Wednesday, December 10, 2008

வாசித்தல் அனுபவம்:

நண்பர் தமிழ்ப்பறவை புத்தகம் வாசித்தல் அனுபவம் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.அதற்காக இந்த பதிவு, நான் குறிப்பிட்டு எந்த புத்தகமும் வாசிக்காவிட்டாலும் வாசிக்கும் பழக்கம் உள்ள பழமைபேசி போன்றோரை அழைக்கவே இந்த பதிவு.

சின்ன வயசிலேர்ந்து எதைப்பார்த்தாலும் படிக்கும் பழக்கம் என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்டது, சுவரில் எழுதியிருக்கும் போடுஙகம்மா ஓட்டு முதல் சிவாஜி,பத்மினி மற்றும் பலர் நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்பட போஸ்டர் வரை. இதில் எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் இந்த மற்றும் பலர் மட்டும் எப்படி எல்லா படத்திலேயும் நடிக்கிறாங்கன்னு.

வீட்டில் தினம் தினமணி வாங்குவோம், அது வீட்டில் எல்லாம் கொண்டு வந்து போடமாட்டார்கள் அப்பா வேலை பார்க்கும் பள்ளிக்கு வரும் அங்கே மந்திரவாதி மாண்ட்ரேக் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்தவுடன் அதில் வரும் சினிமா செய்திகள் படித்தல் அவ்வளவுதான் சின்ன வயசில்.உயர் நிலைப்பள்ளியில் படிக்கையில் அதே தினமணிதான் ஆனால் கொஞ்சம் அரசியல் செய்தி, டீக்கடைகளில் தினந்தந்தியின் அதிரடி செய்திகள்.

அம்மாவின் புண்ணியத்தில் தேவி,ராணி போன்ற புத்தகத்தில் உள்ள சினிமா செய்திகள்,அப்பப்போ பொன்னியின் செல்வன் படிச்சா கீழேயே வைக்கமுடியாது என்று அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்.ஆனால் இதுவரை படித்ததில்லை.குமுதம், விகடனெல்லாம் வீட்டுக்கு எப்படியோ வர ஆரம்பிச்சது, குமுதத்தில சாண்டில்யனோட அலை அரசியோ,யவன ராணியோ சரியா ஞாபகம் இல்லை அந்த வயதில் படிக்க ஆசையாக இருக்கும் புரியாவிட்டாலும்.தாத்தா வீட்டிற்கு செல்லும்போது கல்கி புத்தகம் பார்த்திருக்கிறேன், படித்த போது என் புரிதலுக்கு உட்பட்டதல்ல என்று தெரிந்துகொண்டேன்.

ஜீனியர் விகடனில் வந்த தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள் தான் தொடர்ந்து படிக்க ஆரம்பித்த தொடர் என நினைக்கிறேன்.எட்டாவது முதல் பத்தாவது வரை எப்படியோ கிடைக்கும் ராணி காமிக்ஸ் புத்தகம், டெக்ஸாஸ் மாகாணத்தில் அலெக்ஸ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார் என ஆரம்பிக்கும் கதைகள், இப்போது நானே இங்கே சற்றும் எதிர்பாராதது.

மற்றபடி செய்தித்தாளில் விரும்பி படிப்பது ஹிந்துவில் sports பகுதி கிரிக்கெட்டிற்காக.know your english மற்றொரு பிடித்த பகுதி.கல்லூரி நாட்களில் அனைத்து விகடனும்,நக்கீரனும்,குமுதமும். எல்லாவற்றையும், குறிப்பாக சுஜாதாவின் அனைத்து தொடர்களும் படிப்பது.

குமுதத்தில் படித்த ஒரு ஹெல்மெட் கதை ரொம்ப மனசை பாதித்தது.மற்றபடி அதன் கிளு கிளு கதைகள்.

பஸ்ஸில் செல்லும்போது விகடனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி படித்துவிட்டு பஸ்ஸிலேயே விட்டுவிடுவது வழக்கம்.மதுரை பேருந்து நிலையத்தில் 10 ரூபாய்க்கு மூன்று பழைய புத்தகம் பஸ்ஸில் ஏறி விற்பார்கள்,ஒருமுறை புதிய புத்தகம் என நினைத்து ஒன்றுக்கு மட்டும் 10 ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் உண்டு.

