Monday, December 8, 2008

கல்லூரி சாலை: மேல்மருவத்தூரில் கல்யாணம், பாண்டிச்சேரியில் குளியல், நெய்வேலியில் சாப்பாடு. பாகம் 2

பாகம் 1
எங்களை நோக்கி ஓடி வந்த பார் நிர்வாகத்தினரை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் நெட்டையனும், நானும் அதற்கான இழப்பீடு கொடுக்கிறோம் என்றோம். இதற்கிடையில் கடையத்தான் விடாமல் ஆம்லெட் சீக்கிரம் கொண்டுவரச் சொன்னபடியே இருந்தான்.

மேலூரான் எனக்கு இன்னும் ஒரு குவாட்டர் வாங்கிகொடுங்கன்னு மற்ற நண்பர்கள்கிட்ட சவுண்ட கொடுத்தபடியே இருந்தான்.பார் நிர்வாகத்தினர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு உங்களோட சரக்கத்தான் உடைச்சிருக்காப்ல நீங்க நஷ்ட ஈடெல்லாம் கொடுக்கவேண்டாம் முதல்ல கூட்டிட்டு கெளம்புங்க அப்படின்னு சொன்னாங்க.

எப்படியோ ஒருவழியா வெளில இழுத்துட்டு வந்துட்டோம், கடையத்தான் ஆம்லெட் வாங்கல அதுக்கு காசு கொடுக்கலைலன்னு சொல்லி எங்க கிட்ட தான் போதையிலும் ஸ்டெடியா இருக்கிறத சொல்லியபடியே வந்தான்.

வெளில மேலூரான ஆட்டோல ஏத்துனோம், ஆனா ஆட்டோவ புடிச்சு நெறுத்தினான், ஆட்டோக்காரர், அவன எங்கிட்ட உட்டுட்டு கெளம்புங்க நாங்க பாத்துக்கறோம் ரெண்டு போட்டாதான் அடங்குவான் அப்படின்னாங்க.ஆட்டோலேந்து இறங்கி பஸ்ஸ்டாண்ட் நோக்கி நடந்தே அவனையும் நடத்திக்கிட்டே வந்தோம்.

பஸ் ஸ்டாண்ட் நெருங்குற சமயத்துல நெய்வேலி தாசன் கிட்ட வம்புக்கு போயிட்டான், நெய்வேலியாரும் டேய் மவனே நீ நெய்வேலி தாண்டிதான் ஊருக்கு போகனும் அப்படின்னு எகிற, இப்ப எங்க நிலைமை பாண்டிச்சேரி தாண்டி போக முடியுமாங்கிறதுதான்.அடுத்த நிமிடம் நெய்வேலியாரின் சட்டையில் காலர் மேலுரானின் வாயில், அவன் போட்டிருந்த மூக்கு கண்ணாடி காணாமல் போன விசயமும் சற்று நேரம் கழித்தே தெரிந்தது.காலர் இல்லாத சட்டையுடன் நெய்வேலியான் கொஞ்சம் அழகு கூடியிருந்தான்.

ஒருவழியா எப்படியோ பஸ்ஸ்டாண்ட் உள்ள வந்துட்டோம், ஆனா பாருங்க மேலூரான் வாந்தி எடுத்தபடியே ஒரு பஸ் பக்கத்தில தரையில சாஞ்சுட்டான், நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி மூஞ்சில தண்ணி அடிச்சு பாக்கிறோம் எழுத்திருக்க மாட்டேங்கிறான்.கிட்டத்தட்ட மணி நள்ளிரவு பண்ணிரண்டு இருக்கும்.

இதெல்லாம் இங்க நடக்கும்போது பசிக்குதுன்னு சொல்லிட்டு நம்ம நெய்வேலிதாசனும்,கடையத்தானும் சாப்பிட போயிட்டாங்க.

அந்த நேரம் பாத்து வெள்ளை நிற உடையோட ஒருத்தர் அவரோட பஸ்ஸ ஊழியர்கள் கழுவுவதை பார்வையிட்டுகோண்டே , தம்பிகளா ஊருக்கு புதுசா, இப்படியெல்லாம் பண்ணா எழுந்திருக்க மாட்டான் ஓங்கி கன்னதுல ரெண்டு அப்பு,அப்புங்க அப்படின்னாரு.

