Monday, November 24, 2008

கல்லூரி சாலை - எட்டாவது செமஸ்டர் புராஜக்ட்

கல்லூரி இறுதியாண்டு மெக்கானிக்கல் படிச்ச நான் எட்டாவது செமஸ்டர் புராஜக்ட்டுக்கு யாரு கூடயாவது சேந்து பண்ணலாம் நம்ம சும்மா சுத்தி சுத்தி வந்தா போதும், படிப்பாளி பசங்க பண்ணிருவாங்க பேர போட்டு ஒரு ரெக்காடு வாங்கிரலாம் அப்படின்னு நெனச்சிட்டிருந்தேன்.

ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் மாப்பிள்ளை யாரு கூடயும் சேந்து பண்ணா நம்மள மதிக்க மாட்டாங்க நம்ம கேங்லயே மெக்கு ஆறு பேறு இருக்கோம் நம்மளே பண்ணுவோம். நல்ல கைடு பாத்து புடிச்சிட்டா அவரு உதவி பண்ணுவாரு நமக்கும் ஒரு சேலஞ்சா இருக்கும், நல்ல புராஜக்ட்டா பண்ணிரனும், நான் ஏற்கனவே மலேசியாவில இருக்கிர எங்கப்பாவுக்கு போண் பண்ணி 25000 ரூபாய் புராஜக்ட் பண்ரதுக்கு வேணும்னு சொல்லிட்டேன் அதனால செலவ பத்தி கவலைப்படவேண்டும், பிராஜக்ட் சூப்பரா இருக்கனும்,நாம கேங் தனியாதான் பண்ரோம் அப்படின்னான்.

நல்ல ஐடியாவ தோனுச்சு,சரின்னு எங்க துறையில உள்ள முக்கியமான ஒரு ஆசிரியர பாக்க போணோம், அவரு எங்கள எல்லாரையும் மேலயும் கீழேயும் பாத்தாரு, இவனுங்கெல்லாம் சேந்து புராஜக்டான்னு நெனச்சாரோ என்னவோ, நாங்க அவருகிட்ட சொன்னோம் இது ஒரு சேலஞ்சா பண்ரோம் நீங்க ஒரு நல்ல புராஜக்ட் ஐடியா கொடுத்து கைடு பண்ணுங்க சார் அப்படின்னோம்.

அவரும் மகிழ்ச்சியாகி, low cost water heater - அதுக்கு ஒரு புராஜக்ட் ஐடியா இருக்கு, அது என்னன்னா fuse போன Florescent
tube light எடுத்து இரண்டு பக்கமும் உள்ள பல்ப் கோல்டர உடையாம கழட்டிட்டு, உள்ள ஒட்டியிருக்கிற வெள்ள பவுடரை டியூப் லைட்டு உடையாம சுரண்டி வெளில கொட்டிட்டு, அந்த டியூப்லைட்டோட ஒரு முனைய கார்க் வெச்சு அடைச்சிட்டு டேப் வாட்டர ஊத்தி இன்னோரு முனையவும் கார்க் வெச்சி அடைச்சிட்டி வெயில்ல வெச்சிரனும், இதன் மூலமா தண்ணீர் சீக்கிரம் சூடாயுரும் இதான் புராஜக்ட் அப்படின்னாரு.

நாங்க எல்லாரும் சரின்னு தலைய ஆட்டினோம், வெளில வந்துவுடனே நண்பன் பாரிஸ் சொன்னான், மாப்பிள்ளை எங்கப்பா கிட்ட 25000 ரூபாய் பிராஜக்ட்டுக்கு காசு கேட்டிருக்கேன் இது என்னடா பிச்சைகாரத்தனமான பிராஜக்ட் ஒரு பைசா கூட செலவில்லாம, பழைய டியூப்லைட்ட ஒடைச்சி வெயில்ல தண்ணி சுட வைக்கிராராம்,குண்டானல தண்ணிய ஊத்தி வெயில்ல வெச்சாலும் தான் சூடாயிருமேடா,இந்த பிராஜக்ட் பண்ணொம்னு சொன்னா ஊரு உலகத்தில சிரிப்பாங்களேடா,நம்ம கேங்குக்கு பெரிய அவமானம்டா, எங்கப்பா வேற புராஜக்ட் ரெக்காட மலேசியாவுக்கு அனுப்ப சொல்லியிருக்காரு.இதுக்கு 25000 ரூபாயா கொலயே பண்ணிருவாரு மனுசன் இது வேணாம்டான்னுட்டான்.

