக்கு தெரிந்து இது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.நிறைய சீனர்கள் சீன மருத்துவத்தையே நாடுகின்றனர். அங்கேயும் சிட்டுக்குருவி(போலி) டாக்டர்கள் அதிகம்தான் போல எனக்கு தோனுது.சீன மருத்துவத்தில் என்னுடைய அனுபவம் இவ்வளவுதான்.

இங்கெ நான் ஒரு சவுதி அரேபியாவை சேர்ந்த அரபியை சந்தித்தேன், பாக்கறதுக்கு இந்தியர் மாதிரிதான் இருந்தார். அவரும் அவரோட மனைவியோட தம்பியும் ஏதோ வேலையா வந்திருந்தாங்க, நல்ல ஆங்கிலம் பேசினார், அவர் மச்சானுக்கு அரபு தவிர வேற மொழி தெரியாதுன்னும் சொன்னார்.ஒரு டாக்ஸியை முழு நேரமும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டார்கள்,வாயில் சிகரெட்டையும் முழுநேரமும் வைத்துக்கொண்டார்கள், என்னையும் ஒரு காபி கிளப் போவோம்னு கூப்பிட்டார், நானும் கூடவே சென்றேன் பூம்பூம் மாடு மாதிரி.

காபி கிளப்பில காபி சொல்லிட்டு நாங்க பேசிட்டு இருந்தோம், ஒரு வேலையா சீனா வந்தேன், என்னோட மனைவி அவுங்க தம்பிய எனக்கு பாதுகாப்பா அனுப்பி வெச்சிருக்காங்க.அரேபியாவிலேயும் தங்கமணி ராஜ்ஜியம் தான் போலன்னு நெனச்சேன்.

காபி கிளப்பில் நாங்க இருந்த சமயத்தில அங்கே பீஜிங் ஒலிம்பிக்ஸ்க்காக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வந்த ஒரு மாணவர் கூட்டம் ஏதோ பார்ட்டி கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள், அதிலே சற்று போதையுடன் இருந்த ஒரு பெண் என்னைப்பார்த்து உங்கள் கண்கள் மிக அழகு என்று சொன்னாள், நான் மகிழ்ச்சியில் இருந்த அந்த தருணம் , அந்த மாமன் மச்சான் அரேபியர்கள் இருவரும் அந்த பெண்ணை அவர்களுக்கு நடுவில் உட்காரவைத்து கடலை போட ஆரம்பித்துவிட்டார்கள்.சிகரெட் பகிர்ந்தார்கள்...
நான் எதிர்லே உட்காந்து வேடிக்கை பாத்தேன் என் அழகான கண்களால்.

தொடரும்....

42 comments:

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன், அப்புரம்மா வாரேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

நானும் அதே...
உள்ளேன் ஐயா

http://urupudaathathu.blogspot.com/ said...

//coldக்கு மறந்து போச்சு///

ஐ.. சீனா பாஷை ரொம்ப ஈசி போல..
அப்போ மறந்து போச்சுக்கு என்ன சொல்லுவாங்க ??

கபீஷ் said...

//அதிலே சற்று போதையுடன் இருந்த ஒரு பெண் என்னைப்பார்த்து உங்கள் கண்கள் மிக அழகு என்று சொன்னாள்
//
போதையில சொன்னதை போய் சீரியஸா எடுத்து சந்தோஷப்பட்டுட்டீங்களா?

http://urupudaathathu.blogspot.com/ said...

//அவருக்கு ஒரு வரி கூட ஆங்கிலம் தெரியாது, ஆனாலுன் அவரிடமும் உரையாடினேன்.///

அது எப்படிங்க முடியும்?? ஒருவேளை ஊமை பாஷையோ ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//சீன முறை மருத்துவமனையில் மஸாஜ்,அக்குபஞ்சர்,பாடி பாத், ஸ்டீம் பாத்தெல்லாம் எடுத்தேன். ///

எடுத்ததை திருப்பி குடுத்தீங்களா? இல்லியா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//இவரில்லாத ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவவளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது///

அனுபவி ராசா அனுபவி??