நெட்டையனும் மெதுவா ரெண்டு அப்பு,அப்பினான். இப்படியெல்லாம் அடிச்சா பத்தாது நகருங்கன்னு சொல்லிட்டு விட்டாரு ஒரு அறை.அறை விழுந்த வேகத்தில் எழுந்த மேலூரான் அதே வேகத்தில் ஒரு அறை விட்டான் அந்த வெள்ளை சட்டை பஸ் ஓனரை.அவர் வெள்ளை சட்டையெல்லாம் சகதியாக.......

இன்னைக்கி நமக்கு பாண்டிச்சேரில அடிவாங்கனும்னு தலையெழுத்து போலன்னு நெனச்சிட்டே, எல்லாருமா சேந்து மன்னிச்சுருங்கன்னு சொன்னோம், அவரு ரொம்ப நல்ல மனுசன், அவன் ரொம்ப அறிவாளிங்க நீங்க அடிச்சபெல்லாம் அடிக்கல நான் அடிச்சோன திருப்பிட்டான்னு சொல்லிட்டு, நீங்க என்ன பண்ணுவீங்க சும்மா விடுங்கண்ணார், அப்படியே அந்த பஸ் கழுவிய தொழிலாளர்கள் கூப்பிட்டு இவனை அந்த கட்டண குளியல் அறைல கொண்டு போய் போடுங்கண்ணார்,.அங்கே மேலூரான குளிக்க வெச்சு உடைகள மாத்தினோம்.பஸ் ஓனருக்கும் அவருடைய தொழிலாளிகளுக்கும் எங்கள் நன்றியை சொல்லிவிட்டு அடுத்த முடிவுக்கு காத்திருந்தோம்.

கொஞ்ச நேரம் கழிச்சு நெய்வேலியானும்,கடையத்தானும் வந்தாங்க, வழக்கம்போல கடையத்தான் அந்தக்கடையில கடையில ஆம்லெட் சூப்பரு, நாங்க பாத்துக்கறோம் போயி சாப்பிட்டு வாங்க அப்படின்னான்.இதுவரைக்கும் நடந்த எதுவுமே இவனுங்களுக்கு தெரியாது.

நெய்வேலிதாசன் சொன்னான் எல்லாரும் எங்க அக்கா வீட்டிற்கு NLC குடியிருப்புக்கு போவோம், மத்தத அங்க முடிவு பண்ணுவோம் அப்படின்னான்.
ஒருவழியா எப்படியோ அதிகாலை நெய்வேலி போயி அங்க ஒரு நாள் முழுவதும் இருந்து வழக்கம் போல நல்லா சாப்பிட்டோம்.

நெய்வேலிதாசனும்,மேலூரானும் பேசின வீர வசனம்,அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சண்டை எல்லாம் கொஞ்சம் கூட ஞாபகம் இல்லாம,இன்னும் சொல்லப்போனா பாண்டிச்சேரின்னு ஒரு ஊருக்கு போனது கூட ஞாபகம் இல்லாம ஒரே கொஞ்சல்.

எனக்கு இன்னைக்கு நெனச்சாலும் பயமா இருக்கு..யோசிச்சு பாருங்க அந்த பாண்டிச்சேரி பஸ் ஓனர் நெனச்சிருந்தா எங்கள அந்தர் பண்ணிருக்கலாம்.அதுவும் வேற மாநிலத்தில்..

எங்கிருந்தாலும் அந்த நல்ல மனுசன் வாழ்க..

கூடுதல் செய்தி :நெய்வேலியான் விரைவில் அமெரிக்கா வருகிறான்... அவன் எனக்கு நேத்து போன் பண்ணினான் அப்ப தோனுச்சு இத பதிவா போட்டு அவர குடும்பத்தோட வரவேற்கனும்னு.

இன்றைக்கு வந்த செய்தி: நண்பர் நெட்டையன் ஆண் குழந்தைக்கு தந்தையாகிவிட்டான்.

37 comments:

தமிழ் அமுதன் said...

நான்தான் ரெண்டாவது!

நசரேயன் said...