ஒருவழியா அப்புறம் இன்னோரு கைட புடிச்சு கொஞ்சம் காஸ்ட்லியான புராஜக்ட் சொல்லுங்க சார் அப்படின்னோம், ஒருவழியா 3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் புராஜக்ட் பண்ணோம்.ரொம்ப காஸ்ட்லியாவும் இருந்துச்சி நல்லாவும் இருந்துச்சு.
ஆனா பாருங்க புராஜக்ட் பாதிலயே அந்த கைடு ரிசைன் பண்ணிட்டாரு, திரும்பவும் பழைய low cost water heater சார்தான் கைடு, பயந்துட்டோம் ஆனாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாரு இந்த புராஜக்க்டுக்கும்
நணபன் பாரிசுக்கு பெரிய புராஜக்ட் பண்ண திருப்தி.

30 comments:

கபீஷ் said...

me the firstu!

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா வந்து படிக்கிறேன்

பழமைபேசி said...

உள்ளேன்! உள்ளேன்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-))))))))))

நசரேயன் said...

நீங்க பண்ணின
3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் நாசா செவ்வாய்க்கு அனுப்பிச்ச பீனிக்ஸ் விண்கலம் வச்சு இருக்கு போல தெரியுது
இன்னும் வருவேன் ..

அது சரி(18185106603874041862) said...

//
அது என்னன்னா fuse போன Florescent
tube light எடுத்து இரண்டு பக்கமும் உள்ள பல்ப் கோல்டர உடையாம கழட்டிட்டு, உள்ள ஒட்டியிருக்கிற வெள்ள பவுடரை டியூப் லைட்டு உடையாம சுரண்டி வெளில கொட்டிட்டு, அந்த டியூப்லைட்டோட ஒரு முனைய கார்க் வெச்சு அடைச்சிட்டு டேப் வாட்டர ஊத்தி இன்னோரு முனையவும் கார்க் வெச்சி அடைச்சிட்டி வெயில்ல வெச்சிரனும், இதன் மூலமா தண்ணீர் சீக்கிரம் சூடாயுரும் இதான் புராஜக்ட் அப்படின்னாரு.
//

ச்சூப்பர் "பிரா"ஜக்டு :0)

தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!

//
ஒருவழியா 3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் புராஜக்ட் பண்ணோம்.
//

அப்ப நீங்க தான் அந்த இரும்புக்கை மாயாவின்னு சொல்லுங்க!

குடுகுடுப்பை said...

அது சரி said...
/தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!//

அய்யா நீங்க எந்த ஊரு, உங்க தொலில் இன்னா. பயமா இருக்கே.

rapp said...

எல்லாம் சரி, எவ்ளோ வாங்குனீங்க எல்லாரும்:):):)

rapp said...

//குடுகுடுப்பை said...

:):):)

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அது சரி said...
/தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!//

அய்யா நீங்க எந்த ஊரு, உங்க தொலில் இன்னா. பயமா இருக்கே.

//

அய்ய, இது கூட தெரியாதா உங்களுக்கு? பத்தாங்கிளாஸ் சைன்ஸ் படிக்கும் போது சொல்லித் தரல? இதுக்கு தான் ஒழுங்க இஸ்கூலு பக்கம் போவணுங்கிறது...பாதில ஓடிப்போயி கோல் கீப்பரானா இப்பிடி தான் :0)

குடுகுடுப்பை said...