ஆமாம் வீட்ல இது தெரியுமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவவளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது,///

உம்ம.. உமக்கு மச்சம்..
எனக்கு ஏக்கம் தான் வருது

http://urupudaathathu.blogspot.com/ said...

//நம்ம ராகவன் பின்னூட்டத்தில சொல்வார்.///

இந்த கதை நல்லா இருக்கே ??

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//அதிலே சற்று போதையுடன் இருந்த ஒரு பெண் என்னைப்பார்த்து உங்கள் கண்கள் மிக அழகு என்று சொன்னாள்
//
போதையில சொன்னதை போய் சீரியஸா எடுத்து சந்தோஷப்பட்டுட்டீங்களா?//

என் கண்களை பார்த்து வந்த போதை அது.

http://urupudaathathu.blogspot.com/ said...

//மூக்கு கிட்ட போனப்பவே தெரிஞ்சது நம்மூரு பட்டை சாராயம் மாதிரி,///

உங்களுக்கு கிட்ட மூக்கா? இல்ல தூர மூக்க ??

கபீஷ் said...

//அது எப்படிங்க முடியும்?? ஒருவேளை ஊமை பாஷையோ ??//

குகு தமிழ்ல, அவர் சைனீஸ்ல

உ-அ, பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது. இவர் எப்ப உண்மையா எழுதியிருக்கார்...

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

//இவரில்லாத ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவவளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது///

அனுபவி ராசா அனுபவி??

ஆமாம் வீட்ல இது தெரியுமா??//

கருத்து திரிப்பு, நான் சொன்னது ஒன்னு நீங்க சொல்றது ஒன்னு.என்ன யாராச்சும் காப்பாத்துங்க.

http://urupudaathathu.blogspot.com/ said...

//சீன மருத்துவத்தில் என்னுடைய அனுபவம் இவ்வளவுதான்.//
உங்க "தன்னடக்கம் " எனக்கு நல்லாவே புரியுதுன்னா

கபீஷ் said...

//என் கண்களை பார்த்து வந்த போதை அது.//

மிஸஸ் குகு! நோட் திஸ் பாயிண்ட், என்ன(என்னை மாதிரி இல்ல) மாதிரி உங்க ஊட்டுக்காரர் அந்த பொண்ணை பாத்திருக்கார்னு

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//அது எப்படிங்க முடியும்?? ஒருவேளை ஊமை பாஷையோ ??//

குகு தமிழ்ல, அவர் சைனீஸ்ல

உ-அ, பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது. இவர் எப்ப உண்மையா எழுதியிருக்கார்...//

உண்மைய எழுத நான் என்ன குஷ்வந்த்சிங்கா:))))))))

http://urupudaathathu.blogspot.com/ said...

//நானும் கூடவே சென்றேன் பூம்பூம் மாடு மாதிரி.///

மாடு மேய்ப்பவரே மாடா போனீங்களா? என்னங்க இது அநியாயம் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///அரேபியாவிலேயும் தங்கமணி ராஜ்ஜியம் தான் போலன்னு நெனச்சேன்.///

எதுக்கு நினைக்கணும்?? உங்களுக்கே இது தெரியாதா என்ன??

கபீஷ் said...

//உண்மைய எழுத நான் என்ன குஷ்வந்த்சிங்கா:))))))))//


அப்படியெல்லாம் உண்மைய எழுத ஆசையிருக்கு, ஆனா பயம் எழுத விடாம பண்ணுது பாவம் குகு:-(

http://urupudaathathu.blogspot.com/ said...

//நான் எதிர்லே உட்காந்து வேடிக்கை பாத்தேன் என் அழகான கண்களால்.///

கண்களால் கைது செய் ...

( ரொம்ப பாவம் !!!!!!!!)

http://urupudaathathu.blogspot.com/ said...

///கபீஷ் said...