/*காலர் இல்லாத சட்டையுடன் நெய்வேலியான் கொஞ்சம் அழகு கூடியிருந்தான்*/

அதுக்கு அப்புறம் தான் காலர் இல்லாத சட்டை எல்லாம் அகில உலக புகழ் பெற்று விட்டது

நசரேயன் said...

/*மூஞ்சில தண்ணி அடிச்சு பாக்கிறோம் எழுத்திருக்க மாட்டேங்கிறான்*/

தண்ணியை வாயிலே அடிக்கணும் மூஞ்சிலே அடிக்க ௬டாது

பழமைபேசி said...

எங்கிருந்தாலும் அந்த நல்ல மனுசன் வாழ்க..

குட்டையுடன் நெட்டையும் பதிவுலகுக்குள் விரைவில் காலடி எடுத்து வைக்க வரை வாழ்த்துவோமாக! அந்த ர, ற கொஞ்சம் சரி செய்யுறீங்ளா Mr. Velan?

Anonymous said...

இன்னிக்கு நினைக்கும் போது எல்லாமே சிரிப்பாதான் இருக்கும்.. ஆனால் அன்னிக்கு அந்த நிமிடம் .. வேதனைத்தான்...

தங்ஸ் said...

நல்ல வரவேற்புதான்..... நெட்டையன்,கடையத்தான்,மேலூரான் - ரொம்ப குழப்பமாயிடுச்சு..யார் என்ன பண்ணாங்கன்னே புரியல போங்க..வெற நிக்நேம்ஸ் யூஸ் பண்ணியிருக்கலாம்..

RAMYA said...

//
பஸ் ஸ்டாண்ட் நெருங்குற சமயத்துல நெய்வேலி தாசன் கிட்ட வம்புக்கு போயிட்டான், நெய்வேலியாரும் டேய் மவனே நீ நெய்வேலி தாண்டிதான் ஊருக்கு போகனும் அப்படின்னு எகிற, இப்ப எங்க நிலைமை பாண்டிச்சேரி தாண்டி போக முடியுமாங்கிறதுதான்.அடுத்த நிமிடம் நெய்வேலியாரின் சட்டையில் காலர் மேலுரானின் வாயில், அவன் போட்டிருந்த மூக்கு கண்ணாடி காணமல் போன விசயமும் சற்று நேரம் கழித்தே தெரிந்தது.காலர் இல்லாத சட்டையுடன் நெய்வேலியான் கொஞ்சம் அழகு கூடியிருந்தான்.
//


ரொம்ப அழகுதான் காலர் இல்லாத சட்டையுடன்,
விவரித்த அழகு கொஞ்சம் தூக்கல்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களோட சரக்கத்தான் உடைச்சிருக்காப்ல நீங்க நஷ்ட ஈடெல்லாம் கொடுக்கவேண்டாம் முதல்ல கூட்டிட்டு கெளம்புங்க



தர்ம ராஜாக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நெய்வேலியான் விரைவில் அமெரிக்கா வருகிறான்... அவன் எனக்கு நேத்து போன் பண்ணினான் அப்ப தோனுச்சு இத பதிவா போட்டு அவர குடும்பத்தோட வரவேற்கனும்னு.




இப்படியொரு ஆசையா...


பாவம்சார் அவர்

ILA (a) இளா said...

annaikku avar naaradicha, inniku neenga post pottaa..

Welcome!

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

எங்கிருந்தாலும் அந்த நல்ல மனுசன் வாழ்க..

குட்டையுடன் நெட்டையும் பதிவுலகுக்குள் விரைவில் காலடி எடுத்து வைக்க வரை வாழ்த்துவோமாக! அந்த ர, ற கொஞ்சம் சரி செய்யுறீங்ளா Mr. Velan?

திருத்திட்டேனுங்..கொஞ்சமா சரி செஞ்சு போடுரங்

துளசி கோபால் said...

அப்படி என்னதான் இந்தக் 'குடி' யில் இருக்கோ........(-:

கபீஷ் said...

நல்ல வரவேற்பு உங்க ஃப்ரண்டுக்கு! பாவம் அவரு படிச்சா நொந்துடுவாரு!!! :-):-)

கபீஷ் said...