//அய்ய, இது கூட தெரியாதா உங்களுக்கு? பத்தாங்கிளாஸ் சைன்ஸ் படிக்கும் போது சொல்லித் தரல? இதுக்கு தான் ஒழுங்க இஸ்கூலு பக்கம் போவணுங்கிறது...பாதில ஓடிப்போயி கோல் கீப்பரானா இப்பிடி தான் :0)//

இப்படியெல்லாம் என்ன கேள்வி கேக்கப்ப்டாது.

நசரேயன் said...

/*
நம்ம கேங்லயே மெக்கு ஆறு பேறு இருக்கோம்
*/
அப்ப, என்ன மாதிரி மக்கு யாரும் இல்லையா?

Anonymous said...

//ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் //

புனைப்பெயரா, நிஜப்பெயரா

பழனி, சிதம்பரம் அப்படின்னெல்லாம் யாருக்கும் பெயரில்லைய்யா :)

RAMYA said...

//
ஒருவழியா அப்புறம் இன்னோரு கைட புடிச்சு கொஞ்சம் காஸ்ட்லியான புராஜக்ட் சொல்லுங்க சார் அப்படின்னோம், ஒருவழியா 3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் புராஜக்ட் பண்ணோம்.ரொம்ப காஸ்ட்லியாவும் இருந்துச்சி நல்லாவும் இருந்துச்சு.
ஆனா பாருங்க புராஜக்ட் பாதிலயே அந்த கைடு ரிசைன் பண்ணிட்டாரு, திரும்பவும் பழைய low cost water heater சார்தான் கைடு, பயந்துட்டோம் ஆனாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாரு இந்த புராஜக்க்டுக்கும்
நணபன் பாரிசுக்கு பெரிய புராஜக்ட் பண்ண திருப்தி.
//

சும்மா சொல்ல கூடாது ரொம்ப காஸ்ட்லி நண்பர்கள் பட்டாளம் தான் உங்களை சுற்றி, சொல்லி அனுப்பி இருந்தால் நானு ஒரு நல்ல project guide அனுப்பி இருப்பேனே!! சரி நல்ல முறையில் semester complete பண்ணியதிற்கு வாழ்த்துக்கள்.

ரம்யா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
கபீஷ்
நசரேயன்
பழமைபேசி
டிவீஆர்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

நீங்க பண்ணின
3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் நாசா செவ்வாய்க்கு அனுப்பிச்ச பீனிக்ஸ் விண்கலம் வச்சு இருக்கு போல தெரியுது
இன்னும் வருவேன் .

//

அதே அதே

குடுகுடுப்பை said...

அது சரி சொன்னது
அப்ப நீங்க தான் அந்த இரும்புக்கை மாயாவின்னு சொல்லுங்க!//

ஆஹா அடுத்த பதிவுக்கு ஐடியா ரெடி

குடுகுடுப்பை said...

rapp said...

எல்லாம் சரி, எவ்ளோ வாங்குனீங்க எல்லாரும்:):):)

எல்லாரும் பாஸ்மார்க் வாங்கிட்டோம்

குடுகுடுப்பை said...

வாங்க சின்ன அம்மிணி said...

//ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் //

புனைப்பெயரா, நிஜப்பெயரா

பழனி, சிதம்பரம் அப்படின்னெல்லாம் யாருக்கும் பெயரில்லைய்யா :)

எல்லாமே சின்ன அம்மினி மாதிரிதான்

குடுகுடுப்பை said...

சும்மா சொல்ல கூடாது ரொம்ப காஸ்ட்லி நண்பர்கள் பட்டாளம் தான் உங்களை சுற்றி, சொல்லி அனுப்பி இருந்தால் நானு ஒரு நல்ல project guide அனுப்பி இருப்பேனே!! சரி நல்ல முறையில் semester complete பண்ணியதிற்கு வாழ்த்துக்கள்.

வாங்க ரம்யா//

ஆமாங்க

சந்தனமுல்லை said...