சோவின் துக்ளக் மற்றொரு பிடித்த இதழ், அதில் வரும் சோவின் கேள்வி பதில் பிடிக்கும், குறிப்பாக இந்த பதில் இன்னும் மறக்கமுடியாது

கேள்வி:தமிழக சமாஜ்வாதி ஜனதா கட்சி இரண்டாக உடைந்து விட்டதாமே?

சோ: அணுவை விஞ்ஞானிகளால் மட்டுமே பிளக்க முடியும் என்ற கூற்றை பொய்யாக்கிவிட்டார்கள்.

நாவல்கள் என்றால் ஒரு காலத்தில் கிரைம் நாவல்கள் மட்டுமே, பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,ராஜேஸ்குமார்.பாலகுமாரன் கதைகளை நாலு பக்கம் தாண்டி படித்ததில்லை.

தவளைக்குளம் என்று ஒரு கதைப்புத்தகம் உயர்நிலைப்பள்ளி நூலகத்தில் எடுத்து படித்திருக்கிறேன், ஆனால் கதையெல்லாம் ஞாபகம் இல்லை.வைரமுத்துவின் வைகறை மேகங்கள் கவிதை படித்திருக்கிறேன் யாரோ பரிசாக கொடுத்ததால்.

மற்றபடி நூலகம் சென்று வாசித்த அனுபவம் அதிகம் இல்லை,தஞ்சை நூலகத்தில் உட்கார்ந்திருந்த போது மூட்டைப்பூச்சி கடித்த அனுபவம் ஞாபகம் உள்ளது.

எதையாவது படிப்பேன், உருப்படியாக எதையும் படித்தேனா என்று தெரியவில்லை.வீட்டில் time book வாங்குகிறேன்,இப்போதெல்லாம் தமிழ்மணம் அதிகம் படிப்பதால் time book ஒழுங்காக படிப்பதில்லை.

நான் வாசிக்க நினைத்திருக்கும் ஒரு சரித்திர பதிவு நண்பர் இளைய பல்லவனின் சக்கர வியூகம்,

என்னை எழுத அழைத்த நண்பர் தமிழ்ப்பறவை நல்ல ஓவியர் எனபது தெரியும்,இதை படித்த பின் கண்டிப்பாக தலைமுடியை பிய்த்துக்கொண்டிருப்பார் ,அவரது அடுத்த பதிவில் அதையே ஓவியமாக வரைந்து பதிவிடுவார் நாம் அனைவரும் ரசிப்போம்

இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த நான் உண்மையான இரு வாசிப்பாளிகளை எழுத அழைக்கிறேன்.

பழமைபேசி
இளைய பல்லவன்

26 comments:

நசரேயன் said...

/*டெக்ஸாஸ் மாகாணத்தில் அலெக்ஸ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார் */
இனிமேல இது குடுகுடுப்பையா மாறும்

நசரேயன் said...
This comment has been removed by the author.
நசரேயன் said...

சக்கர வியூகம் வசிக்க வேண்டிய ஒன்னு

Anonymous said...

பொன்னியின் செல்வன் இனிமேலாவது படிச்சுருங்க. வலைலயே இலவசமாக்கிடைக்குதுன்னு கேள்விப்பட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அனுவை விஞ்ஞானிகளால் மட்டுமே பிளக்க முடியும் என்ற கூற்றை பொய்யாக்கிவிட்டார்கள்.///


அனுவை ??!!!

அணுவை

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

///அனுவை விஞ்ஞானிகளால் மட்டுமே பிளக்க முடியும் என்ற கூற்றை பொய்யாக்கிவிட்டார்கள்.///


அனுவை ??!!!

அணுவை

//

நன்றி மாற்றிவிடுகிறேன்

பழமைபேசி said...

//மற்றும் பலர் மட்டும் எப்படி எல்லா படத்திலேயும் நடிக்கிறாங்கன்னு.
//


அஃகஃகா!


அழைப்புக்கு நன்றி!

அது சரி(18185106603874041862) said...

கற்க கசடற கல்கண்டு குமுதம்
கற்றபின் விற்க பாதி விலைக்கு

(நான் படிச்சதை இப்பிடி ரெண்டு வரில சொல்லிரலாம், ஆனா நீங்க ரொம்பவே படிச்சிருக்கீங்க..)