குகு! உங்க பேரு வேலனாங்க?

Anonymous said...

//எனக்கு இன்னைக்கு நெனச்சாலும் பயமா இருக்கு..யோசிச்சு பாருங்க அந்த பாண்டிச்சேரி பஸ் ஓனர் நெனச்சிருந்தா எங்கள அந்தர் பண்ணிருக்கலாம்.அதுவும் வேற மாநிலத்தில்..//

பயப்பட தேவை இல்லை. ஏன்னா தண்ணி போட்டுட்டு பண்ணினா யாரும் ரொம்ப சீரியஸ்சா எடுத்துக்க மாட்டங்க.

சாப்பாட்டுக்கு வழி இருக்காது. ஆனா பார்ல அடுத்தவன் கடன் கேட்டா அள்ளி கொடுப்பாரு ராசா. அதானே குடிகாரன் ஸ்டைல்.

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்துட்டேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போதைக்கு நான் செம டைட்டு ..
நாளைக்கு மத்தியானமா வரேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

கோபிச்சிகாதீங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

அடிச்ச சரக்குல ஒரு எழுத்தும் தெரியல!!!!!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போ நான் என்ன செய்யட்டும் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

பாண்டிச்சேரின்னு சொன்னதும் போதை ரொம்ப தலைக்கு ஏறி போச்சு..

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் அங்க தானே ரொம்ப பக்கத்துல நம்ம காலேஜ் படிச்சேன் ( சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் )

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி இந்தாங்க 24

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போ 25

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நசரேயன்
ஜீவன்
பழமைபேசி
இராகவன், நைஜிரியா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி தங்ஸ்
//நல்ல வரவேற்புதான்..... நெட்டையன்,கடையத்தான்,மேலூரான் - ரொம்ப குழப்பமாயிடுச்சு..யார் என்ன பண்ணாங்கன்னே புரியல போங்க..வெற நிக்நேம்ஸ் யூஸ் பண்ணியிருக்கலாம்..

//

அடுத்தமுறை குறைகளை களைய முயல்கிறேன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
ரம்யா
சுரேஷ்
இளா
துளசி கோபால்

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

அப்படி என்னதான் இந்தக் 'குடி' யில் இருக்கோ........(-:

//
எல்லாம் சும்மா கொஞ்சமா குடிசதுக்கே தாங்காதவர்கள்,மற்றபடி யாரும் அந்த மாதிரி குடிகாரங்க இல்ல டீச்சர்.இன்னும் சொல்லப்போனா நல்லா திருத்திய அனுபவம்

குடுகுடுப்பை said...

வாங்க கபீஷ்

குகு! உங்க பேரு வேலனாங்க?
//
இல்லங்க பழமையாரு வச்ச தமிழ்க்கடவுள் பேரு அப்படியே இருக்கட்டும்.

குடுகுடுப்பை said...

வாங்க வில்லன் சார்

//எனக்கு இன்னைக்கு நெனச்சாலும் பயமா இருக்கு..யோசிச்சு பாருங்க அந்த பாண்டிச்சேரி பஸ் ஓனர் நெனச்சிருந்தா எங்கள அந்தர் பண்ணிருக்கலாம்.அதுவும் வேற மாநிலத்தில்..//

பயப்பட தேவை இல்லை. ஏன்னா தண்ணி போட்டுட்டு பண்ணினா யாரும் ரொம்ப சீரியஸ்சா எடுத்துக்க மாட்டங்க.

சாப்பாட்டுக்கு வழி இருக்காது. ஆனா பார்ல அடுத்தவன் கடன் கேட்டா அள்ளி கொடுப்பாரு ராசா. அதானே குடிகாரன் ஸ்டைல்.//

அனுபவசாலிகள் அதுவும் வில்லன் சொன்னா கேட்டுக்கனும், ஆமா நீங்க நசரேயன் நண்பரா?

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

நான் அங்க தானே ரொம்ப பக்கத்துல நம்ம காலேஜ் படிச்சேன் ( சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் )//

வாங்க அணிமா அண்ணே, வாரி வழங்கிய பின்னூட்டங்களூக்கு நன்றி.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போகனும், பக்கத்து ஊருன்னு பாண்டிச்சேரி போகக்கூடாது

Anonymous said...