உ-அ, பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது. இவர் எப்ப உண்மையா எழுதியிருக்கார்...///


இவரு "அனுபவிச்சதை" பதிவா போட்டதால , என்னோட வயித்தெரிச்சல் தான் அந்த பின்னூட்டம்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

/// குடுகுடுப்பை said...



கருத்து திரிப்பு, நான் சொன்னது ஒன்னு நீங்க சொல்றது ஒன்னு.என்ன யாராச்சும் காப்பாத்துங்க.///


என்னங்க அண்ணே இப்படி பல்டி அடிக்கிறீங்க..
உண்மைய சொல்ல கூச்சமா இருந்தா தனி மடலில் சொல்லுங்க..
ஜொள்ளுடன்''
அணிமா

கபீஷ் said...

////உ-அ, பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது. இவர் எப்ப உண்மையா எழுதியிருக்கார்...//

உண்மைய எழுத நான் என்ன குஷ்வந்த்சிங்கா:))))))))

////

இந்த லுலுலாயி கமெண்டை சீரியஸா எடுத்துட்டீங்களா குகு!? :-):-)

கபீஷ் said...

உ-அ, வேலை எல்லாம் முடிஞ்சுதா?

http://urupudaathathu.blogspot.com/ said...

25

http://urupudaathathu.blogspot.com/ said...

// கபீஷ் said...

உ-அ, வேலை எல்லாம் முடிஞ்சுதா?///

முடிஞ்சு போச்சு A

நசரேயன் said...

என்னது மசாஜ் கிளப், நைட் கிளப் ன்னு ஒரே களியாட்ட விருந்தா இருக்கு

நசரேயன் said...

/*
உங்கள் கண்கள் மிக அழகு என்று சொன்னாள்
*/
அடுத்த படத்துக்கு நீ தான் கதா நாயகி ன்னு சொல்ல வேண்டியதானே

அது சரி(18185106603874041862) said...

//
இவரில்லாத ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவ்வளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது,
//

இதைப் பற்றி மேலதிக தகவல்கள் தேவை...தகவலறியும் சட்டப்படி சீனியர் முதல்வருக்கு மனு போட்டுக்கிறேன் :0))

அது சரி(18185106603874041862) said...

//
அந்த மாமன் மச்சான் அரேபியர்கள் இருவரும் அந்த பெண்ணை அவர்களுக்கு நடுவில் உட்காரவைத்து கடலை போட ஆரம்பித்துவிட்டார்கள்.சிகரெட் பகிர்ந்தார்கள்...
நான் எதிர்லே உட்காந்து வேடிக்கை பாத்தேன் என் அழகான கண்களால்.
//

வருங்கால முதல்வர் கட்சிக்கே உங்களால மானம் போச்சி! சொன்னா கேட்டீங்களா, இதுக்குத் தான் தம்மடிக்க கத்துக்கணும்கிறது.....

பழமைபேசி said...

இஃகிஃகி!

கோவி.கண்ணன் said...

பயணக் கட்டுரை சுவையாக இருக்கிறது.

சீன மருத்துவர்களை / மருந்துக்கடைகளை TCM என்று சிங்கையில் சொல்லுவார்கள். Traditional Chinese Medicine நீங்கள் சொல்வது போல் படித்து வாங்கும் பட்டம் போல் தெரியல அவங்க தொழில். ஒரு சொற்கள் கூட ஆங்கிலத்தில் பேச மாட்டாங்க.

Anonymous said...

நீ ஹௌ என்றால் எப்படி இருக்கிறிர்கள் என்று அர்த்தம்.

ஸீ சிய என்றால் நன்றி என்று தான் பொருளீ தவிர bye bye அல்ல.

Anonymous said...

//நீ ஹௌ என்றால் எப்படி இருக்கிறிர்கள் // நீ - In chinese and in Tamil both gives the same meaning whic is You.

அ.மு.செய்யது said...