துளசி கோபால் said...

:-)))))))))))))


வாசி வாசி என்று வாசித்திருப்போர்க்கு.....

Anonymous said...

எனக்கும் இதே மாதிரி ஒரு சந்தேகம். எங்க ஊருல சில சினிமா போஸ்டர்ல சிவாஜி பத்மினி IN அப்படின்னு போட்டுருப்பாங்க. நான் நினைத்தேன் IN na நடிகர்னு. அப்புறம் தான் தெரியும் 10 வருஷம் கழித்து அதோட அர்த்தம்.

Anonymous said...

///அனுவை விஞ்ஞானிகளால் மட்டுமே பிளக்க முடியும் என்ற கூற்றை பொய்யாக்கிவிட்டார்கள்.///

யாரந்த அனு. உங்க loverரா. எங்க உங்க தங்கமணி கூபிடுங்க. அவங்ககிட்ட இதைப்பற்றி பேசணும்.

CA Venkatesh Krishnan said...

என்னை அழைத்ததற்கு நன்றி.


//
நான் வாசிக்க நினைத்திருக்கும் ஒரு சரித்திர பதிவு நண்பர் இளைய பல்லவனின் சக்கர வியூகம்,
//


இதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

CA Venkatesh Krishnan said...

//
நசரேயன் said...
சக்கர வியூகம் வசிக்க வேண்டிய ஒன்னு
//

நண்பர் நசரேயனுக்கு நன்றி

Mahesh said...

நீங்க ரொம்பப் படிச்சவரு... சொன்னா சரியாத்தான் இருக்கும்....

நல்லாருக்கு நினவோடை....

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க.
நான் கொஞ்சம் ஏமாந்துதான் போயிட்டேன்.

இருந்தாலும் மெல்வதற்கு அவல் கெடைச்சிடுச்சி.
டெக்ஸாஸ் மாகாணத்தில் அலெக்ஸ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார் என ஆரம்பிக்கும் கதைகள், இப்போது நானே இங்கே சற்றும் எதிர்பாராதது//
எப்படி இப்படி உண்மையா பகிரங்கமா ஒத்துக்கறீங்க.

தமிழ் அமுதன் said...

//எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் இந்த மற்றும் பலர் மட்டும் எப்படி எல்லா படத்திலேயும் நடிக்கிறாங்கன்னு.//

என்ன ஒரு சந்தேகம்?

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நசரேயன்,
சின்ன அம்மிணி > படிக்கிறேன் கண்டிப்பா
T.V.Radhakrishnan
பழமைபேசி

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

// கற்க கசடற கல்கண்டு குமுதம்
கற்றபின் விற்க பாதி விலைக்கு

(நான் படிச்சதை இப்பிடி ரெண்டு வரில சொல்லிரலாம், ஆனா நீங்க ரொம்பவே படிச்சிருக்கீங்க..)//

அய்யா நீங்க பாது விலைக்கு மதுரை பஸ்ஸ்டாண்டுல வித்தத நாந்தான் முழுவிலைக்கு வாங்கினேனா.

குடுகுடுப்பை said...

வாங்க துளசி கோபால்
//:-)))))))))))))


வாசி வாசி என்று வாசித்திருப்போர்க்கு.....//

எதிர்பார்க்காத மாதிரி பதிவாயிடுச்சா டீச்சர்

thamizhparavai said...