//அனுபவசாலிகள் அதுவும் வில்லன் சொன்னா கேட்டுக்கனும், ஆமா நீங்க நசரேயன் நண்பரா?//

ஏதோ 3.5 ஆண்டுகளுக்கு முன்பு NJ la தொடங்கிய நட்பு. பக்கத்து வீட்டுகாரங்க 3.5 வருசமா. போன மாசம் நாங்க LA / CA Move பண்ணிடோம். ஏன்னா நான் வேலபாத்த AIG ப்ராஜெக்ட் மூடிட்டாங்க.

எங்க வீட்டு தங்கமணியும் தலைவர் வீட்டு தங்கமணியும் ஜெயலலிதா சசிகலா போல. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல இல்ல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் தான் 34.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாண்டிச்சேரியில் குளியல்னு பாக்கும்போதே நெனச்சேன், ஆஹா நீங்க குடிச்சது சாரி நீங்க குளிச்சது இந்தத் தண்ணியாதான் இருக்கும்னு.
என் நம்பிக்கை வீண் போகலை.
என்ன, நீங்க பாருக்கு போயும் பட்டினியா திரும்பி வந்திருக்கீங்க பாருங்க, நீங்க அந்த வெள்ளை பேண்ட் சட்டைக்காரர் மாதிரியே நொம்ப நல்லவரு.

ராஜ நடராஜன் said...

//எல்லாம் சும்மா கொஞ்சமா குடிசதுக்கே தாங்காதவர்கள்,மற்றபடி யாரும் அந்த மாதிரி குடிகாரங்க இல்ல டீச்சர்.இன்னும் சொல்லப்போனா நல்லா திருத்திய அனுபவம்//

நம்ம அனுபவத்துல இந்த அலம்பல் கேசுக காத்துப் பட்டாலே மயங்கிடுவாங்க.தெரிந்தவரின் பெண்டாட்டி இப்படித்தான் புருசன் மருகிறுவாருன்னு கொஞ்சம் தண்ணியும் சோடாவும் கலந்து கொடுத்த அஞ்சாவது நிமிச அலம்பல் பார்க்கணுமே! மொடாக்காரர்கள் எப்பவுமே ஸ்டெடி.உடம்பு வாகுன்னு நினைக்கிறேன்.

குடுகுடுப்பை said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
//
பாண்டிச்சேரியில் குளியல்னு பாக்கும்போதே நெனச்சேன், ஆஹா நீங்க குடிச்சது சாரி நீங்க குளிச்சது இந்தத் தண்ணியாதான் இருக்கும்னு.
என் நம்பிக்கை வீண் போகலை.
என்ன, நீங்க பாருக்கு போயும் பட்டினியா திரும்பி வந்திருக்கீங்க பாருங்க, நீங்க அந்த வெள்ளை பேண்ட் சட்டைக்காரர் மாதிரியே நொம்ப நல்லவரு.//

நல்லவரா இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிப்போச்சு.அதோட நம்ம வீரம்தான் உலகம் அறிந்தது ஆச்சே

குடுகுடுப்பை said...

வாங்க ராஜ நடராஜன்

//எல்லாம் சும்மா கொஞ்சமா குடிசதுக்கே தாங்காதவர்கள்,மற்றபடி யாரும் அந்த மாதிரி குடிகாரங்க இல்ல டீச்சர்.இன்னும் சொல்லப்போனா நல்லா திருத்திய அனுபவம்//

நம்ம அனுபவத்துல இந்த அலம்பல் கேசுக காத்துப் பட்டாலே மயங்கிடுவாங்க.தெரிந்தவரின் பெண்டாட்டி இப்படித்தான் புருசன் மருகிறுவாருன்னு கொஞ்சம் தண்ணியும் சோடாவும் கலந்து கொடுத்த அஞ்சாவது நிமிச அலம்பல் பார்க்கணுமே! மொடாக்காரர்கள் எப்பவுமே ஸ்டெடி.உடம்பு வாகுன்னு நினைக்கிறேன்.//

உண்மைதான். ரத்தத்தில கலக்கனும் போல