LOL! டெரரான ப்ராஜெக்ட்டாதான் இருக்கு!

Anonymous said...

வணக்கம் குடு குடுப்பை. அது என்னங்க ப்ரொஜெக்ட். இப்படியெல்லாம் வேற பண்ணச் சொல்லுவாங்களாங்க... இதுக்குதான் நான் எல்லாம் காலேஜ் பக்கமே போகலீங்க... எப்படியே அதையும் முடிச்சுடீங்க.. வாழ்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்ப வந்தாலும் வஞ்சனை இல்லாம சிரிச்சுட்டு போவேன். இப்பயும் அதேதான்.

இது என்னடா பிச்சைகாரத்தனமான பிராஜக்ட் ஒரு பைசா கூட செலவில்லாம, பழைய டியூப்லைட்ட ஒடைச்சி வெயில்ல தண்ணி சுட வைக்கிராராம்,குண்டானல தண்ணிய ஊத்தி வெயில்ல வெச்சாலும் தான் சூடாயிருமேடா,இந்த பிராஜக்ட் பண்ணொம்னு சொன்னா ஊரு உலகத்தில சிரிப்பாங்களேடா,நம்ம கேங்குக்கு பெரிய அவமானம்டா, எங்கப்பா வேற புராஜக்ட் ரெக்காட மலேசியாவுக்கு அனுப்ப சொல்லியிருக்காரு.இதுக்கு 25000 ரூபாயா கொலயே பண்ணிருவாரு மனுசன் இது வேணாம்டான்னுட்டான்.
//

LOL

rapp said...

me the 25TH:):):)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
சந்தனமுல்லை,
ராகவன்
அமிர்தவர்ஷினி அம்மா.

வருண் said...

ரொம்ப நல்லாயிருக்கு உங்க ப்ராஜெக்ட் கதை!

அந்த ட்யூப் லைட் ப்ராஜெக்ட் ஒரு மட்டமான ஐடியா மாதிரித்தான் இருக்கு!

நல்லவேளை அதை டம்ப் பண்ணினீங்க! :-)

குடுகுடுப்பை said...

வருண் said...

ரொம்ப நல்லாயிருக்கு உங்க ப்ராஜெக்ட் கதை!

அந்த ட்யூப் லைட் ப்ராஜெக்ட் ஒரு மட்டமான ஐடியா மாதிரித்தான் இருக்கு!

நல்லவேளை அதை டம்ப் பண்ணினீங்க! :-)

//
வாங்க வருண்

அவர அத ஒரு கான்செப்ட்டாதான் சொல்லியிருப்பாருன்னு தோனுது,ஆனா தெரியல,

அதுக்குள்ள டீம் வேணாம் சொல்லிட்டாங்க.

தமிழ் அமுதன் said...

நம்ம கிட்ட எரிபொருள் தயாரிக்கிற

ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு!

நாம் +2 படிக்கும் போது வாத்தியார் கிட்ட

சொன்னா? இந்த வயசுல ''சாராயம் காய்ச்ச''

எவன்கிட்டடா கத்துகிட்ட அப்படிங்கிறாரு?

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

நம்ம கிட்ட எரிபொருள் தயாரிக்கிற

ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு!

நாம் +2 படிக்கும் போது வாத்தியார் கிட்ட

சொன்னா? இந்த வயசுல ''சாராயம் காய்ச்ச''

எவன்கிட்டடா கத்துகிட்ட அப்படிங்கிறாரு?
//

இது வேற நடக்குதா??

தாரணி பிரியா said...

:)

என் பிரெண்டோட‌ தம்பி புராஜக்ட் செய்யும் போது அவுட்புட் மட்டும் வரலை. அதுக்கு அவன் வீட்டுல அவுட்புட் வாங்கணுமின்னு சொல்லியே நிறைய காசை வாங்கிட்டு இருந்தான்.

நல்லா சிரிக்க வெக்கறீங்க குடுகுடுப்பை