கோரிக்கையை ஏற்று பதிவிட்ட வருங்கால முதல்வருக்கு நன்றிகள்.
//இதை படித்த பின் கண்டிப்பாக தலைமுடியை பிய்த்துக்கொண்டிருப்பார் ,//
அப்படிப் பிய்த்துக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை(மண்டையில்)...
நீங்கள் வித்தியாசமாக வார, மாத இதழ்களின் வாசிப்பைப் பதிந்துவிட்டீர்கள்.
//சோவின் துக்ளக் மற்றொரு பிடித்த இதழ், அதில் வரும் சோவின் கேள்வி பதில் பிடிக்கும்//
எனக்குப் பிடிக்காத ஒன்று.
//நான் உண்மையான இரு வாசிப்பாளிகளை எழுத அழைக்கிறேன்.//
இளையபல்லவன் பக்கம் வாசித்ததில்லை. பழமைபேசியின் பக்கம் அடிக்கடி சென்றிருக்கிறேன். இருவரின் பதிவுகளையும் படிக்க ஆவலாயுள்ளேன்.
//சிவாஜி,பத்மினி மற்றும் பலர் நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்பட போஸ்டர் வரை//
நீங்க மூஊஊத்த பதிவர்ன்னு நினைக்கிறேன்....ஹி..ஹி,,,
இந்த 'மற்றும் பலர்' எனக்கும் நொம்ப நாள் சந்தேகமாத்தான் இருந்தது. இப்போக்கூட ஒரு புதுப்படம் வரப்போகுது தலைப்பு என்ன தெரியுமா...?
"மகேஷ், சரண்யா மற்றும் பலர்"...
//மதுரை பேருந்து நிலையத்தில் 10 ரூபாய்க்கு மூன்று பழைய புத்தகம் பஸ்ஸில் ஏறி விற்பார்கள்,ஒருமுறை புதிய புத்தகம் என நினைத்து ஒன்றுக்கு மட்டும் 10 ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் உண்டு.
//
மதுரையில அசந்தா பஸ்ஸையே வித்துருவாய்ங்க...

Anonymous said...

//
நசரேயன் said...
சக்கர வியூகம் வசிக்க வேண்டிய ஒன்னு
//

நண்பர் நசரேயனுக்கு நன்றி

//
நசரேயன் said...
சக்கர வியூகம் வசிக்க வேண்டிய ஒன்னு
//

நண்பர் நசரேயனுக்கு நன்றி

நசரேயா தவற திருதிகோரும். சக்கர வியூகம் வசிக்க வேண்டிய ஒன்னு இல்லை. வாசிக்க வேண்டிய ஒன்னு. இது எப்பிடி இருக்கு.

ராஜ நடராஜன் said...

//பஸ்ஸில் செல்லும்போது விகடனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி படித்துவிட்டு பஸ்ஸிலேயே விட்டுவிடுவது வழக்கம்//

ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல இருக்குதே!ஆமா!அந்த பஸ் ஆடுற ஆட்டத்தில எல்லாப் பக்கங்களையும் எப்படி படிச்சு முடிக்கிறீங்க?

குடுகுடுப்பை said...

தமிழ்ப்பறவை said...

கோரிக்கையை ஏற்று பதிவிட்ட வருங்கால முதல்வருக்கு நன்றிகள்.
//இதை படித்த பின் கண்டிப்பாக தலைமுடியை பிய்த்துக்கொண்டிருப்பார் ,//
அப்படிப் பிய்த்துக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை(மண்டையில்)...//

ஒரு வரியில் இரு உண்மை வெளிக்கொண்டு வந்துள்ளேன், எனக்கு தலையில் முடி உள்ளதால் அப்படி எழுதினேன்.:):)

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

//பஸ்ஸில் செல்லும்போது விகடனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி படித்துவிட்டு பஸ்ஸிலேயே விட்டுவிடுவது வழக்கம்//

ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல இருக்குதே!ஆமா!அந்த பஸ் ஆடுற ஆட்டத்தில எல்லாப் பக்கங்களையும் எப்படி படிச்சு முடிக்கிறீங்க?//

சோம்பேறிதனம், படிக்கிறது கொஞ்சம் சிரமந்தான்.பொழுது போகனும்ல என்ன பண்றது

குடுகுடுப்பை said...

வாங்க Mahesh

நீங்க ரொம்பப் படிச்சவரு... சொன்னா சரியாத்தான் இருக்கும்....

நல்லாருக்கு நினவோடை..

//
உண்மயாவா சொல்றீங்க...

குடுகுடுப்பை said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க.
நான் கொஞ்சம் ஏமாந்துதான் போயிட்டேன்.

இருந்தாலும் மெல்வதற்கு அவல் கெடைச்சிடுச்சி.
டெக்ஸாஸ் மாகாணத்தில் அலெக்ஸ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார் என ஆரம்பிக்கும் கதைகள், இப்போது நானே இங்கே சற்றும் எதிர்பாராதது//
எப்படி இப்படி உண்மையா பகிரங்கமா ஒத்துக்கறீங்க.

//

நான் எதுவும் பெரிசா படிச்சதில்லங்க,என்னோட எழுதறத பாத்தாலே தெரியுமே.