//மூக்கு கிட்ட போனப்பவே தெரிஞ்சது நம்மூரு பட்டை சாராயம் மாதிரி, ஆனா இது சும்மா பட்டைய ஊரவெச்சு கொஞ்சமா வடிச்சி அந்த மஸாஜ் டாக்டருங்க ராத்திரில குடிக்கவாம். //

பட்டைய கிளப்புது தல !!!!!

இராகவன் நைஜிரியா said...

//கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் லெனின் தெரியுமான்னு நான் நிறைய பேருகிட்ட கேட்டேன் ஒருத்தருக்கும் தெரியல. //

லெனின் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை.. அவர்களைப் பொருத்தவரை கம்யூனிசம் என்றால் மா சே துங் தான். மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை..

இராகவன் நைஜிரியா said...

//மூக்கு கிட்ட போனப்பவே தெரிஞ்சது நம்மூரு பட்டை சாராயம் மாதிரி, //

இதுக்கே இப்படி சொல்றீங்களே.. சீனாவில் கிடைக்கும் “மவுத்தாய்” என்ற பானத்தை அருந்தவில்லையா..

இது மிகச்சிறிய குப்பிகளில் கொடுப்பார்கள்.. அதிக பட்சம் 15 மி.லி. இருந்தால் அதிகம். அப்படியே குடிக்க வேண்டும்.. கல்ப் அடிக்கிற மாதிரி.. ஒன்றே ஒன்று குடித்து பார்த்தேன்... தொண்டையில் இருந்து அடிவயறு வரை ஒரே எரிச்சல்.. தாங்க முடியல..

அடுத்த தடவை போகும் போது அடிச்சு பாருங்க...

ரவி said...

:))))))

Anonymous said...

"இவரில்லாத ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவ்வளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது,"



அந்த இடத்தில என்னமோ கூச்சப்பட்டு சொல்றமாதிரி இருக்கு. குளிக்கிறப்போ
நம்ம ஊரு நமிதா மாதிரி ஒரு பொண்ணு அருகில துண்டோட காத்திருக்கிறமாதிரி சினிமாவில காட்டுவாங்களே. அப்படி ஏதாச்சும், அண்ணந்தானே கேக்கிறன். சொல்லப்பா.

புள்ளிராஜா

CA Venkatesh Krishnan said...

செம ழங்மா மச்சி

ராஜ நடராஜன் said...

//ஒரு நாள் என்னோட முதுகுவலிக்கு அக்குபஞ்சர் எடுத்தேன், மூனு ஊசிய வெச்சு முதுகுல மாட்டிவிட்டாங்க அப்ப வலிச்சது அப்புரம் கொஞ்ச நாளைக்கு வலி கம்மியா இருந்தது, நிரந்தர தீர்வு கண்டிப்பா இதன் மூலம் கிடைக்காதுன்னு தெரிஞ்சது.//

முதுகு வலிக்கு ஊசி குத்தினா இன்னும் அதிகம் வலிக்கத்தானே செய்யும்?உட்கார்ந்து தமிழ்மணத்துல கடலை போடறுதுனாலே எனக்கும் கூட இந்த மாதிரிப் பிரச்சினை இருந்துச்சு.ஒரு நாள் சந்தைக்கடைப் பக்கம் போனேனா...இந்த புருஸ் லீ எண்டர்த ட்ராகன் ல நான்சக்குன்னு ஒண்ண வச்சு சுத்துவாரே அது உங்க ஊரு காசுக்கு சுமார் 5 டாலருக்கு கிடைச்சது.புருஸ் லீ ஆசையில சுத்தலாமுன்னு நினைச்சா முடியல.இருந்தாலும் அன்னைக்கு கழுத்தை சுத்திப் போட்ட நான்சக்குல அடுத்த நாள் முதுகு வலி காணாமப் போனமாதிரி இருந்தது.இப்ப என்னப் பிரச்சினையின்னா நான்சக்கு சுத்தாட்டி முதுகுவலி:)

குடுகுடுப்பை said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்